பூணூல் பற்றி விவேகானந்தர்
விவேகானந்தர் 1897ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆலம்பஜார் மடத்தில் தங்கி சிஷ்யர்களிடம் கலந்துரையாடிக் கொண் டிருந்தார். அப்போது சிஷ்யர்களில் ஒருவர் பூணூல் பற்றிக் கேட்டதற்கு விவேகானந்தர் விளக்கம் அளித்துக் கூறுகையில், “பழைய காலத்திலே சிஷ்யர்கள் கையில் சமத்துகளை எடுத்துக்கொண்டு, குரு வினுடைய பர்ண சாலைக்குப் போவார்கள். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய ‘முஞ்சா’ என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்குத் தீட்சை செய்து வேதங்களை போதிப்பார். அரையிலே (இடுப்பில்) கட்டிய முப்புரியாகிய இப்புல்லிலே கௌபீனத்தை (கோவணம்) கட்டிக் கொள்வான். முஞ்சா என்னும் இப் புல்லினால் ஆக்கப்பட்ட கவசத்திற்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின் நாளில் ஏற்பட்டது” என்றார். உடனே சிஷ்யன், “அய்யா, அப்படியானால் முப்புரி நூலை அணியும் வழக்கம் வைதீக வழக்க மில்லை என்று சொல்லுவீரோ?” என்றான். அதற்கு விவேகானந்தர், “வேதங்களில்...
