ஏற்காட்டில் நடந்த சுகன்யா-ஜெகன் வாழ்க்கை ஒப்பந்தம்

மேட்டூர் கழக ஆதரவாளரும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைப் பற்றாளருமான ஓய்வுப் பெற்ற துணை ஆட்சியர் இரா.கு.பால கிருட்டிணன் அவர்களின் மகன் பா.ஜெகன்-தே.கா.சுகன்யா ஆகியோர் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த நிகழ்வு 14.7.2013 அன்று காலை 8.30 மணியளவில்  சேலம் ஏற்காட்டில் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் நடை பெற்றது.

பாவலர் எழுஞாயிறு தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் மண விழாவை நடத்தி வைத்தார். மருத்துவர் ஆர்.மோகன், சமூக ஆர்வலர் பொறியாளர் அரிஅரன், பகுத்தறிவாளர் அ.தனபாலன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர்.

மணமக்கள் சார்பாக கழக ஏட்டுக்கு ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)

பெரியார் முழக்கம் 25072013 இதழ்

You may also like...