மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி 27112015
திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி நடைபெற்றது. மன்னார்குடி நவ 27
இளமை சுகங்களை எல்லாம் துறந்து விட்டு, எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்தோர் பல்லாயிரக்கணக்கானோர். ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடின்றி, ஏழை, பணக்காரன் என்கிற பொருளிய வேறுபாடுகளின்றி, உயர்சாதி ரூ கீழ்சாதி என்கிற சமூக வேறுபாடுகளின்றி, தரைப்படை, வான்படை, கடற்படை, தற்கொலைபடை என உலகின் எந்த நாட்டு விடுதலைப்படைக்கும் இல்லாத தனிச்சிறப்புகளுடன் களம் கண்டு மாண்ட அம்மாவீரர்கள் நினைவைப்போற்றும் நாளே நவம்பர் 27. 1982ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரபாகரனின் மடியில் தலைவைத்தபடியே உயிர்விட்ட சங்கர் என்கிற சத்தியநாதன் முதற்களப்பலியான அம்மாவீரனின் மறைந்த நாளே (நவம்பர் 27) மாவீரர் நாள். அந்நாளில் இலட்சியத்துக்குத் தன்னையே ஈந்தரூநாட்டு விடுதலைக்கு உயிரை கொடுக்க முன்வந்த – தமிழ்மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வை இழந்த மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் மரியாதை செலுத்திட உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அந்த நாளை மாவீரர் நினைவேந்தலாக அனுசரிக்கின்றனர்.
திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி மன்னை சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் வேதாபாலா, மாவட்ட தலைவர் தீனதயாளன், மதிமுக மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், நகர செயலாளர் சன்சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாடசி சுந்தரம், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பௌத்தன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் வெண்மணி மருத செல்வராசு, தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர், நாம் தமிழர் கட்சி மாவட்ட இணைச்செயலாளர் முருகேசன், நகர செயலாளர் மன்னை கலையரசன், திராவிடர் விடுதலைக்கழக ஒன்றிய செயலாளர்கள் சேரன்ரமேசு, நல்லிக்கோட்டை முருகன் செந்தமிழன், தென்பரை பன்னீர்செல்வம், நகர செயலாளர் சசிகுமார், கவிஞர் கலைபாரதி, திராவிடர் கழக நிர்வாகி சந்திரபோஸ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக மாவீரர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி – மன்னை காளிதாசு