‘பிராமணர்’ மரபணு மற்றவர்களைவிட உயர்ந்ததாம் : குஜராத் சட்டப் பேரவைத் தலைவரின் திமிர் பேச்சு
குஜராத் சட்டப் பேரவைத் தலைவரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான இராஜேந்திர திரிவேதி எனும் பார்ப்பனர், ‘பிராமணர்களின் மரபணு, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது” என்று பேசியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கும் உரிமை ‘பிராமணருக்கு’ மட்டுமே உண்டு என்றும், அது பிராமணர்களின் பிறப்புரிமை என்றும் பேசியிருக்கிறார். குஜராத் காந்தி நகரில் ‘பிராமண வணிக சம்மேளனம்’ நடத்திய மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற ஒன்பது பேரில் 8 பேர் ‘பிராமணர்கள்’ என்றும் பெருமையுடன் பேசினார். தலித் மக்களின் அடையாளமாகவும், அரசியல் சட்ட வரைவுக் குழு தலைவராகவும் இருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு அத்தகைய வாய்ப்புகளை வழங்கியதே ஒரு ‘பிராமணர்’ தான். அவர்தான் அம்பேத்கருக்குப் பின்புலமாக நின்று, அவரை உயர்த்திவிட்டவர் என்றும், ‘பிராமணர்கள்’ எப்போதுமே அடுத்தவர்களை வளர்த்து விடுபவர்கள் என்றும் திரிவேதி கூறினார். பி.என். ராவ் தான் சட்டங்களை எழுதியவர் என்றும் இந்தப் பெருமை அவருக்கே உரியது என்றும் அம்பேத்கரே ஒப்புக் கொண்டதாக...