Category: நிமிர்-கட்டுரைகள்

மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

“மதங்களைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட மத ஆட்சிகள், அந்தக் கொள்கையை கைவிடுமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உண்டு” என்று இங்கிலாந்தில் உள்ள ‘பிரிஸ்டல் பல்கலைக்கழகம்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் முடிவுகளை சர்வதேச புகழ்  பெற்ற ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழ் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு – புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கிறது. “ஒரு நாடு எந்த அளவுக்கு மத நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏழ்மையில் சிக்குண்டு கிடக்கிறது” என்று புதிய ஆய்வு கூறுகிறது. அல்பேனியாவிலிருந்து ஜிம்பாவே வரை உள்ள உலகின் பல்வேறு நாடுகளின் தனி மனித வருவாய், சமூகப் பிரச்சினை, நாணய மதிப்பு, வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை சேகரித்து விரிவாக நடத்தப்பட்ட ஆய்வு இது. மதச்சார்பின்மை என்ற கொள்கை வளர்ச்சிக்கு ஒரு முன் நிபந்தனை. மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றுவதாலேயே பொருளாதார வளர்ச்சி தானாக வந்து விடும் என்பது இதன் அர்த்தமல்ல” என்று...

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் – சு. அறிவுக்கரசு

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் – சு. அறிவுக்கரசு

பழந்தமிழ் இலக்கியங்கள் என்பதற்காகக் கொண்டாடப்பட வேண்டிய அவசியமில்லை. நல்ல கருத்துகளை ஏற்பதும் பழமையான மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளுவதுமே அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக முடியும். தம் மொழி இழந்து, நம் மொழி பேசும் நிலைக்கு ஆளாகியும்கூட, பார்ப்பனர் தம் பழக்க வழக்கங்களை விடாது கைக் கொள்கின்றனர். தொல்காப்பியம் கூறிய சின்னங்களுக்குப் பதிலாக சிகரெட்டும், விஸ்கி தம்ளரும் தம் கையில் ஏந்தி இன்று இருந்தாலும் மார்பில் முப்புரி நூலை விடாது அணிந்து தம் உயர்வைக் காட்டியே வருகின்றனர் என்பதை மறக்க முடியுமா? தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா போன்ற இன்றைய நிலப் பகுதிகள் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் அது கோண்ட்வானா என அழைக்கப்படலாம் எனவும் அதன் வடபகுதியில் ‘லெமூரியா’ இருந்தது என்றும் அதுவே தமிழ் இலக்கியம் கூறும் ‘நாவலந்தண்பொழில்’ என்றும் கூறுவர். 340 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்கோள் ஒன்றினால் இந்நிலப்பரப்பில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு லெமூரியா அழிந்ததாகவும்...

ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம்

ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம்

75 ஆண்டுகால பொது வாழ்க்கை; 50 ஆண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்துக்குத் தலைமை என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வு. இந்து பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பில் கடைக்கோடிப் பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  சமூகத்தின் இளைஞர் – சமூகத் தடைகளைக் கடந்து அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடித்ததே மகத்தான சாதனைதான். அந்த சாதனைக்குப் பெயர் கலைஞர்! இதையே தனது சமூகப் புரட்சித் தொண்டுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பூரித்தவர் பெரியார். அந்த சாதனையை சமூகத்துக்குப் பிரகடனப்படுத்தவே கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பெரியார், அதற்கு தனது சொந்த நிதியை வழங்க முன் வந்தார். இது சூத்திரர்களால் – சூத்திரர்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்திலே ஒரு முதல்வராக கலைஞர் பிரகடனம் செய்தபோது, அது ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்கான பெரியாரின் களப்போருக்கு சூட்டப்பட்ட மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதே சூத்திர இழிவு...

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு (Current A/C) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 IFC Code : KVBL0001257 தொடர்புக்கு:  7299230363  

மோடியின் நான்கு ஆண்டு வேதனைகள்

மோடியின் நான்கு ஆண்டு வேதனைகள்

பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, 2014ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் முழுமையாக துரோகம் செய்திருக்கிறது. கடந்த நான்காண்டுகளில், நாட்டின் மீதும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். நாட்டின் பொருளாதார அடிப்படை களுக்கு வலுவாக இருந்தவற்றை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் ஜி.எஸ்.டி. அமலாக்கம் என்னும் இரட்டைத் தாக்குதல்கள் சின்னாபின்னமாக்கிவிட்டன. இவ்விரண்டும், மீட்கமுடியாத அளவிற்கு நம் பொருளாதாரத்தை அழித்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, பாதிக்குப் மேல் பங்களிப்பினைச் செலுத்திவந்த, வேளாண்மைக்கு அப்பால் உள்ள தொழில் களில் ஈடுபட்டுவந்த அதிகபட்ச எண்ணிக்கை யிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. ஜிஎஸ்டியும் அது அமல்படுத்தப் பட்ட விதமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுத்து வந்த இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை கிட்டத்தட்ட...

வி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்

வி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்

28.12.1992 அன்று திருச்சி பெரியார் நினைவு நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் – குழந்தைகள் காப்பகக் கட்டிடத் திறப்பு விழாவில் நிகழ்த்திய உரை: பெரியார் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருக்குப் பின்னாலே இருக்கின்ற மக்களின், வருகின்ற சந்ததியினரின் உள்ளங்களிலே, அவரது கருத்துகள் நிறைந்திருக்கின்றன என்றால், அவர் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது. மாறாக, அவர் என்றைக்கும் மக்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். மிகப் பெரிய தலைவர் பெரியார் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். அதன் காரணமாக இந்தச் சமூக அநீதியைக் கொடுமையைத் துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்; அதற்காகவே உழைத்தார். ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது, ‘அவமானம்’ என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப் பட்டார்கள். நெருப்பிலே வெந்து கொடுமைப் படுவதைவிடக் கொடுமையானதுதான்...

சாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்த முயன்றவர்

சாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்த முயன்றவர்

பார்ப்பனர்களின் பார்வையில் வி.பி.சிங் கொடிய எதிரியாகவே பார்க்கப்பட்டார். ‘துக்ளக்’ சோ வி.பி.சிங் மீது நஞ்சு கக்கியதோடு அதற்காக அவர் அரசியல் எதிரியான காங்கிரசோடுகூட சமரசத்துக்கு தயாராக இருந்தார். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான இன்னொரு விஷயம்வி.பி.சிங்கின் மரணம் பற்றிய செய்தியாகும். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் மும்பை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பர்ஸானா வெர்ஸெ கூறுவது போல, வி.பி.சிங் தான் இறப்பதற்கு ஒரு தவறான தருணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். “மக்களின் எதிரிகள் எதைப் புகழ் கிறார்களோ அதை நாம் இகழ வேண்டும். அவர்கள் எதை இகழ்கிறார்களோ அதை நாம் புகழ வேண்டும்” என்றார் மாவோ.அது வி.பி.சிங் விஷயத்திற்கும் ஓரளவு பொருந்தும்.எனவே, அவரைப் பற்றி இந்து பாசிசவாதிகளின் மிக சாதுரியமான, மிக சாமர்த்தியமான பிரதி நிதியான “சோ’ ராமசாமி கூறியுள்ளதைக் காண்போம்: “வி.பி.சிங்கின் (ஆட்சிக்) காலம் நெறி தவறிய காலம். அந்த மனிதரை நான் எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறேன்.ஆக, எனது கருத்துக்கள் ஒரு...

இந்திய அரசியலில்   அதிசய மனிதர் – விடுதலை இராசேந்திரன்

இந்திய அரசியலில் அதிசய மனிதர் – விடுதலை இராசேந்திரன்

வடநாட்டில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. பெரியாரியல்வாதிகளான  நமக்கு  எந்த வட நாட்டுத் தலைவர் மீதும் அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. அம்பேத்கர் ஒருவரைத் தவிர; எல்லைகளைக் கடந்து தமிழர்களின் இதயத்தோடு ஒன்றிவிட்ட ஒரு தலைவராக வி.பி.சிங் மட்டுமே தெரிகிறார். இந்திய அரசியலில் இவரைப்போல் ஒரு அதிசயமான மனிதரை நாம் கண்டதில்லை. பார்ப்பன ஊடகங்கள் அவர் மீது கக்கிய கசப்பு ஒன்றே போதும். என்றைக்குமே ஊடகங்களின் வளையத்துக்குள் அவர் வீழ்ந்தது கிடையாது. இந்த நாட்டின் ஊடகங்கள் பற்றிய தெளிவான புரிதல் தந்தை பெரியார் அவர்களைப் போல் வி.பி.சிங்குக்கு இருந்தது. அதை வி.பி.சிங் தனக்கே உரிய மொழியில் படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததற்காக அவர் பதவியை இழந்தார். நாடாளுமன்றத்தில் அவர் நம்பிக்கை ஓட்டு கிடைக்காமல் பதவியை விட்டு விலகினார். பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான். (2.12.89 இல் பிரதமராகப்...

அடையாளங்களை அழிக்கும்  வடமொழி

அடையாளங்களை அழிக்கும் வடமொழி

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்னையை எடுத்துக் கொள்வோம். ‘ஜாதி’ என்ற வடமொழிச் சொல்லை தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன். பண்டிதர்கள்தான் கூறட்டுமே. – பெரியார் உலகில் எந்த ஒரு மொழியும் தூய மொழியாக இருப்பதற்கான வாய்ப்பு என்பது அறவே கிடையாது. மனிதர்கள் இடம் பெயரும்போது அவர்களுடன் சேர்ந்து அவர்களின் மொழியும் இடம் பெயருகின்றது. பல்லாயிரம்  ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இடப்பெயர்ச்சியும், போர்களும், வர்த்தகமும் உலகில் உள்ள அனைத்து மொழிகளின் தூயத்தன்மையும் இழக்கச் செய்திருக்கின்றது. மொழி கலப்படைதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் சில சமயம் பண்பாட்டு ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை பண்பாட்டு ரீதியாக மிகவும் பின்தங்கி இருக்கும் இன்னொரு மக்கள் கூட்டத்தின் மொழி அதில் இரண்டற கலக்கும்போது நாகரிக நிலையில் இருக்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவிற்கு உள்ளாவதுடன் அந்த மக்களின் அறிவியல் சிந்தனை அழிக்கப்பட்டு...

இனி மரணத்தை வெல்லலாம்

இனி மரணத்தை வெல்லலாம்

இனி உயிர்க்கொல்லி நோய் களாலும், முதுமையாலும் மரணம் அடைவதைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று மரபணு பொறியாளர்களான வெனிசூலா நாட்டைச் சேர்ந்த ஜோஸ் லூயிஸ் கார்டெய் ரோவும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் உட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அண்மையில் இவர்கள் ‘தி டெத் ஆப் டெத்’ (மரணத்தின் மரணம்) என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள் இனி மரணம் இல்லாத நிரந்தரமான வாழ்வு, யதார்த்தமாகவும், அறிவியல்பூர்வமாகவும் சாத்தியம் ஆகும். அது எதிர்பார்த்தைவிட இன்னும் வேகமாக சாத்தியம் ஆகப் போகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இனி மனிதர்கள் விபத்துகளில் மரணம்  அடைவது மட்டுமே தவிர்க்க முடியாமல் போகுமே தவிர, ஒரு போதும் இயற்கையாகவோ, நோயினாலோ மரணம் அடைய மாட்டார்கள் என்ற சூழல் வந்துவிடும். பிற புதிய மரபணுக்களை கையாளும் தொழில் நுட்பங்களுடன் நானோ தொழில் நுட்பம், இதில் முக்கிய பங்கு ஆற்றப் போகிறதாம். அப்போது, ‘மறு ஜென்மம்’, ‘தலைவிதி’...

அடிப்படையான பத்து கேள்விகளுக்கு  அறிவியல் விளக்கம்

அடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்

ஆன்மீகக் கருத்துகளுக்கு இடம் தருகிற பாட நூல்கள் ஏன் நாத்திகக் கருத்துகளுக்கு இடம்தரக் கூடாது? அப்படி இடம் தந்தால் இருபதே ஆண்டுகளில் இந்த சமுதாயத்தை விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்திக்கிற மனிதநேயப் பொதுவுடைமைச் சமுதாயமாக மாற்றிக் காட்ட முடியும். இன்றைய உலகில் விஞ்ஞானம் மிக மிக வளர்ந்திருக்கிறது. சரி! விஞ்ஞானப்பூர்வ மனோ பாவம் அதே அளவு வளர்ந்திருக்கிறதா? இல்லை! அதுவும் இந்தியா போன்ற பழம் பிரதேசங்களில் மூட நம்பிக்கைகள் கொடிகட்டி பறப்பதை கண்கூடாகவே காண முடிகிறது. நமது நாட்டில் மெத்தப் படித்த பல மேதாவிகள் கூட சூரியனையும் சேர்த்துத்தான் “நவக்கிரகம்” என்று நம்புகிறார்கள்! வழிபடுகிறார்கள்! ஆனால் உண்மை அதுவா? இல்லை! சூரியன் ஒரு நட்சத்திரம்! அதேபோல “இராகுகால” நம்பிக்கை! பூமத்திய ரேகையையொட்டி பூமியின் சுற்றளவு சுமார் 40ஆயிரம் கிலோ மீட்டர். அந்த தூரத்தை 24 மணி நேரத்தில் பூமி தன்னைத் தானே சுற்றுவதன் மூலமாகக் கடக்கிறது என்றால், ஒரு நிமிடத்தில் அது கடக்கும்...

காஷ்மீர் அத்துமீறல் : சர்வதேச விசாரணை கோருகிறது  – அய்.நா.

காஷ்மீர் அத்துமீறல் : சர்வதேச விசாரணை கோருகிறது – அய்.நா.

காஷ்மீர் பகுதிகளில் இந்திய இராணுவம் நடத்தி வரும் ‘பெல்லட் குண்டு’ வீச்சு அடக்குமுறை சட்டத்தின் கீழ் நடக்கும் கைதுகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா. மனித உரிமை ஆணையம் 2018 ஜூன் 14ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்துள்ளது, இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்தும் அத்துமீறல்களையும், இந்த விசாரணைக்கு உள்ளாக்கக் கோருகிறது இந்த அறிக்கை. நடுவண் ஆட்சி, இந்த அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறிவிட்டது. காங்கிரஸ் கட்சியும் இதில் பா.ஜ.க.வுடன் இணைந்து அய்.நா.வின் அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அய்.நா. அறிக்கையைத் தொடர்ந்தே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கே கூட்டணியில் இருந்த பா.ஜ.க.  ஆதரவை விலக்கிக் கொண்டு ஆளுநர் ஆட்சிக்கு வழி திறந்துள்ளது. நிமிர்வோம் ஜுன் 2018 இதழ்

மசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா? – ஏ.ஜி. நூராணி

மசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா? – ஏ.ஜி. நூராணி

காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட் டத்துக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சி குடியரசுத் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைத்திருக்கிறது. பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் என்ற காவி அமைப்புகள் காந்தியைத் தங்களின் ஆதரவாளராகக் காட்டுவதற்கு நிகழ்த்திய மோசடிகளை அம்பலப் படுத்துகிறது, இந்தக் கட்டுரை. காந்திஜி எந்த இலட்சியங்களுக்காகப் பாடுபட்டாரோ அவற்றை நிராகரித்து வரும் சங்பரிவார் தனது அரசியலை நியாயப்படுத்திக்  கொள்ள காந்திஜியின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமான நடைமுறை. பிரிட்டனில் செயல்படும் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவரான எல்.சி. பௌன்ஞ் என்பவர் அயோத்தி பிரச்னைப் பற்றி இந்துக்களின் கருத்து என்ன என்று விளக்கும் கடிதம் ஒன்றை பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் அளித்தார் . இராம ஜென்ம பூமி பற்றிய சர்ச்சையைப் பற்றி காந்திஜியின் கருத்துக்கள் 27.7.1937 தேதியிட்ட ‘நவஜீவன்’ பத்திரிகையில் வெளி வந்துள்ள தாகக் கூறிய அவர் அவற்றைத் தமது கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்தார். காந்திஜியின் கருத்துக்கள்...

புராணங்களிலும் வேதங்களிலும் அறிவியல் இருந்தது என்ற மோசடிப் பிரச்சாரத்தை எதிர்க்காமல் அறிவியலாளர்கள் மவுனம் சாதிக்கலாமா? புராணப் புரட்டுகளுக்கு அறிவியல் முலாம்

புராணங்களிலும் வேதங்களிலும் அறிவியல் இருந்தது என்ற மோசடிப் பிரச்சாரத்தை எதிர்க்காமல் அறிவியலாளர்கள் மவுனம் சாதிக்கலாமா? புராணப் புரட்டுகளுக்கு அறிவியல் முலாம்

“கோட்சேயும் சாவர்க்கரும் இந்தியா வில் ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள்!” “ஐன்ஸ்டீனின் சார்பு நிலை கோட்பாட்டை விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளன என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியிருக்கிறார்.” “ஆரியர்களின் தாயகமான வட துருவம் பீகாருக்கும் ஒரிசாவுக்கும் நடுவில் இருந்தது.” “பசுவை வழிபடுவதும், கோமாதா வழிபாடும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஆகப்பெரிய பங்களிப்பை செய்யும் சக்தியுடையது” – இது போன்ற பிதற்றல்களை, பாரத வரலாறு என்றும், உலக வரலாறு என்றும் நமது பள்ளி மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மதவாதத் திட்டம். இவற்றின் அடிப்படையில் பள்ளி வரலாற்றுப் பாடங்களைத் திருத்துவதற்கு முன் தயாரிப்பாக, மோடியின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, 14 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார். இந்த கமிட்டியின் தலைவரான கே.என். தீட்சித் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர். ராய்ட்டர்ஸ் அம்பலபடுத்தியது 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கமிட்டி பற்றிய...

அலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள் ட ம.கி. எட்வின் பிரபாகரன்

அலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள் ட ம.கி. எட்வின் பிரபாகரன்

உத்திரபிரதேசத்தில் செயல்பட்டு வரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்குள் புகுந்து, துப்பாக்கி, தடி, கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பல கல்வியாளர்களும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனங்களை போராட்டங்களின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது “ஹிந்து யுவவாஹினி” என்ற சங்பரிவார் அமைப்பாகும் தாக்குதலின் பின்னணி ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் என்பது, ஹிந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதற்கு நடத்தப்படும் பயிற்சிகளாகும். இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடைபெற்று வருகின்றன. ஷாகா பயிற்சிகளால், பல வன்முறைகள் நாட்டில் நடந்துள்ளன. பனாரஸ் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், 1976– ஆம் ஆண்டு, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அடித்து நொறுக்கப்பட்டது. இத்தகைய மதவெறி யூட்டும் ஷாகாக்களை, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடத்த, பல்கலைக் கழக துணைவேந்தர் தாரிக் மன்சூரிடம் அனுமதி கோரப்பட்டது....

இந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை? சுயமரியாதையும் பொதுவுடைமையும் (1)

இந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை? சுயமரியாதையும் பொதுவுடைமையும் (1)

மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சமதர்ம அறிக்கையை 1931லேயே ‘குடிஅரசு’ வெளியீடாக பெரியார் வெளியிட்டார். அதற்கு பெரியார் எழுதிய முன்னுரையில் வேறு நாடுகளில் இல்லாத இந்தியாவில்   கூடுதலாக ஜாதி என்ற அமைப்பு இருப்பதை எடுத்துக்காட்டி ஜாதி முதன்மையானதாகவும் பணக்கார – ஏழை தத்துவத்துக்குக் கோட்டையாகவும் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ளார். பெரியார் தீட்டிய முன்னுரை: தற்காலம் உலகில் ரஷியாவிலும், ஸ்பெயினிலும், மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவைகளின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு  உண்மையாகும். இவ்வுணர்ச்சியானது ரஷியாவில் தான் முதல் முதல் தோன்றியதாக நமது மக்களில் அனேகர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். சமதர்ம உணர்ச்சி சம்பந்தமான சரித்திரத்தைக் கவனித்து ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இக்கருத்து சரியானதல்ல என்பதாகத் தோன்றும். ஏனெனில், உலகில் சமதர்ம உணர்ச்சி என்பதானது பல நூற்றாண்டு களுக்கு முன்பே தோன்றியிருப்பதற்கு அத்தாட்சிகளிருக்கின்றன. சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங்களைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும்...

தேர்தலைப் புறக்கணித்தார்; இயக்கத்தால் சாதித்தார்!

தேர்தலைப் புறக்கணித்தார்; இயக்கத்தால் சாதித்தார்!

‘பொதுவுடைமையரின் வருங்காலம்?’ என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் ஏன் வளராமல் போயிற்று என்ற விரிவான ஆய்வை விவாதத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது அந்நூல். கம்யூனிஸ்ட் கட்சி என்பது தேர்தல் வெற்றி தோல்விக்கானது அல்ல; அது ஒரு இயக்கம் என்பதை கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார், தோழர் தா. பாண்டியன். “கம்யூனிஸ்ட் கட்சி எந்த வழியிலும் எவருடன் சேர்ந்தாவது விரைவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று போராடும் கட்சி அல்ல என்பதை உணர்த்த வேண்டும். அதாவது இலட்சியத்தை நோக்கிப் பயணம் செய்வது விரிவானது. அதற்குப் பெயர்தான் இயக்கம்” என்று வலியுறுத்தும் தோழர் தா. பாண்டியன், இதற்கு உதாரணமாக பெரியாரைக் குறிப்பிடுகிறார்: “திராவிடர் கழகத்தை அமைத்த தந்தை பெரியார், தன் இயக்கம் தேர்தலில் போட்டியிடாது என அறிவித்தவர். மூட நம்பிக்கை ஒழிப்பு உயர் ஆதிக்க சாதி எதிர்ப்பு...

ஜாதி – மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது – ஜெயராணி

ஜாதி – மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது – ஜெயராணி

கல்வி, பொருளாதார, அரசியல் தளங்களில் பெண்கள் தமக்கான இடத்தைச் சம அளவில் பெறுவதென்பது அவர்களுக்குச் சுதந்திரத்தை உறுதி செய்து தரும். அவ்வாறே தந்து  கொண்டிருக்கிறது. ஆனால் சமத்துவத்தை? இம்மூன்று நிலைகளிலும் அடைந்த விழிப் புணர்வும் முன்னேற்றமும் பெண் களுக்குச் சமத்துவத்iதை உறுதி செய்து தர முடியவில்லை. அது சமூகப் புரட்சியால் மட்டுமே சாத்தியப்படும். நவீன இந்தியாவின் பெண்கள், முன்னேற்றத்தின் படிகளில் வேகமாக ஏறிக் கொண்டிருக்கும் காலமிது. கடந்த தலைமுறைகளைவிட பெண்கள் அதிக அளவில் கற்றறிந்தவர்களாக இருக்கின்றனர். தம் தாய், தாயின் தாயைவிடப் பரவலாகப் பொருளாதார சுதந்திரம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அன்றிருந்ததைப்போல வீடுகளுக்குள் முடங்கி இல்லாமல் சுதந்திரமாக வலம்வர முடிகிறது. தம் தேவைகளை, பிரச்னைகளை, கருத்துக்களை உரக்கச் சொல்லும் உரிமைகள் சாத்தியப்பட் டிருக்கின்றன. ஆனால் பண்பாட்டு ரீதியாகப் பெண் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் மாறியிருக்கிறதா என்றால் இல்லவே இல்லை என்பதே கசப்பான பதில். இத்தனை முன்னேறிய காலத்திலும் பெண் என்பவர், அச்சம், மடம்,...

தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்   பேராசிரியர் அருணன்

தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம் பேராசிரியர் அருணன்

ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவரது இயக்கத்தின் வழி வந்தவர்களுக்கு தலைமை தாங்கும் பால பிரஜாதிபதி அடிகளார் ‘அய்யா’ வைகுண்டசாமி வழி வந்தவர்களை தனி மதமாக  அறிவிக்க வேண்டும்; அவர்கள் ‘இந்துக்கள்’ அல்லர் என்று வலியுறுத்தி வருகிறார் கருநாடகத்தில் ‘லிங்காயத்து’க்களை தனி மதமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முன் வைத்த கோரிக்கைக்காக ஆர்.எஸ்.எஸ்.சின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். வைகுண்ட சாமிகளின் வரலாற்றை சுருக்கமாக அறிமுகப் படுத்துகிறது இக்கட்டுரை. கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள பூவண்டன் தோப்பு (சாஸ்தான் கோவில்விளை என்றும் சாமிதோப்பு என்றும் கூறுவர்) எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டில் பிறந்தவர் வைகுண்ட சுவாமிகள். இவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அந்தக் காலத்தில் மன்னர்கள் அல்லது உயர்சாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை தாழ்ந்த சாதியினர் வைத்துக் கொள்ளக் கூடாது என்றிருந்தது. எனவே இப்படிப் பெயர்...

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும்  காவி பயங்கரவாதிகள் –  செ.கார்கி

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் காவி பயங்கரவாதிகள் – செ.கார்கி

இந்திய நீதித்துறைக்கு இது இருண்ட காலம். குஜராத் கலவரத்தில் இருந்து தொடங்கி கொலை வெறியாட்டம் நடத்திய காவி பயங்கரவாதிகள் அனைவருக்கும், மோடி பதவியேற்றதில் இருந்து, விடுதலை அளிக்கும் பணி வெகு விரைவாக நீதிமன்றத்தின் துணையுடன் நடந்து வருகின்றது. முன்னதாக குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பண்டியா ‘ மக்கள் நீதி மன்றம்’ என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டதால் அவர் சோராபுதீன் என்ற ரவுடி மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த உண்மை வெளியே கசியவே மோடி சோராபுதீனை போலி மோதல் மூலம் கொல்ல வன்சாரா என்ற அதிகாரியை நியமித்தார். வன்சாரா சோராபுதீனையும் அவனது அடியாளாக இருந்த துளசி ராம் பிரஜாபதியையும் போலி மோதலில் கொன்றது மட்டும் அல்லாமல் சோராபுதீனின் மனைவி கவுசர் பீ யையும் விச ஊசி போட்டுக் கொன்றார். இவ்வளவு கொலைகளும் நரேந்திர மோடி...

சுயமரியாதையும்-பொதுவுடைமையும்

சுயமரியாதையும்-பொதுவுடைமையும்

காரல்மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாள் ஆண்டு இது. மார்க்சியம் குறித்த விவாதங்கள், மறு வாசிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்குமிடையே வரலாற்று ரீதியான உறவுகள் உண்டு. பெரியார் சோவியத் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பே சமதர்ம கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்ததை அவரது பேச்சு, எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பெரியார் அய்ரோப்பிய சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பியவுடன், பொதுவுடைமை – சுயமரியாதைக் கொள்கை களில் உறுதியுடன் இருந்த தோழர் சிங்காரவேலர் தயாரித்து, பிறகு விவாதங்கள், திருத்தங்கள் செய்யப்பட்ட சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை 1933இல் பெரியார் வெளியிட்டதோடு சுயமரியாதை இயக்கத்தில் ‘சமதர்மப்’ பிரிவு ஒன்றைத் தொடங்கி நாடு முழுதும் சுயமரியாதை சமதர்ம சங்கங்களை தோற்றுவித்தார். ‘சமதர்மத் திட்டத்தை’ பெரியார் கையில் எடுத்த நிலையில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி சுயமரியாதை இயக்கத்தின் மீது கடும் ஒடுக்குமுறைகளைத் தொடங்கிவிட்டது. சமதர்மத் திட்டத்தை ஒத்தி வைத்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க பெரியார் முடிவெடுத்தபோது...

“மே 2018” “நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….

“மே 2018” “நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….

  திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மே 2018” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 💪🗣 சுயமரியாதையும் பொதுவுடைமையும்….சிறப்பு கட்டுரைகள் ⚖ நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் காவி பயங்கரவாதிகள் 🌋 தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம் 🙅‍♀ ஜாதி மதப் பண்பாட்டை எதிர்க்காமல் ஆணாதிக்க எதிர்ப்பு மட்டும் சமத்துவத்தை உறுதி செய்யாது 📚 அலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள் 🗿பார்ப்பன மரபை எதிர்த்த உலகம் கொண்டாடும் நாட்டிய கலைஞர் இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

ஆலயங்களில் கேட்கிறது  ஆசிஃபாவின் குரல்  – மனுஷ்ய புத்திரன்

ஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல் – மனுஷ்ய புத்திரன்

ஆசிஃபாவை கோயில் பிரகாரத்தின் தூணில் கட்டி வைத்து மயக்க மருந்து கொடுத்து உணவளிக்காமல் வரிசையாக வன்புணர்ச்சி செய்தவர்கள் பிறகு ஏன் அவளது பிஞ்சுக் கால்களை முறித்தார்கள்? ஏன் அவளது தலையில் க.ல்லைப்போட்டுக் கொன்றார்கள்? சிறுமியாக இருந்தாலும் அவள் ஒரு பெண் அதுவும் அழிக்கப்பட வேண்டிய ஒரு இனத்தின் பெண் நாடோடியாக மேய்ச்சல் நிலங்களில் நிராதரவாக தூங்குபவள் அவளை வேட்டையாடுவது சுலபம் பெரும்பான்மையினால் வெகு சுலபமாக துடைத்தழிக்கக்கூடிய சிறுபான்மையினள் n இது மட்டும்தானா அல்லது இன்னும் காரணங்கள் இருக்கின்றனவா? n நம் தெய்வங்கள் எப்போதும்போல கண்களற்றவையாக இருக்கின்றன காதுகளற்றவையாக இருக்கின்றன இதயமற்றவையாக இருக்கின்றன தன் காலடியில் ஒரு சிறுமி கூட்டாக வன்புணர்ச்சி செய்யபடும்போதும் அவை மௌனமாக உறங்கிக் கிடக்கின்றன ஆனால் இந்த தேசம் இப்போது தெய்வத்தின் பெயரால் ஆளப்படுகிறது n குற்றவாளிகளை விடுவிக்கும்படி தேசியக்கொடியுடன் ஊர்வலம் போகிறார்கள் தேச பக்தர்கள் ஆசிஃபா ஒரு நாடோடி அவளது இனக்குழுவின் குதிரைகளை அவர்கள் செல்லுமிடமெல்லாம் நேர்த்தியாக...

சிலை உடைப்பு அரசியல் பெரியார் யுவராஜ்

சிலை உடைப்பு அரசியல் பெரியார் யுவராஜ்

உலகெங்கும் பல தலைவர்களுக்கு சிலைகளும், பல சம்பவங்கள் நடந்ததற்கு அடையாளமாய் நினைவிடமும் அமைக்கப் பட்டுள்ளன. ஆக சிலைகளும் நினைவிடங்களும் நினைவை போற்றுவதற்கும், நினைவுபடுத்திக் கொள்வதற்கும், அடுத்த தலைமுறைக்கு அதை சொல்வதற்கும் ஏற்படுத்தப்படுவதே. இதே போன்று புரட்சியாளர்களுக்கும் சிலைகள் வைக்கப்பட் டுள்ளன. அவை வழிபடுவதற்காக வைக்கப்பட்டது அல்ல. அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படுவதாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் குஷாணர்கள் மற்றும் ஹூணர்களால் மத்திய ஆப்கானிஸ்தானின் ஹசாரஜாத் பகுதியில் உள்ள பாமியான் பள்ளத்தாக்கில் உலகிலேயே உயரமான நிற்கும் இரு புத்தர் சிலையை அவர்கள் அமைத்திருந்தார்கள். முதல் சிலை 55 மீட்டர் உயரமும் இரண்டாம் சிலை 37 மீட்டரும் கொண்டதாகும். கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நிகழும் வரை இப்பகுதி ஒரு புத்த சமயத் தலமாக விளங்கியது. இப்பகுதி முழுவதும் மலைச் சரிவுகளில் குடையப்பட்ட குகைகளில் புத்த துறவிகள் வாழ்ந்து வந்தனர். கிபி 11 நூற்றாண்டில் கஜினி முகமது மேற்கு...

வரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள்  புலவர் இமயவரம்பன்

வரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள் புலவர் இமயவரம்பன்

பண்டைய நம் தமிழகத்தில் சாதி, குலம், வருணம் என்பன போன்ற சொற்கள் தமிழ் மொழியில் இல்லாமையால் அவை தமிழ்நாட்டிலும் இருந்ததில்லை என்பது வெள்ளிடை மலை. இடைக்காலத்தில்தான் பார்ப்பனர் தமிழர் களிடையே நால்வகைச் சாதியினை நாட்டினர். பின்பு நான்கினை நாற்பதாக்கி அதன்பின் நாலாயிரமாக வளர்த்துவிட்டனர். இப்பார்ப்பனர்கள் இத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தமிழர்களிடையே ஏற்றத் தாழ்வினைக் கற்பித்தும் ஒரு சாதியினரைப் பிரிதோர் சாதியாரோடு மோதவிட்டும் வேடிக்கை பார்த்ததோடு அல்லாமல் அதனால் பலனும் அனுபவித்து வந்துள்ளனர். இவற்றில் ஒன்றுதான் “வலங்கை இடங்கை” சாதி பாகுபாடுகளும் அதன் காரணமாக இவ்விரு சாதிக் குழுவினர்களுக்குள்ளும் ஏற்பட்ட சண்டைகளும் ஆகும். இந்தப் பிரிவினை எப்போது ஏற்பட்டது? எவ்வாறு தோன்றின? என்பவைகள் பற்றி திட்ட வட்டமாகக் கூறுவதற்கு இல்லை. ஆனால் இந்தப் பாகுபாடுகள் தமிழகத்தில் இருந்து இருக்கின்றன என்பது மட்டும் கல்வெட்டுக் களாலும், செப்பேடுகளாலும், சில இலக்கியச் செய்யுள்களாலும், ஏன்? ஆங்கிலேயர்களின் குறிப்புக்களாலும் அவர்கள் கால நீதிமன்றத் தீர்ப்புகளாலும் அறிகின்றோம்....

சமயச் சடங்குகளால் கொல்லப்படும் நதிகள்

சமயச் சடங்குகளால் கொல்லப்படும் நதிகள்

மஹாளய அமாவாசை தினத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கங்கை மகா கும்பமேளா விழாவுக்காக அலகாபாதில் கங்கை – யமுனை – சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குவிந்தனர் கோடிக் கணக்கான பக்தர்கள். இதனை விண்வெளி யிலிருந்து படம்பிடித்த ஐகோனோஸ் செயற்கைக்கோள், ‘உலக வரலாற்றில் அதிகமாகத் திரண்ட மனிதர்கள் கூட்டம்’ என்று வர்ணித்தது. அன்றைய தினம் மட்டுமே சுமார் மூன்று கோடிப் பேர் ஆற்றில் சடங்குகள் செய்து, புனித நீராடினார்கள். அந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கோடிப் பேர் அங்கு நீராடினார்கள். விழாவுக்குப் பிறகு ஆற்றின் இயற்கையான உயிர்ச்சூழல் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இங்கு மட்டுமல்ல, அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைனி, காசி – கங்கை, கயா, யமுனை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி என்று ஒவ்வொரு நதியிலும் இதுபோன்று நம்பிக்கை சார்ந்த புனித விழாக்கள் மற்றும் சடங்குகள் ஏராளம் நடைபெறுகின்றன. தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். இங்கே ஓரளவு மாசுபடாத...

மரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்!

மரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்!

பெரியாருக்கு 19.12.1973 அன்றிரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 20.12.1973 அன்று பொது மருததுவமனையில் சேர்க்கப்பட்டார்கள். 21.12.1973 அன்று திருவண்ணாமலையில் பெரியார் பேசுவதாக இருந்தது. 30ந் தேதி மாலை சுற்றுப்பயணத்தை எல்லாம் இரத்து செய்து விடலாமே என பெரியார் அவர்களிடம் கேட்டேன். ‘ஏன்?’ எனக் கேட்டார். “அய்யா அவர்களுக்கு உடல்நலம் சரியாக இல்லையே. டாக்டர்கள் பயணம் செய்யக் கூடாது எனச் சொல்லுகிறார்களே. அதனால்தான்  கேட்கிறேன்” எனச் சொன்னேன். எவ்வளவு நெருக்கடியிலும் நிகழ்ச்சிகளை இரத்து செய்ய விரும்பாத பெரியார், “கூட்டத்தில் பேசப் போவது நான் தானே! நீயோ, டாக்டர்களோ அல்லவே? போய் வேலையைப் பார்” எனக் கடுமையாகச் சொல்லிவிட்டார்கள். பெரியாருடைய முடிவுக்கே காரணமான நோயில் சிக்கி இருந்தபோதுகூட மரணத்தைச் சந்திக்கும் மூன்று நாட்களுக்கு முன்புகூட தன் சுற்றுப் பயணத்தைத் தொடர்வதில் எவ்வளவு கருத்தாக இருந்தார்கள் என்பதைப் பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைவரும் நினைவில் நிறுத்த  வேண்டும். – விடுதலை மேலாளர் என்.எஸ். சம்பந்தம், ‘உண்மை’...

பா.ஜ.க.வின் பாலியல் குற்றங்கள்  – ஒரு தொகுப்பு  – ‘கீற்று’ நந்தன்

பா.ஜ.க.வின் பாலியல் குற்றங்கள் – ஒரு தொகுப்பு – ‘கீற்று’ நந்தன்

உலகிலேயே மிகப் பெரிய வன்முறை எது தெரியுமா? திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவிடக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா? ஆனால், அத்தகைய மனித மிருகங்களாகத்தான் இந்துத்துவ சக்திகள் இந்த மண்ணில் நடமாடுகின்றன. சிறுமி ஆசிஃபா-வை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த இந்துத்துவ – பாஜக சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி சிறுபான்மையினரும், பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியுமா? இந்துத்துவா – பாஜக கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல்...

பெரியார் – உ.வே.சா. சந்திப்பும்  சொல்லாடலும்

பெரியார் – உ.வே.சா. சந்திப்பும் சொல்லாடலும்

தமிழ்ப் புலவர்களை, மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல; தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல. இன்றைய புலவர்கள், தமிழ் அபிமானிகள் தியரிடிகல், புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் (அனுபவ) தமிழ் அறிவு உடையவன் என்று கருதியிருப்பவன். (பெரியார்)   ஓர் இலக்கியச் சர்ச்சை ஒரு பக்கம் தமிழகத்தில் உயிர்ப்பான மிகப் பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மறுபக்கத்தில் அதற்குக் குறைவில்லாமல் இலக்கியச் சர்ச்சைகளும் நடந்துவருகின்றன. அதிலொன்று கடந்த பிப்ரவரி மாதம் காலச்சுவடு இதழில் வெளிவந்த ப.சரவணனின் “ஐயருக்கு எதிரான அபவாதம்” என்ற கட்டுரை. இந்தக் கட்டுரையின் சான்றாதாரக் குறிப்பு தொடர்பான ஒரு பிரச்சினையை, பொ.வேல்சாமி தனது முகநூல் பக்கத்தில் கிளப்பினார். மார்ச் மாதம் காலச் சுவடு இதழில் ப. சரவணனும் சான்றாதாரக் குறிப்பு தொடர்பான கேள்விக்கு விரிவான எதிர்வினையை ஆற்றியுள்ளார். அத்துடன் அவ்விதழின் வாசகர் கடிதப் பகுதியில் பொ.வேல்சாமியும், பா.மதிவாணனும் பார்ப்பனர்-வேளாளர் கூட்டு மற்றும் விலகல், கருத்து நிலை சார்பு,...

பெரியார் பங்கேற்ற திரைப்பட விழா

பெரியார் பங்கேற்ற திரைப்பட விழா

1972இல் ‘சூரிய காந்தி’ என்னும் படத்தின் நூறாவது நாள் விழா நிகழ்ச்சியிலே படத்தில் நடித்த கலைஞர்களுக்குப் பரிசு வழங்குவதற்கு பெரியாரை அழைத்தார்கள்  – படத் தயாரிப்பாளரும், டைரக்டரும். வழக்கம்போல பெரியார் நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே சென்றார். பெரியார் எப்போதும் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு வருபவர்களில் இருந்து சற்று மாறுபட்ட கூட்டம் அது. சினிமாக் கலைஞர்களைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம் பாதியும், சினிமா விழாவில் பெரியார் என்ன பேசப் போகிறார் என்பதைக் கேட்க வந்த கூட்டம் பாதியுமாக அரங்கு நிறைந்திருந்தது. தமிழக முதல்வர் கலைஞர் விழாவிற்குத் தலைமை வகித்தார். வரவேற்புரை நிகழ்த்தியவர் பேசும்போது, ‘ஒளரங்கசீப்பைப்போல கலையை வெறுக்கும் பெரியார் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டார். பெரியார் பேசும்போது, “நான் சினிமாவுக்கோ கலைகளுக்கோ எதிரியல்ல. சினிமா மக்களுக்கு அறிவு வர, தெளிவு பெறப் பயன்படவில்லையே என வருந்துகிறவன் நான். சினிமா உலகிலேயே கலைவாணர் என்.எஸ்.கே. போல் அறிவுப் பிரச்சாரம் செய்தவர்கள்...

நிதி ஒதுக்கீடு:  தென்னகம் வஞ்சிக்கப்படுகிறது ட பேராசிரியர் ஜெயரஞ்சன்

நிதி ஒதுக்கீடு: தென்னகம் வஞ்சிக்கப்படுகிறது ட பேராசிரியர் ஜெயரஞ்சன்

15ஆவது நிதிக் குழுவின் கொள்கைகளால் தமிழகம் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை நடுவண் ஆட்சி வஞ்சிக்கப்படுவதை சான்றுகளுடன் நிறுவுகிறது இந்த ஆய்வு. 15ஆவது நிதிக் குழுவின் விவகாரங்கள் இப்போது மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது ஏன் என்று பார்ப்போம்… இந்த நிதிக்குழுவுக்கு இடப்பட்ட பணிகள் அல்லது வழிகாட்டுதல்கள்தான் இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த நிதிக் குழுவின் வழிகாட்டுதல்கள் பற்றி வன்மையாகக் கண்டிக்காத தலைவர்களே இல்லை. இவ்வளவு பெரிய எதிர்ப்புக் குரல் கிளம்பியது ஆச்சர்யமான ஒன்றுதான். இது ஒருபுறமிருக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு இதனால் தனது பெயர் இன்னும் மோசமாகி வருவதை உணர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை; மார்ச் 28ஆம் தேதியன்று அக்கட்சியின் முக்கியமான தலைவரான ராம்தேவ் நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என் .கே.சிங்கைச் சந்தித்துத் தென்மாநிலங்களில் எழும்பும் கவலைக் குரல்கள் பற்றி விவாதித்தாக ஒரு செய்தியை இந்து பத்திரிகை வெளியிட் டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் மற்றுமொரு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ‘தென்மாநிலங்கள் இதுகுறித்து கவலை...

கிராமப்புற மாணவர்களை பலி வாங்கிய ‘நீட்’

கிராமப்புற மாணவர்களை பலி வாங்கிய ‘நீட்’

‘நீட்’ தேர்வு முறையினால் தமிழ்நாட்டில் கிராமப்புறத்திலிருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒற்றைச் சாளர முறை வழியாக (ளுiபேடந றiனேடிற ளலளவநஅ) 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக மாணவர்கள் 4,225. நீட் தேர்வு அமுலுக்கு வந்த 2017இல் இது 3546ஆக குறைந்து விட்டது. அதே நேரத்தில் பிற மாநிலத்து மாணவர்கள் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 2016இல் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிற மாநிலத்தவர் 518; ‘நீட்’ தேர்வு முறையில் 2017இல் சேர்ந்த பிற மாநிலத்தவர் எண்ணிக்கை 715 ஆக அதிகரித்து விட்டது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் பின் தங்கிய மாவட்டங்கள். பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை ‘நீட்’ தேர்வினால் குறைந்துவிட்டது. அரியலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வுக்கு முன் 9 மாணவர்களும், நீட்டுக்குப் பிறகு 4...

அம்பேத்கர் தந்த எச்சரிக்கை!

அம்பேத்கர் தந்த எச்சரிக்கை!

சமூக சமத்துவம் மறுக்கப்பட்டால், ஜனநாயகக் கட்டமைப்பையே மக்கள் தகர்த்து விடுவார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்ட அவை 9.12.1946 அன்று முதன்முதலாகக் கூடியது. 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்டம் அரச மைப்புச் சட்ட அவையால் இறுதி செய்யப் பட்டது. 26.11.1949 அன்று நிறைவேற்றப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாள்கள் – அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட எடுத்துக் கொண்ட காலம் ஆகும். 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்ட அவையின் விவாதங்கள் முடிந்தபின், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இறுதியாக உரை நிகழ்த்தினார். அப்போது, எதிர்காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைப் படுத்துவது குறித்த தன் கவலையையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தினார். 1994இல் மகாராட்டிரா மாநில அரசு ஆங்கிலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதன்மையான கர்த்தா டாக்டர் அம்பேத்கர் என்ற தலைப்பில், அம்பேத்கர் எழுத்துகளும் பேச்சுகளும் நூல் வரிசையில் 13ஆவது தொகுதியாக வெளியிடப்பட்ட நூலில் உள்ள...

ஊழல் புகாரில் உச்சநீதிமன்றம்

ஊழல் புகாரில் உச்சநீதிமன்றம்

இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், பத்திரிக்கையாளர்களை சந்தித்தது, பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சைகள் அடங்க வெகு நாட்களாகலாம். இந்த நான்கு நீதிபதிகளின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு செயல் என்று ஒரு புறமும், நான்கு நீதிபதிகள் மரபை மீறி, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள் என்றும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. இதில் உள்ள நியாயங்களை அலசுவதற்கு முன்னால் நாம் அடிப்படையாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.   லார்ட்ஷிப் என்று என்னதான் நாம் அழைத்தாலும், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்பதை நாம் மறந்து விடக் கூடாது.   எல்லா மனிதர்களுக்கும் இருக்கக் கூடிய ஆசா பாசங்கள், அபிலாஷைகள், விருப்பு வெறுப்புகள், பேராசைகள் ஆகிய அனைத்தும் இந்த நீதிபதிகளுக்கும் இருக்கும். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள சூழலை நாம் அலசிப் பார்த்தால், அரசியல், நிர்வாகம், ஊடகம், அதிகார மையம் என்று அனைத்து தரப்பிலும்...

ஐ.பி.எல்.லுக்கு தமிழ்நாட்டில் தடை கேட்டது அவமானமா? ர. பிரகாசு

ஐ.பி.எல்.லுக்கு தமிழ்நாட்டில் தடை கேட்டது அவமானமா? ர. பிரகாசு

சென்னை அணி சூதாட்டப் புகாரில் சிக்கி ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டபோது இந்தப் பார்ப்பனர்களுக்கு எந்த அவமானமும் ஏற்படவில்லை. கிரிக்கெட் இங்கு விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட்டிருந்தால் தமிழ் நாட்டில் இப்போது நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பு இவ்வளவு தீவிரமாக இருந் திருக்காது. தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிபோய்க் கொண் டிருக்கிற வேளையில் இப்படியொரு சூதாட்டம், இப்படியொரு போலிப் பக்தியூட்டும் வெறியாட்டம் இங்கே தேவைப்படுகிறதா என்பதுதான் ஐபிஎல் எதிர்ப்பின் நோக்கமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் வீதிக்கு வந்து போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. நமக்குத் தெரிந்த வரையில் வீதிக்கு வராத கட்சி பாஜக மட்டும்தான். வீதிக்கு வராத ஒரே கூட்டம் பூணூல் உரிமைக்காக வீதிக்கு வந்த பார்ப்பனக் கூட்டம் தான். காவிரி உரிமைக்கான போராட்டம் மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களை...

‘பாலுறவு வன்முறை’யும்  மத உரிமைப் போராட்டம் தானா?

‘பாலுறவு வன்முறை’யும் மத உரிமைப் போராட்டம் தானா?

உலகையே உலுக்கியிருக்கிறது ஜம்முவில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமியின் கோரக் கொலை. கூடாரமடித்து குதிரை மேய்க்கும் தொழிலைச் செய்யும் இஸ்லாமிய ‘பேக்கர்வால்’ சமூகத்தைச் சார்ந்த ஆசிஃபா, ஜம்மு இந்து பண்டிட்டுகளால் (பார்ப்பனர்களால்) கடத்தப்பட்டு, கோயில் கர்ப்பகிரகத்துக்குள் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பிறகு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கான காரணம், ஜம்மு பகுதி ‘இந்து’க்களுக்கே சொந்தமானது; அங்கே இஸ்லாமிய நாடோடி சமூகம்  கூடாரமடிக்கக் கூடாது என்று மிரட்டுவதற்குத்தான். ஜனவரி மாதம் நடந்த இந்தப் படுகொலையை மூடி மறைக்கும் முயற்சிக்கு பா.ஜ.க. தனது அதிகாரச் செல்வாக்கைப் பயன்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறையின் புலனாய்வுக் குழு தொடர்ந்து மிரட்டப்பட்டு, பலமுறை குழு மாற்றியமைக்கப்பட்டு, பிறகு தீபிக்காசிங் என்ற வழக்கறிஞர், நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணையை நடத்த வேண்டும் என்று தொடர்ந்த பொதுநல வழக்கிற்குப் பிறகுதான் நீதிமன்றம் தலையிட்டு, மிரட்டல்களை நிறுத்தியது. வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரையே ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான ஐம்மு வழக்கறிஞர் சங்கம்...

இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் – ச.சிவலிங்கம்

இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் – ச.சிவலிங்கம்

  கர்நாடக அரசு லிங்காயத்து சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்கள் இந்துக்கள் அல்ல என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. லிங்காயத்து சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. கர்நாடகத்தில் லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்களும் கன்னடக் கொடிக்கான போராட்டங்களும் விவாத மையங் களானதோடு 2018 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாகவும் உருவெடுத்திருக்கின்றன. அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளினூடே கர்நாடகத்தையும் கைப்பற்றி விடலாம் என்ற பாஜகவின் கணக்குக்குப் பெரும் தடைகளாக இப்போது உருவெடுத்திருக்கின்றன இந்த இரு பிரச்சினைகளும். குறிப்பாக ‘லிங்காயத் தனி மதம்’ எனும் விவகாரம் இந்துத்துவ அரசியல் கணக்குகளுக்கும் நீண்ட காலச் சவாலாக மாறியிருக்கிறது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் வட கர்நாடகத்தில் உருவான வசனக்காரர்களின் இயக்கம் (பக்தி இயக்கம்) சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அனைத்து அதிகாரங்களும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டம் அது. வசனக்காரர்களின் இயக்கம் அதைக் கேள்விக்கு உட்படுத்தியதோடு மட்டும் நில்லாமல்,...

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்

மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்

மோடி ஆட்சியின் அனைத்து  செயல் பாடுகளையும் கண்காணித்து வழி நடத்து வதற்கு ஆர்.எஸ்.எஸ். தனித்தனியான குழுக்களை அமைத்துள்ளது. சிக்சா ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ் (ssun) கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றத் திற்கான அறக்கட்டளை – ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்பு. இந்தியா வின் தற்போதைய கல்விக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான தயானந்த் பத்ரா என்பவரால் நிறுவப்பட்டது. பாடத் திட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை காவி மயமாக்குவதே இதன் வேலை. இதன் உறுப்பினர்கள் குழு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதிய கல்விக் கொள்கையில் இந்து தேசியத்தை புகுத்துவது தொடர்பான கருத்துகளை முன் வைத்தது. இவர்கள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார்களாம். அதனை புதிய...

அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்

அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்

காவிப் பிடியில் அதிகார மய்யங்கள் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் தம்ம சூரிய நாராயண சாஸ்திரி என்ற பார்ப்பனரை பூனேயிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர். துணைவேந்தர் தேர்வுக் குழு பட்டியலிலே இடம் பெறாத ஒருவர் முறைகேடாக ஆளுநரால் நியமிக் கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிடிக்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் 80 சதவீதம் ‘வாய் வீச்சு’களாகவே இருக்கிறது என்றும் ஆட்சியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாக ‘பிரண்ட் லைன்’ ஏடு எழுதியிருக்கிறது. ‘தாராள மயம்’ என்ற கொள்கையில் காங்கிரஸ் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை என்றாலும் பன்னாட்டுச் சுரண்டலுக்கு கதவு திறக்கும் இந்த கொள்கைகளில் இரு கட்சிகளுக்குள்ளும் வேறுபாடு இருப்பதாக கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இதே மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றிய...

சமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி

சமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி

அண்மையில் முடிவெய்திய உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியன், திராவிட இயக்க அடையாளத்தில் உயர்ந்து, சமூகநீதிக்கான வரலாற்றுச் சிறப்பு கொண்ட தீர்ப்புகளை வழங்கியவர். சமூகநீதி வரலாற்றில் எத்தனையோ நீதிபதிகளின் பங்களிப்பு இருந்திருக்கிறது ஆனால் இரண்டு தமிழ் நீதிபதிகளுடைய பங்களிப்பை அத்தனை எளிதில் தவிர்த்துவிட இயலாது. நீதிக்கட்சி காலம் தொட்டு நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை  (கம்யூனல் ஜீ.ஓ ) எதிர்த்து செண்பகம் துரைராஜன் மற்றும் சீனிவாசன் என்ற இருவர் தனித்தனியே தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது ( இந்த வழக்கில் தான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அல்லாடி கிருஷ்ணசாமி, சீனிவாசனுக்கு ஆதரவாக ஆஜரானார், நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்த பெரியார் பெரும் கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டதிருத்தத்தை மேற்கொள்ள வைத்தார்) செண்பகம் துரைராஜன் வழக்கில் ஐந்து நீதிபதிகளை கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இடஒதுக்கீட்டு அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்தது.....

உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?

உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?

2011 மே மாதம் 4-ஆம் தேதி, ஐஐடி சென்னையில் எம்டெக் மாணவன் நிதின் குமார் ரெட்டி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதும், அதன்பின் இது குறித்து நடந்த போராட்டங்களும், விவாதங்களும் அனைத்து முதலாளித்துவ ஊடகங்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இரண்டாமாண்டின் இறுதியில் முடிக்கப்படவேண்டிய பிராஜெக்ட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே. 2008-ல் சிஃபி வெளியிட்ட செய்தியில் 2005-2008 ஆம் ஆண்டிற்குள் ‘கல்விசார் நிர்பந்தத்தால்’ ஐஐடி கான்பூரில் மட்டுமே ஏழு தற்கொலைகள் நடந்ததாகக் கூறுகிறது.  2008-ல்  நடந்த ரித்திகா தோய சாட்டர்ஜி என்ற எம்டெக் மாணவியின் தற்கொலை யின் போதே ஐஐடி நிர்வாகத்தின் ரகசியத் தன்மை வாய்ந்த மாணவர் தர மதிப்பீட்டு முறை (Grading system) மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பின் (grievance forum) கேவலமான நிலை குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. கல்விசார் நிர்பந்தங்களினால் நடக்கும் தற்கொலைகளுக்கு இணையாக ஐஐடிக் களில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறையாலும் ஏழை தலித் மாணவர்கள்...

‘இராமன்’நேர்மையின் உருவமா? பெரியார்

‘இராமன்’நேர்மையின் உருவமா? பெரியார்

இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம். கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும் கைகேயிக்கும் குடிகளுக்கும் நல்லபிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான். இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்ளு கிறேன், நீதான் நாட்டை ஆளப்போகிறாய் என்று தாஜா செய்கிறான். பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்ற ஒவ்வொரு நேரமும் கவலைப் பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். நாடு உனக்கு இல்லை. நீ காட்டுக்குப் போகவேண்டும் என்று தசரதன் சொன்னவுடன் மனதுக்குள் துக்கப்படு கிறான். நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து, காட்டிற்குச் சென்று காய்கறிகளைப் புசிக்க...

கார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்?

கார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்?

கார்ப்பரேட் ஊழல் – வங்கிகளின் மோசடிக்கு அடிப்படையான காரணம் இந்த மோசடிகளை அரங்கேற்றுவதற்கு தகுந்த கொள்கைகளை பார்ப்பன அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருப்பதுதான். ஊழல் என்பவை தனிநபர்கள் சார்ந்த விசயம் மட்டுமல்ல, அரசின் கொள்கை களிலேயே அதற்கான வித்து ஒளிந்திருக்கிறது. தொலைதொடர்புத் துறையையே உதாரணத் திற்கு எடுத்துக் கொண்டால் இந்தத் துறையில் ‘புரட்சி நடந்திருப்பதாக’ சொல்லப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில், இத்துறையின் பல்வேறு கொள்கைகளை தனியார் லாபத்திற்கு ஏற்ப திருத்தி, புகுத்தியிருப்பதை கண்டுகொள்ள முடியும். யாரோ சில அரசியல்வாதிகளின் எண்ணப் போக்கால் நடைபெற்ற மாற்றங்கள் அல்ல அவை. 1999 வாஜ்பாய் ஆட்சியிலேயே தொலைத் தொடர்புத் துறை கொள்கையில் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. பிறகு டாட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இந்தத் துறையில் கால்வைத்தன. சர்வதேச அழைப்பு களை இந்தியாவிற்குள்ளேயே செய்யப் பட்டதாக மாற்றி முறைகேடு செய்யப்பட்ட செய்தி 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.1300 கோடி வரை...

உடல் இயக்கமில்லை; மூளை மட்டும் இயங்கியது! போப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி

வாழும் ஐன்ஸ்டைன் எனப் போற்றப்பட்ட ஸ்டீவன் ஹாக்கிங் 76 ஆண்டு வாழ்வை முடித்துக் கொண்டார். 20 வயதிலிருந்து இயற்கையுடன், மருத்துவ அறிவியலுடன் மிக நீண்ட போரை மனத் துணிவுடன் நடத்திவிட்டார். ஆம், அவர் சிறுவனாக இருந்தபோதே அவர் ஷூ லேஸைக் கட்டுவதற்கு மிகவும் கடினப்படுவதைப் பார்த்த அவர் தந்தை, மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பல மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பிறகு, அவருக்கு நரம்பியல் இயக்க நோய் பாதிப்பு ஏற்பட் டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அவர் முழு உடல் இயக்கமுமே செயலற்றுப் போனது. அப்போது ஹாக்கிங் மருத்துவர்களிடம் கேட்கிறார், செயலற்றுப் போனது எனது உடல் இயக்கம் மட்டுந்தானா? மூளை இயக்கமுமா? மூளைக்கு ஒரு சிக்கலும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இதைக் கேட்டதும் மகிழ்கிறார் ஹாக்கிங்! என் அறிவுத் தேடலுக்கு உடல் இயக்கம் வேண்டாமே, மூளை இயக்கம் போதுமே. அப்படியானால், நான் எவ்வளவு கொடுத்து வைத்த மனிதன் என மகிழ் கிறார். உடல் இயக்க...

நீட்:தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது  முனைவர் கலையரசன்

நீட்:தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது முனைவர் கலையரசன்

“அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கொள்கைகள் தமிழகத்தில் படிப்படியாக உருப்பெற்று வலுப்பெற்றுள்ளன என்பது குறைந்த அளவிலேயே அறியப்பட்டுள்ளது. ஆனால், இதன் முக்கியத்துவம் எந்த அளவிலும் குறைவானதல்ல. இதர பல மாநிலங்களைப் போல அல்லாமல், தமிழ்நாடு உயிரோட்டமுள்ள, திறன்மிகு சுகாதார மையங்களைக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இலவசமாக இங்கே சுகாதாரச் சேவைகளைப் பெற முடியும்.” – அமர்த்தியா சென் (An Uncertain Glory: India and its Contradictions நூலிலிருந்து) தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையில் நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) இந்த நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான அளவுகோலாக நிர்ணயிக்க முயற்சி செய்துவருகிறது. எனினும், கல்வி மற்றும் சமூக நீதிக்குத் தீங்கிழைக்கும் என்பதால், இந்தத் தேர்வு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நாடு முழுவதற்கும் இது பொருந்தும் என்றாலும் தமிழ்நாட்டுக்கு...

தமிழர் பண்பாட்டில்-வைதீக ஊடுறுவல் வரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் – முரசொலி மாறன்

வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை. ஆரியர் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் சாதி முறை கிடையாது – என்பதில் இரு கருத்துகள் கிடையாது. வர்ணாஸ்ரம தர்மப்படி வட இந்தியாவில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் – என்று நான்கு வர்ணங்களாக மக்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். இதுதான் வர்ணாஸ்ரம தர்மம் – அல்லது சதுர் வர்ணம் – என்று குறிப்பிடப்படுவதாகும்! சமுதாய வட்டத்திற்கு வெளியே தீண்டத்தகாதார் வைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்தும், க்ஷத்திரியர்கள் புஜங்களிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் பாதங்களிலிருந்தும் பிறந்ததாகக் கூறுகிறது மனு ஸ்மிருதி. சூத்திரர்கள் என்போர் யார்? “சண்டையில் வென்று சிறையாகப் பிடித்துக் கொணரப்பட்டவன், அன்புடன் ஊழியஞ் செய்பவன், தன் வேசி மகன், விலைக்குக் கொள்ளப்பட்டவன், ஒருவனாற் கெடுக்கப்பட்டவன், குல வழியே தொன்றுதொட்டு ஊழியஞ் செய்பவன், குற்றத்திற்காக வேலை...

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….  திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மார்ச் 2018” மாத இதழ்

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மார்ச் 2018” மாத இதழ்

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மார்ச் 2018” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚தமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல் – வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஒரு விரிவான அலசல் 🛰 “போப்”பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி ” ஸ்டீபன் ஹாக்கிங்” 🐒 “இராமன்” நேர்மையின் உருவமா? 🖌 உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? 🏢 அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர் 🗿இந்து மதத்திலிருந்து விலகும் “லிங்காயத்துகள்” இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் பரவுகிறது!

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் பரவுகிறது!

தோழர்கள் ஆங்காங்கே ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டங்களை உருவாக்கி இதழில் வெளிவரும் கட்டுரைகளை விவாதித்து வருகிறார்கள். சென்னை, திருப்பூர், கொளத்தூர்,  நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்வுகள் விவாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாசகர் வட்டம் விரிவடையட்டும். – ஆசிரியர் குழு நிமிர்வோம் பிப் 2018 இதழ்

“இரணியன் வேடமிட்டு நடிக்க நான் ஆசைப்படுகிறேன்” புரட்சிக் கவிஞர் நாடகம் குறித்து பெரியார்

“இரணியன் வேடமிட்டு நடிக்க நான் ஆசைப்படுகிறேன்” புரட்சிக் கவிஞர் நாடகம் குறித்து பெரியார்

9.9.1934 அன்று ‘சீர்திருத்த நாடக சங்கத்தாரால், சென்னையிலுள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் மாலை 5.30 மணிக்குப் பெரியார் தலைமையில் நிகழ்ந்த, புதுவை பாரதிதாஸன் (பாவேந்தர்) இயற்றிய ‘இரணியன்’ (பிற்பாடு தான் அது, ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்றாகி இருக்கிறது) நாடகம்தான், ஆரிய-திராவிடர் இனப்பிரச்சனையை முன்வைத்து, பழைய புராணத்தைப் புரட்டிப் போட்டு, திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து நிகழ்ந்த மிகப்பெரும் நாடகமாகத் தெரிகிறது. பெரியார் தன் தலைமையுரையில், இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது, நாடகக்கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும். நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும், தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழைமையைப் பிரச்சாரம் செய்யவும், மூடநம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதிவித்தியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத்தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும் அவைகளைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படுகின்றதே ஒழிய வேறில்லை… இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட...

சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா

சுயமரியாதைத் திருமணம் பற்றி அண்ணா

‘அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு களஞ்சியம்’நூலிலிருந்து “அண்மையில் எங்கோ ஓர் இடத்தில் பாரத பிரசங்கம் நடந்ததாம். அதன் கடைசி நாளன்று பீமன் வேடம் போடுபவன் துரியோதனனைக் கொல்வதற்காகப் படுகளம் நடந்தது. அன்று ஆறு அடி நீளமுள்ள துரியோதனன் உருவம் மண்ணினால் செய்யப் பட்டிருந்தது. இதனை பீமவேடதாரி வெட்டி வீழ்த்தினான். இதனைச் சுதேசமித்திரன் பத்திரிகை படம் பிடித்து பெரிதாகப் போட்டுக் காட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட கேவலமான பழக்கங் களையும், அர்த்தமற்ற திருவிழாக்களையும், பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான் நாம் உண்மையிலேயே முன்னேற முடியும். ஆகவேதான் சீர்திருத்தத் திருமணங்கள் நடப்பதன் மூலம் அறிவுப் பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிற தென்று குறிப்பிடுகிறோம். சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக் கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்து கொள்ளும் இந்த மணமக்களை நாம் பெரிதும் பாராட்டுகிறேன். மனதார வாழ்த்துகிறேன். இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா?...