இதுதான் கீதை தேர் எரிந்தது – ஏன்?

பாரதப் போர் பாண்டவர்க்கு வெற்றியாக முடிந்த பின்னர் தேரிலிருந்து இறங்குமாறு அர்ச்சுனனிடம் கூறுகிறான் கிருஷ்ணன். பகவானான கிருஷ்ணன்தான் முதலில் இறங்க வேண்டும் என்கிறான் அர்ச்சுனன். இதை ஏற்காத கிருஷ்ணன், அர்ச்சுனனைக் கீழே இறங்குமாறு அதட்டுகிறான். அவனும் கீழே இறங்கி நின்றான்.  அதன் பிறகு தேரில் இருந்து கிருஷ்ணன் இறங்குகிறான். அவன் இறங்கிய அடுத்த நொடியில் தேர் எரிந்து சாம்பலானது. அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன் கேட்டானாம், “யாரும் நெருப்பு வைக்காமல் தானாகவே தேர் எரிந்தது எப்படி?” என்று கேட்டானாம். அதற்கு கிருஷ்ணன் கூறிய பதில்தான் அவன் எப்பேர்ப்பட்ட கபடன்! அயோக்கியன் என்பதை எடுத்துக் காட்டும். “எவ்வளவோ முறைகேடுகளைக் கையாண்டுதான் இந்தப் போரில் உங்களை வெற்றி பெறச் செய்தேன், தெரியுமா? நியாயத்திற்குப் புறம்பான செயல்கள்தான் தேர் எரிந்ததற்குக் காரணம். நான் தேரில் அமர்ந்திருந்ததால் தான் தேர் எரியவில்லை; நான் இறங்கியதும் தேர் எரிந்து விட்டது” என்றானாம். அர்ச்சுனன் இறங்காமல், கிருஷ்ணன் முதலில் இறங்கியிருந்தால் தேரும் அர்ச்சுனனும் சேர்ந்தே எரிந்திருப்பர். நேர்மை – அறவழிகளில் நடத்தாத போர் என்று கிருஷ்ணனே ஒப்புதல் தருகிறான்; இது வாழ்க்கைக்கான தத்துவமா? கீதை -நீதி நூலா? வழிகாட்டும் நூலா?

நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

You may also like...