இராமர் கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வளர்ச்சிக்கும் அதுஅதிகாரத்தைக் கைப்பற்று வதற்கும் உதவியது என்று ‘தினமலர்’ நாளேடு எழுதியுள்ளது. அயோத்தியில் உள்ள இராம ஜென்ம பூமி விவகாரம், மத்தியில் தற்போது ஆளும் பா.ஜ.க.,வுக்கு, 1996 முதலே, ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் முக்கிய பிரச்னையாக அமைந்திருந்தது. மேலும், ஒவ்வொரு தேர்தலிலும், இந்தப் பிரச்னையை முன்வைத்து செய்த பிரச்சாரங்களால், அந்தக் கட்சி படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது. ‘அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும்’ என, பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி உருவாக்கிய இயக்கம், ‘கோவில் கட்ட வேண்டும்’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பில் முடிந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலங்களில், இந்த விவகாரம், பா.ஜ.க.,வுக்கு தேர்தல்களில் மிகப் பெரிய உதவியை செய்துள்ளது. கடந்த, 1980களின் இறுதியில் மற்றும் 1990களின் துவக்கத்தில், ஒரு சிறிய கட்சி என்ற நிலையில் இருந்து, மிகவும் முக்கியமான கட்சியாக பா.ஜ.க., உருவெடுக்க ராமர் கோவில் உதவியுள்ளது. கடந்த, இரண்டு தேர்தல்களில்...