மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை
– சித்திரபுத்திரன் மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்:- அடீ என் அறுமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும் மேல் உலகத்திலும் உள்ளவர்களுக் கெல்லாம் ஐசுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா? லட்சுமியான ஸ்ரீரங்க நாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தைரும் சாப்பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம் கூட கை வைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மை சாப்பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது? விஷ்ணு:- ஐய்யய்யோ அதனாலா இப்படி செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படி செய்வதும் ஒரு லட்சுமிகடாக்ஷம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்கு கோபமாயிருந்...
