Category: பெரியார் முழக்கம்

‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சி: நடந்தது என்ன? 0

‘பிராமணாள்’ பெயர் அழிப்புக் கிளர்ச்சி: நடந்தது என்ன?

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரைக்கு மறுப்பு பெரியார் நடத்திய ‘பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்புக் கிளர்ச்சிக்’ குறித்து, போராட்டம் நடந்த ‘முரளி கபே’ உரிமையாளரின் மகன் , ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் (ஜூன் 19) ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பெரியார் காலங்களில் அவர் நடத்திய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் வன்முறை நடந்தது இல்லை என்று ஏற்கெனவே வெளிவந்த கட்டுரைக்கு (ஜூன் 26) மறுப்பாக, இது வெளி வந்திருக்கிறது. முரளி கபே ஓட்டல் மறியலில் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் ஈடுபட்டதாக உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார். ‘பிராமணாள்’ என்பது அசைவ உணவைக் குறிப்பிடும் சொல் என்றும் வாதாடுகிறார். ‘பிராமணாள்’ என்பது ஏனைய பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் குறியீட்டுச் சொல். இதற்கான விளக்கங்களைத் தந்து உரிய வேண்டுகோள் கடிதங்களை எழுதிய பிறகே பெரியார் போராட்டத்தைத் தொடங்கினார். வன்முறையை பின்பற்ற விரும்பியிருந்தால், அந்த பெயர்ப் பலகையை ஒரே நாளில் எடுத்து...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

குடியரசுத் தலைவர் திருப்பதி வருகை: 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம். – செய்தி இதுக்கெல்லாம், ‘ஆகம’ விதி அனுமதிச்சுடும் போல. சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசிடம் தேவையான நிதி இல்லை. – நீதிமன்றத்தில் அரசு மனு அப்படி, என்ன ‘ஆலிவுட்’ படமா எடுக்கப் போறீங்க! உலகிலேயே குறுகிய காலத்தில் 11 கோடி உறுப்பினர்களை சேர்த்த ஒரே கட்சி பா.ஜ.க. – இல. கணேசன் உலகத்திலேயே கார் வச்சிருக்கிற ஒரே கரகாட்ட கோஷ்டி இருக்குன்னா அது நாமதான். குரு பகவான் – கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பிவேசித்தார். – செய்தி எதுலேங்க பிரவேசிச்சாரு? ‘மெட்ரோ’ இரயிலிலா? உலகின் மிக உயரமான பசு – அமெரிக்காவில் இறந்தது. – செய்தி சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புங்க! தேசிய சின்னம் வச்சுடலாம்! திருச்சி டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம் போலியானது. – பல்கலை மான்யக் குழு இதுல படிச்சிட்டு புரோகிதத் தொழில்...

மனித உரிமைகளை நசுக்கும் பார்ப்பன தேசம் 0

மனித உரிமைகளை நசுக்கும் பார்ப்பன தேசம்

“அவசர நிலை காலம் மீண்டும் வருமா?” என்ற விவாதங்கள் ஒரு பக்கம் நடந்தாலும், அந்தக் காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களைவிட இன்னும் மோசமான உரிமை மீறல்கள் இங்கே நடந்து கொண்டுதான் இருக் கின்றன. இது குறித்த செய்திகளின் தொகுப்பு: மனித உரிமைப் போராளி சாய்பாபா அவரால் நடமாட முடியாது; சக்கர வண்டிதான் அவரை நகர்த்தும்; உடலில் ஊனமானாலும் உள்ளத்தில் உறுதியோடு போராடும் சமூகப் போராளி; அவர் பெயர் ஜி.என். சாய்பாபா. மனித உரிமையாளர்களிடையே பிரபலமானவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பேராசிரியர். சமூகநீதிக்காகவும், பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் குரல்கொடுத்த குற்றத்துக்காக அவர் ஒரு ‘மாவோ’ தீவிரவாதி என்று காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு, 2014 மே 9ஆம் தேதி, பல்கலைக் கழகத்திலிருந்து காரில் வீடு திரும்பும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து நாக்பூருக்கு விமானத்தில் கொண்டு போகப்பட்டு, சித்திரவதை முகாமாகக் கருதப்படும் முட்டை வடிவத்திலுள்ள அண்டா சிறையில் அடைக்கப் பட்டார். அடுத்த 72...

2016இல் விந்தன் நூற்றாண்டு – இராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர் 0

2016இல் விந்தன் நூற்றாண்டு – இராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர்

சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை தனது படைப்புகளில் எழுதியவர் விந்தன். அவரது நூற்றாண்டு 2016இல் வருகிறது. “போலியைச் சுட்டெரிக்கும் புதுமை களை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக் கும் இரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சார சிகிச்சையளிக்கும்’ புத்தம் புது முறைகளை குரூர வசீகரங்களைப் படம்பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது, தங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப் பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த, இருந்து வருகிற, ‘மனித மிருகங்’களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் நவயுகக் கதைகளை இன்றுபோல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம். இதுவே என் இருபது வருட கால எழுத்து” (விந்தன்: 15.5.1956: விந்தன் கதைகள்: முன்னுரை) “இன்று மனித வாழ்வில் முக்கியமாக இடம் பெற்றிருப்பவை மூன்று. முதலாவது கடவுள்; இரண்டாவது மதம்; மூன்றாவது...

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு! 0

தலையங்கம் – நகரமயமாகும் தமிழ்நாடு!

இந்தியாவின் “சமூகப் பொருளாதார – ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு” விவரங்கள் வெளியிடப்பட் டுள்ளன. இன்னும் ஜாதி கணக்கெடுப்புப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன்படி கிராமங்களில் வாழும் மக்களில் 30 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக வாழ்க்கையைக் கடப்பதற்கு கூலி வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 23.5 சதவீதம் பேர். கிராமங்களில் உயர்நிலைப் பள்ளியை நிறைவு செய்தவர்கள் 5.4 சதவீதம். 3.4 சதவீதம் மட்டுமே கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். கிராமப்புறங்களில் 90 சதவீதக் குடும்பங்களில் ஊதியம் பெறும் ஊழியர்கள் எவரும் கிடையாது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ‘கல்வி’க்காக தனிக் கடவுளைக் கொண்டுள்ள நாடு இது. ‘பாரதப் பூமி’, ‘புண்ணிய பூமி’, ‘மகான்கள் அவதரித்த’, ‘வேதம் செழித்த’, ‘அவதாரங்கள்’ எடுத்த பூமி என்று பெருமை பேசப்படும் நாட்டின் நிலை இதுதான். மக்களை வறுமையில் மூழ்கச் செய்துவிட்டு, ‘இந்து’ தேசத்தை உருவாக்கிட துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்ன...

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு 0

கோகுல்ராஜ் படுகொலை: காவல்துறை இயக்குனரிடம் கழகம் மனு

தலித் இளைஞர் கோகுல்ராஜ், ஜாதி ஆணவக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி, 1.7.2015 பகல் 1 மணியளவில் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சட்டம் ஒழுங்குப் பிரிவு துணை இயக்குனரிடம் மனு அளித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்க ஜாதியாக இருக்கும் சமூகப் பிரிவைச் சார்ந்தவர்களை காவல்துறை அதிகாரிகளாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை கல்வித் துறையுடன் இணைந்து ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்துவதை வரவேற்றும், அதே நேரத்தில் கழகம் நடத்தும் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்துக்கு காவல்துறை தடை விதிப்பதை நிறுத்தக் கோரியும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகக் கூறிய அதிகாரி, சமூக நீதி, ஜாதி வெறி தலைதூக்கும் ஆபத்துகளை சுட்டிக்காட்டினார். மாவட்ட செயலாளர் உமாபதி, தபசி குமரன், வழக்கறிஞர் அருண், அன்பு தனசேகரன் ஆகியோர் இயக்குனரை சந்திக்க உடன் வந்தனர். பெரியார் முழக்கம் 09072015 இதழ்

ஜூலை 19இல் தர்மபுரியில் கழகத்தின் செயலவைக் கூடுகிறது 0

ஜூலை 19இல் தர்மபுரியில் கழகத்தின் செயலவைக் கூடுகிறது

4-7-2015 சனிக்கிழமையன்று காலை 10-00 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில், சென்னை, கழகத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. அதில் கழகத்தின் செயல்பாடுகள், தேவைப்படும் மாற்றங்கள், இந்து மதவெறி இயக்கங்களின் நிகழ்கால நடவடிக்கைகள், கழகத்தின் முன்னணி அமைப்புகளான தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய குழந்தைகள் பழகு முகாம், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சந்திப்பு, சுய மரியாதை கலை, பண்பாட்டுக் கழகத்தின் காட்டாறு இதழ், கழகத் தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் போன்ற பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதன் பின்னர் கீழ்க்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது. 1) கழகத்தின் செயலவைக் கூட்டத்தை எதிர்வரும் 19-7-2015 ஞாயிறு அன்று தருமபுரியில் நடத்துவது எனத் தீர்மானிக்கப் பட்டது. 2) தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் செயலவையைத் தொடர்ந்து மாவட்டக் கழகங் களின் கலந்துரையாடல்களை நடத்துவது, மாவட்டக் கழக அமைப்புகளைப்...

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம் 0

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்களுக்கு புகலிடமும் பாதுகாப்பும் தரும் கிராமம் எஸ்.பட்டி. இளவரசனை ஜாதி வெறி பலி கொண்ட அதே தர்மபுரியில்தான் இந்த கிராமமும் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பட்டிகள் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் ஆச்சரியமான காதல் கிராமம் ஒன்று இருக்கிறது. 1500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த அதிசய காதல் கிராமத்தின் பெயர் எஸ்.பட்டி. தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காதல் திருமணங்களுக்கும், கலப்புத் திருமணங்களுக்கும் அடையாள சின்னமாக விளங்கி வரும் எஸ்.பட்டியில் இதுவரை நூற்றுக்கணக்கான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த காதல் தம்பதிகள் சமூக இடர்பாடுகளை...

அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார் 0

அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்

நாட்டின் உயர்பதவிகளுக்கு வேட்பாளர்களாக தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது மத்திய தேர்வாணையம். இந்தத் தேர்வாணையத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டோரின் நியாயமான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கான தேர்வு களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான உரிமைகளை இந்த ஆணையம் தொடர்ந்து பறித்து வருகிறது. திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் தொடர்ந்து நிரப்பி வருகிறது இந்த ஆணையம். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் – இந்த முறைகேட்டைக் கண்டித்ததோடு, 2004 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சர்வீசுகளுக்கான தகுதி அடிப் படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் அனைத்தை யும் முழுமையாக ரத்து செய்து பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. (பார்க்க – தலையங்கம் – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மார்ச் 27) இந்த நிலையில் மத்திய தேர்வாணையத்தின் அதிர்ச்சியான பார்ப்பன மோசடிகள் மேலும்...

அவமதிக்கிறது, உச்சநீதிமன்றம் 0

அவமதிக்கிறது, உச்சநீதிமன்றம்

மீண்டும் உச்சநீதிமன்றம் தனது கொடுவாளை வீசி விட்டது. உரிமை கோரும் பிற்படுத்தப்பட்டோரை அவமதித்துவிட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோ ருக்கு மாணவர் சேர்க்கை நிகழ இருக்கும் நேரத்தில் உச்சநீதி மன்றம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி இடைக்கால தடை விதித்து விட்டது. அஜீத் பசாயத், லோகீஸ்வர்சிங்பட்னா ஆகிய இரு நீதிபதிகள், இந்தத் தடையை விதித்துள்ளனர். நீதி மன்றம் தடைக்கு தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்கவியலாதவை! 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரியாக நடத்தப் பட்டது. அதற்குப் பிறகு சாதிவாரியாக கணக்கெடுப்பு நடக்கவில்லை. எனவே பிற்படுத்தப்பட்டோரை – 1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்து தீர்மானிப்பதை ஏற்க முடியாது என்று கூறுகிறது, உச்சநீதிமன்றம். இந்தியாவில் வாழும் மக்களில் பிற்படுத்தப்பட்டோர் 52 சதவீதம் பேர் என்று மண்டல் குழு பரிந் துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி யான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மண்டல் குழு...

ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி 0

ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி

தென்னகத்தில் – சங் பரிவார் சக்திகள் வேகமாகக் காலூன்றி வருவது பற்றி ‘பிரன்ட் லைன்’ இதழ் (மார்ச் 26, 2004) கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், கருநாடக மாநிலங்களின் நிலை அதில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் சங் பரிவார் எப்படி வளர்ந்து கொண்டிருக் கிறது; குறிப்பாகக் கல்வி நிறுவனங்களில்; என்பது பற்றி, எஸ்.விசுவநாதன் எழுதியுள்ள கட்டுரையை – இங்கு தமிழில் வெளியிடுகிறோம். மூத்த பத்திரிகையாளர் விசுவநாதன், ஆழமான சமூகக் கண்ணோட்டத்தோடு, தலித் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து எழுதி வருபவர். “தமிழ்நாட்டில் இன்று ஜெயலலிதா தலைமையில் ஆன்மீக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” குடந்தையில் – மகாமகக் குளத்தில் புனித முழுக்குப் போட்டுவிட்டு – தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.இராமசாமி, மார்ச் 6ம் தேதி இவ்வாறு பத்திரிகையாளர் களிடம் கூறினார். குடந்தை மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டவர்கள் சுமார் 10 லட்சம் பக்தர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் – திரிசூலங்களைக்...

தமிழீழ அரசுக்கு விடுதலை பெற்ற தெற்கு சூடான் அங்கீகாரம் 0

தமிழீழ அரசுக்கு விடுதலை பெற்ற தெற்கு சூடான் அங்கீகாரம்

ஆப்பிரிக்காவில் உள்ளது சூடான் நாடு. இது ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடாகும். இங்கு ராணுவ புரட்சி நடத்தி 1989 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த ஒமர் அல் பக்ஷீர் இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழங்குடி இன மக்களும், கிறிஸ்துவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். வடக்கு தங்களை புறக்கணிப்பதாக தெற்குவாசிகள் கருதினர். தெற்கில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தெற்கு சூடானை தனியாக பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி போராடி வந்தது. இந்த இயக்கம் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தது. 2005 ஆம் ஆண்டு அரசுக்கும், இந்த இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 2011 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி நாட்டை பிரிப்பது என்று முடிவானது. ...

ஆலோசனைகள் இலவசம் 0

ஆலோசனைகள் இலவசம்

நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது, சில யோசனைகளை இலவசமாக முன் வைக்கலாமே என்று மனது துடித்தது, அதனால் சில இலவச யோசனைகள்….. தீவிரவாதிகள், விமானத்தைக் கடத்தப் போகிறார்கள்; ரயிலைக் கவிழ்க்கப் போகிறார்கள்;பெருநகரங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்போவதாக செய்திகள் வருகின்றன. எனவே, நாடு முழுதும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்கள். விடுதிகளில், சோதனை சாலைகளில், வாகனங்கள் விடிய விடிய சோதனை;இப்படி ஒவ்வொரு முறையும் ‘குடியரசு’, ‘சுதந்திர நாள்’ வரும் போதெல்லாம் மக்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். எனவே அரசுக்கு ஒரு ஆலோசனையை முன் வைக்கிறோம். இத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தல் வரலாம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு வரலாம் என்று கூறி, காவல்துறையினர், பல நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருவதில்லை. அதேபோல் நாட்டின் பயங்கரவாதத்தைத் தடுக்க, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற – சுதந்திர நாள், குடியரசு நாளையும் காவல்துறை ரத்து செய்து விட்டால், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக, அன்றாட வாழ்க்கையை கவனிப்பார்களே! தமிழ்நாட்டில்...

விடியல் எப்போது? – தமிழேந்தி 0

விடியல் எப்போது? – தமிழேந்தி

கொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு? கொஞ்சம்நீ எண்ணடா தோழா! – இந்த அடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம் அல்லல்கள் தீருமா தோழா! வாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள் வஞ்சகம் கொஞ்சமோ தோழா! – நாளும் தூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை சொரணையே இல்லையே தோழா! தேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா தேர்தலில் கூட்டணி தோழா! – விலை பேசியே பெற்ற அன்னையை விற்றும் பிழைப்பது பிழைப்போ தோழா! அம்மவோ… எத்தனை உயிர்க்கொலை அங்கே! அழுகுரல் தொடருதே தோழா! – சே… சே… பம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா? பச்சை நரித்தனம் தோழா! ஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம் இங்கென்ன நிலையடா தோழா! – நாளும் வீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி வேட்டைக்குத் தீர்வென்ன தோழா! துடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும் சொந்தக்கை வேண்டுமென் தோழா! – முற்றி வெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர் விடியலைக் காட்டுமென் தோழா! பெரியார் முழக்கம் ஜனவரி...

கழகத் தலைவரை மனந்திறந்து பாராட்டினார் – காவிரி விவசாய சங்கத் தலைவர்! 0

கழகத் தலைவரை மனந்திறந்து பாராட்டினார் – காவிரி விவசாய சங்கத் தலைவர்!

கடந்த 11 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, செய்தி தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன், தே.மு.தி.க.வின் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பால. அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பி.ஆர். பாண்டியன், “விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் கொடியினை தலைவர் அண்ணன் கொளத்தூர்...

ஆர்.பி.எஸ். ஸ்டாலினை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சந்தித்தனர் 0

ஆர்.பி.எஸ். ஸ்டாலினை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சந்தித்தனர்

13.8.2015 அன்று 2 மணிக்கு, மூத்த பெரியாரியலாளரும், கீழ்வெண்மணி கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடி தாங்கி நிகழ்வில், (தலித் சடலம், ஆதிக்க ஜாதி வீதி வழியாகச் செல்லத் தடை போட்ட ஊர் – குடிதாங்கி. அதை மீறி சடலம் எடுத்துச் செல்லப்பட்டது) மையப் புள்ளியாய் நின்று இயங்கியவருமான ஆர்.பி.எஸ்.ஸ்டாலின், உடல் நலிவுற்றிருக்கிற செய்தியறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும், எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதன் ஆகியோர் கும்பகோணத்தில் அவரது இல்லமான அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில் சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றிலுள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர். பெரியார் முழக்கம் 20082015 இதழ்

“காவல்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்ற வைப்பேன்” யுவராஜின் மற்றொரு வெறிப் பேச்சு 0

“காவல்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்ற வைப்பேன்” யுவராஜின் மற்றொரு வெறிப் பேச்சு

கவுண்டர் ஜாதிப் பெண்ணோடு பழகினார் என்பதற்காக கோகுல் ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியை கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்தில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள யுவராஜ் என்பவர், ‘வாட்ஸ் அப்’ வழியாக மீண்டும் ஒரு வெறிப் பேச்சை பேசியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு முறை இதேபோல் பேசியிருக்கிறார். ஆகஸ்டு 15ஆம் தேதி அன்று அவர் பேசிய இரண்டாவது பேச்சு, 37 நிமிடம் நீடிக்கிறது. கவுண்டர் ஜாதியைச் சார்ந்த இளைஞர்கள், அரசியல் கட்சிகளைக் கடந்து, ஒரே அணியாகத் திரள வேண்டும் என்றும், அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தொடங்குமாறும் அவர் கூறியுள்ளதோடு காவல்துறை அதிகாரி களையும் கடுமையாக எச்சரிக்கை செய்கிறார். ‘நான் வெளியே வந்து உங்கள் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன்’ என்றும் சவால் விட்டுள்ளார். “நமது பெண்டு பிள்ளைகள் கவுரவத்தையும், நமது ஜாதிக்கான பழம் பெருமையையும் காப்பாற்ற வேண்டும்; நமது சமூகத்தின் ஒற்றுமையை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு சீர்குலைக்க முயற்சிக்கின்றன; நாம் சட்டமன்ற உறுப்பினராகி...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

? இந்தியாவில் ஜாதியம், வகுப்புவாதத்துக்கு இடமில்லை. – மோடி ‘சுதந்திர’ நாள் பேச்சு !அப்போ, ஜாதியை ஆதரிக்கும் அமித்ஷாவையும் குருமூர்த்தியையும் நாடு கடத்தப் போறீங்களா? ? ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்றார் பாரதியார். – ஜெயலலிதா பேச்சு !மேடம், இது பாரதியார் பாட்டு அல்ல; ‘கருப்புப் பணம்’ சினிமாவுல கண்ணதாசன் எழுதி நடிச்ச பாட்டு! ? மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அம்மனை ஊஞ்சலில் ஆட்டி, அர்ச்சகர் தாலாட்டு பாடினார். – ‘தினமணி’ செய்தி !அம்மனுக்கு காது கேட்காதுங்குற துணிச்சல்… தாலாட்டுப் பாட அர்ச்சகர்கள் எல்லாம் கிளம்பீட்டீங்க. ?தில்லை நடராஜன் கோபுரத்தில் தீட்சதர்கள் தேசியக் கொடி ஏற்றினர். – செய்தி !பரவாயில்லையே! ‘சிவபெருமானால்’ நேரடியாக பூமியில் குதிச்சதா, உச்சநீதிமன்றத்துல மனு போட்டவங்க, இப்ப இந்தியாவின் ‘குடிமகனாக’ மாறிட்டீங்களா? ? வெளியுறவுத் துறையில் சமஸ்கிருதத்துக்கு தனி அதிகாரி. – செய்தி !அப்பாடா! இனிமே ‘லலித்மோடி’ பிரச்சினைகள்...

சங்கராபுரத்தில் பறை முழக்கத்துடன் வரவேற்பு ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி கழகம் தயாராகிறது! 0

சங்கராபுரத்தில் பறை முழக்கத்துடன் வரவேற்பு ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி கழகம் தயாராகிறது!

திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களின் 3ஆம் கட்டப் பயணம், ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தப்பயணத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரனும் பங்கேற்றார். தஞ்சை தஞ்சை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல், ஆக.12ஆம் தேதி பகல் 11 மணியளவில் பட்டுக்கோட்டை ‘அரசு பிளாசா’ அரங்கில் தொடங்கியது. அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூறி, தொடக்க உரை நிகழ்த்தினார். தோழர்கள் கு.பாரி, சி.த. திருவேங்கடம், அ.கோவிந்தன், மூத்த பெரியார் தொண்டர் ப.வைத்தியலிங்கம், ப.ஜெயச்சந்திரன், வடசேரி சிவசுப்ரமணியன், கார்த்திகேயன், பள்ளத்தூர் நாவலரசன், கரிகாலன், பசு. கவுதமன், பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோரைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” – என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் திட்டமிட்டுள்ள பரப்புரை இயக்கத்தை மாவட்டத்தில் நான்கு நாட்கள்...

சேஷ சமுத்திரத்தில் ஜாதி வெறிக் கலவரம்: நடந்தது என்ன? 0

சேஷ சமுத்திரத்தில் ஜாதி வெறிக் கலவரம்: நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்டது சேஷ சமுத்திர கிராமம். இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அம்மன் தேர் ஊர்வலம், பேருந்து போகும் ஊர் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் இழுக்க முயன்றனர். இதைப் பொருத்துக் கொள்ள முடியாத ஜாதி வெறியர்கள் தேர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி, அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பு ஊர் விழாக்களையும் நடத்த தடை உத்தரவு போட்டனர். ஆதலால் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கிராமத்தில் எந்த விழாவும் நடைபெறவில்லை. இருப்பினும் இரு தரப்பினர்களுக்கிடையே இதுவரை பத்து முறை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருவிழாவிற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட மக்கள் நடத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், 16.8.2015 அன்று காலையில் தேர் இழுப்பதென்று...

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்த மாவட்டப் பொறுப்பாளர்கள். நாகை நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள் : ம. மகாலிங்கம்-தலைவர்; தெ.மகேசு-செயலாளர்; தெ. ரமேசு-துணைச் செயலாளர்; மு. அன்பு-அமைப்பாளர்; ந.விஜயராகவன்- பொருளாளர். மயிலாடுதுறை நகரப் பொறுப்பாளர்கள் : நாஞ்சில் சங்கர்-தலைவர்; நி. நடராஜ் –துணைத் தலைவர்; ப. தமிழ்வேலன்-செயலாளர்; ரா. ராஜராஜசோழன்-இணைச் செயலாளர்; ஜி.ஆர். செந்தில்குமார்-அமைப்பாளர். ஒன்றிய அமைப்பாளர்கள்: யுவராஜ்- மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர்; ஜெ. இயற்கை-குத்தாலம் ஒன்றிய அமைப்பாளர்; பூம்புகார் முருகன் – செம்பனார்கோயில் ஒன்றிய அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் – தெ. சுரேஷ் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் : ம. ஜீவன் ராஜ், சரவணகுமாரி, இளவரசி, நவநீதம். கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்: நட. பாரதி தாசன்-செயலாளர்; ப. பாலமுருகன்-அமைப்பாளர்; செந்தில்நாதன்-பொருளாளர். விருத்தாசலம் நகரப் பொறுப்பாளர்கள் : சங்கர்-செயலாளர்; சரவணகுமார்-ஒன்றிய செயலாளர்; ஐய்யப்பன்-துணைச் செயலாளர்; அலெக்ஸ்சாண்டர்-ஒன்றிய அமைப்பாளர்; விஜயகுமார்-துணை அமைப்பாளர். சிதம்பரம் நகரச் செயலாளர்...

0

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவிக்கக் கோரி திருச்செங்கோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள் 0

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள்

  தலித் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஜாதிவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழ்நாட்டுக்கே அவமானம்! ஆடி மாதம் வந்துவிட்டால் போதும்; கிராமத் திருவிழாக்களில் ஜாதி வெறியாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. சங்கராபுரம் வட்டத்தில் சேஷ சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் அம்மன் தேர் ஊர்வலம், ஊர் பொதுச் சாலையில் வரக்கூடாது என்று ஜாதிவெறியோடு தேர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, தலித் மக்கள் குடியிருப்புகளையும் எரித்ததோடு, பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘சுதந்திர’ நாளை தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நாட்டின் ‘குடிமக்களாகவே’ ஏற்க முடியாது என்று ஜாதி வெறியர்கள் ஆணவத்தோடு கொக்கலிக்கிறார்கள். இதில் மிகப் பெரிய கொடுமை, பா.ம.க. நிறுவனர், மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கைதான். தாழ்த்தப்பட்ட மக்களின் அம்மன்  தேர், பொது வீதியில் வரக் கூடாது என்று தடுக்கும் ‘தீண்டாமை-ஜாதி’ வெறியையோ, தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததையோ,...

திருச்சியில் டாஸ்மாக் முற்றுகை: கழகத் தோழர்கள் கைது 0

திருச்சியில் டாஸ்மாக் முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

காந்தி மார்க்கெட் பகுதியில் பள்ளி வளாகங்களுக்கு அருகிலுள்ள நெல்பேட்டை ஒயின்ஷாப், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஒயின்ஷாப் முற்றுகைப் போராட்டத்தை 4.8.2015 காலை 10 மணிக்குஅறிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காந்தி மார்க்கெட் காவல் துறையினர் கழக மாவட்டச் செயலாளர் கந்த வேல் குமார், பிள்ளை மாநகர் பகுதி தலைவர் வெனிஸ் கிளமெண்ட், ஜெனிபர் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் முழக்கம் 13082015 இதழ்

ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துகிறார் சுப்ரமணியசாமி 0

ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்துகிறார் சுப்ரமணியசாமி

1976ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலையைப் பிரகடனம் செய்து, அடிப்படை உரிமைகளை முடக்கியதோடு, ‘மிசா’ எனும் ஆள் தூக்கி சட்டத்தின் கீழ் விசாரணையின்றி ஓராண்டு காலம் தனது ஆட்சியை எதிர்த்தவர்களை சிறையில் போட்டார். அந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்த வீராதி வீரர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்போது மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் சிறை செல்ல அஞ்சி, இந்திராகாந்தியிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் குவித்தவர்கள் என்பதே உண்மையான வரலாறு. ஆனாலும், இப்போது பா.ஜ.க.வின் முன்னணி தளபதியாக வலம்வரும் பார்ப்பனர் சுப்ரமணியசாமியே எழுதிய கட்டுரை ஒன்று கிடைத்திருக்கிறது. ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் 2000ஆம் ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி, சுப்ரமணியசாமி இக்கட்டுரையை எழுதினார். (கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்) அப்போது இவர் பா.ஜ.க.வில் இல்லை. “பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் பெரும்பாலோர், அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் துரோகிகளாகவே மாறிவிட்டார்கள். இதற்கான ஆதாரங்கள், மகாராஷ்டிரா சட்டமன்ற நிகழ்வுகளின் ஆவணங்களிலேயே பதிவாகியுள்ளன. அப்போது...

கழுத்துக் கயிறும் கைக் கயிறும் 0

கழுத்துக் கயிறும் கைக் கயிறும்

கணவன் – திருமணம் செய்யப்போகும் ஒரு பெண், இனி தனக்கு ‘கீழ்ப்படிந்தவளாகவே’ இருக்கவேண்டும் என்பதன் அடையாளமாகக் கட்டப்படுவதுதான் தாலி. சமத்துவத்தையும் சுயமரியாதையையும் விரும்பும் பெண்கள், தாலியை அகற்றிக் கொள்ள முன் வந்தால், அது இந்து மதத்துக்கும், பண்பாட்டுக்கும் எதிரானது என்று தோள் தட்டி தொடை தட்டி, ‘இந்துத்துவா’வாதிகள் கிளம்பி விடுகிறார்கள். கடந்த ஏப்.14ஆம் தேதி, பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்வில், உள்ளே புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தாலி குறித்து விவாத நிகழ்ச்சி நடத்திய ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெடிகுண்டு வைத்தார்கள். கழுத்தில் கயிறு கட்டுவதுபோல கையில் கயிறு கட்டும் ஒரு பழக்கமும் ‘இந்து கலாச்சாரமாக’ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பெயர் ‘ரக்ஷா பந்தன்’. இது பெண்கள் ஆண்களின் கைகளில் கட்டும் கயிறு. ஒரு பெண், ஆணின் கையில் இந்தக் கயிறை கட்டிவிட்டால் அவனை சகோதரராக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். சகோதரனாக இப்படி அறிவிக்கப்பட்ட ஒரு ஆண்,...

குப்பை பொறுக்கும் ‘பூணூல்’கள்! 0

குப்பை பொறுக்கும் ‘பூணூல்’கள்!

பார்ப்பனக் கோட்டையான சென்னை மேற்கு மாம்பலத்தில் சத்குரு வேத பாடசாலை, சுப்ரமணிய வீதியில் உள்ளது. இந்த வீதியில் குப்பைகள் தேங்கிப் போய் கிடந்த நிலையில், ‘வேதம்’ படிக்கும் ‘பார்ப்பன’ சிறுவர்கள், ‘பூணூல்’ அணிந்த கோலத் துடன் வீதிகளில் இறங்கி குப்பைகளைப் பொறுக்கினார்கள். இதைப் படம் பிடித்து முகநூலில் ஒருவர் வெளியிட்டார். உடனடியாக இதை வரவேற்று முகநூலில் 2300 விருப்பப் பதிவுகள் விழுந்தன. அவ்வளவு தான். ஆடிப் போனது சென்னை மாநகராட்சி. உடனே, ‘பூணூல்’ தரிக்காத ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ களைக் கொண்டுவந்து இறக்கி, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நாள் முழுதும் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்வதும், குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்துவதும், ‘பஞ்சமர்’, ‘சூத்திரர்’ களுக்கு விதிக்கப்பட்ட ‘தர்மம்’; வேதம் ஓதுவதையே ‘தர்மம்’மாக்கிக் கொண்ட ‘பிராமணர்கள்’ – இப்படி வீதிகளில் இறங்கி ‘குப்பை’களை சுத்தம் செய்யத் தொடங்கினால், நாடு அதைத் தாங்குமா? எனவே தான் மாநகராட்சி அதிரடியாக ‘இறங்கி’ தர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது....

‘கருவறை’யிலிருந்து ‘கவர்னர்’ மாளிகை நோக்கி 0

‘கருவறை’யிலிருந்து ‘கவர்னர்’ மாளிகை நோக்கி

கடவுளோடு உரையாடக்கூடிய மொழியாக வேதத்துக்கு பெருமை கொண்டாடுகிறது பார்ப்பனியம். வேதம் படித்த பார்ப்பனர்கள், ‘கடவுளுக்கு’ உரிமை கொண்டாடி, ‘கருவறையை’ தங்களுக்கான ‘தீட்டுப்படாத’ புனித இடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘கருவறை’யைப் மட்டுமல்ல; ‘கவர்னர் மாளிகையையும்’ வேத பண்டிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார் யாதேவ விரத் வேதம் படித்த பார்ப்பனர். அரியானாவில் ‘குருகுல குருnேத்ரா’ என்ற பெயரில் வேத பாடசாலை நடத்து கிறார். யோகா, பயிற்சியும் இயற்கை மருத்துவமனையையும் நடத்தி வரும் இவர், உலகம் முழுதும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு வேதம், உபநிஷத்துக்களை ‘பிராமணர்’களுக்கு கற்பித்து வருகிறார். பீகாருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் என்பவரும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதற்காகவே அரியானாவில் பயிற்சி மய்யம் நடத்தி வருகிறார். ஆனால், இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். பா.ஜ.க. – தாழ்த்தப்பட்ட வர்களுக்காகவே தனியாக உருவாக்கியிருக்கும் ‘ஷெட்யூல்ட் கேஸ்ட் மோர்ச்சா’ என்ற அமைப்பின் தலைவர். என்னதான் வேதம் படித்தாலும், பா.ஜ.க....

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர் 0

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர்

உலகில் முழுமையாக மரணதண்டனையை நீக்கம் செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை (ஜூன் மாத நிலவரம்) 101; கடந்த ஆண்டு உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கை 607; (இது 2013ஆம் ஆண்டைவிட 22 சதவீதம் அதிகம்) கடந்த ஆண்டு 22 நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளன. 2,466 பேர் கடந்த ஆண்டு மட்டும், மரணதண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் 2007 முதல் 2012 வரை மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் 220 பேர். இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படாதவர்கள் 504 பேர். இந்தியாவில் 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை யாக்கப்பட்டவர்கள் 3751 பேர். 2007ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் 186 பேருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. பெரியார் முழக்கம் 13082015 இதழ்

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்

இரண்டாம் சுற்று – மாவட்டக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள். சேலம் மேற்கு சேலம் மேற்கு மாவட்டம்: தலைவர் – ப.க. சூரியகுமார், மாவட்ட செயலாளர் – சி. கோவிந்தராசு. மேட்டூர் அணை நகரம் : தலைவர் – செ. மார்ட்டின்; நகர செயலாளர் – அ. சுரேசு குமார்; நகர பொருளாளர் – கதிரேசன். குமரன் நகர் (கிளை கழகம்): தலைவர் – பொன். தேவராசு, செயலாளர் – அ. சீனி வாசன். காவலாண்டியூர்: தலைவர் – வ. மாரியப் பன்; செயலாளர் – பழனிச்சாமி. கொளத்தூர் : தலைவர் – பெரியசாமி; செயலாளர் – சி. இராமமூர்த்தி. கோவிந்தபாடி: பொறுப்பாளர் – சென்னியப்பன். உக்கம்பருத்திக்காடு : பொறுப்பாளர் – ஆட்டோ செல்வம். தார்க்காடு மற்றும் தண்டா : தலைவர் – தர்ம லிங்கம்; செயலாளர் – குமரேசன். நீதிபுரம் : தலைவர் –...

சிறப்புக் கட்டுரை –  மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி 0

சிறப்புக் கட்டுரை – மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் மாவட்டந்தோறும் கழகத் தோழர்களை மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று சந்தித்து வருகிறார்கள். கழக அமைப்புகளின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும், “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் தலைமுறைக்கு வேலை வேண்டும்”  பரப்புரை இயக்கத்துக்கு திட்டமிடவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு மேலும் சந்தாக்களை சேர்ப்பது குறித்தும் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரை நிகழ்த்தினார். பெரியாரியம் சந்திக்கும் புதிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க பெரியாரியலை வளர்த்தெடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும், ஜாதி-தீண்டாமை வெறியை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் ஜாதி சங்கத் தலைவர்கள் தூண்டிவிடும் ஜாதி வெறியை முறியடிப்பது குறித்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உரிமைகளை...

கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா? 0

கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா?

இது ‘சுதந்திர’ நாடா? 1950 ஜனவரி 26ஆம் தேதிய பலன், 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே பணப்பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக் கல் தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது ‘டிரான்ஸ்வர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப் பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், அதிகப் பாதுகாப்புடனும் 26-ந் தேதி முதற்கொண்டு நடைபெறப்போகிறது. – பெரியார். (‘விடுதலை’, 20.1.1950)      நிற்க, மேல்நாடுகளில் ‘சுதந்திர நாள்’, ‘சுதந்திர ஆண்டு விழா’க் கொண்டாடுவது போல், நம் நாட்டில் சுதந்திர நாள், ஆண்டு விழாக் கொண்டாடுவது – புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போலாகும். மேல்நாட்டார்கள் சுதந்திரம் பெற்றபின் பெற்ற நாளைக்குறி வைத்துக் கொண்டாடு  கிறார்கள். நாம் அதுபோல் கொண்டாட நமக்குச்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

மது விலக்கு எங்கள் கொள்கை; மற்ற கட்சிகள் பறித்துக் கொண்டு விட்டன. – பா.ம.க. அன்புமணி அரசியல் கட்சிகள விடுங்க; அரசாங்கமே உங்க கிட்டேயிருந்து இதை பறிச்சு அமுலாக்கிடாமல் பாத்துக்குங்க; அப்புறம் கட்சியே நடத்தமுடியாமல் போயிடும்! அரசு தடையையும் மீறி, கோயில்களில் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. – ‘இந்து’ ஏடு அதெல்லாம் கோயில் பிரச்சினைகளில், அரசு தலையிட முடியாது; தலையிடவும் கூடாது. இது இராமகோபாலன் உத்தரவு; தெரிஞ்சுக்குங்க. இந்தியாவிலேயே தூய்மையான நகரங்களில் முதலிடம் மைசூரு; இரண்டாவது திருச்சி. – செய்தி புண்ணியஸ்தலங்களான காசி, இராமேசுவரத்தை இப்படியெல்லாம் அவமானப் படுத்தக் கூடாது. இரயில்களில் பாட்டுப்பாடி, பிச்சை எடுப்பவர்களை அரசு திட்டங்களின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம். – செய்தி இந்தத் திட்டத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ பிச்சைக்காரர்களையும் சேர்த்துப் பீங்களா? பங்கு சந்தையில் ஏழுமலையான் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. – செய்தி சுவிஸ் வங்கியில் ஏற்கெனவே கணக்கு தொடங்கிட்டீங்களா? ‘கோ’ சாலைகளில் உள்ள...

தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம் 0

தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம்

“கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளி யுவராஜ் என்பவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. நடந்தது ஒரு சாதாரண கொலைதான், இதற்கு ஏன் காவல்துறை இப்படி பெரிதுபடுத்த வேண்டும் என்றும் காவல்துறையால் தன்னை நெருங்க முடியாது என்றும், தனது ஜாதிக்காரர்களிடம் ‘வாட்ஸ் அப்’ வழியாக யுவராஜ் பேசி, அந்த பேச்சு பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல் வேறு ஒரு கொலை வழக்காக இருந்தால் தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை அவரது குடும்பத்தினரைக் கைது செய்து குற்றவாளியை சரணடைய வைத்திருப் பார்கள். ஆனால், இந்த யுவராஜை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்து ஆகஸ்டு 17ஆம் தேதி ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து, திருச்செங் கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது” என்று செய்தியாளர்களுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டியளித்தார். தொடர்ந்து மதுவிலக்கு பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முழுமையான மதுவிலக்கு...

பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான பழி வாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது 0

பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான பழி வாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது

சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல், விஞ்ஞானம் மற்றும் பொது நிர்வாகத் துறையின் தலைமைப் பேராசிரியர் இராமு. மணிவண்ணன். ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றி வரும் பேராசிரியர். அய்.நா.வின் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ஜெனிவா சென்று மனித உரிமைத் தளங்களில் ஈழத் தமிழர் பிரச்சினைகளை முன்னெடுத்தவர். ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான சான்றுகளைத் திரட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆவணமாக்கியவர். ஒரு பேராசிரியர் என்ற எல்லையோடு தனது கடமை முடிந்துவிடவில்லை என்று சமுதாயப் பணியாற்றக் கூடியவர். அவரை இப்போது சென்னை பல்கலைக்கழகம் பழி வாங்கியிருக்கிறது. துறைத் தலைவர் பதவியிலிருந்து அவரை இறக்கிவிட்டு, அந்த இடத்துக்கு கோட்டீசுவர பிரசாத் என்பவரை துணைவேந்தர் நியமித்துள்ளார். பேராசிரியர் மணிவண்ணன் செய்த ‘குற்றம்’ தான் என்ன? “மதுக் கடைகளை மூடும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் பற்றிய தகவல்களைத் தருமாறு என்னிடம் கேட்டார்கள். மாணவர்களுக்கான போராட்ட உரிமைகளில் நான் தலையிட முடியாது என்று கூறி, அது குறித்த தகவல்களைத்...

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை 0

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை

‘இந்து’க்களை ஒரே அணியாக தமிழகத்தில் திரட்ட முடியாத நிலையில் வெவ்வேறு ஜாதிக் குழுக்களை தங்கள் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது. இந்து மத அடையாளங்களுக்குள் முடங்கிவிடாமல் தமிழகத்தில் பல்வேறு படி நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஜாதிக் குழுக்கள் அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தங்கள் உரிமைப் போரை முன்னெடுத்தன. இதுவே பெரியார் வலியுறுத்திய ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற கோட்பாடு. பார்ப்பன மேலாண்மைக்கும் ஆதிக்கத்துக்கும் அரணாக நின்ற ‘இந்து ஓர்மை’க்கு வேட்டு வைத்தது, இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெரியார் போராட்டத்தால் அரசியல் சட்டத்தில் நிகழ்ந்த முதல் திருத்தத்தின் வழியாக ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ சமூக கல்வி அடிப்படையிலான இடஒதுக்கீடாக மாறி அது தமிழ்நாட்டில் ஆட்சிகளைக் கடந்து தீவிரமாக செயலாக்கம் பெற்றது. உரிமை மறுக்கப்பட்ட ஜாதிக் குழுக்கள் முன்னேறத் தொடங்கின. உண்மையில் ‘தலைவிதி’, ஜாதி தர்மம்’ என்ற பார்ப்பனக் கோட்பாடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு உருவானதே இந்த முன்னேற்றம்! இந்த நிலையில், இந்த ஜாதிக் குழுக்களை மீண்டும்...

0

கழகத்தின் புதிய இணையதளம் dvkperiyar.com

நமது இயக்கத்தின் இணைதளம் dvkperiyar.com செயல்பட தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் தலைமை கழகத்தின் அறிக்கை, ‘புரட்சி பெரியார் முழக்கத்தின் தலையங்கம், சிறப்பு கட்டுரை, மற்றும் குடிஅரசு செய்தி, ஏதேனும் ஒன்று முகப்பு பக்கத்தில் வாராவாரம் தகவல் உள்ளீடு செய்யப்படும் செயற்களம் பகுதியில் அந்தந்த மாவட்ட செய்திகள் மற்றும் நிகழ்வுகள் அட்டவணை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செய்திகள் மற்றும் நடைபெற உள்ள நிகழ்வுகளை மற்றவர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த dvkperiyar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் புகைப்படங்களில் ஏதேனும் ஒன்று landscape இருப்பது சிறப்பு. மேலும் காணொளிகள் ஏதேனும் இருந்தால் youtube ஏற்றி உரலி (link) அனுப்பவும். எந்த மாவட்டத்தின் கீழ் செய்தி வரவேண்டும் என்பதையும் தெரியப்படுத்தினால் உள்ளீடு செய்ய உதவியாக இருக்கும். கழக மின்னூல்கள், குடிஅரசு மின்னூல்கள் மற்றும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மின்னூல்கள் வரும் நாட்களில் இணையத்திலேயே முழுதுமாக ஏற்றப்படும். குடிஅரசு யூனிக்கோடாகவும் படிக்க, காணொளிகள் மற்றும் பாடல்கள் ஏற்றவும் பணிகள் நடைபெற்று வருகிறது....

0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் நியமனம்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் அறிவித்த மாவட்டப் பொறுப்பாளர்கள். ஈரோடு (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் – சென்னிமலை செல்லப்பன்; மாவட்ட செயலாளர் – கு. சண்முக பிரியன்; மாவட்ட அமைப்பாளர்கள் – சென்னிமலை செல்வராசு, மரவபாளையம் குமார், மாநகர செயலாளர் – சிவானந்தம், மாநகர தலைவர் – திருமுருகன், மாநகர துணைத் தலைவர் – சத்தியராசு; பெருமாள்மலை கிளை தலைவர் – ராசன்னா; சித்தோடு கிளை தலைவர் – சத்தியராசு. மாவட்ட பொருளாளர் – மணகாட்டூர் கிருஷ்ணமூர்த்தி; மாவட்ட செய்தி தொடர்பாளர் – ஆசிரியர் மோகன்ராசு; மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் – அறிவுக்கன்பன், இனியன் பத்மநாபன், சென்னிமலை கோபிநாத். ஈரோடு மாவட்டப் (வடக்கு) பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் – நாத்திகசோதி; மாவட்ட அமைப்பாளர் – ம. நிவாசு; மாவட்ட செயலாளர் – ந. வேணுகோபால். கோபி ஒன்றிய செயலாளர் – நா. அருளானந்தம்; நம்பியூர் ஒன்றிய...

கழகத் தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் 0

கழகத் தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் ஜூலை 29ஆம் தேதி முதல் ஈரோட்டிலிருந்து தொடங்கின. ஈரோடு ரெசிடென்சி அரங்கில் பகல் 11 மணியளவில் கடவுள் ஆத்மா மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. மலேசிய மாந்த நேய திராவிடர் கழகத்தைச் சார்ந்த வே.சு. மணியம், தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஈரோடு பெரியார் நினைவிடத்தைப் பார்வையிட வந்த அவர், கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்துப் பேசிய பிறகு, மாவட்டக் கழகக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மலேசியாவில் கழகப் பணிகளை விளக்கி, சற்று நேரம் உரையாற்றி விடைபெற்றார். கலந்துரை யாடலில் கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மாவட்ட செயலாளர் சண்முகப் பிரியன், மாவட்டத் தலைவர் செல்லப்பன், அமைப்பாளர் குமார், செல்வராஜ், மாணவர் விஜயரத்தினம், கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி, நகரத் தலைவர் திருமுருகன், இராசன்னா, சுகுணா, கோபிநாத், இசைக்கதிர், சித்தோடு எழில், ஆதரவாளர் முருசேன், நடராசன், மோகன்ராஜ்,...

கச்சிதமாகப் பொருந்துகிறார் கலாம்! 0

கச்சிதமாகப் பொருந்துகிறார் கலாம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு சாய்ந்துவிட்டார். வேறு எந்த குடியரசுத் தலைவருக்கும் மக்களிடம் கிடைத்திடாத அனுதாபமும் இரங்கல் உணர்ச்சியும் கலாம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. அரசு அமைப்புகளும் ஊடகங்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தின. கிராமம், நகரம் வேறுபாடின்றி தமிழகம் முழுதும் கலாமுக்கு அஞ்சலி பதாகைகள் கண்ணீர் செலுத்தின. இது ஒரு வித்தியாசமான நிகழ்வுதான். பல அரசியல் தலைவர்களின் மரணங்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. செய்தி வந்தவுடனேயே தொண்டர்களில் சிலர் வன்முறைகளைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். கடைகளை அடைக்கச் சொல்லி தாக்குதல் நடக்கும்; பேருந்துகள் கல்வீச்சுகளுக்கு உள்ளாகும்; மூட மறுக்கும் கடைகள் சூறையாடப்படும்; தமிழ் நாட்டின் இந்த ‘அரசியல் கலாச்சாரம்’ அப்துல் கலாமின் மரணத்தில் விடைபெற்றுக் கொண்டது. அனைத்துமே அமைதியாக நடந்து முடிந்தன. கடைகளை தாமாகவே முன்வந்து மூடி,...

உச்சநீதிமன்றத்தில் ‘மநுசாஸ்திர’ சுலோகம் 0

உச்சநீதிமன்றத்தில் ‘மநுசாஸ்திர’ சுலோகம்

மேமன் கருணை மநுவை தள்ளுபடி செய்த நீதிபதிகளில் ஒருவரான அனில் தவே, தூக்குத் தண்டனையை நியாயப்படுத்திட ‘மனுதர்மத்தை’ சமஸ்கிருத மொழியில் எடுத்துக் காட்டினார். “அரசன் சரியாக விசாரணை நடத்தினால், அவனிடத்தில் கருத்த மேனியும், சிவந்த கண்களும் கொண்ட பாவத்தைப் போக்குகிற தண்டம் எனும் தெய்வத் தன்மையுடைய புருஷன் பிறக்கிறான். ஆதலால் அத்தகைய அரசனிடத்தில் மக்கள் துன்பமடைய மாட்டார்கள்.” – (மனு அத்.7 : சுலோகம் 25) இதே நீதிபதிதான் நான் சர்வாதிகாரி ஆனால் கீதையை தேசிய நூல் ஆக்குவேன் என்று சொன்னவர் ஆவார். பதவி விலகிய அதிகாரி “யாகூப் மேமன் கருணை மனுக்களை தள்ளுபடி செய்து விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றத்தின் இருண்ட காலம். நீதி நெறி முறைகள் கைவிடப்பட்டன” என்று எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் முனைவர் அனுப் சுரேந்திர நாத், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில் அவசர அவசரமாக கருணை மனுவை விசாரித்தபோது சுரேந்திர...

0

சிறப்புக் கட்டுரை – அடக்குமுறை சட்டங்களை முறியடிப்போம்!

அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார். அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் இந்துத்துவ மக்கள் விரோத அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் கண்டனக் கருத்தரங்கம் கோவை அண்ணா மலை அரங்கில் 30.7.2015. அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்) தலைமையில் நடந்தது. கருத்தரங்கில், தமிழகத்தில் காவல் துறை புதிதாகப் பயன்படுத்தத் தொடங்கி யிருக்கும் மற்றொரு அடக்குமுறை சட்டமான ‘சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்துக்கு (Unlaw – ful Activities( Prevention ) Act – UPPA) கடும் எதிர்ப்பு தெரிவித்து தோழர்கள் பலரும் உரையாற்றினர். ‘தடா’, ‘பொடா’ சட்டங்களைப்போல் இதுவும் ஒரு கொடூரமான அடக்குமுறை சட்டமாகும். இந்த சட்டங்கள் முறைகேடாகவே பயன் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பொடா சட்டத்தை நீக்கிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இந்தச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த...

தலையங்கம் – போராட்டக் களமாகும் தமிழகம் 0

தலையங்கம் – போராட்டக் களமாகும் தமிழகம்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற போராட்டம், அரசியல் கட்சிகளையும் தாண்டி மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதி, கைபேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று நடத்திய போராட்டத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது. மதுவிலக்கு குறித்து ஜூலை 19இல் தர்மபுரியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு பகுதியை சுட்டிக்காட்ட விழைகிறோம். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், ‘மதுக்குடி’ தனிப்பட்ட சிலரின் பழக்கமாக இருந்த நிலை மாறி, இன்று சமூகத்தையே சீர்குலைத்து வருகிறது. மாணவர்களையும் இளைஞர்களையும் போதை அடிமைகளாகவும் குடிநோயாளிகளாகவும் மாற்றிவருவது ஆபத்தான அறிகுறியாகும். மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், விற்பனைக்கு கூடுதலாக இலக்கை நிர்ணயிப்பதும் ஒரு மக்கள் நலன் பேணும் ஆட்சிக்கான செயல் திட்டமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கின்றன. கள்ளச் சாராயம் வர்த்தகமாகி, காவல்துறை-கள்ளச் சாராய வியாபாரிகள் இரகசிய...

மன்னையில் கனல்மதியின் கவிதை நூல் அறிமுகம் 0

மன்னையில் கனல்மதியின் கவிதை நூல் அறிமுகம்

கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கில் 8ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி கனல்மதி எழுதிய ‘இப்படிக்கு மழை’ கவிதை நூல் அறிமுகம் நடந்தது. திருப்பூரில் அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி படிக்கும் கனல் மதி, கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் கழகப் பொறுப்பாளர் முகில்ராசு, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி ஆகியோரின் மகள் ஆவார். நூல் அறிமுக நிகழ்வு எழுத்தாளர் மருதம் சோதி தலைமையில் நடந்தது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி. ஜெகவர்சாதிக் நூலை வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தோழர் சேதுராமன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் பசு. கவுதமன் நூல் திறனாய்வு செய்தார். கவிதைகளை எழுதிய மாணவி கனல்மதி ஏற்புரை வழங்கினார். பெரியார் முழக்கம் 30072015 இதழ்

பேராசிரியர் கல்விமணி வலியுறுத்தல் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் 0

பேராசிரியர் கல்விமணி வலியுறுத்தல் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்

நாட்டில் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என மன்னார்குடியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி புரட்சி நாள் கருத்தரங்கமாக நடைபெற்றது. கருத்தரங்கில் காமராஜர் படத்தை, முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவாராஜமாணிக்கம் திறந்து வைத்து பேசினார். அதுபோல் பெரியார் படத்தை, தஞ்சை தமிழ்பல்கலைக்கழக பேராசிரியர் வெற்றி செல்வன், அம்பேத்கர் படத்தை, திருவாரூர் கவுன்சிலர் வரதராஜன் ஆகியோர் திறந்து வைத்து பேசினார்கள். தொடர்ந்து, ‘தமிழக பள்ளி-கல்வி பிரச்சனைகளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபா கல்விமணி பேசினார். அப்போது, “மத்திய மாநில அரசுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும் அனைத்திந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத்தேர்வுகளிலும், தமிழிலும் கேள்வித்தாள் அளிக்கப்படவேண்டும். மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கும் ஐஐடி மற்றும்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

‘வாஸ்து’ நம்பிக்கையால் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் 70 எம்.பி.க்கள் குடியேறவில்லை – செய்திவிடாதீங்க… டெல்லிக்குப் போகும் விமானத்துலயும் வாஸ்துப்படி இருக்கை கேளுங்க! இல்லாவிடில் டில்லிக்கும் போகாதீங்க! தில்லை நடராசன் கோபுரத்தை மறைத்து கட்டிடம் கட்டுகிறார்கள், தீட்சதர்கள். – செய்திகோபுரத்தை இடிச்சுட்டு ‘பிளாட்’ போட்டுக்கூட விப்பாங்க; அதுக்கெல்லாம் உச்சநீதிமன்றத்துல சு.சாமி அதிகாரம் வாங்கிக் கொடுத்திருக்காரு! கோயில்களில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வது ஆகமத்துக்கு எதிரானது. – இந்து அமைப்புகள் எதிர்ப்புசூரிய பகவானையும் ‘சூத்திரர்’ பட்டியலில் சேர்த்துட்டேளா? திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக ரீதியாக எடுக்கும் முடிவுகளால் ‘புரோக்கர்’களுக்குத் தான் பயன். – ‘தினமலர்’ விடுங்கய்யா… ஏழுமலையான் புரோக்கர்களான அர்ச்சகர்கள் மட்டும்தான் காலம்காலமாய் பயனடைய வேண்டுமா என்ன? அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம். – செய்திமண்சோறு உண்டார்; மண்ணில் உருண்டார்; ‘மந்திரி’யும் இழந்தார்! கடவுள் பெயர்களை வணிக நிறுவனங்கள் வர்த்தகத்துக்குப் பயன்படுத்த தடை இல்லை. – டெல்லி உயர்நீதிமன்றம்வர்த்தகத்துக்குப் பயன்படுத்தலாம்; வர்த்தக மோசடிக்கும்...

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது” 0

75ஆம் பிறந்த நாளில் கழகம் வழங்கியது பெரியார் பெருந்தொண்டர் சதாசிவத்துக்கு “பெரியாரியல் பேரொளி விருது”

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்டகால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின் நியாயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு...

கிருஷ்ணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா 0

கிருஷ்ணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா

கிருஷ்ணகிரி, நுகர்வோர் சேவை மையம் நடத்திய கல்விக்கண் தந்த கர்மவீரர் காமராசரின் 113 வது பிறந்த நாள் விழா கல்வி விழிப்புணர்வு விழாவாக நடைபெற்றது. இவ்விழாவை ஒட்டி கிருஷ்ணகிரியில் 21.07.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நுகர்வோர் பொதுச்சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். இந்த விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். உரையில் காமராசருக்கும் பெரியாருக்குமான உறவு, கல்விப் பெருக்கத்துக்கு ஆற்றிய பணிகள், பசுவதை தடை குறித்து அவரது எதிர்ப்பால் அவர்மீது இந்து மதவெறி அமைப்பினரின் தாக்குதல் ஆகியவற்றை விளக்கிப் பேசினார். விழாவின் தொடக்கத்தில் புதுவை அதிர்வுக் கலைகுழுவின் பறையிசை, கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்வேறு அரசியல் அமைப்புச் சேர்ந்தவர்களும், இலக்கிய அமைப்பினரும் உரையாற்றினர். முன்னதாக கிருட்டிணகிரியில் கழகத் தலைவர் பங்கேற்ற காமராசர் விழா கிருஷ்ணகிரி கொத்தபேட்டா...