மேட்டூர் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

13-4-2015 சனி மாலை 6-30 மணியளவில், மேட்டூர் ஆர்.எஸ். டி.கே.ஆர் நினைவுப் படிப்பகத்தில், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பாக, பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, “ஆரியர் பண்பாட்டுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டுப் புரட்சி” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒன்றரை மணி நேரம் கருத்துரை வழங்கினார்.
மனித இனத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் வளர்நிலை, வீரத் தலைமை மறைந்து அறிவு (சூழ்ச்சி)த் தலைமைத் தோற்றம், அரசுருவாக்கம், தத்துவம் என்ற பேரால் தலைவனைப் பாராட்டுவது, புகழ்வது, தலைவ (அரச)னுக்கு எதிராக மக்கள் எழாமல் பார்த்துக் கொள்ளுதல், அதற்கு மிகவும் பொருத்தமான ஆரிய, மனுசாஸ்திர தத்துவங்கள், அவை உருவாக்கிய, நியாயப்படுத்திக் காப்பாற்றிய படிநிலை சமுதாய அமைப்பு – அதை வீழ்த்தி சமத்துவம் சமுதாயம் காண உழைத்த பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஆகியவற்றை விளக்கினார். இறுதியில் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு கழகத் தலைவர் விளக்கம் அளித்தார். பயிலரங்கை முன்னின்று ஏற்பாடு செய்த மாணவத் தோழர் விவேக்கின் நன்றியுரையோடு இரவு 8-30க்கு பயிலரங்கம் நிறைவுபெற்றது.

பெரியார் முழக்கம் 17092015 இதழ்

You may also like...

Leave a Reply