புதிய தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

கழகத்தின் சார்பாக ஏப்ரல் 14-இல் நடைபெற்ற மனுசாஸ்திர போராட்டத்தை விளக்கி ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. கோபி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற பரப்புரைப் பயணத்தின்போது கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியிலிருந்து புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். அவ்வாறு இணைந்த தோழர்களுக்கு கழகத்தின் சார்பாக 30.6.2013 அன்று அளுக்குளி சமுதாயக் கூடத்தில் இயக்க அறிமுக வகுப்பு நடத்தப்பட்டது.

ஈரோடு மண்டல செயலாளர் இராம. இளங்கோவன், ‘இயக்கம்-ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பிலும், இராவணன் ‘பெரியார்-ஓர் அறிமுகம்’ என்கிற தலைப் பிலும் வகுப்பெடுத்தனர். உணவு இடைவேளைக்குப் பின், காவை இளவரசன், தோழர்களுக்கு ‘மூட நம்பிக்கை ஒழிப்பு’ என்கிற தலைப்பில் வகுப்பு எடுத்தார். பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை அலங்கியம் ரவி முன்னின்று செய்தார். தோழர்கள் அர்ச்சுனன், துரை, விசய சங்கர் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), ஆனந்த ராசு ஆகியோர் வகுப்புகளை ஒருங்கிணைத்தனர்.  நிறைவில் கழகத்தின் செயலவை தலைவர் துரைசாமி, கழகத்தின் செயல்பாடுகளை விளக்கியும், பெரியார் கொள்கைகளை விளக்கியும் உரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 08082013 இதழ்

You may also like...