பக்தர்களை ஏமாற்றி ரூ. 20 கோடி கொள்ளை; அப்சல்பூர் அர்ச்சகர்கள் தலைமறைவு

அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் பெயரில், அந்தக் கோயிலின் அர்ச்சகர்களே போலி இணையதள முக வரிகளை உருவாக்கி பக்தர்களிடமி ருந்து ரூ. 20 கோடி அளவுக்கு கொள்ளை யடித்த சம்பவம் நடந்துள்ளது. கல்புர்கி மாவட்டம் அப்சல்பூரில் இருக்கும் தாத்தரேயா கோயில் தென் னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில் களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கோயிலில் இளம் அர்ச்சகர்களாக பணிபுரிந்து வந்த வல்லப் பூஜாரி, அன்குர் பூஜாரி, பிரதிக் பூஜாரி, கங்காதர் பூஜாரி மற்றும் சரத் பட் ஆகிய 5 பேர், சிறப்பு பூஜைக்கு ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் இதற்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த  வேண்டும் என்றும் கூறி பக்தர்களிடம் பணவசூல் செய்து வந்துள்ளனர்.  கோயிலுக்கு என்று இருக்கும் அதிகாரப் பூர்வ இணையதளத்தின் ‘லிங்கை’ப் பகிராமல், தாங்கள் தனியாக உருவாக்கிய இணையதளத்தின் ‘லிங்கை’ப்  பகிர்ந்துள்ளனர். இந்த வகையில் 5 அர்ச்சகர்களும் கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 20 கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளனர். கோயில் இணை ஆணையர் யஷ்வந்த் குருகர் இந்த முறைகேடுகளைத் தற்போது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நிலையில்,  அர்ச்சகர்கள் 5 பேரும் தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

பெரியார் முழக்கம் 30062022 இதழ்

You may also like...