கழகத்தின் நடவடிக்கையால் குன்னத்தூர் காவல்துறை விநாயகர் கோயில் அகற்றம்

குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் சட்டவிரோதமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராய் தனியொரு மத வழிபாட்டுத் தலம் கட்டி வணங்கி வந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழக குன்னத்தூர் நகர பொறுப்பாளர் தோழர் சின்னசாமி அவர்கள் 20.06.2019 அன்று புகார் மனு நேற்று அளிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து விநாயகர் கோயிலில் இருந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

உயர்நீதிமன்ற அறிவுரைப்படி அரசு அலுவலகங்களில் மதவழிபாட்டு தலங்களை உடனடியாக நீக்கிய குன்னத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும், காவல் துறை கண்காணிப்பாளருக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதோடு மேலும் கோயில் கட்ட எழுப்பிய சுவற்றையும் அப்புறப்படுத்தி இனி அந்த இடம் காவல்நிலைய பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் மாறுதல் செய்யவும் சட்டவிரோத வேறு கோயில்கள் அங்கே அமைவதை தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிக்கொள்கிறோம்

குன்னத்தூர் நகர திவிக

You may also like...