“யாகம் வளர்த்தால் மழைபெய்யுமா?”
சார்லஸ் டார்வின் தன்னுடைய முதுமையில் ஒரு நாயை வளர்த்தார். அது எப்போதுமே டார்வினுடனேயே இருக்குமாம். டார்வின் படித்துக் கொண்டிருக்கும்போது அவர் அறையின் கர்ட்டன் (திரை) காற்றில் அசைந்ததாம். நாய் குடுகுடுவென்று ஓடிப்போய், யாரது, கர்ட்டனை அசைக்கிறது?!” என்று ஆராய போயிற்றாம்.
டார்வின் நினைத்தார், “நாய்களுக்குத் தெரியாது, கர்ட்டன் காற்றில் இயல்பாகவே அசையும்” என்று. அதன் அறிவிற்கு எட்டியதெல்லாம் “ஏதாவது நிகழ்ந்தால், நிகழ்த்துபவர் யாரோ ஒருவர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார்” என்பது மட்டுமே. யாருமே இல்லாமல், இயற்கையின் சக்திகளால் மட்டுமே பலதும் நடக்கும் என்று புரிந்து கொள்ளும் நுணுக்கமான அறிவு நாய்களுக்கு வாய்க்கவில்லை.
சிலர் டார்வின் மாதிரி யோசிப்பார்கள், வேறு சிலரோ…
மருத்துவர் சாலினி டுவிட்டரில் பதிவு
பெரியார் முழக்கம் 23052019 இதழ்