Author: admin

பிரான்சில் மாவீரர் நாள் – கழகத் தலைவர் உரை

தமிழீழ மக்களின் ஏற்பாட்டில் பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் கழகத்தலைவர் அண்ணன் கொளத்தூர்மணி அவர்கள் கலந்துக்கொண்டு 27112015 அன்று மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.. (உரை ஒலிப்பதிவு கேட்க) பின்பு பாரீசில் புலிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் 

கொளத்தூர் புலியூரில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு! கொளத்தூர் புலியூரில் ! திராவிடர் விடுதலைக் கழகம் வீரவணக்கம் செலுத்தியது. 27.11.2015 மாலை 6.05 மணிக்கு மாவீரர் வீரவணக்க பாடல் ஒலிக்க மறைந்த மாவீரர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள தளபதி ரோய் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி 27112015

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி நடைபெற்றது. மன்னார்குடி நவ 27 இளமை சுகங்களை எல்லாம் துறந்து விட்டு, எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்தோர் பல்லாயிரக்கணக்கானோர். ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடின்றி, ஏழை, பணக்காரன் என்கிற பொருளிய வேறுபாடுகளின்றி, உயர்சாதி ரூ கீழ்சாதி என்கிற சமூக வேறுபாடுகளின்றி, தரைப்படை, வான்படை, கடற்படை, தற்கொலைபடை என உலகின் எந்த நாட்டு விடுதலைப்படைக்கும் இல்லாத தனிச்சிறப்புகளுடன் களம் கண்டு மாண்ட அம்மாவீரர்கள் நினைவைப்போற்றும் நாளே நவம்பர் 27. 1982ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரபாகரனின் மடியில் தலைவைத்தபடியே உயிர்விட்ட சங்கர் என்கிற சத்தியநாதன் முதற்களப்பலியான அம்மாவீரனின் மறைந்த நாளே (நவம்பர் 27) மாவீரர் நாள். அந்நாளில் இலட்சியத்துக்குத் தன்னையே ஈந்தரூநாட்டு விடுதலைக்கு உயிரை கொடுக்க முன்வந்த – தமிழ்மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வை இழந்த மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் மரியாதை செலுத்திட உலகம்...

மாவீரர் நாள் வீரவணக்கம்

இளமை சுகங்களை துறந்து, எதிர்கால சந்ததிகளக்காக, தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்து, தம் இன்னுயிரை ஈகம் செய்த… மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் வீரவணக்கம்!   தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம், புலியூர் பிரிவு, கொளத்தூர் மாலை 5 மணி, நவம்பர் 27

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஆட்சி அதிகாரம் வந்துவிட்டது என்ற திமிரில் எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் எல்லை மீறி தூற்றுகிறார்கள். வாய்க்கொழுப்பு பூணூல் திமிருடன் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நடிகர் கமல்ஹாசன், தனது 61ஆவது பிறந்த நாளில் வெளியிட்ட சில கருத்துகளுக்காக ‘துக்ளக்’ பத்திரிகையில் எச். ராஜா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கமல்ஹாசன் பேசும் பகுத்தறிவு கருத்துகள் குழப்பம் மற்றும் பார்ப்பனியத்தின் கலவையாகவே இருக்கிறது என்பது வேறு சேதி. ஆனால், இந்த கடிதத்தில் எச்.ராஜா தன்னை அசல் பார்ப்பனராக அடையாளம் காட்டியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவர் ஏழையாகவும் தீண்டப்படாத ஜாதியிலும் பிறப்பதற்கு முன் ஜென்மத்தின் பலன்தான் காரணம் என்று பார்ப்பனர்கள் கூறி, இந்த ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வந்தார்கள். பெரியாரி யக்கம், பார்ப்பனரின் இந்த பிறவித் திமிரைத்தான் கேள்விக்கு உட்படுத்தியது. கடவுளையும் ‘கடவுள்’ பெயரால் அதிகாரங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கப் பிடிக்குள் பறித்துக் கொண்டதை பெரியார் இயக்கம் கிழித்துக் காட்டியவுடன் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வுகளை தாங்கள் ஏற்கவில்லை என்றும், ஜாதி...

மாட்டிறைச்சி தடை: சில தகவல்கள்

மாட்டிறைச்சி தடை: சில தகவல்கள்

இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட மற்றும் தடை விதிக்கப் படாத மாநிலங்களின் விவரம் வருமாறு: பஞ்சாப் மற்றும் அரியானா: இரு அண்டை மாநிலங்களிலும் பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. பஞ்சாப் அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதித் துள்ளது. எனினும் இந்த மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்போருக்கான தண்டனை நடைமுறைகள் எதுவும் இல்லை. ராஜஸ்தான்: எத்தகைய கால்நடை வதையும் தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம். இமாச்சல பிரதேசம்: பசுக்கள் மட்டு மின்றி காளைகள், எருமைகள், கன்றுகள் போன்ற விலங்குகளை கொல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 1 ஆண்டு சிறை. குஜராத்: பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சிகளை விற்பது, வாங்குவது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல் அனைத்துக்கும் தடை. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. உத்தரபிரதேசம்: பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. எனினும் டப்பாக்களில்...

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

உயிரியல் துறை விஞ்ஞானியும், தேசிய அரசு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பார்கவா, ‘இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள். நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது. இந்துத்துவா கொள்கையின் மூலாதாரமாக ஆர்.எஸ்.எஸ். எனும் ராஷ்டிரியஸ்வயம் சேவக் அமைப்பு இருக்கிறது. பாஜக அரசில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு ஓங்கியுள்ள நிலையில், “பகுத்தறிவு கோட்பாடு, காரணத்தைத் தேடி விவாதித்து கேள்விக்குள்ளாக்கும் நெறி ஆகியவற்றிலிருந்து இந்திய தேசத்தை விலகச் செய்து, அதன் வாயிலாக ஜனநாயகத்திலிருந்தும் தேசத்தை விலகச் செய்கின்ற இந்து மதவாத எதேச்சாதிகாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா?”  என்ற கேள்வியை நாம் எழுப்பிடலாம். அவ்வாறு நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. வன்முறைத் தாக்குதல்களோடு மட்டுமின்றி,...

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம்  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம் ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையின் தொடர்ச்சி – முஸ்லீம்கள் வீடுகட்டினால் யார் வேண்டு மானால் வாடகைக்கு வரலாம். ஆனால், பார்ப் பனர்கள் வீட்டில் வேறுயாரும் வசிக்க முடியாது. இந்த நாட்டில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் செய்வது பார்ப்பனீயம். ஆனால், பழியை சுமப்பது முஸ்லீம்கள்.  இந்த சூழ்ச்சி அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த குற்றச்சாட்டு,  முஸ்லீம்கள் தீவிர மதநம்பிக்கை உடையவர்கள் அவர்களது குரானில் நான்கு பெண்டாட்டிகளைத் திருமணம் செய்ய சொல்லியிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது. அதனால் அவர்கள் அந்த மதக் கருத்தை பின்பற்றி நிறைய திருமணம்...

தலையங்கம் 26.11.1957

தலையங்கம் 26.11.1957

பெரியார் இயக்க வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நாள் நவ. 26, 1957. அன்றுதான் உலக வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை அந்நாட்டின் ‘குடிமக்களாக’ அறிவிக்கப்பட்டவர்கள் தீ வைத்து எரித்த நாள். எரித்தவர்கள் 10,000 பேர். கைதானவர்கள் 3,000 பேர். 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அந்த போராளிகள், நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை. ஜாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தைக் கொளுத்த எனக்கு முழு உரிமை உண்டு என்று நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளித்தனர். அந்தப் போராளிகள், “நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்று நீதிபதி முன் நெஞ்சுயர்த்தி கூறினார்கள். அன்றைய சிறைச்சாலை கொடுமை யானது. சட்ட எரிப்பு வீரர்கள் கிரிமினல் கைதிகளாகக் கருதப்பட்டனர். மிக மிக மோசமான உணவு; மோசமான சுகாதாரம். சிறைச்சாலைக்குள்ளே உடல்நலம் பாதிக்கப் பட்டு ஜாதி...

உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்

உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்

வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் மோடி. அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து போகிறார். மோடி பறக்கும் நாடுகளில் எல்லாம் அங்கே வாழும் ‘இந்தியர்’கள் நடத்தும் விழாக்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மெய்டன் மைதான சதுக்கம், இலண்டன் வெம்பில்டன் அரங்கம் என்று நடக்கும் இந்த மாபெரும் வரவேற்பு விழாக்கள் திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றன. பெருமளவில் கூட்டம் திரட்டப்படுகிறது. இந்த வேலைகளை செய்வது எல்லாம் அந்நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவ’ பார்ப்பன சக்திகள்தான். இலண்டனில் வெம்பில்டன் மைதானத்தில் 60,000 பேர் திரண்டதாக செய்திகள கூறுகின்றன. இதை முன்னின்று நடத்தியது ‘தேசிய இந்து மாணவர் கழகம்’ என்ற அமைப்பு. 29 வயதுடைய மயூரி பார்மர் என்ற செல்வாக்கு மிக்க பார்ப்பன குடும்பத்தின் இளைஞர், இதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ராம் மாதவ் என்பவரால் திட்டமிடப்படுகின்றன. உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் பார்ப்பன-பனியா தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு ஆதரவாக...

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்று தொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது, தர்மம் செத்து விடுகிறது; உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்து மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது; மோதல்கள் வெடிக்கின்றன. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. ஏனெனில், சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது. ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல், இன்று உலக அரங்கில் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்தரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

அரைகுறை ஆடைகளுடன் வரும் பக்தர்களை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. – மதுரை உயர்நீதிமன்றம்ஆணை ஆனால், அர்ச்சகர்கள் மட்டும் மேலாடை இல்லாமலேயே வரலாம்! அதுல நீதிமன்றம் தலையிட முடியாது. கூடங்குளம் முதலாவது அணு உலையில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு. – இயக்குனர் ஆர்.எஸ். சுந்தர் அமைச்சர் நாராயணசாமி போயிட்டாரேன்னு கவலைப் பட வேண்டாம்; இதோ ஆர்.எஸ்.சுந்தர் வந்துட்டாருல்ல… பாரிசில் நடந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரியானாவில் வேதம் ஓதி ‘மகாயாகம்’. – செய்தி இனிமே சிரியாவுல நடக்குற தாக்குதலுக்கும் யாகம் நடத்து வீங்க போலிருக்கு. பீகார் தோல்வி: பா.ஜ.க.வை குறைகூறும் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். – அமைச்சர் கட்காரி தாராளமா எடுங்க… ஆனா அதிருப்தி தெரிவித்த பீகார் மக்களை ஒன்றும் செஞ்சுடா தீங்கய்யா. மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரில் 95 சதவீதம் பேர் இந்துக்கள். – முன்னாள் நீதிபதி சச்சார் உள்நாட்டுல எவரும்...

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான மலேசியா கருத்தரங்கம்

மலேசியாவின், பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் இராமசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில், பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, 21-11-2015 அன்று நடைபெறவிருந்த “ஈழத்தில் நடந்த இனப்படுகொலை” தொடர்பான கருத்தரங்கில் உரையாற்ற சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, 20-11-2015 அன்று மலேசிய திராவிடர் கழகத்தின் சிலாங்கு மாநிலத் தலைவர் தோழர் பரமசிவம், செயலாளர் தோழர் பொன்வாசகம், பொருளாளர் தோழர் அன்பழகன், பெரியாரிய எழுத்தாளர் கவி ஆகியோர் அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து சந்தித்தனர். அடுத்து, அவரை தங்கள் மகிழுந்தில் அழைத்துக் கொண்டு, கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இராசராச சோழனும், இராசேந்திர சோழனும் கடல் வழியாய் வந்து கால்பதித்த கடாரத்துக்கு ( இன்றைய கெடா மாநிலம் ) அழைத்து சென்று , அங்கு நடக்கும் அகழ்வாய்வு இடங்களையும், புஜாங்க் பள்ளத்தாக்கு எனும் மலை, ஆறு, பள்ளத்தாக்காக உள்ள இயற்கை அழகு கொஞ்சும் பகுதிக்கும் அழைத்து சென்றனர். அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள...

ஈழம் தீர்வா?

ஈழம் தீர்வா?

“ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் மலேசியாவில் உள்ள பினாங்கு மாகணத்தில் 21.11.15 அன்று நடைபெற்ற சர்வ தேச மனித உரிமை கழகத்தின் “இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் ” எனும் கருத்தரங்கில் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம்” எனும் நான்காம் அமர்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உரையாற்றினார். மேலும் அக் கருத்தரங்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சசீதரன், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி உள்ளிட்ட பல்வேறு தமிழீழ ஆதரவு தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

பகுத்தறிவு

பகுத்தறிவு

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? – (கு.1.11.36;5:1)   மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும். – (வி.6.12.47;1:3) ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா?

இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் – மலேசியாவில் கழக தலைவர் உரை நிகழ்த்துகிறார் !

மலேசியாவிலுள்ள பினாங்கு மாநிலத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கழகத்தின் ‘இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும்’ எனும் கருத்தரங்கில் பேசுகிறார். 21.11.2015 சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு நடைபெறும் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் ” எனும் நான்காம் அமர்வில் ”ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் கழக தலைவர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும்,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சரீதரன் அவர்களும் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் திரு ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள்.

”இன்றைக்கும் தேவை பெரியார்” விளக்கப் பொதுக்கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 15.11.2015.மாலை 5.00 க்கு விழுப்புரம் மாவட்டம்.திருவெண்ணெய் நல்லூர்,மணக்குப்பம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியார் மாணவர் பேரவையைச் சேர்ந்த தோழர் ஆனந்த் பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் கணேஷ் ராஜா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மணிகண்டன்,பழனி,புஷ்பராஜ்,ஆறுமுகம்,பாலகுரு,நாராயணன்,கார்த்தி,பாபு,சக்திவேல்,ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்சியுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவு கருத்துக்களுடன் தோழர் காவை இளவரசன் அவர்களின் நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கழக வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி,வழக்கறிஞர் துரை அருண்,கழக தலைமை செயற்குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார்,கழக தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினார்கள் நிறைவாக கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் ”இன்றைக்கும் தேவை பெரியார்” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மேலும் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர்...

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

பெரியாரின் 136ஆவது பிறந்த நாளையொட்டி ‘இளந்தமிழகம்’ இயக்கம், ‘பெரியாரும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு ‘பெரியாரும் தமிழ்த் தேசியமும்’ என்ற தலைப்பில் நூலாக வெளி வந்திருக்கிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழேந்தி, தியாகு, செந்தில் ஆகியோர் கருத்தாழமிக்க உரைகளும், அவையில் எழுப்பிய வினாக்களுக்கு அளிக்கப்பட்ட விடைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெளிவான பதில்களை முன் வைக்கும் கருத்துப் பெட்டகமாக நூல் வெளி வந்திருக்கிறது. நூலின் நோக்கத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் செந்தில் கீழ்க்கண்டவாறு சரியாகவே விளக்குகிறார். “தமிழ்த் தேசியம் என்பது சாதி நாயகத்திற்கு எதிராக சனநாயகத்தை முன்னிறுத்துவ தாகும். சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரானப் போராட்டமே நேர்வகைத் தமிழ்த் தேசியம் ஆகும். பெரியாரின் வாழ்வின் சாரமாகப் பெறப்படுவது சாதி ஒழிப்பு. எனவே, பெரியாரும் தமிழ்த் தேசியமும் ஒன்றுபடும் புள்ளி சாதி ஒழிப்பு அரசியலாகும். தமிழ்த்...

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா, கௌதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரகுமார், எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் முகமது ஆசாத், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சிங்கராயர், மா.பெ.பொ.க.யின் குப்பன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கழக...

சென்னையில் டிச.1இல் “மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

ஈரோட்டில் இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம், கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தொடர்ச்சியாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் டிசம்பர் முதல் தேதி சென்னையில் ‘மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு’ மாநாட்டை நடத்த திட்டமிட்டு, தோழர்கள் களப்பணிகளில் இறங்கியுள்ளனர். சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாலை மண்டபத்துக்கு அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. தந்தை பெரியார் தனது இறுதி பேருரையை நிகழ்த்திய இடமும் இதுவேயாகும். சம்பூகன் கலைக் குழுவின் எழுச்சி இசை நிகழ்ச்சியோடு காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பார்ப்பன மதவெறி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட தபோல்கர்-பன்சாய்-கல்புர்கி நினைவரங்கில், ‘பார்ப்பனியம் பதித்த இரத்தச் சுவடுகள்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெண்ணியத்தில்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, ‘புராணங்களில்’...

கல்பாத்தி : அன்றும் இன்றும்!

கல்பாத்தி : அன்றும் இன்றும்!

இன்றைய கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு, மொழி வழி மாநிலப் பிரிவினைக்கு முன்பு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதி. பாலக்காட்டுக்கு அருகே உள்ள கல்பாத்தி, பார்ப்பன வைதீகத் திமிரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கல்பாத்தி, ‘அக்ரகாரங்களில்’ குடியிருந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், ஈழவர்கள் நடக்கவும், அவர்கள் ‘தேர் ரதம்’ வருவதற்கும் தடை விதித்திருந்தனர். இந்தத் தடை அரசாங்கத்தின் தடையாகவே இருந்தது என்பது இதில் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இந்தத் தடையைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வரதராஜூலு நாயுடு – அவர் ஆசிரியராக இருந்த ‘தமிழ்நாடு’ நாளேட்டில் தலையங்கம் தீட்டினார். அப்போது சென்னை மாகாணத்தை நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த சர். சி.பி. இராமசாமி அய்யர், இந்தத் தடையை நியாயப்படுத்தினார். தீண்டப்படாத சமூகத்தினரான ஈழவர்களும் அவர்களின் கோயில் தேரும் அக்ரகாரத்தில் வந்தால் கலவரம் வரும் என்றும், அதைத் தடுப்பதற்காகவே தடை போட்டுள்ளதாகவும் கூறினார். இதை எதிர்த்து அன்றைய சென்னை சட்டமன்றத்தில் நீதிக்கட்சி,...

பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையிலிருந்து – “பகுத்தறிவாளர் பார்வையில் பெரியார், பெண்கள் பார்வையில் பெரியார், தலித்துகள் பார்வையில் பெரியார், இசுலாமியர் பார்வையில் பெரியார் – என தலை சிறந்த தலைப்புகளில் பலர் பேசியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு நடந்ததல்ல இயல்பாகவே அமைந்துவிட்டது. ஏனென்றால், பெரியார் ஒரு இசுலாமியர் அல்ல; ஆனால், இசுலாமியர்களின் தலைவர். பெரியார் பெண் அல்ல; ஆனால், பெண்களின் தலைவர். பெரியார் ஒரு தலித் அல்ல; ஆனால், தலித்துகளின் தலைவர் என்பதை உணர்த்துகின்ற மேடையாக இந்த மேடை அமைந்திருக் கின்றது. இதை வேறு எதனுடனும் பொருத்திப் பார்க்க முடியாது. பெரியார்தான் ஒடுக்கப்பட்ட,...

அடாது மழை அடித்தாலும் விடாது ‘அவாள்’ கொட்டம்

அடாது மழை அடித்தாலும் விடாது ‘அவாள்’ கொட்டம்

கடும் மழையில் தமிழகம் தத்தளிக்கிறது; வெள்ளப் பாதிப்புகள், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது; அரசு நிவாரணப் பணிகள் படுமோசமாகி விட்டதால், தங்குமிடம் உணவு இன்றி மக்கள் பரிதவிக்கின்றார்கள். ஆனால், மக்கள் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், ஸ்ரீரங்கம் கோயிலில் ‘கும்பாபிஷேக’ வேலைகளும், யாக சாலை பூஜைகளும் அமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஊரே வெள்ளத்தில் தவிக்கும்போது, பூணூல் மேனியுடன் வைதிகப் பார்ப்பனர்கள் 28 வெள்ளிக் குடங்களில் ‘புனித நீர்’ கொண்டு வருவதையும், யாக சாலைகளில் பார்ப்பனர்கள் பல்வேறு யாக குண்டங்களில் உணவுப் பொருள்களை தீயில் போட்டு பொசுக்கி தொடர்ந்து பல நாள் யாகங்கள் நடத்துவதையும் ‘தினமணி’, ‘தினமலர்’ போன்ற பார்ப்பன ஏடுகள் படங்களுடன் செய்தி வெளியிட்டு குதூகலிக்கின்றன. பெரியார் முழக்கம் 19112015 இதழ்

மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள கிராமம் மணக்குப்பம். இக்கிராமத்தின் இளைஞர்கள் தாங்களாகவே ‘பெரியார் மாணவர் பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களைத் திரட்டி, பெரியார் பிறந்த நாள் விழாக்களை நடத்தி வந்தனர். பின்னர், ‘இளம் திராவிடர்’ என்ற பெயரில் இயங்கும் இணையதளக் குழுவில் இடம் பெற்றுள்ள கழகத் தோழர் செந்தில் வழியாக பேரவையை வழி நடத்திய ஆனந்த் பெரியார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்களுடன் தொடர்பு கொண்டார். மணக்குப்பம் கிராமத்தில் இளைஞர் களைத் திரட்டி, ஒரு பொதுக் கூட்டம் நடத்தி, ‘திராவிடர் விடுதலைக் கழக’த்தைத் தொடங்க முடிவு செய்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு உதவிட விழுப்புரம் அய்யனார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கரு. அசுரன், முழக்கம் உமாபதி, எப்.டி.எல். செந்தில் ஆகியோர் முன்கூட்டியே மணக்குப்பம் சென்றனர். கடும் மழை காரணமாக நிகழ்ச்சி சமுதாயக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. மணக்குப்பம் தோழர்கள் கிராமத்திலும், சுற்றுப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கூட்டத்தின்...

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

‘எவிடென்சு’ அமைப்பு வெளியிடும் அதிர்ச்சி உண்மைகள் தமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்

2ஆவது வகுப்பு படிக்கும் ஒரு தலித் சிறுவனை, மலம் எடுக்கச் சொன்ன விஜயலட்சுமி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டிருக்கிறார். இது நாமக்கல் மாவட்டத்தில் இராமபுரம் நகராட்சிப் பள்ளியில் நடந்த சம்பவம். இது வெளியே தெரிய வந்த நிகழ்வு, அவ்வளவுதான். மதுரையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கூறையூர். இங்கே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1970ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளாக ஒரு தலித் மாணவர்கூட சேர்க்கப்பட்ட தில்லை. 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பள்ளி. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த ஜாதிப் பிரிவுகளிலிருந்து சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளது ‘எவிடென்சு அரசு சாரா நிறுவனம்’. குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலித் மாணவர்களை தலித் அல்லாத ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்கும் துப்புரவுப் பணி களுக்கும் பயன்படுத்துவது நடைமுறையாகிவிட்டது. நெல்லை மாவட்டம் வேடம்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்...

திப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்?

திப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்?

கருநாடக மாநில அரசு திப்பு சுல்தானுக்கு அரசு விழா எடுத்ததை சகித்துக் கொள்ள முடியாத மதவாத சக்திகள் நடத்திய கலவரத்தில் இரண்டு பேர் பலியாகி விட்டனர். நடிகர் ரஜினிகாந்த், திப்பு சுல்தானாக ஒரு திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன், பார்ப்பனர்கள் இல.கணேசனும், இராம. கோபாலனும், ரஜினிகாந்தை நடிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். திப்பு சுல்தான் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? தனது தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து, 1782இல் 29 வயதில் ஆட்சிப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் ஆட்சி புரிந்து, மைசூர்ப் போரில் வீரமரணம் எய்தியவன் திப்பு சுல்தான். பிரிட்டிஷ் ஆட்சியை தனது படை வலிமையால் நடுங்க வைத்தவன். 1791இல் சிருங்கேரி மடத்துக்கு சொந்தமான சாரதா கோயிலை மராட்டியப் படை கொள்ளையடித்து, 17 இலட்சம் மதிப்புள்ள கடவுள் சிலை, நகைகளை வாரிச் சென்றது. அப்போது சிருங்கேரி மடத்தின் பார்ப்பன சங்கராச்சாரி சச்சிதானந்த பாரதி உயிர் தப்பி,...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

சகிப்புத் தன்மை குறைந்து வருவதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணிக்கு பா.ஜ.க. போட்டி பேரணி – செய்தி எதிர்ப்புகளை சகித்துக் கொள்ளவே மாட்டோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறாங்க, போல! நீதிமன்றத்தில் தமிழ் உரிமைக் கோரிய போராட்டத்தினால் நீதிமன்ற வளாகத்தில் தமிழக காவல்துறைக்கு பதில் – மத்திய போலீஸ் படை வருகிறது. – செய்தி நீதிமன்றத்துக்குள் மட்டுமல்ல; நீதிமன்ற வளாகத்துக்குள்ளும் தமிழுக்கு இடமில்லை. இனி இந்திக்கார போலீஸ்தான்! வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்ய வரும் ஏழைகளிடம் இடைத்தரகர்கள் பணம் பறிக்கும் மோசடி நடக்கிறது. – ‘தினமலர்’ செய்தி ஆனா, முருகனுக்கு இடைத் தரகர்களாக இருக்கும் அர்ச்சகர்கள் மோசடிப் பற்றி மட்டும் பேச மாட்டீங்க. ஆர்.எஸ்.எஸ். சீருடையில் மாற்றம். இனி மூத்தவர்களுக்கு முழுக்கால் சட்டை. – செய்தி ஆக, முழுக்கால் சட்டையை ‘பாரத கலாச்சாரமாக’ ஒத்துக்கீட்டீங்க… பெரிய புரட்சி தான்! பீகாரில் பா.ஜ.க. தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள். – தேர்தல் பிரச்சாரத்தில்...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை: தமிழக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை: தமிழக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மதுரை மீனாட்சி கோயில் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணை மே மாதம் முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எல்.ராஜா என்பவர் ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார். (நவம்.4, 2015) அதில், “அர்ச்சகராவதற்கு மதம் குறித்த சடங்குகள் – ஒழுக்கமுமே முக்கியம். ஜாதி முக்கியமல்ல. ஆகம அடிப்படையிலான கோயில்களிலும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆவதை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்க வில்லை” என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தக் கருத்தை வரவேற்கிறோம். பார்ப்பனர்கள் – பார்ப்பன அமைப்புகள் – இராம கோபாலன்கள் – சங்கராச்சாரியர்கள் இந்தக் கருத்தை ஆதரிக்கிறார்களா? பெரியார் முழக்கம் 12112015 இதழ்

மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அமைச்சர் எதிர்ப்பு

மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அமைச்சர் எதிர்ப்பு

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜி ஜீ மாட்டிறைச்சிக்கு தடை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்; ஆனால், புத்த மார்க்கத்தைத் தழுவியவன்” என்று. டெல்லியில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட் டார். “குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் குளிரை சமாளிக்க புரதச் சத்துள்ள மாட்டிறைச்சியைத் தான் சாப்பிட முடியும். இதனால்தான் இந்தப் பகுதிகளில் இராணுவ வீரர்களுக்கு கண்டிப்பாக மாட்டிறைச்சி வழங்கப் படுகிறது. அதுவும் மாட்டிறைச்சி வேண்டாம் என்று சொல்லும் பா.ஜ.க.வின் ஆட்சியிலேயே வழங்கப்படுகிறது. எனது மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெரும்பாலான மக்களின் உணவு மாட்டிறைச்சிதான். எனவே மாட்டிறைச்சிக்கு தடைபோட முடியாது” என்று கூறியுள்ளார். பெரியார் முழக்கம் 12112015 இதழ்

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...

இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு தீர்மானங்கள்

மாநாட்டு தீர்மானங்கள் ! 08.11.2015 அன்று கழகதலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் பாஜக பரிவாரங்களும் மதவாத வெறுப்புக் கருத்துக்களை முன்வைத்து வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்ட முயற்சிகளை முறியடித்து நிதிஷ்குமார் தலைமையிலான சமூக நீதி சக்திகளுக்கு பெறும் வெற்றியை குவித்துள்ள பீகார் மக்களுக்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 2) குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்தை வழங்கும் மாட்டிறைச்சி உணவை கேரள மக்கள் விரும்பி உண்பது போல, தமிழர்களும் தங்கள் உணவுப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி உணவை முன்வைத்து நடக்கும் பொதுநிகழ்வுகளுக்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதிப்பதற்கும்,கெடுபிடி காட்டுவதற்கும் வன்மையான கண்டனத்தை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 3)...