Category: ஈரோடு தெற்கு

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

இந்து மதமே பார்ப்பனியம் – பார்ப்பனியமே இந்து மதம் -நூல் அறிமுக விழா ஈரோடு 23042017

பகத்சிங் மக்கள் சங்கம், டாக்டர் அம்பேத்கரின் ‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்ற நூலின் இறுதி அத்தியாயமான ’இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்’ என்கிற பகுதியை ”இந்து மதமே பார்ப்பனியம் – பார்ப்பனியமே இந்து மதம்” என்ற நூலை பதிப்பித்துள்ளது. அந்நூலின் அறிமுக விழா 23042017  ஞாயிறு அன்று மாலை 6-00 மணிக்கு, ஈரோடு ரீஜென்சி ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு நூலை தொகுத்து வெளியிட்ட மூத்த வழக்கறிஞர் தோழர் இரத்தினம் தலைமை தாங்கினார். நூல்குறித்த மூத்த வழக்கறிஞர்கள் திருமலைராஜன், ப.பா.மோகன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி ஆகியோரின் அறிமுக உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை ஆற்றினார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி கூறினார்.

கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம் – கழக தலைவர் நேரில் ஆய்வு

ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப்பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து சட்ட, மகாள் திரள் போராட்டங்கள் போன்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அத ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க பொதுச்செயலாளர் வி.பி.குணசேகரன் ஆகியோருடன் கனிராவுத்தர் குளப் பணிகளைப் பார்வையிட்டனர். கழக மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன் உள்ளிட்ட பல தோழர்கள் உடனிருந்தனர்.

மாட்டுக்கறி உண்ணும் விழா – இந்துமகா சபாவின் அறிக்கைக்கு ஈரோடு மாவட்ட கழகம் பதிலடி

அன்பார்ந்த தமிழர்களே ! கீழ்கண்ட அழைப்பை பாருங்கள். _____ அகில பாரத இந்து மகாசபாவின் அறிக்கை : வரும் 23:04:2017 அன்று சேலத்தில் கொளத்தூர் மணியின் பெரியார் திராவிடர் விடுதலை கழகம் நடத்த இருக்கின்ற மாட்டுக்கறி உண்ணும் விழாவைக் கண்டித்து அன்றைய தினமே பெரியாரின் சிலைக்கு அவர் பிறந்த மண்ணில் (ஈரோடு) செருப்பு மாலை அணிவிக்கும் விழா…. அழைக்கிறோம்.. உணர்வுள்ள இந்துக்களே பெரியார் திராவிடர் கழகத்தை விரட்டியடிக்க ஒன்று கூடுவோம்…. இடம் : ஈரோடு நாள் : 2⃣3⃣–0⃣4⃣–2⃣0⃣1⃣7⃣ தலைமை: காவிப்படைத் தளபதி திரு.தொல்காப்பியன் ஜி மாநிலத் துணைத்தலைவர், அகில பாரத இந்து மகாசபா. அழைக்கின்றார் அகில பாரத இந்து மகாசபாவின் தமிழ் மாநிலத் தலைவர் காவித்தளபதி கலியுலக கல்கி K.இராஜசேகர் ஜி அவர்கள்…. அழைப்பில் மகிழ்வது; அ.விஜயகுமார். மாநில ஊடகப்பிரிவுச் செயலாளர், மாவட்டத்தலைவர், திருப்பூர் மாவட்டம் @@@@ வாருங்கள் தமிழர்களே !! அய்யா தந்தை பெரியாரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கிறார்களாம்… கடும்...

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

இஸ்லாம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை தி.வி.க. தோழர்  பரூக் ,  ஈரோடு மாவட்டம் (தெற்கு) சார்பாக 19.03.2017 அன்று மாலை 7 மணிக்கு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ப.குமார் தலைமை ஏற்க, மறைந்த தோழருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காவை இளவரசன், கோபி வேலுச்சாமி ஆகியோர் இரங்கலுரையாற்றினர். தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

உலக மகளிர் தின விழா ! ஈரோடு 08032017

உலக மகளிர் தின விழா ! நாள் : 08.03.2017 புதன்கிழமை இடம்: ஈரோடு மாநகரம். நேரம் : காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை. அறிவுசார் வாழ்வியல் நிகழ்வுகளும், கருத்தரங்கம், தமிழர் கலை விழா பங்கு பெறுவோர் : மாண்புமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன், மேனாள் மத்திய அமைச்சர். பேராசிரியர் சரஸ்வதி, மக்கள் சிவில் உரிமைக் கழகம். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். ஒருங்கிணைப்பு, தோழர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர், திராவிடர் விடுதலைக்கழகம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை இடமாற்றம் – கழகம் மனு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலையை இடமாற்றம் செய்வது குறித்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி ஈரோடு மாநகராட்சி ஆணையாளரைச் சந்தித்து விண்ணப்பம் அளித்தார்.. சிலை இடமாற்றம் தொடர்பாக எந்தப் பணிகளாயினும் திராவிடர் விடுதலைக் கழகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் எப்பணியையும் செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.. மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநிலத்தலைவர் தோழர்.கண குறிஞ்சி, திமுக மாவட்டப் பிரதிநிதி தோழர்.பகீரதன் ஆகியோர் உடனிருந்தனர் செய்தி பசி திவிக

கழகத்தின் போராட்ட எதிரொலி, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே வெற்றி

இராமாநுசரின் ஆயிரமாவது ஆண்டு விழா என்ற பெயரில் இன்று 18022017 ஈரோடு பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது. இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள இருந்தார்கள். மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, காலை 10 மணிக்கு பரிமளம் மகால் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனிடையில் விழாவிற்கு எதிராய் மனு அளித்ததன் அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள். கழகத்தின் முயற்சிக்கு வெற்றி

பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழா 15022017 ஈரோடு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்ட ஆலோசகர், பெரியார் விருதாளர் அய்யா இனியன் பத்மநாபன்  அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் விழா 15,02,2017 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு ஹோட்டல் ரீஜென்சியில் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்ற, தோழர்கள் நாத்திகஜோதி, சண்முகப்பிரியன், செல்லப்பன், வேணுகோபால், கவிஞர் சின்னப்பன், பாரதிதாசன் கல்லூரிப் பேராசிரியர் சதீஸ்குமார், ஆசிரியர் சிவகாமி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  ஆகியோரதுவாழ்த்துரையை தொடர்ந்து……..             கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக அய்யா இனியன் பத்மநாபன் அவர்கள் ஏற்புரையில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இவ்விழாவில் அய்யாவின் குடும்பத்தார்களும், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தினர்.          பிறந்தநாள் விழா மகிழ்வாக அய்யா இனியன் பத்மநாபன் அவர்கள் கழக வளர்ச்சிக்கு ரூ...

பொங்கல் விழாப் பொதுக் கூட்டம் ஈரோடு 29012017

ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29,01,2017 ஞாயிறு அன்று லட்சுமி நகரின் அருகிலுள்ள அண்ணா நகரில் , அம்மக்களோடு இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நன்பகல் முதல் சிறுவர், இளைஞர் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை சமத்துவப் பொங்கல் வைத்து ஊர்ப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6-30 மணிக்கு தோழர். மா. ஜெயபாரதி (தமிழ்நாடு மாணவர் கழகம்) வரவேற்புரையாற்ற , தோழர் ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர், தி.வி.க.) தலைமையிலும், அண்ணா நகரைச் சேர்ந்த இராமசாமி, தமிழ்மணி, தி.வி.க. மாவட்ட செயலாளர் கு.சண்முகப் பிரியன், வேணுகோபால், மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி , சித்தோடு எழிலன் ஆகியோர் முன்னிலையில், சித்தோடு முருகேசன் அவர்களின் பகுத்தறிவுப் பாடலுடன் கூட்டம் துவங்கியது. தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் பா.ப. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும்...

ஈரோடு தெற்கு திவிக சார்பில் சித்தோட்டில் தெருமுனைக் கூட்டம் 01012017

தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.. தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார். ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.. தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்.. நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும்...

மகளிர் சந்திப்பு ஈரோடு 31122016

  தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஈரோட்டில் 31.12.2016இல் நடந்த பெண்கள் சந்திப்பிற்கு திருப்பூர் சரசுவதி தலைமை தாங்கினார். தி.வி.க. மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். சுதா வரவேற் புரை ஆற்றினார். ‘ஊடகங்களில் பெண்கள்’ என்ற தலைப்பில் இசை மதி, ‘மனுதர்மமும் பெண்களும்’ என்ற தலைப்பில் மணிமொழி, ‘ஆடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தனலட்சுமி, ‘குடும்பத்தில் முதல் பெரியாரியல் வாதியாக இருக்கும் பெண் சந்திக்கும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் கோமதி, ‘பெரியாரியல் குடும்பங்களில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் கனல் மதி ஆகியோர் பேசினர்.  பின்னர் “பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பெண்ணுரிமைக் கோட்பாட்டில் பெரியாரின் தனித்தன்மை” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஈரோடு தோழர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவிற்குப் பின்னர் பெரியாரின் இல்லம் சென்று பார்வையிட்டனர். பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு...

சித்தோட்டில் சட்ட எரிப்புப் போராளிகள் நினைவு நாள்

சித்தோட்டில் சட்ட எரிப்புப் போராளிகள் நினைவு நாள்

26.11.2016 சனிக்கிழமையன்று, திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக, சித்தோடு நான்கு முனைச் சந்திப்பில் மாலை 7.00 மணிக்கு “சட்ட எரிப்புப் போராட்டமும் பெரியார் தொண்டர்களின் தியாகமும்” என்கிற தலைப்பிலும், “பொது சிவில் சட்டத்தின் ஆபத்துகள்” என்கிற தலைப்பிலும் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. யாழ். எழிலன் வரவேற்க, மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தின சாமி தலைமையேற்றும், இரா. கமலக்கண்ணன் முன்னிலை வகிக்கவும், தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுச்சாமி, வீரா கார்த்திக் மற்றும் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.  வேணுகோபால், ராசண்ணன், சத்தியராஜ், சித்தோடு தோழர்கள் முருகேஷ், நடராஜ், சுப்பையா, முத்துசாமி, பிரபு, ரமேஷ், பள்ளி பாளையம், காஞ்சிக்கோயில் திருமூர்த்தி, அய்யப்பன், சாமியப்பன், அரங்கம்பாளையம் பிரபு, தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பி.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்புடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 08122016 இதழ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திவிக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து, 10.10.2016 அன்று மாலை 4 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். திவிக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வரவேற்புரையாற்றினார். பல்வேறு அமைப்புகளின் சார்பாக அவற்றின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.. கண்டன உரையாற்றியோர்: பிரபு,தி.க குமரகுருபரன்,த.பெ.தி.க விநாயகமூர்த்தி,விடுதலைச் சிறுத்தைகள் கி.வே.பொன்னையன்,தற்சார்பு விவசாயிகள் சங்கம் சித்திக், த.மு.மு.க பார்த்திபன், பி.யு.சி.எல் நிலவன்,தமிழ்த்தேச நடுவம் சிந்தனைச் செல்வன், தமிழ்ப்புலிகள் தமிழ் இன்பன், விடுதலை வேங்கைககள் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியசாமி, காந்திய மக்கள் இயக்கம் விடுதலைச் செல்வன், தலித் விடுதலைக் கட்சி லுக்மான், எஸ்.டி.பி.ஐ ஆதவன், தமிழக...

ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 10102016

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் ஒருங்கிணைப்பில், காவிரி ஆணையம் அமைக்க முடியாது என கூறி ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் மதவாத பாஜக வை கண்டித்து, நாள் : 10.10.16 திங்கட் கிழமை நேரம் : மாலை 4 மணி. இடம் : வீரப்பன் சத்திரம்பேருந்து நிலையம் அருகில், ஈரோடு. மேற்கு மண்டல தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள் !

ஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’

நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடிகிறது. 2016 மே மாதத்தில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதோடு மனநிறைவடையாமல் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை அணுகி தங்கள் திருமணத்தை, பெரியாரின் சுயமரியாதைத் திருமணமாய் நடத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அத்திருமணமும் மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11-7-2016 அன்று பதிவும் செய்யப்பட்டுள்ளது. திருமணம் பதிவு செய்த பின்னர் இருவரும், பெரியண்ணனின் சகோதரியின் ஊரான ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் தங்கி தங்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினர். ஜாதி மாறி நடந்த திருமணத்தைச் சகித்துக்கொள்ள முடியாத தன்னை ஜாதியின் காப்பாளனாகக் கருதிக்கொள்ளும்...

கண்டன ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 29082016

கண்டன ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 29082016

கடமையாற்றத்தவறும் கவுந்தப்பாடி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும், ஆள்கடத்தல் குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ! நாள் : 29.08.2016,திங்கட்கிழமை,காலை 10 மணிக்கு இடம் : கவுந்தப்பாடி நால்ரோடு. ஈரோடு மாவட்டம்,சலங்கப்பாளையம் திராவிடர் விடுதலைக் கழக தோழருடைய மனைவி தேஜாஶ்ரீ அவர்கள் கடத்தப்பட்ட சம்வத்தின் மீதான வழக்கில் மக்கள் கைப்பிடியாக பிடித்து கடத்தல் குற்றவாளிகளை காவல்துறையிடம் ஒப்படைத்தும் குற்றவாளிகள் மேல் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்காமலும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் இரண்டையும் பிடித்துக்கொடுத்தும் அவற்றை பறிமுதல் செய்யாமலும் கடமை ஆற்றாமல் மெத்தன போக்குடன் நடந்து கொள்ளும் கவுந்தப்பாடி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும், ஆள்கடத்தல் குற்றவாளிகள் மீது உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இப்படிக்கு, திராவிடர் விடுதலைக் கழகம், ஜாதிமறுப்பு கூட்டியக்கம்.

சத்தியமங்கலம் அணியின் நான்காம் நாள் எழுச்சி பரப்புரை பயணம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தில் சத்தி அணியின் நான்காவது நாள் பயணம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் துவங்கியது. முதல் நிகழ்வாக தோழர் ஆனந்து தலைமையில் ஆன வீதி நாடக குழுவின் பறை இசை மற்றும் மூடநம்பிக்கை  ஒழிப்புசார்ந்த வீதி நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து தோழர் சுவாமி நாதன்,முத்துபாண்டி,அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வைரவேல் நன்றி கூற பயணம் ஆவத்திபாளையம் சென்றடைந்த்து. ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பயணக்குழு தனது பரப்புரையை தொடர்ந்த்து.அப்பகுதியில் கழகத்தின் பொது செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் உரை நிகழ்த்த தோழர் சரவணன் நன்றி கூற பயணக்குழு திருச்செங்கோடு சென்று அடைந்த்து.மதிய உணவுக்கு பின்  பயணக்குழு தேவனாங்குறிச்சி சென்றடைந்த்து. அங்கு கலைக் குழுவின் வீதி நாடகம் மற்றும் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு வின் பகுத்தறிவு பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விடுதலை இராசேந்திரன் அவர்கள் கருத்துரை வழங்க, தோழர் சதிஷ் நன்றி...

மூன்றாம் நாள் அச்சம் போக்கும் அறிவியல் பயண பரப்புரை தொகுப்பு சத்தியமங்கலம் அணி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் மூன்றாம் நாள் முதல் நிகழ்வு பூதப்பாடியில் காலை 10 மணிக்கு  மேட்டூர் கோவிந்தராஜ்  குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாத்திக சோதி,ரமேசு,பால் பிரபாகரன்,ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வேணுகோபால் நன்றியுரை கூற பயணம் அப்பகுதியில் முடிவுற்றது.தோழர்களுக்கு திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீர் வாங்கி கொடுத்தனர்.பயணக்குழு சித்தார் பகுதிக்கு வந்தடைந்த்து.அங்கு தோழர் கோவிந்தராசு குழுவின் பறை இசை மற்றும்  பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாத்திக சோதி,வேணு கோபால் ,பால்பிரபாகரன், ஆகியோர் உரையாற்ற தோழர் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார். தோழர்கள் அனைவருக்கும்  தோழர் ஆனந்தன் மதிய உணவு ஏற்பாடு செய்தார். மதிய உணவு மற்றும் சிறிது நேரம் ஓய்வு க்கு பிறகு பயண குழு பவானி பேருந்து நிலையம் வந்து அடைந்த்து. நம் பயணக்குழு பவானி வந்த...

சத்தி அணியின் இரண்டாம் நாள் பயண பொதுக்கூட்ட நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் இரண்டாம் நாள் நிறைவு பொதுக்கூட்டம் குருவரெட்டியூரில் 8.8.2016 மாலை 7 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்வாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை இசை முழக்கத்தோடு தொடங்கியது.தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் பாடியபின் பொது கூட்ட நிகழ்வுகள் தொடங்கியது.தோழர் நாத்திகசோதி தலைமை ஏற்க தோழர் வேல்முருகன் வரவேற்பு உரை ஆற்ற தோழர்  இராம.இளங்கோவன், தோழர் இரத்தினசாமி,தோழர் பால்பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் திலிபன் நன்றியுரை ஆற்றினார்.

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் சத்தியமங்கலம் பயணக் குழு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை!நம்பாதீர்கள் சாமியார்களை எனும் தலைப்பில், அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தை தமிழகத்தில் 4 பகுதிகளில் இருந்து தொடங்கி மாநிலம் முழுவதும் பலவேறு பகுதிகளில் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆகத்து 7 ம் தேதி கழக பரப்புரைச் செயலாளர்  பால் பிரபாகரன் தலைமையில் பரப்புரை பயணம் துவங்கியது. பயணத்தின் முதல் நிகழ்வாக சத்தியமங்கலம் கழக தோழரும், மேட்டூர் தோழர் சம்பத் அவர்களின் தம்பியுமான தோழர் கோகுல்ராசு அவர்களின் படத்தினை தோழர்  பால்பிரபாகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து மேட்டூர் டி கே ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்களுக்கு  இடையே தோழர் கோவிந்தராசு மற்றும் தோழர் கிருட்டிணன் அவர்களும் நகைச்சுவையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தருக்கவகையில் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் கோபி வேலுச்சாமி ஆகையோர் உரையாற்றினார்கள். தோழர் மூர்த்தி நன்றியுரை ஆற்ற அங்கு.நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆதிதமிழர் முன்னணி  அமைப்பை சார்ந்த தோழர்கள் நமது தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பயணக்குழு நம்பியூர் ஒன்றிய...

பயணத்துக்கு தயாராகிறது சத்தியமங்கலம் அணி

17.07.2016 ஞாயிறு மாலை 4 மணிக்கு கோபி மாவட்ட  அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி மற்றும்  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையிலும், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் பவானி வேணு கோபால் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 07.08.2016 அன்று சத்திய மங்கலத்தில் துவங்க உள்ள “நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்கள!” என்ற அறிவியல் பரப்புரை அணியை சிறப்பாக வழிநடத்தி ஆத்தூரில் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு நாள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தோழர்கள் நிவாசு, சதுமுகை பழனிச்சாமி, இரகுநாதன், கிருட்டிணமூர்த்தி, தங்கம், அறிவு, அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்டவாறு சத்தியமங்கலம் அணியின் பரப்புரைப் பயண அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. “நம்புங்க அறிவியலை! நம்பாதீங்க சாமியாரை!” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத் திட்டஅட்டவணை பின்வருமாறு. 07.08.2016 (ஞாயிறு) : காலை : 10 மணி சத்தியமங்கலம் துவக்கம்; முற்பகல் :...

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம் ஈரோடு 24072016

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம். நாள் : 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை. இடம் : பெரியார் JCP சர்வீஸ் சென்டர், சூரம்பட்டி வலசு,ஈரோடு. தலைமை : தோழர் பால்.பிரபாகரன்,பரப்புரை செயலாளர். முன்னிலை : தோழர் ரத்தினசாமி,அமைப்புச் செயலாளர். தோழர் திருப்பூர் துரைசாமி,பொருளாளர். பொருள் : 1) பரப்புரை பயணத்தில் பேசுவதற்கான செய்திகளை திட்டமிடல். 2) மந்திரமா?தந்திரமா? செயல் விளக்கம் குறித்து அறிதல். 3) பயணத்திட்டங்களை வகுத்தல். பரப்புரை பயண திட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பயணத்தில் கலந்து கொள்ளவிருக்கும் கழக தோழர்கள் அவசியம் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : பரப்புரை பயணத்தில் பேசுபவர்கள் தாங்கள் பேசவிருக்கும் செய்திகளை தயார் செய்து கொண்டு வரவும். தொடர்புக்கு : 98650113393 – 9842712444

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26062016

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16,ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் தோழர்.கமலக்கண்ணன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தோழர்.எழிலன் தலைமை வகித்தார். தோழர்.இரத்தினசாமி, தோழர்.சண்முகப்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. 89 வயதான மூத்த பெரியார் தொண்டர்.தோழர்.இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.. சித்தோடு தோழர் பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது.. *கூட்டத்தில் கீழ்க்காண் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:* *1)*திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு முடிவின் படி, பரப்புரைப் பயணமானது *சென்னை,மயிலாடுதுறை,பொள்ளாச்சி,சத்தியமங்கலம்* ஆகிய இடங்களில் இருந்து ஆகஸ்ட்-7ஆம் தேதி தொடங்கி,கழகம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட்-12 அன்று, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிறைவடைகிறது. இப்பயணத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்திலிருந்து தோழர்கள் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. *2)* சத்தியமங்கலத்திலிருந்து தொடங்கும் பயணம் ஈரோடு வழியாக வரும் போது, மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.. *3)* பெரியார் முழக்கம் இதழுக்கான...

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட, திரைப்பட இயக்குநர்.தோழர் சங்ககிரி ராச்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.. 05.06.16 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர்.சண்முகப்பிரியனின் மகன் இந்தியப்பிரியன் அவர்கள் இயக்கிய ”கேடு” எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு இசை ஆல்பம் வெளியீட்டு விழா ஈரோடு ரீஜன்சி ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு 100 மரக்கன்றுகள் கழக தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

பாலமலை பெரியாரியல் பயிலரங்கம்

ஏராளமான புதிய தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்க,சிறப்புடன் நடைபெற்றது ! பல்வேறு தலைப்பிலான வகுப்புகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2 நாட்கள் நடைபெற்றது பயிலரங்கம் ! சேலம் மாவட்டம், காவலாண்டியூர், பாலமலையில் கடந்த 17.05.2016 மற்றும் 18.05.2016 அன்று சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கு நடைபெற்றது.120 தோழர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றனர். முதல் நாள் நிகழ்வாக 17.05.2016 அன்று காலை 10 மணிக்கு பயிலரங்கம் குறித்த அறிமுகத்துடன் பயிலரங்கு ஆரம்பமானது. காலை 11.00 மணிக்கு முதல் வகுப்பாக ”அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” எனும் தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.ஜோதிடம்,சாஸ்திரங்களின் பொய்மைகள் குறித்து காணொலிக் காட்சியுடன் விரிவாக விளக்கினார். உயிர்கள் உருவாக்கம் குறித்த மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துக்களை பகிர்ந்த மருத்துவர் எழிலன் அவர்களின் வகுப்பு மதியம் 2.30 வரை நீடித்தது. தோழர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பைக் கவனித்தனர். மருத்துவர் எழிலன் அவர்களின்...

ஈரோடு பெரியார் சிலை முன் நடந்த ஆவணப்பட வெளியீடு … Sending to Clouds

‘பை பாஸ்’ ஆவணப்பட வெளியீடு ! கழகத் தலைவர் அவர்கள் ஈரோடு பெரியார் சிலை முன் ஆவண படத்தை வெளியிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையில்,தடய அறிவியல் ஆய்வுகளில் உள்ள குளறுபடிகளை ஆவணப்படுத்தி கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகியோர் ஆவணப்படமாக ”பை பாஸ்” எனும் தலைப்பில் இயக்கி இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட 25 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று 21.05.2016 காலை ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலை முன் இந்த ஆவணப்பட வெளியீடு நடைபெற்றது.. வரவேற்புரையாற்றிய தோழர் பொன் சந்திரன், ”ராஜீவ் வழக்கிலும், ஈழப் பிரச்சினைகளிலும், புலிகள் தொடர்பான வழக்குகளிலும் கைதானவர்களும், காவல்துறை நெருக்கடிகளில் பாதிக்கப்பட்டவர்களும். தொடக்க காலத்திலிருந்து புலிகளை ஆதரித்தவர்களும், உதவியவர்களும் பெரிதும் பெரியார் தொண்டர்களே என்பதால் பெரியார் பிறந்த மண்ணில், பெரியார் சிலைக்கு முன்னால் பெரியார் இயக்கத்தவர் வெளியிடுவதே பெரிதும்...

திவிக நடத்தும் இரண்டு நாள் பயிலரங்கம் ஈரோடு 17042016

பயிலரங்கம் ! திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தும் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கம்- ( ஈரோடு ) இடம்: தோப்பு துரைசாமி தோட்டம்> காலிங்கராயன் அணைக்கட்டு> பவானி> (ராயல் தியேட்டர் இரண்டாவது வீதி, கந்தன் டெக்ஸ் ரோடு) நாள்: 17.04.2016 (ஞாயிறு) மற்றும் 18.04.2016 (திங்கள்) – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

தெருமுனைக் கூட்டம் சித்தோடு 20032016

தெருமுனைக்கூட்டம்,சித்தோடு ! ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சித்தோடு கிளையில் சித்தோடு தட்டாங்குட்டை பகுதியில் 20.03.2016 மாலை 6 மணியளவில் தோழர் வேல்மாறன் தலைமையில் தோழர் கமலக்கண்ணன் முன்னிலையில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் தோழர் முருகேசன் பெரியாரிய பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார் . அவரைத் தொடர்ந்து நாமக்கல் வடக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் பகுத்தறிவு பாடல் பாடினார் . ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணு மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ப.ரத்தினசாமி ஆகியோரது உரையைத் தொடர்ந்து காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது .இறுதியாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது . இரவு தோழர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் குமார் , காவை சித்துசாமி , நங்கவள்ளி சிவக்குமார் , கொங்கம்பாளையம் சத்தியராஜ், சவுந்திரபாண்டியன், ராஜேஷ், ரங்கம்பாளையம்...

இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும் – கருத்தரங்கம் ஈரோடு 12032016

இன்று (12.03.2016) ஈரோட்டில், ”உலக மகளிர் நாள் சிறப்புக் கருத்தரங்கம் !” நாள் : 12.03.2016,சனிக்கிழமை,மாலை 5.30 மணி. இடம் : யாளி ரெசிடென்சி அரங்கு,பிரப் சாலை,ஈரோடு. மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் ”இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும்” எனும் தலைப்பிலும் புரட்சி விடியல் பெண்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் தமயந்தி அவர்கள் ”மதவெறியும் ஜனநாயக உரிமைகளும்” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

திவிகழக கூட்டங்கள்

திவிகழக கூட்டங்கள்

‘சித்தோடு’ கிளைக் கழகம் நடத்திய ஜாதி எதிர்ப்பு கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு (தெற்கு) மாவட்டம் சித்தோடு கிளைக் கழக சார்பில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்துடன் மற்றும் “கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்” சித்தோடு அருகில் உள்ள ஜே.ஜே நகரில் 21.02.2016 மாலை 6.30 மணி யளவில் சங்கர் தலைமையில், எழிலன் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் முருகேசன் பெரியாரியல் பாடல்கள் பாடினார். காவலாண்டியூர் சித்துசாமி மற்றும் ஈசுவரன் ஆகியோர் கொள்கை விளக்க உரையாற்றினர். தொடர்ந்து காவை இளவரசன், “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து வீரன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார். நிறைவாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூட்ட துவக்க முதல் இறுதி வரை மக்கள் திரளாக இருந்து நிகழ்ச்சியை கேட்டனர். கமலக்கண்ணன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது. ஈரோடு...

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு திவிக சார்பில் மனு

முகநூலில் சாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு ! சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர்,தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ்,லாரியை எற்றிக் கொலை செய்வோம் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.. மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29.02.2016 அன்று ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளார்கள் குமார்,சென்னிமலை செல்வராசு,மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார்,மோகன்ராஜ்,விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தோழர்.தமிழின்பன் ஆகியோர் மனு அளித்தனர் பெரியார் முழக்கம் 10032016 இதழ்

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம்  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம் ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையின் தொடர்ச்சி – முஸ்லீம்கள் வீடுகட்டினால் யார் வேண்டு மானால் வாடகைக்கு வரலாம். ஆனால், பார்ப் பனர்கள் வீட்டில் வேறுயாரும் வசிக்க முடியாது. இந்த நாட்டில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் செய்வது பார்ப்பனீயம். ஆனால், பழியை சுமப்பது முஸ்லீம்கள்.  இந்த சூழ்ச்சி அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த குற்றச்சாட்டு,  முஸ்லீம்கள் தீவிர மதநம்பிக்கை உடையவர்கள் அவர்களது குரானில் நான்கு பெண்டாட்டிகளைத் திருமணம் செய்ய சொல்லியிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது. அதனால் அவர்கள் அந்த மதக் கருத்தை பின்பற்றி நிறைய திருமணம்...

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...

இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு தீர்மானங்கள்

மாநாட்டு தீர்மானங்கள் ! 08.11.2015 அன்று கழகதலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் பாஜக பரிவாரங்களும் மதவாத வெறுப்புக் கருத்துக்களை முன்வைத்து வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்ட முயற்சிகளை முறியடித்து நிதிஷ்குமார் தலைமையிலான சமூக நீதி சக்திகளுக்கு பெறும் வெற்றியை குவித்துள்ள பீகார் மக்களுக்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 2) குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்தை வழங்கும் மாட்டிறைச்சி உணவை கேரள மக்கள் விரும்பி உண்பது போல, தமிழர்களும் தங்கள் உணவுப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி உணவை முன்வைத்து நடக்கும் பொதுநிகழ்வுகளுக்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதிப்பதற்கும்,கெடுபிடி காட்டுவதற்கும் வன்மையான கண்டனத்தை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 3)...

வழிகாட்டுகிறது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அனைவருக்கும் பொதுவான அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மத சம்பந்தமான விழாக்கள் கொண்டாடக்கூடாது ” என்ற நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர்.இரத்தினசாமி ,மாவட்ட செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் மற்றும் தோழர்கள் சார்பில் நேரில் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்தும்படி அரசு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி, ஆயுத பூசை கைவிடப்பட்டது. இதனைப் பாராட்டும்விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ”இந்து பார்ப்பன,பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நாள் : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை. கருத்தரங்கம் : நேரம் : காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை. இடம் : K.K.S.K.மஹால்,பவானி ரோடு,ஈரோடு. பொது மாநாடு : நேரம் : மாலை 6 முதல் 10 மணி வரை. இடம் : திருநகர் காலனி,ஈரோடு. தோழர் கொளத்தூர் மணி,தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் அப்துல்சமது,மனித நேய மக்கள் கட்சி, தோழர் ஆளூர் ஷாநவாஸ்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தோழர் இரா.அதியமான்,நிறுவனர் தலைவர்,ஆதித்தமிழர் பேரவை, தோழர் புனிதப் பாண்டியன்,ஆசிரியர் தலித் முரசு, தோழர் வே.மதிமாறன்,முற்போக்கு எழுத்தாளர், தோழர் சுந்தரவள்ளி,முற்போக்கு எழுத்தாளர். மாநாட்டின் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவின் இசை நிகழ்சியும்,வீதிநாடகமும் நடைபெறும். தொடர்புக்கு : ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம்.9842712444 – 9944408677

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! – ஈரோடு தெற்கு

ஆர்ப்பாட்டம் ! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று மாலை 5 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தின சாமி தலைமை தாங்கினார்,கழக மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி ராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் விநாயக மூர்த்தி,தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் குமரகுரு,தோழர் கோபி குணசேகரன்,மற்றும் ஆதரவு இயக்க தோழர்கள்...

0

கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...

ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய மருத்துவர்களுக்கு கழகம் பாராட்டு! 0

ஈரோட்டில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய மருத்துவர்களுக்கு கழகம் பாராட்டு!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்”, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தொகுத்த “காந்தியை சாய்த்த கோட்சேவின் குண்டுகள்”, தஞ்சை பசு கௌதமன் தொகுத்த “ஏஜிகேவின் நினைவுகளும். நிகழ்வுகளும்”, புதுச்சேரி இராவணன் பதிப்பகம் தொகுத்த “பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன் (போர்களத்தின் வெற்றிகள்)” ஆகிய நூல்களின் அறிமுக விழா ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 12 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ப.இரத்தினசாமி தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பொள்ளாச்சி விஜயராகவன் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர்கள் திருப்பூர் துரைசாமி, கோபி இராம இளங்கோவன், தமிழ் உணர்வாளர், பகீரதன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றி னார்கள். பின்னர், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் குருவரெட்டியூர் நாத்திக ஜோதி, நாமக்கல்...

0

ஈரோடு தெற்கு மாவட்டக் கலந்துரையாடல்

29-7-2015 அன்று ஈரோடு ( தெற்கு ) மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் முன்னிலையிலும் ஈரோடு ரீஜென்சி விடுதியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

0

வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டனக் கருத்தரங்ம்

ஜாதி வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டனக் கருத்தரங்கு 13.07.2015 திங்கட்கிழமை அன்று மாலை 05.30 மணியளவில் ஈரோடு,பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்க தோழர் கண.குறிஞ்சி அவர்கள் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். இக்கண்டன கருத்தரங்கில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் தோழர்.முத்தரசன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி. தோழர்.இரா.அதியமான்,ஆதித்தமிழர் பேரவை. தோழர்.குமரேசன்,தீக்கதிர் நாளிதழ் உள்ளிட்ட தோழமைக் கட்சியின் தலைவர்களும் கலந்து கொண்டு ஜாதி வெறிப்படுகொலைகளைக் கண்டித்து கண்டன உரையாற்றினர்.