‘அவாள்’ பிடிக்குள் அமைச்சரவை

மோடி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது புதிதாக நியமனமான 4 காபினட் அமைச் சர்களில் 3 பேர் பார்ப்பனர்கள். மோடியின் அமைச்சரவையில் அதிகாரங்களுடன் அமர்த்தப்பட் டுள்ள பார்ப்பன அமைச்சர்கள். அவரது துறைகள்:
சுஷ்மா சுவராஜ் – வெளி விவகாரத் துறை; அருண் ஜெட்லி – நிதித் துறை; நிதின் கட்காரி – கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை; கல்ராஜ் மிஸ்ரா – சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை; அனந்த் குமார் – இரசாயனம் மற்றும் உரத் துறை; மனோகர் பாரிக்கர் – பாதுகாப்புத் துறை; சுரேஷ் பாபு – தொடர்வண்டித் துறை; ஜெ.பி. நட்டா-சுகாதாரத் துறை.
இது தவிர, வணிக வரித்துறை அமைச்சராக முழு அதிகாரம் பெற்ற இணை அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன். இந்தி யாவில் மத்திய அமைச்சரவை யில் இதற்கு முன் இவ்வளவு அதிக எண்ணிக்கை யில் பார்ப்பனர் கள் இடம் பெற்றதில்லை. முக்கியத் துறைகள் அனைத்துப் பார்ப்பனர் களின் கட்டுப்பாட்டில்தான் முடங்கிக் கிடக்கின்றன.
தனிப் பொறுப்புடன் கூடிய
10 இணை அமைச்சர்களில் 5 பேர் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர்,
4 பேர் பிற்படுத்தப்பட்டோர். 12 இணை அமைச்சர்களில் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி 4 பேர், பிற்படுத்தப் பட்டோர் 4 பேர், பழங்குடியினர்
4 பேர், காபினட் அமைச்சர்களில் ஒரே ஒருவர் மட்டும் முஸ்லிம். பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. மோடி தத்து எடுத்த கிராமமான உ.பி.யில் உள்ள ஜெய்பூரில் ஒரு முஸ்லிம்கூட கிடையாது. பா.ஜ.க. ஆளும் 9 மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே அமைச்சர். ஆனால், மத அடிப்படையில் பிளவுபடுத்துவதை தாம் ஆதரிக்கவில்லை என்று மோடி ‘வசனம்’ பேசிக் கொண்டிருக்கிறார்.

பெரியார் முழக்கம் 11062015 இதழ்

You may also like...

Leave a Reply