பட்டியல் இனப் பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர்
உச்சநீதிமன்றப் பட்டியல் இனப் பிரி வினரை தீர்மானிப்பதில் முதன்முறையாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி ஆபத்தான தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதி மன்றத் தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாட்டுத் தலை வர்கள் இதை கவனத்தில் கொள்ள வில்லை. பட்டியல் இனப் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான பதவிகளில் பதவி உயர்வு நிலையிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு – சமூக நீதிக்கு பெரும் பின்னடைவாகும். செப். 26ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு – பட்டியல் இனப் பிரிவு மற்றும் பழங்குடி மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தீர்ப்பளித்தது உண்மைதான்; ஆனால், ‘கிரிமிலேயர்’ எனும் வடிகட்டும் முறையை அதில் புகுத்தி, தீர்ப்பின் நோக்கத்தையே கெடுத்துவிட்டது. அது மட்டுமின்றி, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வழங்குவதா வேண்டாமா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....