குடந்தையில் ‘ஒற்றுமை விழா’ பொதுக் கூட்டம்

06-07-2013 சனிக்கிழமை மாலை 6-00 மணியவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமகக் குளக்கரை யில், தமிழ்நாடு மக்கள் கட்சி சார்பாக ஒற்றுமை விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் கட்சி, அனைத்து தமிழக பெண்கள் கழகம், தமிழக இளைஞர் கழகம், அம்பேத்கர் ஜனநாயக இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகளை ஒருங் கிணைத்து நடத்திய இந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பல்லடத்தில் கழகத் தோழர் மணவிழா

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதி கழகத் தோழர் அ.வெ.நாரா யணமூர்த்தி-செ.தீபா ஆகியோரது வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

07-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11-00 மணியளவில் பல்லடம் ஜி.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

காஞ்சியில் சமூகநீதிப் பேரவை நடத்திய

வி.பி.சிங் பிறந்த நாள் விழா

முற்போக்கு சமூக நீதிப் பேரவை சார்பாக காஞ்சியில் ஜூன் 25 அன்று நாராயணகுரு திருமண மண்ட பத்தில் வி.பி.சிங் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வி.பி.சிங் பற்றி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப் பட்டன. பேரவை நிறுவனர் டாக்டர் விமுனாமூர்த்தி பரிசுகளை வழங்கி நிறைவுரையாற்றினார்.

மயிலையில் கழகக் கூட்டம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 5.7.2013 அன்று மாலை 6 மணிக்கு மயிலாப் பூர் சாய்பாபா கோவில் அருகில், 4.7.2013 அன்று ஜாதி அரசியலால் உயிரிழந்த தோழர் இளவரசனுக்கு நினைவு மேடை அமைக்கப்பட்டு, வியாபார மயமாகும் கல்வியும், பள்ளி களில் ஆங்கிலத் திணிப்பும் நடை பெறுவதற்கு எதிரான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. பா.ஜான் தலைமை வகிக்க, இராவணன் முன்னிலை வகிக்க மனோகரன் வரவேற்புரையாற்ற, மாவட்ட செய லாளர் இரா. உமாபதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு மூர்த்தி, துரை அருண், ரூதர் அ. கார்த் திக்-பகுதி செயலாளர், விடுதலைச் சிறுத்தைக் கட்சி, கழகத் தோழர் சூலூர் வீரமணி ஆகியோர் விளக்க வுரையாற்றினர். நிகழ்வின் தொடக் கத்தில் அருள் தாசு, பகுத்தறிவு பாடல்களை பாடினார். முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார். இக் கூட்டத்தில் ஜாதி அரசியலால் உயிர் இழந்த தோழர் இளவரசனுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.

கவின் இராமலிங்கம் வால்டர்ஸ் முதல் பிறந்த நாள் நன்கொடை

பேராசிரியர் இரா. சண்முக சுந்தரம்-பேராசிரியை ருக்குமணி ஆகியோரின் மகன் இராமலிங்கம் வால்டர்ஸ்-சியாமளா தம்பதியருக்கு பிறந்த கவின் இராமலிங்கம் வால்டர் ஸின் முதல் பிறந்த நாளான 18.6.2013 அன்று சிட்னி ஆஸ்திரேலியாவில் கொண்டாடினர்.  பிறந்தநாள் நினைவாக திராவிடர் விடுதலைக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கி மகிழ்ந்தனர்.

பெரியார் முழக்கம் 18072013 இதழ்

You may also like...