இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை
[இஸ்லாம் குறித்து பெரியார் நபிகள் விழாவிலே பேசிய கருத் துகளின் தொகுப்பு; இஸ்லாமிய மதத்தின் மீதான தனது விமர் சனங்களை இஸ்லாமியர்களிடையே பெரியார் பேசியதை இத் தொகுப்பிலிருந்து அறியலாம்] மதம் வாழ்க்கைக்கு தேவையா? மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த காலத்தில்-கல்வி அறிவு உலக அனுபவம் ஞானம் இல்லாதிருந்த காலத்தில்மக்களை நல்வழிப்படுத்து வதற்கு என்று ஒரு சமயம் மதம் என்பதாக கற்பனை செய்து மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி அவர்களது ஞானமற்ற சுதந்திரத்தை அடக்க ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். ஆனாலும் இன்று உலகம் பொருள் தத்துவ ஞானமும் விஞ்ஞான ஞானமும் ஏற்பட வசதி ஏற்பட்டு பெருகிவரும் நாளில் காட்டு மிராண்டித்தன காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமும், மத உணர்ச்சியும் எதற்கு என்றுதான் கேட்கின்றோம். இந்தப்படி நாம் சொல்லும் போது இதற்கு வேறுவழியில் சமாதானம் சொல்லமுடியாத மக்கள் சிலரால் இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவையாவன, ஒன்று “மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த இடத்தில்...