பன்னாட்டுச் சுரண்டலுக்கு எதிராக….

1932-ஆம் ஆண்டில் பெரியாரால் முன்வைத்த சுயமரியாதை சமதர்ம வேலைத் திட்டம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஜாதித் தீண்டாமை ஒடுக்குமுறைகளோடு பொருளாதாரத்திலும் அழுத்திக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தையும் எதிர்க்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. ஜாதி எதிர்ப்போடு பொருளாதாரத் திட்டத்தையும் இணைத்து பெரியார் தந்த திட்டட்தை இன்றைய சமூகப்பொருளாதாரச் சூழலில் செயல்படுத்துவது சரியான சமூக மாற்றத்திற்கான கொள்கையாகும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது.

1990-க்குப் பிறகு மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நுழை வதற்கான கதவு மண்டல் பரிந்துரை வழியாகத் திறந்துவிடப்பட்டவுடன் – ஆட்சியதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த பார்ப்பன உயர்சாதி அதிகார வர்க்கம், அரசுப்பிடிகளிலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைப் படிப்படியாகப் பறிப்பதற்கு உலகமயமாதல் கொள்கையை ஆட்சியாளர்களுடன் கொண்டுவந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பன உயர்ஜாதி அதிகாரவர்க்கம், பெரும் தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறவனங்களின் ஆதரவோடும் ஆளுங்கட்சிகளின் ஆதரவோடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களைப் பொருளாதாரக் கொள்கையாகச் செயல்படுத்திவருகிறது. இந்தப் பொருளாதாரக் கொள்கைகளால் சிறு தொழில்கள், விவசாயம், அழிவதோடு இயற்கை வளங்களைச் சுரண்டுதலும் அதிகரித்து வருவது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூக அழுத்தங்களை மேலும் கூடுதலாக்கிவிடுகின்றன. இந்த உலகமயப் பொருளாதாரக் கொள்கை பார்ப்பனியப் பொருளாதாரக் கொள்கையாகவே திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது. இந்தப் பார்ப்பனியப் பொருளாதாரக் கொள்கைச் சுரண்டலுக்கு எதிராக மக்களை அணி திரட்டவும் அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிப் போராடவும் திராவிடர் விடுதலைக் கழகம் உறுதியேற்கிறது. தீண்டாமை, ஜாதிக்கு எதிராக போராடும் இயக்கங்கள் இந்தப் பார்ப்பனியப் பொருளாதாரக் கொள்கைளால் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் நசுக்கப்படுவதைக் கவனத்தில்கொண்டு இந்த ஆபத்தான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அறைகூவி அழைக்கின்றது.

– நிறைவு விழாவில் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானம்

 

பயணத்திற்கு நிதி வழங்கியோர்

  1. ஏ.செல்வராஜ், கண்ணாமூச்சி தொடக்க வேளாண்மை

கூட்டுறவுகடன்சங்க நிர்வாகி   ரூ.        1000/-

  1. பெருமாள், காந்திநகர், செட்டியூர் ரூ.        100/-
  2. மு.செல்வராஜ், கண்ணாமூச்சி

தொ.வே.கூ.க. சங்கத் தலைவர்          ரூ.        1000/-

  1. கண்ணாமூச்சி தொ.வே.கூ.வ. பணியாளர்கள் ரூ.        500/-
  2. ராசு, வியாபாரி கண்ணாமூச்சி      – ரூ.                5000/-
  3. ஆறுமுகம், காண்ட்ராக்டர் -ரூ.      5000/-
  4. வரதராஜ், எல்.ஐ.சி, செட்டியூர் -ரூ.      1000/-
  5. செங்கோடன், செட்டியூர் -ரூ. 500/-
  6. முருகன், செட்டியூர் -ரூ.      500/-
  7. சின்ராசு, ஏஹடீ (சுவன) செட்டியூர் -ரூ.      100/-
  8. சென்னகேசவன், செட்டியூர் -ரூ.      100/-
  9. ரமேஷ், கவுன்சிலர், சின்ன மேட்டூர் -ரூ.      500/-
  10. ரகுபதி, செட்டியூர் -ரூ.      1000/-
  11. சேவூர் திவிககிளை -ரூ.      500/-
  12. குருமந்தூர்மேடு திவிககிளை -ரூ.      2000/-
  13. கோட்டுபுள்ளாம்பாளையம் திவிககிளை -ரூ.      1000/-
  14. கலையரசன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக

மாணவர், புதுடெல்லி       -ரூ.      1000/-

  1. ரஞ்சிதா, ஆசிரியை -ரூ.      1000/-
  2. தினேஷ், இளம்பிள்ளை பள்ளிமாணவர் -ரூ.      500/-
  3. ரவி, பொறியாளர், சின்னசேலம் -ரூ.      500/-
  4. ஓட்டுநர் சீனிவாசன், சின்னசேலம் -ரூ.      500/-
  5. ஆ.ஊராஜா, கிருஷ்ணகிரி -ரூ.      500/-
  6. மதிவாணன், கிருஷ்ணகிரி -ரூ.      500/-
  7. பாலகாந்தி, காவேரிப்பட்டிணம் -ரூ.      100/-
  8. தமிழக வாழ்வுரிமைக்கூட்டமைப்பு -ரூ.      1000/-
  9. வீரமணி, ஊத்தங்கரை -ரூ.      1000/-
  10. மலை மதியழகன், கன்னியப்பன்,

(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)       -ரூ.      200/-

  1. வெங்கடேசன், சென்னநல்லூர் -ரூ.      500/-
  2. இராம. இளங்கோவன், ஈரோடு மண்டலச் செயலாளர் ரூ.        5000/-

பெரியார் முழக்கம் 15082013 இதழ்

You may also like...