Author: admin

தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் 16092017

நாகர் கோவிலில், தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் சார்பில். நாள் : 16.09.2017 சனிக்கிழமை  நேரம் : மாலை 5 மணி. இடம் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம்,நாகர் கோவில். வஞ்சிக்கப்பட்ட தமிழர்கள் எனும் தலைப்பில் உரை முழக்கம் கழக பரப்புரைச்செயலாளர் ”தோழர் பால்.பிரபாகரன்” அவர்கள்.

விருதுநகரில் சுயமரியாதை மாநாடு ! 23092017

விருதுநகரில் சுயமரியாதை மாநாடு ! திராவிடர் விடுதலைக் கழகம் விருதுநகர் மாவட்டம் சார்பில், நாள் :23.09.2017 சனிக்கிழமை . நேரம் : மாலை 4.00 மணி  இடம் : விஸ்வேஸ்வரா அரங்கம்,135 புல்லக்கோட்டை, சாலை உழவர் சந்தை அருகில்,விருதுநகர். தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். சிறப்புரை : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தமிழச்சி தங்கப்பாண்டியன் மாநில துணை அமைப்பாளர் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப்பேரவை. தமிழ்ச் செல்வன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம். வரலாற்றுச்சுவடுகள் திறப்பு விழா ! நாள் :23.09.2017 சனிக்கிழமை . நேரம் : மாலை 3.00 மணி இடம் : பேரறிஞர் அண்ணா சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில்,விருதுநகர்.

தமிழகமும் சாதிய படுகொலைகளும்” மக்கள் பொதுவிசாரணை !

”தமிழகமும் சாதிய படுகொலைகளும்” மக்கள் பொதுவிசாரணை ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில்.. நாள் : 24.09.2017 காலை 9.30 மணி. இடம் : செயின்ட் ஜோசப் கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம் எதிரில்,திருச்சி. கழகத்தலைவர் அவர்கள் விசாரணையின் நடுவராக பங்கேற்கிறார்.பல் வேறு தோழமை அமைப்பின் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்  

‘முரசொலி’ பவளவிழா கண்காட்சியில் கழக இதழ்கள்

‘முரசொலி’ பவளவிழா கண்காட்சியில் கழக இதழ்கள்

‘முரசொலி’ நாளேட்டின் பவள விழா கண்காட்சி, சென்னை கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைக்கப்பட் டுள்ளது. அதில் திராவிடர் இயக்க இதழ்கள் பட்டியலில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்கள் இடம் பெற்றுள்ளன. பெரியார் முழக்கம் 14092017 இதழ்

தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா

தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் சண்முகப் பிரியன் மகன் தமிழ்ப் பிரியன் – ராஜநந்தினி ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழா 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “முகமது தாஜ்“, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மூத்த பெரியார் தொண்டர் அய்யா இனியன் பத்மநாபன்,  இந்தியப் பிரியன் ஆகியோர் வாழ்த்துரை...

‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்

‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்

மருத்துவ சேவையைக் குலைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடும் சர்வதேச அரசியல் ‘நீட்’ தேர்வு முறையில் பின்னணியாக செயல்படுகிறது என்கிறார் கல்வியாளர் அனில் சடகோபால். அவரது பேட்டி: இது ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம் கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர் காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படு கிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்தி வழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப் படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா… சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச்செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில் ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா?...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை புத்தரும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள்

பார்க்காத கடவுளையே பார்ப்பனர்கள் எப்படி கடவுளை அடைய வழி காட்ட முடியும்  என கேட்டார்  புத்தர் புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (சென்ற இதழ் தொடர்ச்சி) புத்தரின் சாக்கிய குலத்துக்கும் மற்றொரு குலமான கோலியர் என்ற குலத்துக்கும் இடையே எல்லையாக ரோகினி என்ற ஆறு இருந்தது. இந்த ஆற்றின் நீரைப் பயன்படுத்தும் முதல் உரிமை யாருக்கு என்பதில் இரண்டு இனக் குழுக்களுக்கிடையே சண்டை. சாக்கியர்கள் ஒன்று கூடி கோலியர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு எடுத்த போது – சித்தார்த்த புத்தர் போர் கூடாது என்று தனது சாக்கிய குலம் எடுத்த முடிவையே எதிர்க்கிறார். சாக்கியர் சங்கம் புத்தரை புறந்தள்ளுகிறது. புத்தரும் கபிலவஸ்துவை விட்டு வெளியேறினார். ஆனால், இந்த மேலோட்டமான நிகழ்வுகளையும் கடந்து நிற்கிறது புத்தரின் துறவு. இனக்...

அசுவிதா – நாகராசு மண விழா !

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அசுவிதா – நாகராசு ஜாதி மறுப்பு இணையர் வாழ்க்கை ஒப்பந்த விழா 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் ஸ்ரீஸ்டி மஹால், (சிக்கண்ணா கல்லூரி பின்புறம்) கல்லூரி சாலையில் நடைபெற்றது. நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி,  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு வாழ்த்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 14092017 இதழ்

‘நிமிர்வு’ இதழ் குறித்து திருப்பூரில் வாசகர் வட்டம் ஆய்வு

திருப்பூர் மாநகர செயலாளர் சி. மாதவன் சகோதரர் சி.நாகராசு – ம. அசுவிதா, வாழ்க்கை துணை ஒப்பந்த விழா முடிந்தவுடன் நண்பகல் 3:00 மணிக்கு நிமிர்வோம் வாசகர் வட்டம் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் சிவகாமி தலைமையில் 2ஆவது கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் 15 தோழர்கள் பங்கு பெற்றார்கள். வாசகர் வட்ட நோக்கத்தினை எடுத்துக் கூறி இனி கழக நிகழ்வுகளில் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தோழர்கள் 1 மணிநேரம் வாசிப்பு வட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. நிகழ்வில் ஆகஸ்ட் மாத நிமிர்வோம் இதழில் வெளிவந்த “வந்தே மாதரம்” பாடல் குறித்த தலையங்கம் படித்துக் காண்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதழின் ஒவ்வொரு கட்டுரையும் அதன் ஆசிரியர் பற்றிய தகவலோடு அனைவரும் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.  16.9.2017 அன்று மாலை பொள்ளாச்சியில் வாசகர் வட்ட சந்திப்பு நடத்துவதென்றும் தோழர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் படிக்கும் நூல்களைப் பற்றி முன்கூட்டியே பதிவிட்டு...

ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல்

ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 10.09.2017 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மாநில வெளியீட்டு செய லாளர் இளங்கோவன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் செப். 17 அய்யா பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகத்தால் சிறப்பாக சத்தியமங்கலத்தில் துவங்கி மாவட்ட முழுவதற்கும் அனைத்து பகுதியில் கழக கொடியினை ஏற்றுவது; கோபி நகர,ஒன்றிய கழகத்தின் சார்பாக 24.09.2017 அன்று கொடியேற்று விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா செலவிற்காக மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் மகன் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் தனது உண்டியல் சேமிப்பு தொகையாக ரூ. 750/-ஐ மாவட்ட செயலாளர் வேணுகோபாலிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 14092017 இதழ்

விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை கண்டித்தும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப் பட்டு கிராமத்தில் 04.09.2017  அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சி.சாமிதுரை  தலைமை வகித்தார். க. மதியழகன்  தொடக்க உரையாற்றினார்.  வேதகாலக் கல்வி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி கல்வி, நீதிக்கட்சி காலக் கல்வி, இராசாசியின் குலக் கல்வி, காமராசர் ஆட்சி கல்வி, மோடியின் இந்தி திணிப்பு – நீட் தேர்வு பற்றி உரையாற்றினார். அழகு முருகன், இராஜேஷ், இளையரசன், தீனா, பெரியார் வெங்கட் ஆகியோர்  நீட் தேர்வினால் ஏழை எளிய பிள்ளைகள் பாதிக் கப்படுவதைப் பேசினார்கள். இறுதியாக க. இராமர்  கண்டன உரையாற்றினார். உரையில் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, தமிழக  கல்வியின் சிறப்பு மருத்துவ சிறப்பு, வெளி மாநிலத்தில் மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் படுகின்ற துன்பங்கள் பற்றி விரிவாகப் பேசினார். கண்டன...

தலையங்கம் காவிரி புஷ்கரமாம்!

வேதகால பார்ப்பனச் சடங்குகள் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு நிறுவனங்களும் துணை போய் மதச்சார்பின்மை கொள்கையை குழித் தோண்டி புதைக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சான்றுகள். காவிரியில் நீர் இல்லை; காவிரி நீரை கருநாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் முறையாக தர மறுப்பதால் விவசாயம் கடும்பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகி யிருக்கிறது.  டெல்லியில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யப் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வளம் சேர்க்கும் நதி; விவசாயத்துக்கு ஆதாரமானது என்பதால் தமிழர்கள் காவிரியைப் போற்றுகிறார்கள். தமிழ் இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. ஆனால் பார்ப்பனர்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. காவிரி வற்றினாலும் விவசாயிகள் மாண்டாலும் ‘காவிரி புஷ்கரம்’ நடத்தவே துடிக்கிறார்கள். அது என்ன ‘காவிரி புஷ்கரம்’? 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறதாம் ‘காவிரி புஷ்கரம்’. குருபகவான் ஒவ்வொரு ஆண்டும்...

மதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’

மதவெறி கோழைகளின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான கவுரி லங்கேஷ் (இராவணன்) வீரமரணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் – வீரவணக்கம் செலுத்துகிறது. அவரது எதிர்நீச்சல் வரலாறு குறித்த ஒரு தொகுப்பு. “கோழையே உன்னிடம் தோட்டாக்கள்; என்னிடம் அழியா வார்த்தைகள்” பத்திரிகையாளரும் சமூகப் போராளியுமான 55 வயது கவுரி லங்கேஷ் – மதவெறியர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் செப்டம்பர் 5 – இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில். காரிலிருந்து இல்லம் திரும்பியபோது காரை நிறுத்துவதற்காக முன் கதவை திறக்க முயற்சித்தபோது மோட்டார் பைக்கில் வந்த 3 பேரில் இருவர் அவரது மார்பு, வயிறு, கழுத்தில் நேருக்கு நேராக சுட்டு வீழ்த்தி பிணமாக்கி விட்டனர். கவுரியின் தந்தை லங்கேஷ் அவர்களும் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், மதவாத சக்தி களுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர். அவர் நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிகா’ என்ற கன்னட இதழை கவுரி தொடர்ந்து நடத்தினார். ‘லங்கேஷ் பத்திரிகா’, ‘டேபிளாhய்டு’...

விநாயகர் ஊர்வலத்தைத் எதிர்த்து பெரியார் கைத்தடி ஆர்ப்பாட்டம்: கைது!

“மதத்தை அரசியலாக்காதே; சுற்றுச் சூழலை சீரழிக்காதே; மக்கள் உரிமைகளை மறுக்கும் பா.ஜ.க.வின் பரிவாரங்கள் நடத்தும் விநாயகன் சிலை ஊர்வலங்களை புறக்கணிப்பீர்” என்ற முழக்கங்களோடு பெரியார் கைத்தடிகளை ஏந்தி சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி ‘அய்ஸ் அவுஸ்’ பகுதியில் ஆக.31, பிற்பகல் 4 மணியளவில் விநாயகன் சிலை ஊர்வலம் நடந்த அதே நாளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு 9 மணி வரை திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் வைக்கப்பட்டனர். 110 தோழர்கள் கைதானார்கள்.  விழுப்புரம் மாவட்ட கழகத் தோழர்கள், புதுவையிலிருந்து பெரியார் சிந்தனை முன்னணியைச் சார்ந்த தீனா உள்ளிட்ட தோழர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் பார்த்திபன், ஜாதி ஒழிப்பு முன்னணி ஜெயநேசன், தமிழக மக்கள் முன்னணி அரங்க. குணசேகரன்  காஞ்சி மாவட்டத்திலிருந்து ரவி பாரதி, கழகப் பொறுப்பாளர்கள் உமாபதி, வேழ...

கைதான தோழர்களிடம் விடுதலை இராசேந்திரன் உரை புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி

குழந்தைகளுக்கு சித்தார்த்தன், புத்தன், கவுதமன், அசோகன், கவுதமி இப்படிப்பட்ட பெயர்களைத் தான் பெரியார் ஏராளமாக சூட்டியிருக்கிறார். புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார். ஆக. 31 மாலை 4 மணியளவில் விநாயகன் சிலை ஊர்வலங்களை நிறுத்தக் கோரி பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி சமூக நலக் கூடத்தில் கழகத்தினர் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது தோழர் களிடையே பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். அவரது உரை: விநாயகன் சதுர்த்தி பக்தர்கள் கொண்டாடும் மதப் பண்டிகை. அது நடந்து முடிந்து விட்டது. அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்து மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர் என்று பரப்புரை செய்கிறோம். கொண்டாடுவோரை எதிர்த்துப் போராடுவது இல்லை. இன்று நடப்பது மதத்தை அரசியலாக்கும் ஊர்வலம். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் அரசியல் ஊர்வலம், மதச் சார்பின்மைக்கு எதிராக நாட்டை இந்துக்களின் நாடு...

எது மெரிட்?

எது மெரிட்?

வீட்டில் தனி அறை இல்லை! குளிர்சாதன வசதி, மின் விசிறி இல்லை! கைபேசி இல்லை! பத்து நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு மகளுடன் கூடவே இருந்து சொல்லித் தரும் தகுதியும் வசதியும் பெற்ற அம்மா அப்பா இல்லை! கண்விழித்துப் படிக்கும்போது பக்கத்தில் பிளாஸ்க் காபி இல்லை! ‘அந்தக் காலத்துல நாங்க கவர்ன்மெண்டு சர்வீஸ்ல இருக்கும் போது யூ நோ’ என்று சொல்லும் தாத்தா இல்லை! அமெரிக்காவில் ஐடியில் டாலர் சம்பளம் வாங்கி ஆண்டுக்கொரு முறை வீட்டுக்கு வரும் ரே-பான் கண்ணாடி மாமா இல்லை! ஒரு மணி நேரத்துக்கு 500, 1,000 வாங்கும் டியூஷன் டீச்சர் இல்லை! வார இறுதி சினிமா, ஹோட்டல் இல்லை! விடுமுறைக்குச் செல்ல ஊர் இல்லை! இருந்தாலும் 1176! இதுதாண்டா மெரிட்டு! – விஜயசங்கர் ராமச்சந்திரன், முகநூலிலிருந்து பெரியார் முழக்கம் 07092017 இதழ்

இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி வழி பொறியியல் படிப்பு ரத்து!

இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி வழி பொறியியல் படிப்பு ரத்து!

வடமாநிலங்கள் முழுவதுமே இந்தி பேசினால் பிழைத்துக்கொள்ளலாம் என நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் நிலையில்,  இந்தி மாநிலம் எனப்படும் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரில், இந்தியின் மூலம் பொறியியல் பட்டம் படிக்க ஒருவருமே முன்வரவில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ‘அடல்பிகாரி வாஜ்பாயி இந்தி பல்கலைக்கழகம்’ செயல்படுகிறது. இங்கு கடந்த ஆண்டு முதல் இந்தி மூலம் பொறியியல் பட்டப்படிப்புகள் கற்பித்தல் தொடங்கப்பட்டது. மூன்று பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 180 பட்டப்படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் இங்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமே நான்கு பேர் மட்டும்தான். முதல் ஆண்டில்தான் அப்படி என்றால், இந்த ஆண்டில் அதுவும் இல்லை! பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்த 11 பேர் மட்டும், நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். ஆனால் பி.இ. முதலாம் ஆண்டில் ஒருவர்கூட சேரவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது, பல்கலைக்கழக நிர்வாகம். பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் தற்போதைக்கு நான்கு தற்காலிகப் பேராசிரியர்கள்...

மாநிலத்திற்கென தனிக் கொடி: தமிழகமே முன்னோடி

மாநிலத்திற்கென தனிக் கொடி: தமிழகமே முன்னோடி

தங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கர்நாடகத்திலிருந்து குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு அமைப்பு களிடமிருந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுதொடர்பாக ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. இதுபோன்ற முயற்சி களுக்கும் தமிழகம் முன்னோடி என்று சொல்லவேண்டும். அரசியலமைப்பு அவையில் அன்றைக்கு உறுப்பினராக இருந்த ஜெயபால் சிங் முண்டா தேசியக் கொடியோடு பழங்குடிகளுக்குத் தனியாகக் கொடி வழங்க வேண்டும் என்று கோரினார். அவர் முன்வைத்த கோரிக்கை விவாத அளவிலேயே முடிவடைந்துவிட்டது. 1947 ஜூன் 22இல் பிரதமர் நேரு இந்திய தேசியக் கொடியை அரசியலமைப்பு அவையில் முதன்முதலாக அர்ப்பணித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தபோது காஷ்மீருக்கு அரசியல் சாசனப் பிரிவு 370இன் படி சிறப்பு அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப் பட்டன. அத்தோடு, விவசாயிகளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் கலப்பை படத்தோடு கூடிய தனிக் கொடியும் காஷ்மீருக்கு அனுமதிக்கப்பட்டது. திராவிட நாடு கேட்டுப் போராடிய திமுக, பிற்காலத்தில்...

தலையங்கம் ‘அனிதாவின் 1176’

தமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176. ‘நீட்’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ஒரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது. மருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’....

அனிதாவுக்கு கழகத்தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை

குழுமூரில் அனிதாவின் உடலுக்கு கழக சார்பில் கழகத்  தலைவர் கொளத்தூர்  மணி, செப்டம்பர் 2ஆம் தேதி காலை மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பெரியார் முழக்கம் 07092017 இதழ்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை

அனிதாவின் மரணம் தமிழகத்தை கொதிப்படையச்செய்துள்ளது. 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றும் ‘நீட்’ தடையால் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாத நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி சமூக நீதிக்காக உயிர்ப்பலி தந்தார். மத்திய மாநில அரசுகளின் படுகொலையாகியிருக்கிறது அவரது மரணம். தமிழகம் முழுதும் போராட்டக் களமாகி வருகிறது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து உயிர்பலி தந்தருவமான அனிதா அவர்களுக்கு நீதிக் கேட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 2.09.2017 மாலை 3 மணி யளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய ஆட்சிகளுக்கு எதிராக வும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக...

ஜாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் சென்னை 11092017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதி சார்பாக… ஜாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரனின் நினைவு நாள்….பெரியாரின் பிறந்தநாள் தெருமுனைக்கூட்டம் தோழர்.ஜா.உமாபதி அவர்கள் தலைமையில் நேற்று (11.09.2017) மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில், கூட்டத்தின் தொடக்கமாக தோழர்.நாத்திகன் மற்றும் தோழர்.கீர்த்தி அவர்களும் ஜாதி ஒழிப்பு பாடல்களையும், பகுத்தறிவு பாடல்களையும் பாடினார். தெருமுனைக் கூட்டத்தில் இமானுவேல் சேகரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், அவரது படுகொலை குறித்தும் பல்வேறு நிகழ்வுகளை குறித்தும் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), தோழர்.ந.அய்யனார்(தலைமைக் குழு உறுப்பினர்), தோழர்.வழக்கறிஞர் துரை அருண்(சென்னை உயர்நீதிமன்றம்) மற்றும் தோழர்.அன்பு தனசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக, சிறப்புரையாற்றிய தோழர்களுக்கும், வந்திருந்த தோழர்களுக்கும், காவல் துறைக்கும், தெருமுனைக் கூட்டத்திற்கு உறுதுணையாக இருந்த தோழமை தோழர்களுக்கும் தோழர்.சுகுமாறன் (சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவுச் செய்தார்.

அனிதா நினைவேந்தல் மற்றும் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் 05092017

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்கை அனிதா நினைவேந்தல், நீட் தேர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில், வடசேரி, அண்ணாச் சிலை அருகில் 05092017, செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு கொட்டும் மழையில் மாவட்டத் தலைவர் தோழர். வழக்குரைஞர்.சதா தலைமையில் நடைப் பெற்றது. தோழர் நீதி அரசர் மா தலைவர், (பெ.தொ.க)முன்னிலை வகித்தார், மாவட்டச் செயலாளர் தோழர்தமிழ் மதி கண்டன முழக்கங்கள் எழுப்பினார்.தோழர்கள் விஸ்ணு, சூசையப்பா ,மஞ்சுகுமார் ,சஜீவ், போஸ், றசல் இராஜ் ,சுகுமார்,குமரேசன்,மணிகண்டன்ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மாணவி அனிதாவிற்கு நீதி வேண்டி பேராவூரணி வேதாந்தம் திடலில் உண்ணாவிரதம் 10092016

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் 15 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – மருத்துவர் ஜெயராமன் தகவல். “நீட் தேர்வுக்குப்பின் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரிகளில் 85 விழுக்காடு மாணவர்களுக்கான சேர்க்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிறைவு செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 150 மாணவர்களுக்கான இடங்களில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். எல்லா மாநிலங்களிலிலும் நீட்டை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இங்கு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்ரா மாநிலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி நீட் தேர்வை புறந்தள்ளிவிட்டது. தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் 24 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தமிழக ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து படிக்க...

நிமிர்வோம் வாசகர் வட்டம் – சந்திப்பு 10092017 திருப்பூர்

திருப்பூர் மாநகர செயலாளர் சி. மாதவன் அவர்கள் சகோதரர் சி.நாகராசு – ம. அசுவிதா, வாழ்க்கை துணை ஒப்பந்த விழா முடிந்தவுடன் இன்று நண்பகல் 3:00 மணிக்கு மனிதம் வாசகர் வட்டம் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்களின் தலைமையில் 2வது கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் 15 தோழர்கள் பங்குபெற்றார்கள். வாசகர் வட்ட நோக்கத்தினை எடுத்துக் கூறி இனி கழக நிகழ்வுகளில் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தோழர்கள் 1 மணிநேரம் வாசிப்பு வட்டத்தை கூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. நிகழ்வில் ஆகஸ்ட் மாத நிமிர்வோம் இதழில் வெளிவந்த “வந்தே மாதரம்” பாடல் குறித்த தலையங்கம் படித்துக் காண்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதழின் ஒவ்வொரு கட்டுரையும் அதன் ஆசிரியர் பற்றிய தகவலோடு அனைவரும் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் இறுதியாக அடுத்த வாரம் 16/9 அன்று மாலை பொள்ளாச்சியில் வாசகர் வட்ட சந்திப்பு நடத்துவதென்றும் தோழர்கள் ஒவ்வொருவரும்...

திருப்பூரில் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா ! 10092017

திருப்பூரில் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா ! 10092017

திருப்பூரில் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இணையர் : அசுவிதா – நாகராசு. நாள் : 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. இடம்: ஸ்ரீஸ்டி மஹால், (சிக்கண்ணா கல்லூரி பின்புறம்) கல்லூரி சாலை, திருப்பூர்.  

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ! கோவை 17092017

கோவையில் பொதுக்கூட்டம் ! நாள் : 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை, நேரம் : மாலை 5 மணி. இடம் :தோழர் ஃபாரூக் நினைவு மேடை, மசக்காளிபாளையம்,கோயம்புத்தூர். இழந்துவரும் உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தனமை காப்போம் பரப்புரை பயண நிறைவு விழா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர்,தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு (தலைவர் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

தந்தை பெரியார் 139 வது பிறந்த நாள் விழா மற்றும் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ! பொள்ளாச்சி 16092017

பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம் ! நாள் : 16.09.2017 சனிக்கிழமை, நேரம் : மாலை 6 மணி. இடம் : திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி. இழந்துவரும் உரிமைகளை மீட்போம், தமிழகத்தின் தனித்தனமை காப்போம் ! எனும் முழக்கத்தோடு, தந்தை பெரியார் 139 வது பிறந்த நாள் விழா மற்றும் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது !

மதுரையில் நீட்டுக்கு எதிராக போராடிய தோழர்கள் கைது ! 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக அரசு ! நள்ளிரவில் சிறையில் அடைப்பு ! தமிழக காவல்துறையின் அராஜகம் ! நேற்று 07.09.2017 அன்று காலை மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்விற்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகள் கலந்து கொண்டன.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் கூட்டியக்கத் தோழர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது.இத்தாக்குதலில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச்செயலாளர் தோழர் மணியமுதன் மா.பா. அவர்களுக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் மாணவர்கள்,இயக்கத்தோழர்கள் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் 75 பேரை தமிழக காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது...

ஜாதி ஒழிப்பு போராளி தோழர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ஜாதி ஒழிப்பு போராளி தோழர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் மயிலை பகுதி சார்பாக… நாள் : 11.09.2017 திங்கட்கிழமை, மாலை 5 மணியளவில், இடம் : குயில் தோட்டம், (முன்புற பகுதி), சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை- 04. சிறப்புரை : தோழர்.கு.அன்பு தனசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக தோழர்.அம்பேத் ராமசாமி தோழர்.வழக்கறிஞர்.துரை அருண் சென்னை உயர்நீதிமன்றம், திவிக தோழர்.இரா.உமாபதி தென்சென்னை மாவட்டச் செயலாளர், திவிக தோழர்.ந.அய்யனார் தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக வாருங்கள்_தோழர்களே.! பார்ப்பனிய கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பார்ப்பனியத்தை நடைமுறையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கெதிராக போராடி தன் இன்னுயிரை நீத்த பார்ப்பனீய எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரை நினைவு கூறுவோம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 10.09.2017 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மாநில வெளியீட்டு செயலாளர் இளங்கோவன் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற 17 அய்யா பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகத்தால் சிறப்பாக சத்தியமங்கலத்தில் துவங்கி மாவட்ட முழுவதற்கும் அனைத்து பகுதியில் கழக கொடியினை ஏற்றுவது எனவும், கோபி நகர,ஒன்றிய கழகத்தின் சார் பாக 24.09.2017 அன்று கொடியேற்று விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா செலவிற்காக மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்களது மகன் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் அவர்கள் தனது உண்டியல் சேமிப்பு தொகையாக ரூபாய் 750/_ ஐ மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்களிடத்தில் வழங்கினார். கலந்துரையாடலில் மாவட்ட கழகத்தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 02092017

இன்று கோவையில் காந்திபார்க்கில் நீட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பு சார்பில் 02092017 காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் “தோழர் பூர்ணிமா நந்தினி” தலைமையில் சிறப்பாக நடந்தது.. நிமிர்வு குழுவின் பறை முழக்கத்தோடு ஆரம்பமானது. நீட் தேர்வு விலக்கு பெறும்வரை “தினமும் நடக்கும்” இடம் அந்தந்த அமைப்பு தோழரிடம் அறிவிக்கப்படும் . “அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நடக்கும்” என்ற முடிவோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது. பொதுவாக வேடிக்கை பார்த்தவர்கள் கூட நிகழ்வு முடிவடையும் நேரத்தில் பங்கேற்பாளர்களாக இருந்தார்கள்.. தேன்மொழி தோழர் (bjp+பார்ப்பனர்களின்) நோக்கங்களை அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி விளக்கி சிறப்பாக பேசினார். கண்மனி,வினோத்,இளந்தமிழகம்,CFI தோழர்களும் உணர்வுப் பூர்வமாக பேசினர்..நிமிர்வு சக்தி ,மாதவன் சங்கர் முழக்கங்கள் சிறப்பு. செய்தி நிர்மல்குமார்

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் 02092017

சேலத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிட கோரியும், NEET தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 02092017 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேல் தலைமை தாங்கினார், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் தோழர் ஏற்காடு பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் இரணியாவின் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சூரி, மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராசு, தோழர் முல்லை வேந்தன், சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு, தலைமை செயர்குழு உறுப்பினர் தோழர் R.S.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் மாநகர செயலாளர் தோழர் பிரபு நன்றியுரை ஆற்றினார். இவ்ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, நங்கவள்ளி, ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ் பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள்...

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி பாஜக அலுவலகம் முற்றுகை, மோடி உருவ மொம்மை எரிப்பு சென்னை 02092017

சென்னையில், மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நீட்டுக்கு எதிராக சமூக நீதி கோரி வழக்கு தொடுத்தவரும் மத்திய காவி பா.ஜ.க. மோடி அரசால் மருத்துவ படிப்பு கனவு சிதைக்கப்பட்டு தோழர் அனிதாவின் . படுகொலைக்கு காரணமான மோடி அரசை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்ய வலியுருத்தியும் 02.09.2017 அன்று மாலை 3 மணியளவில் பா.ஜ.க தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராகவும், தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக செயலை கண்டித்து போர் முழக்கமிட்டனர்… தமிழக கல்வி உரிமைகளை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலுக்கு...

ஈரோடு பெரியார் சிலை முன் கழக தோழர்கள் நீட் தேர்விற்கு எதிரான உறுதிமொழி 03092017

திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட தோழர்கள் 03092017 மாலை ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையத்தில் கல்வி உரிமை போராளி டாக்டர் அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் பன்னீர் செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து 60க்கும் மேற்பட்ட தோழர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பெரியாரிய வழியில் போராட்டம் நடைபெறும், ஓயமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர். நீட் தேர்வுக்கு எதிரான உறுதிமொழியை தோழர் கனல்மதி படிக்க அனைத்து தோழர்களும் உடன் சேர்ந்து உறுதியேற்றனர். தேர்வு உள்ளிட்ட தகுதி, திறமை என்று சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறிக்கும் எல்லாவித நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிப்போம், தமிழக மக்களின் கல்வி நலம் காப்போம் மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள்...

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு 03092017

ஈரோட்டில், “கல்வி உரிமைப்போராளி ” அரியலூர் அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு , 03.09.2017 அன்று மாலை 3 மணிக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய மாநிலை அரசுகளைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார்.. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் வேணுகோபால், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், ஆசிரியர் சிவகாமி, சங்கீதா, இணையதளப் பொறுப்பாளர் தோழர் விஜய்குமார், அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார்

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் 02092017

திருப்பூரில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் 02.09.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொருளாளர் தோழர் துரைசாமி தலைமை தாங்கினார்.  த.வா.க. மத்திய மாவட்ட செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார் மாவட்டத் தலைவர் தோழர் முகில் ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார்,மாநில அறிவியல் மன்றத்தலைவர் சிவகாமி, மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள், தனகோபால், சங்கீதா,மாதவன்அருண் த.நா. மக்கள் கட்சி,கெளதம், மாதவன், ராஜசிங்கம்,ரவி,கனல் மதி,தேன்மொழி த.நா.மாணவர் கழகம்,பார்வதி, முத்து, கருணாநிதி,சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழர்.தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா ஈரோடு 03092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் மகன் தோழர் தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழா , 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “EKM முகமது தாஜ்”, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் தோழர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன், திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல்...

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை.

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று 02.09. 2017 மத்திய பா.ஜ.க.வின் நீட் தேர்வினால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அரியலூர் அனிதாவின் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். அவ்வமயம் கழகத் தோழர்கள்,நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அரியலூர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அரசை கண்டித்து திவிக சார்பில் மாநிலம் முழுதும் முற்றுகைப் போராட்டம் 02092017

நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை   நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

511 அரியலூர் அனிதா தற்கொலை –  நீட் தேர்வின் உயிர்ப்பலி 01092017

511 அரியலூர் அனிதா தற்கொலை –  நீட் தேர்வின் உயிர்ப்பலி 01092017

  அரியலூர் அனிதா தன் வாழ்வை முடித்து கொண்டுவிட்டார். “+2 தேர்வில் 1176 மதிப்பெண்களை பெற்று மருத்துவ கனவுடன் வாழ்ந்த ஒரு மாணவி. நீட் தேர்வு அவரை பழிவாங்கி விட்டது. கிராமத்தில் இருந்து வந்த ஒரு தலித் பெண். தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருப்பவர். கழிப்பறை இல்லாத வீடு. உச்சநீதிமன்றம் வரை சென்று சமூகநீதிக்காக அவர் போராடி பார்த்தார்”. “ஓராண்டுக்கு நாங்கள் விதிவிலக்கு தருகிறோம் என்று கூறிவிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு தர முடியாது என்று பாஜ.க எடுத்த கல்வி துரோக கொள்கை அனிதாவை பழிவாங்கி விட்டது. மாநில அரசும் தன்னுடைய அர்ப்ப அரசியல் நலனுக்காக கொத்தடிமை ஆட்சியாக மாறிப் போய் ஜெயலலிதா நீட் தேர்வில் எடுத்த உறுதியான முடிவை எடுக்காமல் தமிழக மக்களுக்கு மகத்தான துரோகத்தை எடுத்துவிட்டது”. மருத்துவ கல்லூரியின் கதவுகள் தனக்காக திறந்திருக்கும் என்று நம்பிக்கையில் வாழ்ந்த அனிதாவுக்கு இப்போது மருத்துவமனையின் கதவுகள் அந்த பெண்ணின் உடல்...

தோழர் செங்கொடி 6ம் ஆண்டு நினைவேந்தல் காஞ்சிபுரம் 28082017

தோழர் செங்கொடி 6ம் ஆண்டு நினைவேந்தல் காஞ்சிபுரம் 28082017

தோழர்.செங்கொடியின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கழகதலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்தார். புகைப்படங்களுக்கு  

சென்னை பரப்புரைக் குழுவின் பயண எழுச்சி

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி – சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு. 7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார். மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில்...

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

சீரிய பெரியாரியலாளரும் எழுத்தாளருமான பாமரன் – யாழ்மொழி ஆகியோரின் மகன் சேகுவேரா-கனிமொழி ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா, ‘பீடை மாதம்’ என்று மூடநம்பிக்கையாளர்களால் கருதப்படும் ஆடி 28ஆம் தேதி (ஆகஸ்ட் 13) மாலை கோவை பி.எம்.என். திருமண மண்டபத்தில் ‘நண்பர்கள் கூடும் திருவிழா’வாக சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசை யுடன் நிகழ்வுகள் தொடங்கின. கலைஞர்களுக்கு கவிஞர் அறிவுமதி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினர். ஈழப் போராளி பாலகுமார் துணைவியார், பாமரனின் வயது முதிர்ந்த தாயார் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணமக்களுக்கு சுயமரியாதை திருமணத்துக்குரிய உறுதி மொழிகளைக் கூற, மணமக்கள் உறுதியேற்று மாலை மாற்றிக் கொண்டனர். பெரியாரியலாளரும் ஆய்வாளருமான தொ. பரமசிவம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கலை, இலக்கிய, திரை உலக நண்பர்கள்,...

காவல்துறைக்கு என்ன தண்டனை?

மதுரை மாநகர காவல்துறை மகேஷ்குமார் அகர்வால், ‘‘சாதி மறுப்புத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரைப் பெறுவதற்கு ஆணையர் அலுவலக வளாகத்தில் குற்றத்தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படி வரும் புகாரை விசாரிக்க தனி ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கவும் தகவல்களைப் பெறவும் 0452 2346302 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,’’ என்று அறிவித்திருக்கிறார்.  இந்தத் தனிப்பிரிவு குறித்து ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடி வரும் கவுசல்யாவிடம் கேட்டபோது: “இந்தப் புதுபிரிவினால் ஆணவக் கொலை குறைந்துவிடுமா என்ன? நாங்கள் கேட்பது பாதுகாப்பு. அவர்களால் அந்தப் பாதுகாப்பை கொடுத்துவிட முடியுமா? பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடையும் பெண்ணிடம் பெற்றோருடன் சென்றுவிடும்படி கவுன்சலிங் செய்யப்படுகிறது அல்லது அவளிடம் கறக்க வேண்டிய விஷயங்களைக் கறந்து நல்லவர்களாக நடிக்கும் போலீசார், அந்தப் பெண்ணின் பெற்றோர் வந்ததும் அவர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறார்கள். சாதிமறுப்புத் திருமணம் செய்றவங்களைக் காட்டிக்கொடுக்கிற போலீஸுக்கு என்ன தண்டனை? என்னைப் பொறுத்தவரை, இந்தத்...

பூணூல் ரோபோக்கள்

பூணூல் ரோபோக்கள்

ஜப்பானில் டோக்கியோ நகரில் ‘இடுகாடு – இடுகாட்டில் நடக்கும் இறுதிச் சடங்குகள்’ குறித்து சர்வதேச கண்காட்சி நடந்திருக்கிறது. அப்படி ஒரு கண் காட்சி ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடக்கிறது. இந்த முறை நடந்தது டோக்கியோ நகரில். கண்காட்சியில் பங்கேற்கும் பார்வையாளர் களுக்கு இறுதிச் சடங்கு குறித்த தொழில்முறை பயிற்சிகள் தரப்படுகிறது. இதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது புத்தமதச் சடங்கு முறையில் ஜப்பானில் நடக்கும் இறந்தவர்களுக்கான சடங்குகளை ஒரு ‘ரோபோ’ எந்திரம் செய்து காட்டியதுதான். ஜப்பானில் இளைஞர்களைவிட முதியோர் எண்ணிக்கை அதிகம். எனவே இறுதிச் சடங்குகள் நடத்த “அதில் பயிற்சிப் பெற்றவர்கள் எளிதில் கிடைப்பதில்லை என்பதால் அந்நாட்டின் ‘சாப்ட் பேங்க்’ எனும் நிறுவனம், ‘பெப்பர் ரோபோட்’ என்ற இந்த மனித எந்திரத்தை உருவாக்கியிருக்கிறதாம். நமது நாட்டில் கோயிலில் ‘அர்ச்சனை’, ‘கும்பாபிஷேகம்’, வீட்டில் ‘விவாக சுபமுகூர்த்தம்’, ‘கிரகப் பிரவேசங்களை’ நடத்த பிறப்பால் ‘பிராமணன்’ என்ற பிறப்புச் சான்றிதழ் கொண்ட ‘பூணூல் ரோபோக்கள்’ மட்டுமே செய்ய...