Category: கோவை மாநகரம்

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

நன்கொடை

நன்கொடை

கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் வெங்கட் – இராஜேஸ்வரி இணையரின் குழந்தைக்கு “அறிவுக் கனல்” என கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெயரிட்டார். அதன் நினைவாக இயக்க நிதியாக ரூ. 1000 கொடுத்தனர். பெரியார் முழக்கம் 23082018 இதழ்

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம் கோவை 19082018

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம் கோவை 19082018

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம். தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ”ஆரிய சூழ்ச்சியும் – திராவிட எழுச்சியும்” எனும் தலைப்பிலும், புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் ”இன்றைய சூழலில் திராவிடத்தின் தேவை” எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். நாள் : 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5 மணிக்கு இடம்- : அண்ணாமலை அரங்கம்,சாந்தி திரையரங்கம் அருகில், கோவை.

கோவையில் இரயில் மறியல்

கோவையில் இரயில் மறியல்

“தீண்டாமை ஒழிப் புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்திட்ட, தீர்ப்பைத் திரும்பப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9ஆவது அட்டவணை யில் இணைத்திடு” என்ற கோரிக்கையை வலி யுறுத்தி 2.7.2018 அன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் நடத்து வதென முடிவு செய்யப் பட்டு அதற்காக மக்களை திரட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 26, 27 இரு தினங்கள் வாகனம் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. இராம கிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இரயில் நிலையம் முன் திரண்டனர். காவல்துறைக்கும் தோழர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கே அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 378பேர் கைதாயினர்.  கு. இராமகிருஷ்ணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), யு. சிவஞானம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), சிறுத்தைச் செல்வன் (தமிழ்ப் புலிகள்), சுசி கலையரசன் (வி.சி.க.), நடராசன், முன்னாள் எம்.பி....

கோவையில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் கோவை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தளர்த்தாதே! கோவையில் சாலை மறியல்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தளர்த்தாதே! கோவையில் சாலை மறியல்

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது. 10.04.2018 அன்று  நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழக மாநகரத் தலைவர் நேருதாஸ், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஆறுச்சாமி, ஆதித்தமிழர் கட்சி மாநிலத் தலைவர் வெண்மணி, ஆதித் தமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர் நாகராஜ், தமிழ்ப் புலிகள் கட்சிப் பொதுச் செயலாளர் இளவேனில், சமூக நீதிக்கட்சி மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்தனர். பெரியார்...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

மாவட்ட வாரியாக நடந்து வந்த பெரியாரிய பெண்கள் சந்திப்பு 1.4.2018 அன்று கோவையில் நடந்தது. தோழர்களை உருவாக்குவதற்கும், உருவான தோழர்களை களப்பணியாளர்களாக தயாராவதற்காக வும் இந்த சந்திப்புகள் நடந்து வருகின்றன. கோவையில் இரத்தினசபாபதிபுரத்தில் (ஆர்.எஸ்.புரம்) பெரியார் பெருந்தொண்டர் கஸ்தூரியார் படிப்பகத்தில் அவருடைய மகன் தேவேந்திரன் சந்திப்பு நிகழ்வை நடத்த மகிழ்வுடன் அனுமதி அளித்தார். பெரியார் பிஞ்சு தமிழினி கடவுள் மறுப்பு சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். சந்திப்பில் பல்வேறு தலைப்புகளில் தோழர்கள் பேசினர். ‘மதங்கள் பெண்களுக்கு எதிரானவை ஏன்?’ என்ற தலைப்பில் ஆனைமலை வினோதினி, ‘பெரியாரியக்கத்தின் பெண் தளபதிகள் பற்றிய நினைவுகள்’ என்ற தலைப்பில் கோபி மணிமொழி, ‘திராவிடர் இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை’ என்ற தலைப்பில் பவானிசாகர் கோமதி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். ஒவ்வொருவர் கருத்திற்குமிடையேயும் விவாதங்கள் நடந்தன. இறுதியாக தோழர்களின் சந்தேகங்களுக்கும் மக்களிடையே உறவினர்களிடையே சந்திக்கும் சவால்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் சிவகாமி...

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் – குருதிக் கொடை முகாம் – மத எதிர்ப்புக் கருத்தரங்கம் – நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர். பகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின்...

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 10 பேர் கைது ! 05.04.2018 காலை 10.30.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திவிக, தமிழ்ப்புலிகள்,பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

கோவையில்  பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை – 90 பேர் கைது ! 10042018

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை – 90 பேர் கைது ! 10042018

  எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்ட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது. 10.04.20188 அன்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியல் நடைபெற்றது. அப்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி,ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர்...

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

(13.03.2018) உடுமலைப்பேட்டையில், தோழர் கெளசல்யா அவர்களின் “சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். நாள் : 13.03.2018 செவ்வாய் நேரம்: மாலை 3 மணி இடம்: காயத்திரி திருமண மண்டபம், கொழுமம், உடுமலைப்பேட்டை.

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் !

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் !

மனித நேயன் தோழர் பாரூக் முதலாமாண்டு நினைவேந்தல் ! திராவிடர் விடுதலைக் கழகம் கோவை சார்பில்……… குருதி கொடை முகாம் – கருத்தரங்கம் – நினைவரங்கம் நாள் : 18-03-2018 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

மார்ச் 18இல் கோவையில் பாரூக் நினைவு நாள் குருதிக் கொடை – கருத்தரங்கு

மார்ச் 18இல் கோவையில் பாரூக் நினைவு நாள் குருதிக் கொடை – கருத்தரங்கு

16.03.2018 அன்று இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக் முதலாமாண்டு நிகழ்வுகள் 18.03.2018 அன்று நடைபெறு கிறது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலளார் விடுதலை இராசேந்திரன், முன்னிலை யிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது. முதல் நிகழ்வாக மனிதநேயன்  பாரூக் குருதிக் கொடை முகாம் நிகழ்கிறது. முகாமை இரசீதா பாரூக் துவக்கி வைக்கிறார். அன்று மாலை 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின் வன்முறைகள்’ என்கிற கருத்தரங்கம் நடைபெறுகிறது. நம் இரத்ததில் ஜாதி மத பேதமில்லை; ஏற்ற தாழ்வு இழிவுமில்லை; உயர்தவன் தாழ்ந்தவன் எண்ணமில்லை. அனைவரும் வருக குருதிக் கொடை முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9677404315 முகாம் நடைபெறும் இடம்: அண்ணாமலை அரங்கம்; நாள் – 18.03.2018 காலை 8:30 மணி முதல்; அனைவருக்கும் சான்றிதழ் உடனே வழங்கப்படும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம்,  கோவைமாவட்டம். பெரியார் முழக்கம் 08032018 இதழ்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவையில் கழக சார்பில் மார்ச் 18இல் பாரூக் நினைவேந்தல்

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் பிப்.11 அன்று தோழர் கலை அலுவலகத்தில் நடைபெற்றது. மதவெறிக்கு பலியான ஃபாரூக் நினைவு நாளை மார்ச் 18 அன்று காலை பாரூக் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்கம் செலுத்தி, அன்று கருத்தரங்கமும் குருதிக் கொடையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, விஜயக்குமார் (இணைய தள பொறுப்பாளர்), ரகுபதி, ஸ்டாலின், ராஜா, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் முத்து, மாநகர அமைப்பாளர் ஜெயந்த், விஜயகுமார், உசேன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 01032018 இதழ்

கோபி, கோவையில் பெரியார் நினைவு நாள்

பெரியார் நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ், அருளானந்தம், சுப்பிரமணி, ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர், மாணவர் கழக தோழர் அறிவுமதி, பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை : கோவை நகரில் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் 44ஆவது நினைவுநாளை மிகச்சிறப்பாக நடத்தியது. மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் சிலைக்கு மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டனர்.  மாணவர் கழகப் பொறுப்பாளர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

பெரியார் நினைவுநாள் கோவை 24122017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரின் 44வது நினைவுநாள் மிகச்சிறப்பாக மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். உடன் விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் இணைந்து நினைவுநாள் நிகழ்வு நடந்தது..         – கோவை திவிக.

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

27.12.2017 காலை கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற் பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத்தோழர்கள் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

கோவையில், நூல் வெளியீட்டு விழா

கோவையில், நூல் வெளியீட்டு விழா

“இருட்டினில் வாழும் வெளிச்சங்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27.12.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் கோவை  அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது.  த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் நூலை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணிநூலை பெற்றுக்கொண்டார்.  தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

தோழர் ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு ! கோவை 27122017

தோழர் ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு ! இன்று 27.12.2017 காலை கோவை வந்த தோழர் ஆ.ராசா அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி,த.பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.

இருட்டினில் வாழும் வெளிச்சங்கள் நூல் வெளியீட்டு விழா 27122017 கோவை

கோவையில், நூல் வெளியீட்டு விழா ! ”இருட்டினில் வாழும் வெளிச்சங்கள்” நூல். கழகத்தலைவர் கலந்து கொண்டு நூலைப்பெற்றுக்கொண்டு உரையாற்றினார். நாள் : 27.12.2017.புதன் கிழமை. நேரம் : காலை 10.00 மணி. இடம் : அண்ணாமலை அரங்கம்,சாந்தி திரையரங்கம் அருகில்,கோவை. நூல் வெளியிட்டவர் : தோழர் கோவை கு.ராமகிருட்டிணன், பொதுச்செயலாளர். த.பெ.தி.க. மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கனார்கள்      

கழகம் எடுத்த அம்பேத்கர் நினைவு நாள்

திருப்பூரில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் திருப்பூரில் அம்பேத்கர் நினைவு நாளான 06.12.2017 அன்று காலை 11 மணியளவில் அம்பேத்கர் சிலைக்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, தனபால், அகிலன், மாதவன் பரிமளராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேராவூரணியில் பேராவூரணியில் தமிழக மக்கள்  புரட்சிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து  நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு.  நீலகண்டன் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை  செய்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன்,  சுப.செயச்சந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர்கள் ஏனாதி சம்பத், ஆயில்  மதியழகன், இரா மதியழகன், ரெட்டவயல் மாரிமுத்து, கிறித்தவ நல்லெண்ண இயக்க  பொறுப்பாளர் ஆயர் த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்...

தேர்வாணையத்தை எதிர்த்து கழக ஆர்ப்பாட்டங்கள்

தமிழ் தெரியாதவர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் வேலை வாய்ப்புத் தேர்வுக்கு மனு செய்யலாம் என்ற தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறக் கோரி கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம்  சார்பாக மாவட்டத்  தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமையில்  05.12.207 அன்று மாலை  4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வடநாட்டாருக்குத் தாரை வார்க்கும் அரசுத் தேர்வாணையத்தையும் தமிழக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், மாவட்டப் பொருளாளர் மஞ்சுகுமார்,  பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர்  நீதியரசர், செயலாளர் ஜான்மதி, சூசையப்பா, ஸ்டெல்லா, ராஜேந்திரன்,  அருந்ததியர் காலனி ஆறுமுகம் , குமரேசன் (ஆதித் தமிழர் கட்சி) , சிவராஜ பூபதி (மக்கள் அதிகாரம்), வழக்கறிஞர்கள் மைக்கிள் ஜெரால்டு, சுதர்மன், சமூக ஆர்வலர்  போஸ்,  புத்தோமணி, மணிகண்டன், விஷ்ணு,...

வடமாநிலத்துக்கு போகிறதாம்  கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!

வடமாநிலத்துக்கு போகிறதாம் கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!

கோவையில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபத்தில், அதிக உற்பத்தித் திறனுடன் இயங்கும் அரசு அச்சகத்தை, வட மாநில அச்சகங்களுடன் இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந் துள்ளன. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியில், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் 1964-ல் அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆகியோரது முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த அச்சகம், 132.7 ஏக்கரில் அமைந்தது. சுமார் 25 ஏக்கரில் தொழிற்சாலையும், மீதமுள்ள பகுதியில் 463 குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கிய இந்த அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 தொழிலாளர் களுடன் இயங்குகிறது. ஆனாலும் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அஞ்சல்துறை, பார்ம் ஸ்டோர்ஸ், விமானப் படை ஆகிய வற்றுக்கான ஆவணங்களை இந்த அச்சகம் தயாரித்து வழங்கி...

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களில் கழகம் களமிறங்கியது

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி,  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களிம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படுகிறது கோவை 26092017 காலை மாவட்ட ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் வைக்க கூடாது.சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை போன்ற மதப்பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்ற அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தகோரி மனு வழங்கப்பட்டது.. குறிப்பு: அரசு ஆணையை மீறும் காவல் நிலையங்கள் மீது வழக்கு போடப்படும் என்ற எச்சரிக்கையோடு...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை 17092017

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா…  17-09-2017 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் நேருதாஸ் தலைமையில்  துவங்கியது மாவட்ட அமைப்பாளர் ஜெயந்த் வரவேற்புரை நிகழ்த்த தோழர்கள் மருத்துவர் அனிதா, மதவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் ஆகியோர் படத்திறப்பும் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது தோழர்கள் கருத்துரை நிகழ்த்தினர் கே.எஸ்.கனகராஜ் dyfi மாவட்ட செயலாளர்  சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் ச.பாலமுருகன் பி. யூ. சி. எல் சிறப்புரையாக- தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தோழர் கொளத்தூர் மணி தொடர் மழையிலும் புதியவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் பெரியார் பிஞ்சுகள் திருப்பூர் சங்கீதா அவர்களின் குழந்தைகள் மற்றும் இசைமதி கிருஷ்ணன் சங்கீதா ஆகியோர் பாடல்கள் பாடினார் நிகழ்ச்சியில் திருப்பூர்துரைசாமி, முகில்ராசு, இணையதள பொறுப்பாளர் விஜய், கனல்மதி, சூலூர்பன்னீர்செல்வம், விக்னேஷ், லோகு, கணேஷ் கோவை மாநகர தோழர்கள் கலந்துகொண்டனர் இறுதியாக  நன்றியுரை தோழர் நிர்மல் கூறி நிகழ்ச்சியை நிறைவுற்றது மேலும் படங்களுக்கு

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ! கோவை 17092017

கோவையில் பொதுக்கூட்டம் ! நாள் : 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 5 மணி. இடம் :தோழர் ஃபாரூக் நினைவு மேடை, மசக்காளிபாளையம்,கோயம்புத்தூர். இழந்துவரும் உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தனமை காப்போம் பரப்புரை பயண நிறைவு விழா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர்,தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு (தலைவர் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 02092017

இன்று கோவையில் காந்திபார்க்கில் நீட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 02092017 காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் “தோழர் பூர்ணிமா நந்தினி” தலைமையில் சிறப்பாக நடந்தது.. நிமிர்வு குழுவின் பறை முழக்கத்தோடு ஆரம்பமானது. நீட் தேர்வு விலக்கு பெறும்வரை “தினமும் நடக்கும்” இடம் அந்தந்த அமைப்பு தோழரிடம் அறிவிக்கப்படும் . “அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நடக்கும்” என்ற முடிவோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது. பொதுவாக வேடிக்கை பார்த்தவர்கள் கூட நிகழ்வு முடிவடையும் நேரத்தில் பங்கேற்பாளர்களாக இருந்தார்கள்.. தேன்மொழி தோழர் (bjp+பார்ப்பனர்களின்) நோக்கங்களை அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி விளக்கி சிறப்பாக பேசினார். கண்மனி,வினோத்,இளந்தமிழகம்,CFI தோழர்களும் உணர்வுப் பூர்வமாக பேசினர்..நிமிர்வு சக்தி ,மாதவன் சங்கர் முழக்கங்கள் சிறப்பு. செய்தி நிர்மல்குமார்

அரியலூர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அரசை கண்டித்து திவிக சார்பில் மாநிலம் முழுதும் முற்றுகைப் போராட்டம் 02092017

நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை   நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

இணையேற்பு விழா ! சோழபுரம் 20082017

”சிவ.விஜயபாரதி – பேரா.பே.சங்கீதா” ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 7.30.- 9.00 மணி. இடம் : மங்களம் வீரமுத்து திருமண மாளிகை,சோழபுரம். பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்

இந்து மக்கள் கட்சியை தடை செய் – கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம் 01082017

ஜாதி மத கலவரங்களை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் இந்துமத வேடதாரி, பார்ப்பன அடிவருடி அர்ஜூன்சம்பத்தை கைது செய்… இந்து மக்கள் கட்சியை தடை செய்…  என்ற முழக்கத்தோடு கோவையில் 01082017 மாலை 5 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாளர் நேரு அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கோவை அணி கலந்துரையாடல் திருப்பூர் 16072017

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, “சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயணம்” என்ற தலைப்பில் தொடங்கும் நிகழ்வை ஒட்டி கோவை திருப்பூர் மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 16072017 அன்று பிற்பகல் 3 மணிக்கு தோழர் துரைசாமி, மாநில பொருளாளர் அவர்களின் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் 35 தோழர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் சூலூர் பன்னிர்செல்வம், நிர்மல் மதி அவர்கள்  பயண ஏற்பாடுகளுக்கு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். 5 நாட்களிலும் 18 தோழர்கள் கலந்துகொள்வதாக உறுதியளித்தனர்.  

பெரியாரியல் பயிலரங்கம் உடுமலை 11062017 மற்றும் 12062017

“பயிற்சியாளர்கள் – தலைப்புகள்” பெரியாரியல் பயிலரங்கம் ! ஜூன் 11,12 – உடுமலை. திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை முதல் மாலை வரை. இடம்: கிருஷ்ணா விடுதி,படகுத்துறை, திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிலரங்கிற்கு வரும் தோழர்கள் சனிக்கிழமை இரவே பயிலரங்கு நடக்கும் விடுதிக்கு வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 200/= (ரூபாய் இருநூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி...

ஃபா கலெக்சன்ஸ் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் அவர்களின் துணைவியார் துவங்கியுள்ள ஃபா (faa) collections எனும் புதிய ஆயத்த ஆடை அங்காடியை இன்று 31.05.2017 அன்று காலை 11 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார். உடன் தோழர் பாரூக்கின் குழந்தைகள். Shop address : FAA COLLECTIONS, No:6 60 feet road, North housing unit, OPP TMMK office, Selva puram, Coimbatore – 641026

தோழர் ஃபாரூக் துணைவியார் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் துணைவியார் புதிதாக துவங்கவுள்ள   பா (faa) collection நாளை காலை 10 மணிக்கு  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துறை அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வருக.. பேச 9677404315

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடம்: திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை பல்வேறு தலைப்புகளில் இப் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. தலைப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 300/= (ரூயாய் முன்னூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி : ஆனந்த் – 9842815340 சபரி – 9095015269 கோவை...

தோழர் ஃபாரூக் படுகொலை விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

தோழர் ஃபாரூக் படுகொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை ! அதனால் கொலைக்கு “காரணமானவர்களை” கண்டறிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். தோழர் ஃபாரூக்கை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த முஸ்லீம்கள், இசுலாமிய மதவெறி ஏற்றப்பட்ட வெறும் கருவிகளே. ஆக விரைவில், * ஃபாரூக் படுகொலைக்கு திட்டமிட்டு பின்னிருந்து இயக்கிய இசுலாமிய மத அடிப்படைவாத இயக்கம் கண்டறியப்பட வேண்டும். * அந்த இசுலாமிய மதவெறி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப் பட வேண்டும். * ஃபாரூக் கொலையை பின்னிருந்து செய்த இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பு “இசுலாமிய மத பயங்கரவாத அமைப்பாக” அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். செய்தி பரிமளராசன்

ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்

நாள்    :              16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம்                 :               கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை :               கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு           :               கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்.                 அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி: “பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள்...

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள்  BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி பாரூக் எப்படி கொல்லப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? தமது அடுத்த கட்ட நகர்வு என்ன? ஃபாரூக் விட்டுச் சென்ற பணியை தொடர்வேன் என கூறினாரா? பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறார். ( 28.03.2017 BBC TAMIL)

தோழர் ஃபரூக் குறித்தும், அவரின் இறுதி நிமிடங்கள் குறித்தும் ஃபரூக்கின் துணைவியார், தந்தை பேட்டி – தி இந்து 25032017

‘கடவுள் மன்னிக்கக் கூடியவர்; தண்டிக்கச் சொல்பவர் அல்ல’: கொலை செய்யப்பட்ட ஃபாரூக் குடும்பத்தினர் வேதனை கோவை உக்கடம் லாரிப்பேட் டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டிய தால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற் றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க் கத்துக்கு விரோதிகள் அல்ல. தின மும் 5 வேளை நமாஸ் செய்பவர் கள். தவறாது நோன்பு மேற்கொள் பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்க ளிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள் கைக்கும் நாங்கள் எதிராக நிற்க வில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமை யாகப் படித்து, புரிந்துகொள்ளாத...

தோழர் கோவை ஃபாரூக் படுகொலை !

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கழகத் தலைவர் வலியுறுத்தல் உடன் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள். (கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கழகத் தலைவர் பேட்டி 17.03.17. கோவை.) நேற்று (16.03.2017)இரவு 11.00 மணிக்கு கோவை கழகத் தோழர் ஃபாருக் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.