வினாக்கள்… விடைகள்…

வினா: கூடங்குளம் அணு மின் நிலைய கழிவுகள் பிரான்சு, ரஷ்ய நாட்டுத் தொழில் நுட்பத்தில் வெளியேற்றப்படு வதால் கடல் வாழ் உயிரினங் களுக்கு பாதிப்பு ஏற்படாது.- அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் சீனிவாசன்

விடை: அப்படியா? கடல் வாழ் உயிரினங்களுக்கு பேரிடர் பாதுகாப்புப் பயிற்சிகளை ஏற்கனவே கொடுத்து விட்டீர்களா?

வினா: நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்காமல், தமிழக அரசுக்கே ரூ.500 கோடிக்கு விற்க ‘செபி’ ஒப்புதல் – செய்தி

விடை: அதேபோல், தமிழ் நாட்டின் வளங்களையும் தொழிலையும் தனியாருக்கு விற்காமல், தமிழ்நாட்டுக்கே விற்பதற்கு என்ன விலை தர வேண்டும்?

வினா: ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? அல்லது பிரிவினைவாத இந்தியா  வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.   – அஜய் மக்கான் (காங்கிரஸ் பொதுச் செயலாளர்)

விடை: அப்படியானால், மக்களுக் கான இந்தியாவை யார் முடிவு செய்வது, சார்?

வினா: தந்தி சேவை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் கடைசி தந்தி ராகுலுக்கு அனுப்பப் பட்டது.                                 – செய்தி

விடை: “இப்போது மரணம் தந்திக்குத்தான். காங்கிரசுக்கு அல்ல. எமது ஆறுதலை ஏற்றுக் கொள்க” என்று தந்தி வாசகம் இருந் திருக்குமோ!

வினா: நெருக்கடியான நேரத்தில் கடமைகளை மேற்கொள்ளாத உத்தரகாண்ட் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும். – குடியரசுத் தலைவரிடம் பா.ஜ.க. மனு.

விடை: அதேபோல் நெருக்கடி யான நேரத்தில் நாடிவந்த மக்களைக் காப்பாற்ற கடவுள் களையும், அவர்களின் கோயில் களையும் நீக்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும் மனுவில் சேர்த்துக் கொள் ளுங்கள்!

வினா: இந்து  கோயில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும். அரசு சட்ட விரோதமாக கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. – டெல்லியில் இந்து தர்ம ஆச்சாரிய சபா கோரிக்கை

விடை : ஆக, எந்தக் கோயிலும் கடவுள் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூற வருகிறீர்களா?

பெரியார் முழக்கம் 18072013 இதழ்

You may also like...