வினாக்கள்… விடைகள்…!

மது விலக்கு எங்கள் கொள்கை; மற்ற கட்சிகள் பறித்துக் கொண்டு விட்டன. – பா.ம.க. அன்புமணி

அரசியல் கட்சிகள விடுங்க; அரசாங்கமே உங்க கிட்டேயிருந்து இதை பறிச்சு அமுலாக்கிடாமல் பாத்துக்குங்க; அப்புறம் கட்சியே நடத்தமுடியாமல் போயிடும்!

அரசு தடையையும் மீறி, கோயில்களில் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. – ‘இந்து’ ஏடு

அதெல்லாம் கோயில் பிரச்சினைகளில், அரசு தலையிட முடியாது; தலையிடவும் கூடாது. இது இராமகோபாலன் உத்தரவு; தெரிஞ்சுக்குங்க.

இந்தியாவிலேயே தூய்மையான நகரங்களில் முதலிடம் மைசூரு; இரண்டாவது திருச்சி. – செய்தி

புண்ணியஸ்தலங்களான காசி, இராமேசுவரத்தை இப்படியெல்லாம் அவமானப் படுத்தக் கூடாது.

இரயில்களில் பாட்டுப்பாடி, பிச்சை எடுப்பவர்களை அரசு திட்டங்களின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம். – செய்தி

இந்தத் திட்டத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ பிச்சைக்காரர்களையும் சேர்த்துப் பீங்களா?

பங்கு சந்தையில் ஏழுமலையான் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. – செய்தி

சுவிஸ் வங்கியில் ஏற்கெனவே கணக்கு தொடங்கிட்டீங்களா?

‘கோ’ சாலைகளில் உள்ள பசுக்களை வெளிநாடு வாழ் இந்துக்கள் தத்து எடுக்கலாம். – மத்திய அரசு

அப்படியே அமெரிக்காவுக்கு கொண்டு போய் அங்கே ‘கிரீன் கார்டு’ கிடைக்கவும் ஏற்பாடு செஞ்சிடுங்க!

இழப்பீடு ஏதும் கிடைக்காத 25,000 மதுரா விவசாயிகள், ‘தற்கொலை’க்கு அனுமதி கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு. – செய்தி

அதெல்லாம் உடனே அனுமதி கிடைச்சிடாது! முதலில் உள்துறை அமைச்சகம் பரிசீலிக்கணும்; பிறகு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கணும்; அதுக்கப்புறம் குடியரசுத் தலைவர் உடனே கையெழுத்து போட்டுடுவாரு! கவலைப்படாதீங்க!

பெரியார் முழக்கம் 13082015 இதழ்

You may also like...

Leave a Reply