காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3) ‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது.
காந்தி கொலையை மறு விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட கபூர் ஆணையம் அமைத்த ஒரு மாதத்திலேயே சாவர்க்கர் பட்டினி கிடந்து மரணத்தை ஏற்றார். விசாரணையில் சிக்கி விடுவோம் என்ற அச்சமே காரணம். பசுவை வணங்கினால் நாமும் சாந்தமாகி விடுவோம்; கோழையாவோம் என்ற காரணத்தால் பசு வணக்கத்தை எதிர்த்தார். நேதாஜியுடன் இணைந்து போரிடாததற்குக் காரணம் நேதாஜியிடம் இஸ்லாமிய எதிர்ப்பு இல்லை என்பதுதான். எந்த நடவடிக்கையிலும் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் திறைமறைவில் இயங்குவதே சாவர்க்கர் பண்பு. பாட்ஜேவின் வாக்குமூலம் இது… `1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14ஆம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பே யில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத்துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியையும் நேருவையும்...
