Author: admin

குப்பை பொறுக்கும் ‘பூணூல்’கள்! 0

குப்பை பொறுக்கும் ‘பூணூல்’கள்!

பார்ப்பனக் கோட்டையான சென்னை மேற்கு மாம்பலத்தில் சத்குரு வேத பாடசாலை, சுப்ரமணிய வீதியில் உள்ளது. இந்த வீதியில் குப்பைகள் தேங்கிப் போய் கிடந்த நிலையில், ‘வேதம்’ படிக்கும் ‘பார்ப்பன’ சிறுவர்கள், ‘பூணூல்’ அணிந்த கோலத் துடன் வீதிகளில் இறங்கி குப்பைகளைப் பொறுக்கினார்கள். இதைப் படம் பிடித்து முகநூலில் ஒருவர் வெளியிட்டார். உடனடியாக இதை வரவேற்று முகநூலில் 2300 விருப்பப் பதிவுகள் விழுந்தன. அவ்வளவு தான். ஆடிப் போனது சென்னை மாநகராட்சி. உடனே, ‘பூணூல்’ தரிக்காத ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ களைக் கொண்டுவந்து இறக்கி, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நாள் முழுதும் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்வதும், குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்துவதும், ‘பஞ்சமர்’, ‘சூத்திரர்’ களுக்கு விதிக்கப்பட்ட ‘தர்மம்’; வேதம் ஓதுவதையே ‘தர்மம்’மாக்கிக் கொண்ட ‘பிராமணர்கள்’ – இப்படி வீதிகளில் இறங்கி ‘குப்பை’களை சுத்தம் செய்யத் தொடங்கினால், நாடு அதைத் தாங்குமா? எனவே தான் மாநகராட்சி அதிரடியாக ‘இறங்கி’ தர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது....

‘கருவறை’யிலிருந்து ‘கவர்னர்’ மாளிகை நோக்கி 0

‘கருவறை’யிலிருந்து ‘கவர்னர்’ மாளிகை நோக்கி

கடவுளோடு உரையாடக்கூடிய மொழியாக வேதத்துக்கு பெருமை கொண்டாடுகிறது பார்ப்பனியம். வேதம் படித்த பார்ப்பனர்கள், ‘கடவுளுக்கு’ உரிமை கொண்டாடி, ‘கருவறையை’ தங்களுக்கான ‘தீட்டுப்படாத’ புனித இடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘கருவறை’யைப் மட்டுமல்ல; ‘கவர்னர் மாளிகையையும்’ வேத பண்டிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார் யாதேவ விரத் வேதம் படித்த பார்ப்பனர். அரியானாவில் ‘குருகுல குருnேத்ரா’ என்ற பெயரில் வேத பாடசாலை நடத்து கிறார். யோகா, பயிற்சியும் இயற்கை மருத்துவமனையையும் நடத்தி வரும் இவர், உலகம் முழுதும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு வேதம், உபநிஷத்துக்களை ‘பிராமணர்’களுக்கு கற்பித்து வருகிறார். பீகாருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் என்பவரும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதற்காகவே அரியானாவில் பயிற்சி மய்யம் நடத்தி வருகிறார். ஆனால், இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். பா.ஜ.க. – தாழ்த்தப்பட்ட வர்களுக்காகவே தனியாக உருவாக்கியிருக்கும் ‘ஷெட்யூல்ட் கேஸ்ட் மோர்ச்சா’ என்ற அமைப்பின் தலைவர். என்னதான் வேதம் படித்தாலும், பா.ஜ.க....

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர் 0

உலகம் முழுதும் கடந்த ஆண்டில் மரண தண்டனைக்கு உள்ளானோர் 607 பேர்

உலகில் முழுமையாக மரணதண்டனையை நீக்கம் செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை (ஜூன் மாத நிலவரம்) 101; கடந்த ஆண்டு உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கை 607; (இது 2013ஆம் ஆண்டைவிட 22 சதவீதம் அதிகம்) கடந்த ஆண்டு 22 நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளன. 2,466 பேர் கடந்த ஆண்டு மட்டும், மரணதண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் 2007 முதல் 2012 வரை மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் 220 பேர். இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படாதவர்கள் 504 பேர். இந்தியாவில் 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை யாக்கப்பட்டவர்கள் 3751 பேர். 2007ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் 186 பேருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. பெரியார் முழக்கம் 13082015 இதழ்

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்

இரண்டாம் சுற்று – மாவட்டக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள். சேலம் மேற்கு சேலம் மேற்கு மாவட்டம்: தலைவர் – ப.க. சூரியகுமார், மாவட்ட செயலாளர் – சி. கோவிந்தராசு. மேட்டூர் அணை நகரம் : தலைவர் – செ. மார்ட்டின்; நகர செயலாளர் – அ. சுரேசு குமார்; நகர பொருளாளர் – கதிரேசன். குமரன் நகர் (கிளை கழகம்): தலைவர் – பொன். தேவராசு, செயலாளர் – அ. சீனி வாசன். காவலாண்டியூர்: தலைவர் – வ. மாரியப் பன்; செயலாளர் – பழனிச்சாமி. கொளத்தூர் : தலைவர் – பெரியசாமி; செயலாளர் – சி. இராமமூர்த்தி. கோவிந்தபாடி: பொறுப்பாளர் – சென்னியப்பன். உக்கம்பருத்திக்காடு : பொறுப்பாளர் – ஆட்டோ செல்வம். தார்க்காடு மற்றும் தண்டா : தலைவர் – தர்ம லிங்கம்; செயலாளர் – குமரேசன். நீதிபுரம் : தலைவர் –...

சிறப்புக் கட்டுரை –  மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி 0

சிறப்புக் கட்டுரை – மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் எழுச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் மாவட்டந்தோறும் கழகத் தோழர்களை மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று சந்தித்து வருகிறார்கள். கழக அமைப்புகளின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும், “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் தலைமுறைக்கு வேலை வேண்டும்”  பரப்புரை இயக்கத்துக்கு திட்டமிடவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு மேலும் சந்தாக்களை சேர்ப்பது குறித்தும் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரை நிகழ்த்தினார். பெரியாரியம் சந்திக்கும் புதிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க பெரியாரியலை வளர்த்தெடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும், ஜாதி-தீண்டாமை வெறியை தூண்டிவிட்டு குளிர் காய நினைக்கும் ஜாதி சங்கத் தலைவர்கள் தூண்டிவிடும் ஜாதி வெறியை முறியடிப்பது குறித்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உரிமைகளை...

கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா? 0

கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா?

இது ‘சுதந்திர’ நாடா? 1950 ஜனவரி 26ஆம் தேதிய பலன், 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே பணப்பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக் கல் தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது ‘டிரான்ஸ்வர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப் பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், அதிகப் பாதுகாப்புடனும் 26-ந் தேதி முதற்கொண்டு நடைபெறப்போகிறது. – பெரியார். (‘விடுதலை’, 20.1.1950)      நிற்க, மேல்நாடுகளில் ‘சுதந்திர நாள்’, ‘சுதந்திர ஆண்டு விழா’க் கொண்டாடுவது போல், நம் நாட்டில் சுதந்திர நாள், ஆண்டு விழாக் கொண்டாடுவது – புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போலாகும். மேல்நாட்டார்கள் சுதந்திரம் பெற்றபின் பெற்ற நாளைக்குறி வைத்துக் கொண்டாடு  கிறார்கள். நாம் அதுபோல் கொண்டாட நமக்குச்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

மது விலக்கு எங்கள் கொள்கை; மற்ற கட்சிகள் பறித்துக் கொண்டு விட்டன. – பா.ம.க. அன்புமணி அரசியல் கட்சிகள விடுங்க; அரசாங்கமே உங்க கிட்டேயிருந்து இதை பறிச்சு அமுலாக்கிடாமல் பாத்துக்குங்க; அப்புறம் கட்சியே நடத்தமுடியாமல் போயிடும்! அரசு தடையையும் மீறி, கோயில்களில் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. – ‘இந்து’ ஏடு அதெல்லாம் கோயில் பிரச்சினைகளில், அரசு தலையிட முடியாது; தலையிடவும் கூடாது. இது இராமகோபாலன் உத்தரவு; தெரிஞ்சுக்குங்க. இந்தியாவிலேயே தூய்மையான நகரங்களில் முதலிடம் மைசூரு; இரண்டாவது திருச்சி. – செய்தி புண்ணியஸ்தலங்களான காசி, இராமேசுவரத்தை இப்படியெல்லாம் அவமானப் படுத்தக் கூடாது. இரயில்களில் பாட்டுப்பாடி, பிச்சை எடுப்பவர்களை அரசு திட்டங்களின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம். – செய்தி இந்தத் திட்டத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ பிச்சைக்காரர்களையும் சேர்த்துப் பீங்களா? பங்கு சந்தையில் ஏழுமலையான் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. – செய்தி சுவிஸ் வங்கியில் ஏற்கெனவே கணக்கு தொடங்கிட்டீங்களா? ‘கோ’ சாலைகளில் உள்ள...

தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம் 0

தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம்

“கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளி யுவராஜ் என்பவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. நடந்தது ஒரு சாதாரண கொலைதான், இதற்கு ஏன் காவல்துறை இப்படி பெரிதுபடுத்த வேண்டும் என்றும் காவல்துறையால் தன்னை நெருங்க முடியாது என்றும், தனது ஜாதிக்காரர்களிடம் ‘வாட்ஸ் அப்’ வழியாக யுவராஜ் பேசி, அந்த பேச்சு பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல் வேறு ஒரு கொலை வழக்காக இருந்தால் தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை அவரது குடும்பத்தினரைக் கைது செய்து குற்றவாளியை சரணடைய வைத்திருப் பார்கள். ஆனால், இந்த யுவராஜை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்து ஆகஸ்டு 17ஆம் தேதி ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து, திருச்செங் கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது” என்று செய்தியாளர்களுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டியளித்தார். தொடர்ந்து மதுவிலக்கு பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முழுமையான மதுவிலக்கு...

பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான பழி வாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது 0

பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான பழி வாங்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது

சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல், விஞ்ஞானம் மற்றும் பொது நிர்வாகத் துறையின் தலைமைப் பேராசிரியர் இராமு. மணிவண்ணன். ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றி வரும் பேராசிரியர். அய்.நா.வின் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ஜெனிவா சென்று மனித உரிமைத் தளங்களில் ஈழத் தமிழர் பிரச்சினைகளை முன்னெடுத்தவர். ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான சான்றுகளைத் திரட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆவணமாக்கியவர். ஒரு பேராசிரியர் என்ற எல்லையோடு தனது கடமை முடிந்துவிடவில்லை என்று சமுதாயப் பணியாற்றக் கூடியவர். அவரை இப்போது சென்னை பல்கலைக்கழகம் பழி வாங்கியிருக்கிறது. துறைத் தலைவர் பதவியிலிருந்து அவரை இறக்கிவிட்டு, அந்த இடத்துக்கு கோட்டீசுவர பிரசாத் என்பவரை துணைவேந்தர் நியமித்துள்ளார். பேராசிரியர் மணிவண்ணன் செய்த ‘குற்றம்’ தான் என்ன? “மதுக் கடைகளை மூடும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் பற்றிய தகவல்களைத் தருமாறு என்னிடம் கேட்டார்கள். மாணவர்களுக்கான போராட்ட உரிமைகளில் நான் தலையிட முடியாது என்று கூறி, அது குறித்த தகவல்களைத்...

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை 0

தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை

‘இந்து’க்களை ஒரே அணியாக தமிழகத்தில் திரட்ட முடியாத நிலையில் வெவ்வேறு ஜாதிக் குழுக்களை தங்கள் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது. இந்து மத அடையாளங்களுக்குள் முடங்கிவிடாமல் தமிழகத்தில் பல்வேறு படி நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஜாதிக் குழுக்கள் அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தங்கள் உரிமைப் போரை முன்னெடுத்தன. இதுவே பெரியார் வலியுறுத்திய ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற கோட்பாடு. பார்ப்பன மேலாண்மைக்கும் ஆதிக்கத்துக்கும் அரணாக நின்ற ‘இந்து ஓர்மை’க்கு வேட்டு வைத்தது, இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெரியார் போராட்டத்தால் அரசியல் சட்டத்தில் நிகழ்ந்த முதல் திருத்தத்தின் வழியாக ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ சமூக கல்வி அடிப்படையிலான இடஒதுக்கீடாக மாறி அது தமிழ்நாட்டில் ஆட்சிகளைக் கடந்து தீவிரமாக செயலாக்கம் பெற்றது. உரிமை மறுக்கப்பட்ட ஜாதிக் குழுக்கள் முன்னேறத் தொடங்கின. உண்மையில் ‘தலைவிதி’, ஜாதி தர்மம்’ என்ற பார்ப்பனக் கோட்பாடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு உருவானதே இந்த முன்னேற்றம்! இந்த நிலையில், இந்த ஜாதிக் குழுக்களை மீண்டும்...

0

விழுப்புரம் மாவட்டக் கலந்துரையாடல்

விழுப்புரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 14-8-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்கு, சங்கராபுரம், வாசவி அரங்கில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.  

0

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல்

13-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு, கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரம், திருச்சிக்காரர் மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப்  பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னினையிலும் நடைபெற்றது.

0

மூத்த பெரியாரியர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் சந்திப்பு

13-8-2015 அன்று நண்பகல் 2-00 மணிக்கு, மூத்த பெரியாரியரும், கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர்க் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடிதாங்கி நிகழ்வில் மையப் புள்ளியாய் நின்று இயங்கியவரும் ஆன ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் உடல் நலிவுற்றிருக்கிற செய்தி அறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும்,  எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதமன் ஆகியோர் கும்பகோனத்தில், அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில்  சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றில் உள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.

0

நாகை மாவட்டக் கலந்துரையாடல்

கழகத்தின் நாகை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 13-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு,  மயிலாடுதுறை, ROA அரங்கத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.

0

திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல்

12-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், மன்னார்குடி  மதர்சா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

0

தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல்

கழகத்தின் தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 12-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு பட்டுக்கோட்டை, அரசு பிளாசா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

0

தமிழக காவிரி விவசாயிகள் சங்க கொடியை கழக தலைவர் அறிமுகம் செய்தார்

தஞ்சையில் 11.08.2015 திகதி நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி,தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கேஎ.எஸ். இலங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.திநாவுகரசர்,தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன், தே.மு.தி.கவின் மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் பால அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான தோழர் பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் வழங்கினார். அப்போது தோழர் பி.ஆர்.பாண்டியன் , ” விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு...

காந்தியைப் படுகொலை செய்து கீதை உபதேசிக்கும் கோட்சே வகையறாக்களைக் கண்டித்து பொதுக்கூட்டம் 30.01.2015 புதுச்சேரி – கொளத்தூர் மணி 0

காந்தியைப் படுகொலை செய்து கீதை உபதேசிக்கும் கோட்சே வகையறாக்களைக் கண்டித்து பொதுக்கூட்டம் 30.01.2015 புதுச்சேரி – கொளத்தூர் மணி