‘இரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம்’ என்ற புதிய கொள்ளை!
இரயில்வே துறையை தனியார்மய மாக்குவதற்கு முன்னோட்டமாக இரயில் நிலையங்களை தனியார்மய மாக்குவது, ஒன்றிய அரசின் திட்டங்க ளில் ஒன்றாகும். அதாவது, விமான நிலையங் களை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு குத்தகை விட்டதுபோல, இந்தியாவின் முக்கியமான இரயில் நிலையங்களை தனியார் முதலாளிகளுக்கு குத்தகைக்கு விடும் வேலையாகும். நாட்டிலேயே முதன்முதலாக போபால் அருகில் உள்ள ஹபீப்கஞ்ச் நகர இரயில் நிலையம் இவ்வாறு தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இந்த இரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மாற்ற பன்சால் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 50 ரயில் நிலையங்கள் அரசு – தனியார் கூட்டுத் திட்டத் தின் (ஞஞஞ) அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இரயில் நிலையங்களை குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அந்த இரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், இரயில் நிலையங்களிலேயே ஷாப்பிங் மால், உணவகங்கள், பார்க்கிங், சோலார் எனர்ஜி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவார்கள்; இதற்கு செலவிட்ட...