இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை

[இஸ்லாம் குறித்து பெரியார் நபிகள் விழாவிலே பேசிய கருத் துகளின் தொகுப்பு; இஸ்லாமிய மதத்தின் மீதான தனது விமர் சனங்களை இஸ்லாமியர்களிடையே பெரியார் பேசியதை இத் தொகுப்பிலிருந்து அறியலாம்]

மதம் வாழ்க்கைக்கு தேவையா?

மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த காலத்தில்-கல்வி அறிவு உலக அனுபவம் ஞானம் இல்லாதிருந்த காலத்தில்மக்களை நல்வழிப்படுத்து வதற்கு என்று ஒரு சமயம் மதம் என்பதாக கற்பனை செய்து மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி அவர்களது ஞானமற்ற சுதந்திரத்தை அடக்க ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். ஆனாலும் இன்று உலகம் பொருள் தத்துவ ஞானமும் விஞ்ஞான ஞானமும் ஏற்பட வசதி ஏற்பட்டு பெருகிவரும் நாளில் காட்டு மிராண்டித்தன காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமும், மத உணர்ச்சியும் எதற்கு என்றுதான் கேட்கின்றோம்.

இந்தப்படி நாம் சொல்லும் போது இதற்கு வேறுவழியில் சமாதானம் சொல்லமுடியாத மக்கள் சிலரால் இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவையாவன, ஒன்று “மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த இடத்தில் (அதாவது மதநம்பிக்கையுள்ள இடத்தில்) வேறு எதை ஏற்படுத்தப் போகின்றீர்கள்?” இரண்டு “நீங்கள் ஏன் வெறும் அழிவு வேலைகளையே செய்து வருகின்றீர்கள்?” என்பவைகளேயாகும். இந்தக் கேள்விகள் மதவெறியால் மயக்கமெய்திய அடிமைத்தன்மை யின் பிரதிபிம்பமேயழிய மற்றபடி இக்கேள்விகளில் எவ்வித ஜீவத் தன்மையும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் மதமோ அல்லது வேறுஎதுவோஒன்றுஅதாவதுமனிதனைஅடிமைகொண்டு, அவனது சுயஅறிவைக் கெடுக்கக்கூடியதான சாதனம் மனித வாழ்க்கைக்கு அவசியமானது என்று கருதுவதினாலேயே இம்மாதிரிகேட்கச்செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எதுவும் மனிதத் தன்மைக்கும், வாழ்க்கை முற்போக் மனிதனுக்கு இந்த வியாதி ஒழிந்து போனால் அந்த இடத்தில் வேறு எதை வைக்கின்றது என்று யாராவது கேட்டால் அவரை அறிவுள்ள மனிதன் என்று யாராவது சொல்லக்கூடுமா? ஒருசிலந்தி கட்டியை அறுக்கும்வைத்தியனிடம் போய் இந்தச் சிலந்திக்கு பதில் வேறு என்ன கட்டியை உண்டாக்கப் போகிறாய்? என்று கேட்டால் வைத்தியன் என்ன சொல்லுவான்? மதத்தின் பயனாய் மனித சமூகத்தின் அறிவு தடைப்படுகின்றது, மானம் தடைப்படுகின்றது, ஒற்றுமை தடைப்படுகின்றது, மனிதனுக்குள் தோன்றும்சுதந்திரவுணர்ச்சிதடைப்படுகின்றது, செல்வம் பாழாகின்றது, அடிமைத்தனமும் வளர்கின்றது, சாந்தி என்பதே இல்லாமல் பகையும் குரோதமும், போரும் வளர்ந்து வருகின்றது என்றால் “அதற்குப்பதில் என்ன செய்யப்போகின்றாய்? ” என்று எதற்காகக் கேட்பது என்பதை யோசித்தால் அந்தக் கேள்வி ஒரு முட்டாள்தனமான கேள்வி என்பதைவிட அதற்கு வேறு பதில் சொல்லவேண்டிய அவசிய மில்லையென்றே கருதுகின்றோம்.

நோய் ஒழிந்தால் எப்படித் திரேக சௌக்கியம் தானாகவே ஏற்பட்டு விடுமோ அது போல் மதம் ஒழிந்தால் மனித சமூகம் தானாகவே சுதந்திரத் தையும், அறிவையும், ஒற்றுமையையும் பெற்று மேன்மையடையும் என்கின்றோம். ஆகவே, இந்த வேலை ஆக்க வேலையா? அழிவு வேலையா? என்பதை யோசித்தால் இதனுள் பொதிந்து கிடக்கும் ஆக்கத்தன்மையும் தானாகவே விளங்கும். தீமையை அகற்றுவது அழிவு வேலையானால் மதத்தை ஒழிப்பது என்பதும் அழிவுவேலையாய் இருந்து போகட்டும். அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

குடி அரசு -தலையங்கம் -23.08.1931

 

இஸ்லாமில் சேரச் சொன்னேன்; ஏன்? மதத்திற்காகஅல்ல

ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற் காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்ல வில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப்போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவைபோலவேஇஸ்லாம்கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒருவழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன். சட்டம் செய்வது  கஷ்டம். செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவதும் சந்தேகம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல் வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல் கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன்தான் மாலை 5-00 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5-30மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில்நடக்க உரிமைபெற்றுமனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆட்சேபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை. கேவலம் வயிற்றுச் சோற்றுக் காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப் படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றேன். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதிதிராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்து போகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால் எது எப்படியானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப் படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.

ஆகவே இஸ்லாம் மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து மார்க்கம் செய்வதைவிட அதிகமா? இல்லையா? என்று பாருங்கள். ஆனால் நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள் கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோத மான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை மூடப்பழக்கம் பாமரத்தன்மை என்கின்றோமோ அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க் கின்றோம்.சமாதுவணக்கம்பூஜைநைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத் திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங் களும் நடைபெறுகின்றன.

இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட் சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம் களை முளைத்தது போல்புதிதாகதோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை கள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கை கள் இல்லை என்று பெருமை பேசிக் கொள்ள முடியும்.

மனிதன் காலதேசவர்த்தமானத்திற்கு கட்டுப் பட்டவனாவான். மனிதனது மார்க்கமோ கொள்கையோ கூட அதில் பட்டதேயாகும்.

ஏனென்றால் மார்க்கம் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வழிகாட்டிஎன்ப தைக் கொண்டு சொல்லுகின்றேன். வழி என்பது அடிக்கடி மாறக் கூடியதே யாகும். கால்நடை வழி, ஆடு, கழுதை, குதிரை மூலம் செல்லும் வழி, கட்டைவண்டி வழி, மோட்டார் வழி, ரயில் வழி, ஓடம் கப்பல் வழி, கடைசியாக ஆகாய விமானவழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்கு தகுந்ததுபோல் வழி திருத்தப்படவேண்டும்.

அதுபோலவே மனித வாழ்க்கை வழியும் காலத்தின் கோலமாய் தேசத்தின் தன்மையாய் சந்தர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆக வேண்டும் என்பதைஒப்புக்கொள்ளவேண்டும். மாறுதலுக்கு இடம்கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம். உதாரணமாக இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துக்கொண்டாலும், துருக்கி இஸ்லாம் சமூகத்தின் நடவடிக்கையும், ஆப்கானிஸ்தான் சமூக நடவடிக்கையும், இந்தியா இஸ்லாம் சமூக நடவடிக்கையும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவிலேயே ஈரோட்டுக்கும், தஞ்சைக்கும், சாத்தான் குளத்திற்குமே அனேக வித்தியாசம் காணப்படுகின்றது. இவைகள்மூன்றும் ஒன்றுபடும்போது யாராவது இருவரோ அல்லது மூன்றுபேரும்ஆளுக்குக் கொஞ்சமோ தங்கள் பழக்க வழக்கங்களை நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். நான் சொல்லும் மாற்றமெல்லாம்முக்கியமாய் நடை உடை பாவனையைப் பொருத்ததேயாகும். மன மாற்றத்தைப்பற்றிஇப்போதுசொல்லவரவில்லை. அவை அவரவர்கள் சொந்தசொத்து. மற்றவர் களுக்குத் துன்பமோதொல்லையோ இல்லாத வழியில்எவ்வித அபிப்பிராயத்தையும் கொள்ள யாருக்கும் உரிமையுண்டு. அறிவுபெருக்கமும் அதனால் மனமாறுதலும் சுபாவமேயாகும். ஆகவே சகோதரர்களே! நான் சொன்னவை எனது சொந்த அபிப்பிராயம். என் சொந்த அனுபவ வாயிலாகக் கண்டது என்பவைகள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆதலால் இதையே முழு உண்மையென்றுகருதி விடாமல் உங்கள் அறிவு அநுபவம் ஆகியவைகளைக் கொண்டுமுடிவுபெற்று உங்கள் இஷ்டப்படி நடக்க உரிமையுடையவர்கள் என்பதைமறந்து விடாதீர்கள்.

குறிப்பு:28.07.1931ஆம்நாள்சாத்தான்குளத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) நடைபெற்ற முகமது நபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலைமை யேற்று ஆற்றியஉரை.

குடி அரசு -02.08.1931.

மதத்தைவிட மக்களின் ஒற்றுமையே முக்கியம்

இஸ்லாமிய உலகத்திற்கு மிகவும் முக்கிய மானதும், மக்களின் நன்மைக்காக உலகத்தில் தோன்றிய பெரியார்களில் மிக ஒப்பற்ற சிறந்த வருமானஒருவரின்பிறந்தநாளைக்கொண்டாடு வதற்காகக் கூட்டப்பட்ட இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க இரண்டாம் தடவையாகவும் அழைத்தது பற்றி நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக சென்ற ஆண்டிலும் என்னை அழைத்து தலைமை வகிக்கச் சொன்னீர்கள். நிற்க, இன்றைய நிலைமையில் நாம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட ஆசை கொண்டிருக் கின்றோம் என்றாலும் இந்தியாவைஇந்தியர் களேஆளுவது என்று ஏதாவது ஒரு காலத்தில் நடக்கக் கூடியதானாலும் ஆகலாம். ஆனால் இன்றைய நிலையில் இந்து முஸ்லிம்ஒற்றுமை ஏற்படுவதென்பது சுலபத்தில் முடியாதென்பதே எனது அபிப்பிராயம். நான் இப்படிச் அதுசமீபத்தில்ஏற்பட்டமதமானதினால்மிகவும் திருந்திய மதமென்றே சொல்லுதல் வேண்டும். உலகமெல்லாம்ஒருகாலத்தில்காட்டுமிராண்டித் தனமாயிருந்த பிறகு நாளாக நாளாக பல வழிகளிலும்சீர்திருத்தமடைந்துவந்திருக்கின்றது. இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் சரியான பெயர் சொல்ல வேண்டுமானால் பழயமதம்

 

சொல்லுவது பற்றி உங்களில் சிலர் திடுக்கிடலாம். இரு சமூக ஒற்றுமைக்கும், என்றைக்கும் மதக் கொள்கைகள் என்பது முட்டுக்கட்டையாகவேதான் இருக்கிறது. மதத்தைவிடமோட்சத்தைவிடமக்கள் ஒற்றுமை முக்கியமும் அவசியமுமானதாகும் என்று பட்டால்தான் இரு சமூகமும் ஒற்றுமையடைய முடியும். அப்படிக்கில்லாதவரை இப்படியே வெறும் வாய்ப் பேச்சு ஒற்றுமையாகவே இருக்க வேண்டியது தான். மற்ற நாட்டின் மக்கள் நடந்து கொள்வதைப் பார்த்தாவது நாம் நடந்து கொள்ள முயற்சிப் பதில்லை. நமக்கு மதமெல்லாம் நடை, உடை, பாவனை முதலிய வேஷத் தில் இருக்கின்றதே தவிர மதம் எதற்காக என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக் கின்றதோ அதற்காக உபயோகப்படக்கூடியதாயில்லை. இன்றையதினமும்மதமும்,சமயமும்ஒருவனுக்கு அவன் அணியும் வேஷம் என்றுதான் மதத்தில் பட்டவர்களில் 100க்கு 99 பேர்கள் நினைத்துக் கொண்டு அதன்படி நடந்து வருகிறார்கள். பொதுவாக அந்த உணர்ச்சியும், வேஷமும் ஒழிந்தா லொழியஉலகமக்களுக்குஒற்றுமையும்,சாந்தமும் கண்டிப்பாய் கிடையவே கிடையாது.

நான் இஸ்லாம் சமூகம் ஹிந்து சமூகமாகிய இருவருக்குமாக சில சொல்லுகிறேன். அதைப் பற்றிச் சொல்லுவது மிகையாகாது. இஸ்லாம் மத தத்துவம் அநேகமாய் உலக மக்கள் எல்லோருக்குமே பொருத்தமானது. ஏனெனில் புதிய மதம் என்றுதான் சொல்லவேண்டும். பழய மதக்காரரும் புது மதக்காரரும் சுலபத்தில் ஒற்றுமையாக முடியாது. இருவரும் மக்கள் நன்மைக்கு மதம் ஏற்படுத்தப்பட்டது என்று கருத வேண்டுமே ஒழிய மதத்திற்காக மக்கள் ஏற்பட்டார்கள் என்று கருதக்கூடாது. மதத்தைக் காப்பது என்கின்ற உணர்ச்சியே தப்பான உணர்ச்சியாகும். மக்கள் நன்மையையும் அவர்கள் நாமத்தையும் சாந்தியையும் காப்பாற்றுவதுதான் பொதுநலவாதிகள் கடமைஎன்கின்ற உணர்ச்சி இருக்க வேண்டும்.

இந்துக்களும், முகமதியர்களும் ஒரே நாட்டிலே ஒரே மாதிரி சுதந்திரத்துடன் வாழ வேண்டியவர்களேயாவார்கள். இதற்கு முட்டுக்கட்டையாக மதக் கொள்கைகளை போட்டுக் கொண்டிருந்தால் ஒரு நாளும் ஒற்றுமையாய் வாழ முடியாது. ஆகையால் இருவரும் வேஷத்தை விட்டு உண்மை மனித தர்மத்தையும், அன்பையும் அடிப்படையாய் வைத்து சகோதரர்களாக வேண்டியது மிக்க அவசியமானது. முகமதியர்களை விட இந்துக்களே ஒற்றுமைக்கு அதிக இடையூறாக இருக்கின்றார்கள். இந்துக் கொள்கை மிக்க மூடக் கொள்கையும், அன்புக்கும் ஒற்றுமைக்கும் இடந் தராததுமாய் இருக்கின்றது. மகமதியர்களும் வேஷ வித்தியாசத்தை விட்டு அவர் மத முக்கிய தத்துவங்களைக் கடைபிடித்தால் யாருடனும் கூடி வாழ சவுகரியம் உண்டு. ஆகவே இருவரும் சீர்திருந்தி மக்களை சீர்படுத்தி ஒற்றுமையாக வாழ வேண்டும்.

குறிப்பு : சத்தியமங்கலம் பழைய பள்ளி வாசலுக்குஎதிரிலுள்ளசவுக்கில்08-08-1930ஆம்நாள்நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் தலைமையேற்று பேசியது.

குடி அரசு -24.08.1930.

பள்ளிவாசல் முன் மேளம் அடிக்ககூடாதா?

பசுக்கொலையைப்பற்றிஇந்துக்கள் முஸ்லீம் களை உபத்திரவிப்பது அனாவசியமென்றே கருது கிறோம். முஸ்லீம்கள் பசுக்கொலை செய்வதால் இந்துக்களுக்கு எந்த விதக் கஷ்டமோ நஷ்டமோ இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்துக்களுக்கு எப்படி ஒரு ஆட்டையோ, கோழியையோ, பன்றியையோ விலை போட்டு வாங்கி வளர்த்து கொன்று தின்பதற்கு பாத்திய முண்டோ, அதுபோல் முஸ்லீம்களுக்கும் பசுவையோ, ஆட்டையோ, கோழியையோ விலை போட்டு வாங்கி கொன்று தின்னப் பாத்தியமுண்டு. இப்படி இருக்க, முஸ்லீம் களுக்கு மாத்திரம் ஒரு ஜெந்து விஷயத்தில் நிர்பந்தம் ஏற்படுத்துவதின் பொருள் என்ன? மாடு சாப்பிடுவதும் மாட்டைக் கொல்லுவதும் நமது தேசத்தில் முஸ்லீம்கள் மாத்திரம் செய்ய வில்லை. நமது நாட்டில் பஞ்சமர் என்று சொல்லுவோரில் கோடிக்கணக்கான பேர்கள் அப்படியே செய்கிறார்கள். நாம் இப்போது எந்த அரசாங்கத்தின் கீழ் இருக்கிறோமோ அந்த அரசாங்கமே மாடு தின்கிற வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப்படுவதில்லையே. முஸ்லீம்களும் பஞ் சமர்என்றுசொல்லுவோர்களும்பெரும்பாலும் ஏழைகளாயிருப்பதால் முறையே வயதாகி சாகப்போகும் மாடுகளையும், செத்த மாடு களையும் உபயோகிக்கிறார்கள். நம்மை ஆளும் ஜாதியாரோ நல்ல வாலிபமுள்ளதாய் -காளைத்தரமாய் -உழைக்கக் கூடியதாய் – அழகுள்ளதாய்ப் பார்த்து வாங்கி கொன்று சாப்பிடுகிறார்கள். நமது நாட்டிலிருந்து வருஷம் ஒன்றுக்கு 10 லட்சக்கணக்கான மாடுகளையும் பசுக்களையும் விலை போட்டு வாங்கி கப்பலேற்றி மேல் நாட்டுக்குக் கொண்டு போகிறார்கள். இவைகள் எதற்காகக் கொண்டுபோகப் படுகிறது?

ஐரோப்பா தேசத்தில் பசு மடம் கட்டப் பட்டிருக்கிறதா? அல்லது உழவு வேலைக்காவது பார மிழுக்கும் வேலைக்காவது கொண்டு போகி றார்களா? கொன்று தின்பதற்குத்தான் என்று நமதுபார்ப்பனர்களுக்குத்தெரியாதா?இதனால் இந்த ராஜாங்கத்தை ஒழித்து விட்டோமா? அல்லது வேறு மாடு தின்னாத தேசத்திற்குக் குடிபோய் விட்டோமா? பஞ்சமர்கள் என்று சொல்லுவோரையாவது மாடு தின்னும் காரணத்திற்காக, இந்துவல்ல என்கி றோமா? நமது அரசாங்கத்தாரும் நமது மதத்தாரும் செய்யும் காரியத்தை முஸ்லீம்கள் செய்தால் மாத்திரம் அவர்களோடு கலகத் திற்குப் போவது என்பதின் இரகசியம் என்ன? அல்லாமலும் ஒவ்வொரு பட்டணங்களிலும் முனிசிபாலிட்டியிலும் மாடு அறுப்பதற்கென்றே தனித் தொட்டியும், மாட்டு மாம்சம் விற்பதற்கென்றே தனி கசாப்புக் கடையும் ஏற்பாடு செய்துகொடுத்து அதினால் நாம் பணம் சம்பாதிக்கவில்லையா? இவ்வளவு காரியங்கள் நடக்கும்போதும் இவற்றிற்கு நாம் உடந்தையாய் இருக்கும் போதும் பசுக் கொலை என்பதற்குப் பொருள் என்ன? அது போலவே மசூதி முன் மேளம் என்பதும் பொருளற்ற தாகவே இருக்கிறது. ஒரு வகுப்பார் தங்கள் பள்ளியில் சுவாமியைத் தொழுவதானால் மற்றொரு வகுப்பார் தெருவில் மேளமடித்துக் கொண்டு போகக்கூடாது என்பது கொஞ் சமாவது வாதத்திற்குப் பொருத்தமானதல்ல. இது நமது பார்ப்பனர்கள் தங்கள் வீதியில் மற்ற வகுப்பார்களை நடக்கக் கூடாது என்று சொல்லுவது போலவே இருக்கிறது.

ஒருவர் தொழுகைக்கும் மற்ற வகுப்பார் மேளத்திற்கும் என்ன சம்பந்தம்? மேளமடிப்பதால் கடவுளை வணங்குவதற்கு முடியாமல் போய் விடுமென்று சொல்லுவதானால் அந்த வணக்கத் திற்கு மதிப்பு ஏது? அநேக பள்ளிவாசல்கள் சந்தைக்குப் பக்கத்திலும் அதிகமான ஜனப் புழக்கம், கூச்சல், வண்டிப் போக்குவரத்து முதலியவைகள் உள்ள தெருவிலும், சதா டிராம் வண்டி, ரயில் வண்டி, மோட்டார்கள் முதலி யன கத்திக்கொண்டு போகும் வழிகளிலும் சமுத்திர அலை சதா சர்வகாலம் இரைச்சல் போட்டுக் கொண்டிருக்கும் ஸ்தலங்களிலும், பள்ளி வாசல்களும் தொழுகைகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. பள்ளிவாசல் களுக்குப் பக்கத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவர்கள் முதலிய வீடுகளிலும் கோவில்களிலும் கல்யாணம், சாவு, உற்சவம் முதலியவைகள் மேளத்தோடும் வாத்தியத்தோடும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்து வருகின்றன. இவைகளெல்லாம் ஆட்சேபிக்கப்படுவதில்லை; ஆட்சேபிக்க முடிவதுமில்லை. இப்படியிருக்க தெருவில் மாத்திரம் வாத்தியத்தோடு போகக்கூடாது என்பது இஸ்லாம் பள்ளிக்கு இந்துக்கள் மரியாதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத்தான் ஏற்படுமே அல்லாமல் தொழுகைக்கு விரோதம் என்று சொல்லுவதில் பொருளே இல்லை. இம்மாதிரி பொருளற்ற இரு விஷயங்களைத் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக உபயோகப்படுத்தி பாமர ஜனங்களைக் கிளப்பி விட்டு கலகங்களை உண்டாக்கி லாபமடைகிறார்கள்.

குடி அரசு -11.7.1926

தூதர்களும் -அவதாரங்களும் மீண்டும் ஏன் வரவில்லை?

ஒரு காலத்தில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக அநாகரீகர் களாகவும், அறிவில்லாதவர் களாகவும்தான் இருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து அவ்வப்போது சீர்திருத்தஞ் செய்ய முயற்சித்தவர்கள்தான் மதத் தலைவர் களானார்கள். அவர்கள் பொதுவாக அந்தக் காலத்தில் அநேக மனிதர்களுக்கு மேற் பட்ட அறிவுடையவர்களாகயிருந்ததாகக் காணப்பட்டதால் அவர்கள் அந்த மக்களால் காலத்திற்கேற்றபடி கடவுள் அவதாரமென்றும், கடவுள் புத்திரரென்றும் மற்றும் பலவாறாகக் கருதப்பட்டார்கள்.

அவர்கள் பின்னால் உள்ள ஜனங்களும் தங்களுடைய வழக்கமான மூடத்தனத்தை கொண்டும் மக்கள் மதிக்க வேண்டு மென்கின்ற ஆசையைக் கொண்டும் அப்பெரியார்கள் மீது அமானுஷிகமான கட்டுக் கதைகளைக் கட்டி அநேக “அற்புதங்கள்” செய்தார்கள் என்று பெருமைப்படுத்தி விட்டார்கள். அதனால்தான் இப்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதத் தலைவர்களை மனிதத் தன்மைக்கு மேலாகவே மதித்து மனிதசக்திக்கு மீறினதும், அனுபவத்திற்கு ஒவ்வாததுமான குணங்களை ஏற்றிப் போற்றுகின்றார்கள் என்றாலும் காலமாறுபாட்டிற்குத் தகுந்தபடி பழைய கொள்கைகள் மாற மாற புதிய புதிய மதங்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் வரும். ஆனால் இனிமேல் தெய்வீகம் பொருந்தியவர்கள் மாத்திரம் ஏற்படமுடியாது. மிகப் பழைய காலத்தில் அதாவது இந்து மத காலத்தில் கடவுள்களேநேரில்வருவதாகச்சொன்னார்கள். அதற்கடுத்த கிறிஸ்தவ மத காலத்தில் கடவுள் குமாரர்(பிதாமகன்)வந்ததாகச் சொன்னார்கள். மகமதிய மதக் காலத்தில் கடவுளின் தூதர்கள் வந்ததாகச் சொன்னார்கள். இது மாத்திரமல் லாமல் “இனி தூதர்கள் வரமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள். தெளிவாக இன்னுந் தெரிய வேண்டுமானால் இந்துக்களில் 10 அவதாரங்களுடனும் 12 ஆழ்வார்களுடனும் 4 சமயாச்சாரிகள்உள்பட64நாயன்மார்களுடனும் அநேகமான அவதாரங்களும், தெய்வீகங்களும் நின்றேவிட்டன. எத்தனையோ தடவை எதிர்பார்த்தும் எத்தனையோ பெயர்களைப் பழையபடி பொது ஜனங்கள், அவதாரமென்று கற்பித்தும் ஒன்றும் சிறிதும் பயன் பெறாமலே போய்விட்டது. அதுபோலவே கடவுளைப் பற்றியே தெரியா தென்று சொன்ன பௌத்த “அவதாரமும்” அத்துடனேயே நின்று விட்டது.

 

கிறிஸ்துவ மதத்திலும் கிறிஸ்துவுடனும் அவர்கள் சிஷ்யர்களுடனுமே நின்றுவிட்டது. அவர் மறுபடியும் வருவார் என்று சொல்லி வெகுகாலமாகியும் இப்போது எதிர்பார்ப்பதே பரிகாசத்திற்கிடமாகி விட்டது. மார்டின் லூதர் முதலியவர்களும் மனிதர்களாகவே பாவிக்கப்பட்டு விட்டார்கள். அதனால் தான் கிறிஸ்து மதத்தில் கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்லாம் மார்க்கத்திலும் மகமத் நபி அவர்களோடேயே நபிகள் தோற்றம் நின்று விட்டது.

திரு. மகமது நபி அவர்கள் எல்லாத் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்பவர் களிலும் பிந்தியவராதலாலும் எல்லோரையும் விட மிக்க பகுத்தறிவும், முன் யோசனையும் அனுபவ ஞானமும் உடையவரான தினாலும் “இனி உலகில் நபிகள் தோன்றப் போவதே கிடையாது” என்று சொல்லிவிட்டார்.

அவர் இரண்டு காரணத்தால் அப்படி சொல்லி யிருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றுகின்றது; அதாவது ஒரு சமயம் மறுபடியும் யாராவது புறப்பட்டு சில ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தன்னை தேவ அவதாரமென்றும், தெய்வாம்சம் என்றும் சொல்லி பழைய படி மக்களைப் பாழாக்கி விடாமலும் தனது கொள்கைகளை கெடுத்து விடாமலும் இருக்கட்டும் என்று மிக முன் ஜாக்கிரதையாகச் சொல்லி யிருந்தாலு மிருக்கலாம். அல்லது “இனிவரும் காலத்தில் மக்களை அறிவுடையவர்களாக இருப்பார்கள்; இம்மாதிரி ஒருவரை சுலபத்தில் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்று கருதிவிட இடமிருக்காது” என்று கருதி சொல்லியிருந்தாலுமிருக்கலாம்.

[ஈரோடு நபிகள் பிறந்தநாள் விழாவில் பேசியது] குடியரசு -24.08.1930.

துருக்கியில் பெண்கள் முன்னேற்றம்

திரைமறைவில் உறைபோட்டுக் கொண்டு இருக்க வேண்டிய பெண்கள் இன்று துருக்கியில் பிறந்ததின் பயனாய் திரையை அவிழ்த்துத் தள்ளி உறையைக் கழட்டி எறிந்து விட்டதோடல்லாமல் “எங்களுக்குக் கல்யாணம் வேண்டாம். கல் யாணம் செய்து கொள்ளுவதன் மூலம் புருஷர் களுக்கு அடிமையாய் இருக்க இனி நாங்கள் சம்மதிக்கமாட்டோம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதோடு நிற்காமல் ‘ எங்களுக்கு உத்தியோகம் வேண்டும்’ என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். புர்தாவைகோஷாவை -படுதாவை “மதக்கட்டளை” என்று சொல்லப்பட்ட மார்க்கத்தில் பிறந்தும்இஸ்லாம் மார்க்கத்தின் பிரமுகரான கலீபா இருந்தபிரதானநகரமாகியதுருக்கியில்பிறந்தும் துருக்கியானது கமால்பாஷா என்கின்ற ஒப்பற்ற ஒரு வீரரின் ஆட்சியில் இருக்க நேர்ந்ததின் பயனாய் இன்று அப்பெண்மணிகள்“எங்களுக்கு கல்யாணம் வேண்டாம், உத்தியோகம் வேண்டும்” என்று சொல்லக்கூடிய யோக்கியதை அடைந்து விட்டார்கள்.

அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பாங்கி முதலிய வியாபார ஸ்தலங்களிலும் அதாவது சதா பல புருஷர்கள் நடமாடும் இடங்களிலும் தங்கள் தலையைக் கத்தரித்துக் கொண்ட அழகான முஸ்லிம் பெண்கள் தாராளமாய் வேலையில் அமர்ந்திருக்கிறார்கள். மெடிக்கல் காலேஜ் (வைத்தியக் கலாசாலை) லா காலேஜ் (சட்டக் கலாசாலை) முதலிய இடங்களில் பெண்கள் அதிகமாக சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களில்பலர்“ஆண்கள் பலபேர்கல்யாணம் இல்லாமல் இருக்கும்போது நாங்கள் ஏன் கல்யாணம் இல்லாமல் இருக்கக் கூடாது”? என்று கேட்கின்றார்களாம். மற்றும் பலர் “ நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால் நன்றாய்ப் பழகி சகல குணமும் தெரிய நேர்ந்த புருஷர்களைத்தான் கல்யாணம் செய்து கொள்வோம்” என்று சொல்லுகின்றார்களாம்.

மற்றும் பலர் “ நாங்கள் 40 வயது ஆன பிறகுதான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்குவோம்”என்று சொல்லுகின்றார்களாம்.

பெண்கள் முன்னேற்றம் என்னும் துறையில் துருக்கிப் பெண்கள்தான் உலகத்திற்கே வழிகாட்டிகளாக ஏற்படக்கூடும் என்றே நினைக்கின்றோம். ஆகவே இந்தியா வில் உள்ள சகல பெண்மணிகளும் ஒன்று துருக்கிப் பெண்களைப் பின்பற்றவேண்டும், அல்லது துருக்கியில் பிறக்காததற்காக ஒப்பாரிவைத்து அழ வேண்டும். இல்லையேல் மதக்கட்டளைகளுக்கு தாங்களே (பெண்கள்) வியாக்கியானம் சொல்லப் புரப்படவேண்டும். இம்மூன்றைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

குடி அரசு -கட்டுரை -21.06.1931

கோஷா முறை

முகமதுநபி கொள்கையும், திராவிடர் கொள்கையும், கடவுள் என்னும் விஷயத்தில்ஒரு மாதிரியானகருத்துத்தான் கொண்டு இருக்கிறது என்றாலும் கண்டிப்பாய் பேசப் போனால் முகமது நபி கடவுளைவிட பழந் திராவிடர்கள் கடவுள் ஒருபடிசீர்திருத்தம்கொண்டகடவுள்என்றுகூட சொல்லலாம். முகமது நபி மக்கள் யாவரையும் எல்லாத் துறையிலும் சமம் என்றும் சகோதரர் என்றும் எப்படிக் கருதுகிறாரோ அப்படியே தான் பழந்தமிழ் மக்களும் கருதியிருப்பதாய் பண்டிதர்கள் சொல்கின்றார்.

மண விஷயத்தில் ஆரிய மதக் கொடுமையில் 1-ல் ஒரு பங்குகூட இஸ்லாம் மதத்தில் இருப்பதாய்ச் சொல்ல முடியாது. ஏனெனில் மண மக்கள் இஷ்டப்பட்ட பெண்ணையும் இஷ்டப்பட்ட மாப்பிள்ளையுமேதான் இருபாலும் மணக்க முடியும் என்று முஸ்லீம்கள் சொல்லு கிறார்கள். ஆனால் கோஷாமுறை இருக்கையில் இஷ்டப்படுவதற்கும், இஷ்டப் படாமல் இருப்பதற்கும் எதை ஆதாரமாய்க் கொள்ளுவது என்பது நமக்கு விளங்கவில்லை என்றாலும் கோஷா முறை ஒழியுமானால் அக்கொள்கைகள்அனுபவத்தில்வருவதற்கு தாராளமாக இடமுண்டு.

மாறுதலை மறுப்பதால்

முகமது நபியின்கொள்கைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கமானது 15நூற்றாண்டையே ஆயுளாகக் கொண்டிருந்தாலும் அது தாராள நோக்கத்தோடுஇருந்திருக்குமானால் இன்று உலகம் பூராவையும் அதாவது 200 கோடி மக்களையும் அது தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டியதாகும். ஆனால் இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத ஒரு அபிப்பிராயத்தைப் புகுத்தி அதைக் கட்டுப் படுத்திவிட்டதால் போதியவளர்ச்சியில்லாமல் போய்விட்டது. அதாவது “1500 வருஷத்திற்குமுன் சொன்னது எதுவோ அதுதான் இன்னமும், லக்ஷத்து ஐம்பதாயிரம் வருஷம் பொறுத்தும் இருக்கவேண்டியதாகுமே ஒழிய அதில் ஒரு சிறுமாறுதல்கூட செய்யமுடியாது” என்றும் சொல்லிவருகின்ற முரட்டு பிடிவாதமே மக்களைஅதன் பெருமையை உணரமுடியாமல் செய்துவிட்டது.

காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி ஒத்துப் போவதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் இடமில்லை என்றால் அப்படிச் சொல்கின்றவர்கள் எவ்வளவு பக்திமான்களானாலும் முகமது நபிக்கு நீதி செய்தவர்களோ அவருக்கு பெருமை யளித்தவர்களோ ஆகமாட்டார்கள் என்றே சொல்லுவோம்.

சர்வ வல்லமை சர்வ வியாபகம் உள்ள கடவுள் என்பவரை நம்பும் ஒரு வெறிபிடித்த ஆஸ்திகர்கூட “கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்தார். மனிதன் அதை உபயோகித்து நல்வழியில் நடக்க வேண்டியது மனிதனுடைய கடமை” என்று எப்படிச் சொல்லுகிறானோ- இப்படிச்சொல்வதால் அவன் எப்படி கடவுள் சக்திக்கு குறை கூறினவன் ஆவ தில்லையோஅதுபோல் எவ்வளவு வெறி பிடித்த இஸ்லாமியனானாலும் “முகம்மதுநபி அவர்கள் மக்களுக்கு ஒளியைக் கொடுத்தார். பழய கட்டுப்பாடுகளை, கொடுமைகளை உடைத்து சுதந்திரமாக்கினார். அதிலிருந்து மனிதன் எதற்கும் அடிமையாகாமல் காலத்துக்கு ஏற்றப்படி சுதந்திரமாய் நடந்துகொள்ள வேண்டும்” என்று சொன்னால் அவன்முகமது நபிக்கோ அல்லது இஸ்லாம் மார்க்கத்துக்கோ நம்பிக்கையற்றவன் ஆகிவிடுவானா என்று கேட்கின்றோம்.

-குடிஅரசு -24-2-35

[26-3-2017சென்னையில்நடந்தபாரூக்படுகொலை கண்டன கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எடுத்துக்காட்டிய பெரியார் கருத்துகளின் தொகுப்பு]

நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்

You may also like...