Tagged: பெரியார் முழக்கம் 30102013 இதழ்
கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்று, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பேச வேண்டுமே தவிர, அதைப் புறக்கணிப்பது சரியாகாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற பாடம்; சமாதானப்படுத்தல்’ என்ற விசாரணை ஆணையம் – ஆண்டுகள் ஓடியும் எந்த விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலஉரிமை மற்றும் காவல்துறையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளையும் நீதிமன்றம் வழியாக இலங்கை அரசு பறித்துக் கொண்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டது. சிங்களர்களின் இன வெறியை திருப்திப்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆட்சியிடம் இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வடக்கு மாகாணத்தின் முதல்வராக தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட விக்னேசுவரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கூறும்போது, தமிழகத்தில் மட்டும் ஈழ ஆதரவாளர்கள்...
ஆர்.எஸ் .எஸ் . கருத்துகள் சமூகத்தைச் சீர்குலைத்துவிடும். தோழர் தமிழருவி மணியனுக்கு இரண்டாவது முறையாக பதிலளித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய கட்டுரை. ஜூ.வி.யில் சில திருத்தங்களுடன் வெளி வந்துள்ளது. கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது. ‘நம்மிடம் கேட்பதற்கு சில நியாயமான சந்தேகங்கள் உண்டு’ என்று அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்திருக்கிறார் தமிழருவி மணியன். தேர்தல் களத்தில் மூன்றாவது அணிக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது என்பதே அவரது ஆவேசமான கேள்விகள். இது நம்மிடம் தொடுக்கப்பட வேண்டிய கேள்விகள் அல்ல என்பதே நமது பணிவான பதில். நாம் மூன்றாவது அணிக்கான அமைப்பாளராக நம்மை நியமித்துக் கொள்ள வில்லை. எது முதல் அணி, எது இரண்டாவது அணி என்பதும் நமக்குத் தெரியாது. பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஆர்.எஸ் .எஸ் . நேரடியாக களமிறக்கியிருக்கும் மோடிக்கு – தமிழகத்தில் ஆதரவுத் தளத்தை வலிமைப்படுத்தும் முயற்சிகள் தந்த கவலைதான் – தமிழருவி மணியனுக்கு எதிர்...
திறப்பு நிகழ்ச்சி : 8.11.13 வெள்ளி மாலை 5 மணி – தஞ்சாவூர் 9, 10.11.2013 சனி, ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கருத்தரங்குகள் – இசையரங்குகள் தமிழகத் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், உலகத் தமிழர்கள், திரையுலகக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். உலகத் தமிழர் பேரமைப்பு அழைக்கிறது! தமிழர்களே திரண்டு வருக! பெரியார் முழக்கம் 30102013 இதழ்
பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, சென்னை திருவான்மியூரில் குத்தூசி சா. குருசாமி, குருவிக்கரம்பி சு. வேலு, சுயமரியாதைப் பேரவை சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வால்மீகி தெருவில் 29.9.13 ஞாயிறு காலை நடைபெற்ற இவ்விழாவிற்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை வகித்தார். புதுகை க. இராசேந்திரன் வரவேற்புரை யாற்றினார். மறைந்த சுயமரியாதை வீரர் கழஞ்சூர் சொ. செல்வராஜியின் படத்தை வாலாசா வல்லவன் திறந்து வைப்பதாக இருந்தது. அவர் வர இயலாது போகவே, அவரது உரை வாசிக்கப்பட்டது. செயல்வீரர் திருச்சி வீ.அ.பழனி, திருவுருவப் படத்தை ஓய்வு பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் ம.பொன்னிறைவன் திறந்து வைத்தார். மதுரை தோல் மருத்துவர் அ.சவுந்தரபாண்டியன், ‘சாப்பாட்டிலும் சாதி’ என்ற தலைப்பில் உரையாற்ற, இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பெரியாரின் பிறந்த நாள் கவிதையை அரங்கேற்றினார். அனைவருக்கும் மறைந்த வீ.அ.பழனியின் இளையமகன் வணங்காமுடி பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். இக்கூட்டத்தில் மறைந்த...
ஏழுமலையான் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி தேவஸ் தானத்துக்கு சொந்தமான அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமிரா நிறுவ முடிவு. – செய்தி அருமையான யோசனை. அப்படியே அர்ச்சர் களுக்கும் ஒரு துப்பாக்கியை குடுத்துடுங்க. இடுப்புல செருகிக் கொண்டே அர்ச்சனை செய்வாங்கல்ல! திருவில்லிபுத்தூர் கம்மாபட்டி கிராம மக்கள் மழை வருவதற்காக இரண்டு கழுதைகளுக்கு திருமணம் செய்து, மணமக்கள் ஊர்வலத்தை நடத்தி தடபுடலாக விருந்து வைத்தார்கள். – செய்தி எப்படியோ ‘மங்கள’ காரியம் நல்லவிதமா முடிஞ்சுடுச்சு’ கழுதை குடும்பத்துக்குள்ள ஜாதிப் பிரச்சினை வந்து தகப்பன் கழுதை மண்டையப் போடாம பாத்துக்குங்க. புனே சிறையில் காந்தி பயன்படுத்திய இராட்டை லண்டனில் அடுத்த மாதம் ஏலம். – செய்தி இராட்டையை ஏலம் விட்டது சரி; ஆனா, காந்தி உடம்பில் பாய்ந்த கோட்சேயின் துப்பாக்கிக் குண்டு இருந்தா, அதையும் ஏலம் விட்டுடாதீங்க; ஆர்.எஸ் .எஸ் . சொத்தை அவர்களிடமே திருப்பித் தந்துருங்க. அதுதான் கவுரவம். சென்னை...
பார்ப்பனியம் – சமூகத்தில் திணித்த பல்வேறு கொடுமைகளில் ஒன்று ‘பால்ய விவாகம்’ அதாவது குழந்தைத் திருமணம். பார்ப்பனர்கள், உயர்ஜாதிக் குடும்பங்களில் பிற ஜாதியினருடன் ஜாதிக் கலப்பு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற் காகவே இந்தக் கொடூரமான முறையைத் திணித்தனர். இந்த சமூகக் கொடுமை பல்வேறு நாடுகளில் பரவி யுள்ளது. இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் பெருமளவு நடைபெறும் எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட 107 நாடுகள் இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. ஆனால், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. உலகம் முழுதும் நடக்கும் 6 கோடி குழந்தை திருமணங்களில் 40 சதவீதம், அதாவது 2.4 கோடி குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன. இந்தியாவில் இந்த பால்ய விவாகம் சட்டத்தை மீறி பரவலாக நடந்து வருகிறது. அய்.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்தியா,...
காந்தி, கோட்சே எனும் ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்ட வுடன், இந்திய அரசால் ஆர்.எஸ் .எஸ் . தடை செய்யப்பட்டது. தடையை நீக்க, ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனர்கள், நேரு, பட்டேலுடன் பேரம் பேசினார்கள். இந்திய அரசு பல நிபந் தனைகளை முன் வைத்தது. ஆர்.எஸ் .எஸ் . ஒரு ரகசிய அமைப்பாக செயல்படக் கூடாது; அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதெல்லாம் விதிக்கப்பட்ட நிபந்தனை. அந்த நிபந்தனையை ஆர்.எஸ் .எஸ் . ஏற்றுக் கெண்டு தனது அமைப்புக்கு சட்ட திட்டங்களை உருவாக்கியதோடு, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுவதுமாக விலகி நிற்கும் என்றும், (ஆர்.எஸ் .எஸ் . ஸின் சட்ட திட்டப் பிரிவு 4(பி)) உறுதியளித்தது. அரசியலில் ஒதுங்கியிருப்பதாக உறுதி கூறிய அதே ஆர்.எஸ் .எஸ் . தான் இப்போது பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தி யிருக்கிறது. இந்த விவரங்களை...
ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார். பார்ப்பனிய வாதிகள் மதத்தின் தீண்டாமையையும் வழி பாட்டின் தீண்டாமையையும் சமூகத்தில் ‘மேல்-கீழ்’ தன்மையையும், சாஸ் திரம், ஆகமம், சடங்கு, வாழ்க்கை முறைகளில் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டிலிருந்து அய்ரோப்பிய நாடுகளுக்குப் போன பார்ப்பனர்கள், ஜாதியவாதிகள் தங்களுடன் ஜாதியையும் கொண்டுச் சென்றனர். அய்ரோப்பிய நவீன வாழ்க்கை ஒரு பக்கம்; பார்ப்பனிய ஜாதி வேற்றுமைகளைக் கட்டிக் காப்பது மற்றொருபுறம் என்ற இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பார்ப்பன இந்தியாவைப் போல், ஜாதியைப் பாதுகாக்க அய்ரோப்பிய நாடுகள் தயாராக இல்லை. 28 நாடுகளைக் கொண்ட அய்ரோப்பிய ஒன்றியம், ஜாதிக்கு எதிராக இப்போது போர்க்கொடி உயர்த்தி விட்டது. ஜாதி அடிப்படையில் காட்டப்படும் பாகு பாடுகள் மனித உரிமை மீறல்கள்; சர்வதேசக் கேடு (ழுடடியெட நுஎடை) என்று அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டித்துள்ளது. கடந்த அக்டோபர் 10 ஆம்...
மத்திய ஊரகத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சென்னையில் நூல் வெளியீட்டு விழாவில் வெளியிட்டுள்ள ஒரு கருத்து மிகவும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். “தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு வலுவாக உள்ளதால், வளர்ச்சிப் பாதையில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றபோது மாநிலங்கள் வரிசையில் 9 ஆவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சுதந்திரம் அடைந்தபோது 2 ஆவது இடத்தில் இருந்த மேற்கு வங்கம், தற்போது 9 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த போது கடைசி இடத்தில் இருந்த பீகார் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆட்சிகள் மாறலாம்; அரசியல்வாதிகள் வந்து போகலாம். ஆனால், நிர்வாக முறையை வலுவாக உருவாக்க வேண்டும். அதைத் தமிழக நிர்வாகக் கட்டமைப்பு செய்துள்ளது” என்று குறிப் பிட்டுள்ளார். தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, இடஒதுக்கீடு என்ற சமூக நீதித் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது, அமைச்சர் குறிப்பிட மறந்த செய்தி. பெரியார்...
கடவுள், மதங்கள் காலத்துக்கு பொருந்தி வராதவை என்று பேராசிரியர் வசந்த் நடராசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தைப் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். பார்ப்பனர்கள் பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அக்கட்டுரை. அதே ‘இந்து’ ஏட்டில் பல மறுப்புக் கட்டுரைகள் வெளி வந்தன. அதில், பேராசிரியர் நடராசனின் கடவுள், மத மறுப்பு கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜிரேந்திர சர்மா என்ற ஆய்வாளர், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மதம் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது அவரது கட்டுரை. கட்டுரை சுருக்கம் இதுதான்: “மதத்துக்கும் அறிவியலுக்குமான முரண்பாடுகள் வெடித்து வருகின்றன. இதில் மதம் தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்த கருத்துகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன. நவீன வாழ்க்கையின் தத்துவங்கள் இரண்டு. ஒன்று சமத்துவம்; மற்றொன்று சுதந்திரம். இரண்டுமே மதத்துக்கு எதிரானவைதான் சமூக மாற்றத்தை மதப் பழமைவாதிகளால் ஏற்க முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ் தவ மதம் மாற்றங்களை எதிர்த்தது....
[பல்வேறு செய்தி ஏடுகளில் புதைந்து கிடக்கும் செய்திகள், சிந்தனைகளைத் தேடிப் பிடித்து வாசகர்களின் சிந்தனைக்கு தொகுப்பாக முன் வைக்கப்படுகிறது.] ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் ஒன்றிரண்டு ஆங்கில இதழ்களோடு நின்று போன ஒரு முக்கிய செய்தி இது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது அதைத் தடுத்து நிறுத்துவதற்கு அய்.நா. எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வந்தது என்ற குற்றச்சாட்டை இப்போது அய்.நா.வே ஒப்புக் கொண்டுள்ளது. அய்.நா.வில் அதன் பொதுச் செயலாளர் பான்கி மூன், அவரது ஆலாசகர் என்ற பொறுப்பில் இருந்த விஜய் நம்பியார் என்ற இந்தியாவைச் சார்ந்த மலையாள அதிகாரி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அய்.நா.வின் பல்வேறு பிரிவுகள் இனப் படுகொலையின்போது மேற் கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை செய்ய விடாமல் முடக்கினார். இது குறித்த விரிவான தகவலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருக்கிறது. அவ்வளவும் உண்மைதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் அய்.நா.வின் அமைப்புகள் தங்கள்...
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மதச் சடங்குகளை கொண்டாடக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கி செயல்பட்டது. ஆர்ப்பாட்டங்கள், துண்டறிக்கைகள் வழங்குதல், பரப்புரைகள் என்று பல்வேறு களங்களில் கருத்துகளைக் கொண்டு சென்றதோடு, அலுவலகங்களுக்கும் அரசு ஆணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தோழர்கள் வேண்டுகோள் கடிதங்களையும் கையளித்தனர். இந்த களச் செயல்பாடுகளுக்காக மயிலாடுதுறை, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற ஊர்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வெளி வந்துள்ளனர். மதவெறி சக்திகள் அரசியலில் தலைதூக்கக் கூடாது; அது ஆபத்தானது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பேசி வந்தாலும்கூட, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் மதச் சடங்குகள் ஊடுருவி நிற்பதைக் கண்டிக்கத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய நிகழ்வுகளின் வழியாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பு, மத உணர்வுகளோடு இணைக்கப் படுகிறது. மத உணர்வுகள் ஜாதியத்தோடு நெருங்கி நிற்கிறது. அது தலித்,...
இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப்படுத்தும் விழா, ‘திராவிடர் வாழ்வியல் விழா’ என திருப்பூரில் சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில், திராவிடர் வாழ்வியல் விழா- திராவிடர் உணவு விழா-கருந்திணை 2013 நிகழ்ச்சியில் திராவிடர் பண்பாட்டு மலரினை வெளியிட்டு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பில் அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காவேரி அம்மன் திருமண அரங்கத்தில் கருந்திணை 2013 என்ற பெயரில், திராவிடர் வாழ்வியல் விழாவும் திராவிடர் உணவு விழாவும் எழுச்சியோடு நடைபெற்றது. விழாவின் துவக்கத்தில் மேட்டூர் கருப்பரசன் குழுவினரின் பறை முழக்கம் அரங்கத்தை அதிர வைத்தது. தொடர்ந்து சுயமரியாதைக் கலைப் பண்பாட்டு கழகத்தின் கோவை மாவட்ட அமைப்பாளர் அ.ப. சிவா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகச் செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி,...