பார்ப்பன பன்னாட்டுச் சுரண்டல் அம்பலப்படுத்துகிறார், அருந்ததிராய்
சென்னையில், மே 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில், ‘அம்பேத்கர் சுடர்’ விருதைப் பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) 1960களிலும் 70களிலும் உங்கள் கட்சியின் முன்னோடியான ’தலித் பாந்தர்கள்’ மற்றும் நக்சலைட்டுகள் போன்ற எதிர்ப்பியக்கங்கள் நீதி பற்றி புரட்சி பற்றி பேசினார்கள். அவர்கள் நில சீர்திருத்தங்களைக் கோரினார்கள். உழுபவருக்கே நிலம் என்பது அவர்களது முழக்கமாயிருந்தது. இன்று நீதி என்னும் சிந்தனை நமது மனங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது அதற்கு பதில் மிக குறுகிய கருத்தாக்கமான மனித உரிமை வந்தமர்ந்திருக்கிறது. கொஞ்ச நஞ்ச நில சீர்திருத்தங்களும் இப்போது திரும்பப் பெறப்படுகின்றன. மாவோயி°டுகள் போல அதி தீவிர புரட்சிக் குழுக்கள் கூட மக்களிடம் பெரும்பாலும் ஆதிவாசிகளிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலமும் தனியார் நிறுவனங்களுக்கு போய்விட கூடாது என்றே காடுகளில் போராட வேண்டியிருக் கிறது. இன்று தலித் மக்களில் 70 சதவிகிதம் பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள்....
