தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்
“தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதிசெய்யும் பல ஆய்வுகள் உலக மெங்கும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான இரண்டு ஆய்வுகள் அமெரிக்கா வில் நடைபெற்றவை. அமெரிக்க அரசு, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தக் கல்விமுறையில் பயிற்றுவிப்பது என்பதை முடிவு செய்ய 1991இல் ‘ரமிரெஸ் எட் அல்’ (சுயஅசைநண நவ யட 1991) என்ற ஆய்வை நடத்தியது. பெரும் பொருள்செலவில் எட்டு ஆண்டு காலம் நடந்த இந்த ஆய்வின் பிரதான நோக்கம், ‘அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் இன மாணவர்களுக்கு எந்தக் கல்விமுறையில் பாடம் நடத்துவது? ஆங்கில வழியிலா… தாய்மொழியான ஸ்பானிஷ் வழியிலா?’ என்ற கேள்விக்கு விடை கண்டறிவதே. 2,342 மாணவர்கள் இந்த ஆய்வில்...