கோவை கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு
இலண்டனில் இறைச்சி சாப்பிட்ட வ.வே.சு. அய்யர் தான் சேரன்மாதேவி குருகுலத்தில் வர்ணத் தீண்டாமையை அமுல்படுத்தினார் ¨ செங்கல்பட்டு மாநாட்டுக்கு உலக பகுத்தறிவாளர்கள் அமைப்புகளை எடுத்துக்காட்டி மூடநம்பிக்கைகளை ஒழிக்க பெண்களுடன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பெரியார். ¨ திருமணத்துக்கு தாலி என்ற திட்டத்துக்கு மாற்றாக கல்லூரி படிக்க வரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக முதல்வரின் திட்டம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுக் கோரிக்கையின் விரிவாக்கம் தான். பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சுயமரியாதை இயக்கம் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தேறிய மாநாடு, முதல்நாள் மாநாடு என்பது பெரிய ஊர்வலம் வந்து சேர்வதற்கு நீண்ட நேரமானது. தலைமையுரை வரவேற்புரை யுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவு பெற்றது. அடுத்தநாள்...