Category: குடி அரசு 1933

இன்னுமா காந்தீயம்?

இன்னுமா காந்தீயம்?

காந்தீயம் படுத்துவிட்ட தென்றும், அதனால் இதுவரையில் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும், அதை இனியும் பரீக்ஷிப்பதால் யாதொரு பயனும் ஏற்படாது என்பதோடு அது முட்டாள் தனமும், தற்கொலையு மாகும் என்றும், இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இன்று ஒரே அபிப் பிராயமாக இருந்து வருகின்றது. ஆனால் தோழர் காந்தியவர்கள் மாத்திரம் தான் “பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்ற பழமொழிபோல் தன்னுடைய சொந்த கௌரவத்தை முன்னிட்டு இதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாக காட்டிக்கொண்டு இருப்பது தான் தோல்வி அடையவில்லை என்றும் தனது கொள்கை பயனற்று (வெத்தி வேட்டாய் பு°°ஸென்று) போகவில்லை யென்றும், பாமர ஜனங்களைக் கருதும்படி செய்யவேண்டும் என்கிற துறை யிலேயே தனது முயற்சியை எல்லாம் செலவழித்து வெகுதீவிரமாய் உழைத்து வருகிறார். இந்த உழைப்புக்கு அவருடைய பிரதம சிஷ்யர்கள் சிலரும் காந்தீயத்தாலன்றி வாழ முடியாத சில காந்தீய சன்னியாசிகளும், காந்திமட சன்னியாசிகளும் தங்கள் தங்களால் கூடிய அளவு உதவி புரிந்து வருகின்றார்கள். என்றாலும்...

சேலம் மகாநாடுகள்

சேலம் மகாநாடுகள்

சேலம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு இம்மாதம் 19, 20-தேதிகளில் ராசிபுரத்தில் நடைபெற்றதின் நடவடிக்கை விபரங்களும், மகா நாட்டுத் தலைவர், வரவேற்புத் தலைவர் முதலியவர்கள் உபன்யாசங்களும், தீர்மானங்களும் மற்றொரு பக்கத்தில் காணலாம். சென்ற வருஷம் சேலத்தில் நடந்த முதலாவது ஜில்லா சுயமரியாதை மகாநாட்டிலும், சுமார் 3 வருஷங்களுக்குமுன் ராசிபுரத்தில் நடந்த முத லாவது தாலூக்கா மகாநாட்டிலும் சிலரால் உண்டாக்கப்பட்ட இரண்டொரு அசௌகரியங்களும், இடையூறுகளும் மற்றும் எதிர்ப்பிரசாரங்கள் முதலிய வைகளும், இந்த மகாநாட்டில் சிறிதுகூட தலைகாட்டுவதற்கில்லாமல் மறைந்து போனதும் இச் ஜில்லாவாசிகளுடைய பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் தாராள மாய்க் கொண்டிருந்ததல்லாமல் சுமார் 2000 பேர் களுக்கு மேற்பட்ட பிரதி நிதிகள் ஜில்லாவின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விஜயம் செய்து மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றுதும் இச் ஜில்லாவில் இந்த இரண்டு வருஷத் திற்குள் பகுத்தறிவு வளர்ச்சியும், சமதர்ம உணர்ச்சியும் மிகத் தாராளமாய் பரவியிருப்பதற்குத் தக்கதோர் சான்றாகும். நிற்க, மற் றொரு விசேஷம் என்ன வென்று பார்ப்போமானால்...

வாலிபர் கடமை

வாலிபர் கடமை

பொதுவுடமைக்கும் சுயராஜ்யத்துக்கும் சம்மந்தமில்லை சுயராஜ்யம் என்பது அரசியலைப் பொருத்தது. அது எந்த தேசத்தை, யார் ஆளுகிறது என்பதையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுடமை என்பது பொருளாதாரத்தையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுட மைக் கொள்கையைப்பற்றிய விஷயத்தில் ஆட்சிசெய்பவர்கள் யார் என் பதைப் பற்றியோ, எந்த தேசம் ஆதிக்கமுள்ளதாய் இருக்க வேண்டு மென்று எல்லை கட்டுவதிலோ பிரவேசிக்கவேண்டிய அவசியமே இல்லை. பொது உடமை என்பது மேல் குறிப்பிட்டபடி வெறும் பொருளாதாரப் பிரச்சி னையே ஆகும். அதுவொரு கணக்குப் பிரச்சினை என்றும் சொல்லலாம். உலகத்தை ஒரு குடும்பமாக்கி உலக மக்களை ஒரு குடும்பமக்களாக்கி உலக செல்வத்தையும் சுக துக்கதையும் அக்குடும்பத்துக்குப் பொதுவாக்கி அக்குடும்ப மக்கள் எல்லோரும் அக்குடும்ப சொத்துக்களை சரிசமமாய் அனுபவிக்கும்படி செய்யும்முறையே பொது உடமைத் தத்துவமாகும். இதனால் யாருக்கும் ஏற்றத்தாழ்வோ ஜா°தி கம்மியோ இல்லாமல் இருக்கும் என்கின்ற முடிவின்பேரிலும் உலகவாழ்க்கையில் மக்கள் உயர்வு தாழ்வும் ஜா°திகம்மியும் அனுபவிப்பது மனித இயற்கை என்றும் இந்தப் படி இருக்கவே...

°தல °தாபன அலங்கோலம்

°தல °தாபன அலங்கோலம்

ஈரோடு தாலூகா போர்டு தலைவர் தேர்தல் சம்மந்தமாய் ஏற்பட்ட வழக்குகள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதுசமயம் ஹைகோர்ட்டில் இரண்டு அப்பீல்கள் °டே புரசீடிங்° ஆர்டர் களுடன் இருந்து வருகின்றன. ஈரோடு டி°டிரிக்ட் முன்சீப் கோர்ட்டில் இன்ஜங்ஷனுடன் ஒரு சூட் இருந்து வருகிறது. ஈரோடு °டேஷனரி சப்மேஜி°டிரேட் கோர்ட்டில் பழய பிரசி டெண்டு மீது சட்டப்படி அதிகாரமில்லாத காலத்தில் பிரசிடெண்டு செய்யவேண்டிய வேலைகளை செய்ததாக ஒரு பிராது, ஆக 3 இடங்களில் விவகாரங்கள் நடக்கின்றன. ஈரோடு தாலூகா போர்டு பிரசிடெண்டாயிருந்த தோழர் பழைய கோட்டை பட்டக்காரர் அவர்கள் கோயமுத்தூர் ஜில்லா போர்டு வை°பிரசி டெண்டானவுடன் ஈ.தா.போ. பிரசிடெண்டு வேலைகாலியானதினால் அதற்கு முன்பு ஈ.தா.போ. வை°பிரசிடெண்டாயிருந்த தோழர் வி.எ°. ராஜாக் கவுண்டரும், தோழர் எ°.கே. சென்னியப்ப கவுண்டரும் அபேக்ஷகர்களாயிருந்ததில் தோழர் வி.எ°.ராஜாக்கவுண்டர் வெற்றிபெற் றார். தோல்வி உற்றவர் இந்த எலக்ஷனை மாற்றி தன்னை தெரிந்தெடுத் ததாகக் கருத வேண்டுமென்று ஆnக்ஷபித்து ஒரு விண்ணப்பம்...

“ஹரிஜன” இயக்க ரகசியம்

“ஹரிஜன” இயக்க ரகசியம்

ஆக்ராவில் கூடிய “ஹரிஜன ” (தீண்டப்படாதார்) மகாநாட்டில் “ஹரிஜனங்களுக்கு பொருளாதார விஷயத்திலும், கல்வி விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்பாடு செய்வதைவிட ஆலயப்பிரவேசத்தைப் பற்றியே அதிகமாக வற்புறுத்துவது ஒப்புக் கொள்ளத்தக்கதல்ல” என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தோழர் காந்தியவர்கள் “ஹரிஜனம்” பத்திரிகையில் பதில் சொல்லுகையில், “ஹரிஜனங்களுக்குப் பொருளாதார முன்னேற்றமும், கல்வி முன் னேற்றமும் ஜாதி இந்துக்கள் தாங்களாகவே செய்யவேண்டிய காரியமாகும். பொருளாதாரம், கல்வி ஆகிய துரைகளில் ஹரிஜனங்கள் உயர்த்தப்பட்டு விட்டால் மதத்துரையில் அவர்கள் சமத்துவமானவர்களாகி விடமாட்டார் கள். ஆதலால் ஹரிஜனங்கள் ஆலயப்பிரவேசத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஜாதி இந்துக்கள் தங்களுக்கு எந்த நிபந்தனைகள் மீது கோவில்கள் திறக்கப்பட்டிருக்கின்றனவோ அதே நிபந்தனைகளின் மீது ஹரிஜனங்களுக்கு கோவில்களை திறந்துவிடவேண்டும்” என்பதாக எழுதியிருக்கிறார். இதிலிருந்து ஹரிஜன வேலையின் இரகசியம் என்ன என்பதைப்பற்றி நாம் இதற்கு முன் எழுதிவந்த விஷயம் உண்மை என்பது நன்றாய் விங்கும். “ஹரி” ஜனங்களுக்கு வேண்டியதெல்லாம் ஜாதி இந்துக்களைப் போன்ற கல்வியும், ஆகாரமுமாகும். ஆனால் காங்கிரசும்,...

ரங்கநாதர் லாட்டரி அடிக்கிறார்  – சித்திரபுத்திரன்   

ரங்கநாதர் லாட்டரி அடிக்கிறார் – சித்திரபுத்திரன்  

  ஸ்ரீரங்கம் ரங்கனாதர் குடும்பச் செலவுக்கு இந்தபத்து வருஷகாலமாய் லாட்டரி அடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இதைப் பார்த்து நான் ஒரு சிறிதும் வருத்தமோ-அதிசயமோ அடையவில்லை, ஏனெனில் உலகில் சோம்பேறிகள் கஞ்சிக்கே லாட்டரி அடிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை. இந்த ரங்கனாதன் என்னும் ஆசாமி ஒரு பெண்டாட்டிக்கு இரண்டு பெண்டாட்டி கட்டிக்கொண்டு போதாக்குறைக்கு ஒரு கூத்தியாரையும் வைத்துக்கொண்டு இருக்கும் மனிதன். இவன் சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியது சகஜமேயாகும். அதிலும் இந்த பாழும் ரங்கனாதன் யாதொரு வேலையும் செய்யாமல் தினம் ஐந்துவேளை சாப்பிட்டுவிட்டு என்னேரமும் விட்டம்போல் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டேயிருந்தால் இப்படிப்பட்ட சோம்பேறிகள் சோத்துக்கு லாட்டரி அடிக்கவேண்டியது அவசியம்தானே. இதில் அதிசயமென்ன இருக்கின்றது? நமது ஜனங்களுக்கு புத்தி இருக்கு மானால் இந்த ரங்கனாதனை இந்த பூலோகத்தைவிட்டு வைகுண்டத்திற்கே அனுப்பி இருப்பார்கள். நமது ஜனங்களுக்கோ கடுகளவு புத்தியும் கிடையாது. பிரத்தியார் சொல்லையும் கேழ்ப்பதில்லை. ஆகையால் இந்த ரங்கனாதன் லாட்டரி அடிக்கிறது மாத்திரமல்லாமல் இந்த...

இரகசிய காரணங்கள்  பர°பர புகழ்ச்சி சங்கம்  – சித்திரபுத்திரன்

இரகசிய காரணங்கள் பர°பர புகழ்ச்சி சங்கம் – சித்திரபுத்திரன்

  கேள்வி:- தோழர் ஊ.கு. ஆண்ட்ரூ°  அவர்கள் தோழர் காந்தியாரி டத்தில் அதிக அன்புகாட்டிவருவதன் காரணம் என்ன? பதில்:- தோழர் காந்தியாருக்கு இந்தியப் பாமர மக்களிடம் அதிக மதிப்பு இருக்கிறது. ஆதலால் வெள்ளைக்காரர் காந்தியாரிடம் அதிக அன்பு இருப்பதாய் காட்டிக் கொண்டால் அந்த வெள்ளைக்காரரிடம் இந்தியர் களுக்கு அன்பு ஏற்படுமல்லவா? இதற்கு உதாரணம் வேண்டுமானாலும் சொல்லுகிறேன். தோழர் காந்தியவர்களை தனக்கு சரிசமமாய் பாவித்து சர்க்காரோடு ராஜிபேசிய தோரணையில் சம்பாஷணை நடத்தி ஒப்பந்தம் செய்து இருவர் கையெழுத்தும் ஒரு ஆதாரத்தில் இருக்கத்தக்க மாதிரியாய் நடந்து காந்தியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் இருப்பதுபோல் காட்டிக்கொண்ட இர்வின் பிரபு இந்தியர்களின் அன்பையும், மதிப்பையும் பெற்று காந்தியார் வாயிலேயே இர்வின் பிரபுவை மகாத்மா என்று சொல்லும் படியாகக் கூட ஏற்பட்டு விடவில்லையா? ஆதலால் காந்தியாரிடம் மரியா தையும், மதிப்பும், பக்தியும் இருப்பதாக ஆண்ட்ரூ° துரை இர்வின் பிரபு போன்றவர்கள் அல்லாமல் ஒரு சாதாரண ஜீவன்-அதாவது வெருப்பாகவும், கேவலமாகவும்...

கடன்பட்டவர்களுக்குச் சிறைவாசம்

கடன்பட்டவர்களுக்குச் சிறைவாசம்

கடன்பட்டவர்கள் கொடுக்க சக்தி அற்றுப்போவது ஒரு சாதாரண சம்பவமேயன்றி அது ஒரு குற்ற (கிரிமினல்) நடவடிக்கையாகாது. கடன் கொடுத்து வாங்குவது என்பது ஒரு சூதாடுவது போன்ற காரியம். அதாவது பிரை°சீட்டு போட்டவன் தனக்கு பிரை° (லாபம்) எதிர்பார்ப்பது போன்ற காரியமாகும். எப்படியெனில் கடன் கொடுத்து வாங்குவது என்பதில் எவ்வித கருணையும், அன்பும், தரும சிந்தனையும், உபகாரமும் கிடை யவே கிடையாது. வெரும் லாபத்தை வெளிப்படையாய் எதிர்பார்த்துக் கடன் கொடுப்பது தவிர வேறில்லை. பிரை° சீட்டு போடுபவனும், லாபத்தை எதிர்பார்த்தே போடுகிறானே ஒழிய வேறில்லை. ஆகவே ஒருவனுக்குப் பிரை° வரவில்லையானால் பிரை° சேர்த்தவனை ஜெயிலில் வைக்க முடியுமா? அதுபோல் கடன் கொடுக்கப் பட்டவன் திருப்பிக் கொடுக்க சக்தியற்றுப் போனால் அதை ஒரு குற்றமாகக் கருதுவதும், அதை ஒரு குறைவாகக் கருதுவதும் முதலாளி ஆதிக்கத் தன் மையாகுமே ஒழிய அது சமதர்ம நீதியாகாது. அன்றியும் அது கொடுமை யானதும், முட்டாள் தனமானதுமான குணமுமாகும். கடன்...

பொது உடமை

பொது உடமை

பொது உடமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது. கொஞ்ச காலத்திற்குமுன் நா°திகம் என்கின்ற வார்த்தையும் இந்தப்படிதான் மக்கள் காதுக்கு ஒரு பெரிய அதிருப்தியானதும், வெறுப்பானதுமான சப்தமாகக் கருதப்பட்டுவந்தது. என்றாலும் இப்போது, அது ஒரு தர்க்கவாதத்துக்கு ஏற்றதாகவும், சிலர் அதை ஒரு நாகரீகமாகக் கருதவும் சிலர் அவ்வார்த் தையின் கருத்தை, சாதாரண நோக்கத்தோடு கவனித்து “அது அவரவர்கள் அபிப்பிராயம்” என்பதாகவும், சிலர் ஜனசமூக வாழ்க்கைக் கட்டுப்பாட்டிற்கு “அந்தப்படி (கடவுள் என்பதான) ஒரு அபிப்பிராயம் இருந்தால் நல்லது” என்றும் கருதும் படியாகவும் இருந்துவருகின்றது. நா°திக விஷயத்தில் இப்போது ஆத்திரங்காட்டுபவர்கள் எல்லாம் மதப்பிரசாரத்தினால் வாழ லாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரசாரத்தை தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர மற்றவர்களுக்கு அதைப்பற்றி சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது ஜனங்களில் நா°திகத்தைப்பற்றி எந்தக் கூட்டத்திற்காவது சிறிது அதிருப்தி இருக்கும் என்று கருத வேண்டுமானால் அது போதிய...

கல்யாணக் கஷ்டம்

கல்யாணக் கஷ்டம்

நமது நாட்டில் சிறப்பாக இந்து சமூகம் என்பதில் கல்யாணம் என்னும் விஷயம் மிகவும் கஷ்டமும், நஷ்டமும் தரத்தக்க காரியமாயிருந்து வரு கின்றது. ஆனால் கல்யாணம் செய்கின்றவர்களோ, செய்து கொள்ளுகின்ற வர்களோ இந்த கஷ்ட நஷ்டங் களைப் பற்றி கவனியாதவர்கள் போலவும், இது எவ்வளவு கஷ்டமானாலும் நஷ்டமானாலும் அடைந்துதான் தீரவேண்டும் என்றும், இது சமூக வாழ்க்கைக்கு அவசியமாய் அடைந்துதீர வேண்டிய கஷ்ட நஷ்டமென்றும் கருதுகிறார்கள். இது மாத்திரமல்லாமல் இவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகி நடைபெறும் கல்யாணங்கள் நடக்கும் போது ஒருவித சந்தோஷத்தையும், பெருமையையும் கூட அடை கின்றார்கள். இது பழக்கத்தினாலும் வழக்கத்தினாலுமேயாகும். கல்யாண காலங்களில் கல்யாணக்காரருக்கு உண்டாகும் கஷ்ட நஷ்டங்களைப் போலவே கல்யாணத்துக்கு வரும் மக்களுக்கும் கஷ்ட நஷ்டம், வேலைக்கேடு முதலிய பல தொல்லைகளும் விளைகின்றன. 100க்கு 90 கல்யாணங்கள் தங்கள் நிலைமையை சிறிதும் லட்சியம் செய்யாமல் கௌரவத்தையும், ஜம்பத்தையுமே பிரதானமாகக் கருதி பிரத்தி யார் பெருமையாய் பேசிக்கொள்ள வேண்டுமே என்கின்ற காரியத்திற்...

சம்பாஷணை                                      வம்பனுக்கும் – கம்பனுக்கும்  – சித்திரபுத்திரன்

சம்பாஷணை                                      வம்பனுக்கும் – கம்பனுக்கும் – சித்திரபுத்திரன்

  வம்பன்:- என்ன அய்யா கம்பரே! அனாவசியமாக வெள்ளைக் காரர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டு வெளியில்போங்கள் என்று சொல்லுகின்றீரே! இது நியாயமா? கம்பன்:- சொன்னால் என்ன அய்யா முழுகிப்போய்விட்டது. அவர் களுக்கு இங்கு என்ன வேலை? அவர்கள் என்ன நம்ம மதமா? ஜாதியா? ஜனமா? போ என்றால் போகவேண்டியதுதானே? வம்பன்:- அப்படிச் சொல்லிவிடலாமா திடீரென்று. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே; இந்த நாட்டுக்கு அவர்கள் வந்து சுமார் 400, 500 வருஷத்துக்கு மேலாகின்றது. அதுமாத்திரமல்ல இந்த நாட்டு அரசாட்சி பெற்று சுமார் 200 வருஷமாகின்றது. அப்படியிருக்க நீ போ வெளியில் என்று சொல்லுவது நியாயமா? கம்பன்:- 400, 500 வருஷமாய் விட்டதால் ஒருவனுக்குப் பாத்தியம் வந்துவிடுமா? 200 வருஷம் ஆண்டால் அவனுக்கே என்றைக்கும் நிரந்தர மாகிவிடுமா? ஆயிரம் வருஷம் ஐந்நூறு வருஷம் இருந்த மரஞ்செடிகளை வெட்டித்தள்ளி காடுகளைத் திருத்துவதில்லையா? 4000 வருஷம் 5000 வருஷமாய் இருக்கிற பாறைக் கல்லுகளையெல்லாம் டைனாமெட்டு வைத்து உடைத்து...

இந்திய சுதேச சம°தானங்கள்

இந்திய சுதேச சம°தானங்கள்

இவ்வாரம் சிம்லாவில் நடந்த இந்திய சட்ட சபைக்கூட்டத்தில் இந்திய சுதேச சம°தானங்களின் பாதுகாப்புக்காக என்று “இந்தியாவில் அரசர் பெரு மானின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சம°தானங்களின் பாதுகாப்புச் சட்டம்” என்பதாக ஒரு புதிய சட்டம் அரசாங்கத்தாராலேயே கொண்டுவரப் பட்டிக் கிறது. இந்தச் சட்டம் இப்போது கொண்டுவருவதற்குள்ள அவசியத்தை இந்திய அரசாங்க ஹோம்மெம்பர் எடுத்துச் சொல்லும்போது “இந்தியாவில் அரசர் பெருமானின் சர்வாதிகாரத்திலுள்ள சம°தானங்களின் நிர்வாகத் தைக் கவிழ்க்கவோ, அச்சம°தானங்கள் விஷயமாய் பிறர் துவேஷங் கொள்ளும் படி செய்யவோ செய்யப்படும் முயற்சிகளைத் தடுக்க இச்சட்டம் செய்யப்படுகின்றது” என்று சொல்லியிருக்கிறார். சுதேச சம°தானங்கள் என்பவைகள் பிடிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்தகாலம் முதல்கொண்டே இருந்து வருபவையாகும். சில அதற்கு முன்பு இருந்தே – இருந்து வருவனவுமாகும். அப்படியிருக்க இத்தனை காலம் பொருத்து இப்பொழுது அவைகளைக் காப்பாற்ற என்ப தாக புதியசட்டம் ஒன்று ஏன் செய்யப்படவேண்டும் என்பதைக் கவனித்தால் அதில் ஏதோ ஒரு இரகசியம் இருக்கவேண்டுமென்பது விளங்காமல் போகாது. இதுபோலவே...

கபடநாடகக் கடவுள்  – சித்திரபுத்திரன்   

கபடநாடகக் கடவுள் – சித்திரபுத்திரன்  

  தோழர் காந்தியவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் கட் டளைப்படி செய்வதாகச் சொல்லி வருவது யாவரும் அறிந்ததாகும். பலர் அதை உண்மையென்று நம்பியும் வருகிறார்கள். ஏன் அந்தப்படி இருக்கக் கூடாது என்று வாதமும் பேசுகிறார்கள். தோழர் காந்தியவர்கள் ஏர்வாடா சிறையில் சென்றவாரம் இருந்தகாலத்தில் ஹரிஜனங்களுக்கு வேலை செய்ய சகல சௌகர்யங்களும் சர்க்கார் தனக்கு அளிக்காவிட்டால் பட்டினிகிடக்க வேண்டுமென்று கடவுள் கட்டளை இட்டதாகச் சொல்லி பட்டினி இருந்தார். சர்க்காரை எந்தவிதமான தனி சுதந்திரமும் கடவுள் கேட்க வேண்டாம் என்று சொன்னார் என்று, வேண்டியதில்லை என்றார். பிறகு ஹரிஜன சேவை செய்ய கடவுள் சொல்லுகின்றார் என்று சொல்லி சில சுதந்திரம் கேட்டார். சர்க்கார் சில சௌகரியங்கள் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தவுடன் பட்டினியை நிறுத்தும் படி கடவுள் கட்டளையிட்டதின் பிரகாரம் பட்டி னியை நிறுத்திவிட்டதாக சர்க்காருக்கு வாக்கு கொடுத்துவிட்டார். பிறகு மாலையில் கடவுள் அந்த வாக்கை நிறைவேற்றமுடியாமல் மறுபடியும் காந்தியாரைப் பட்டினி கிடக்கும்படி செய்ததுமாத்திரமல்லாமல் காந்தி யாரை...

மனிதன் ஒரு ஜீவப்பிராணியே                 உருப்புகளின் அமைப்புக்குத் தக்கபடியே பகுத்தறிவு  – தோழர் ஈ.வெ.ராமசாமி

மனிதன் ஒரு ஜீவப்பிராணியே                 உருப்புகளின் அமைப்புக்குத் தக்கபடியே பகுத்தறிவு – தோழர் ஈ.வெ.ராமசாமி

  உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன் தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவைகளாவே இருந்துவருகின்றன. அந்தச் சரீரப்பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கு ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காத ஜீவன் கிடை யவே கிடையாதெனலாம். ஆனால் எல்லா ஜீவராசிகளும் என்றைக்காவது ஒரு நாள் ஜீவிப்பற்று செத்தே போகும் என்பது மாத்திரம் அனுபவ சித்தாந்தமாகும். உலகிலுள்ள மற்ற எல்லா ஜீவராசிகளைப்போலவே மனிதவர்க்கம் என்னும் ஜீவராசியும் ஒன்றாகும். ஒரு மனிதனும் ஒரு யானையும்  ஒரு எறும்பும் ஒருசிறு பேனும் பூதக் கண்ணாடிமூலம் பார்த்தரியத் தக்க அதி நுட்பமான ஒரு கிருமியும் எல்லாம் ஒரே தத்துவத்தைக் கொண்ட ஜீவ ராசிகளாகும். ஆனால் அவை தோற்றத்திலும்-செயலிலும் வேறுபட்டிருக்கலாம். அப்படியானால் “மனிதனுக்கும் கழுதைக்கும் வித்தியாசமில்லையா?” என்று ஒருவர் கேட்கலாம். ஜீவ தத்துவத்தில் வித்தியாசமில்லை என்றுதான் பதில் சொல்லுவேன். ஏதாவது வித்தியாசம் உண்டு என்று சொல்லவேண்டு மானால், ஒரு நாய் ஜீவனுக்கும் ஒரு கழுதை ஜீவனுக்கும்...

“வெடிகுண்டு”

“வெடிகுண்டு”

சுயமரியாதை இயக்கக் கொள்கையை ஆதரித்து மதுரையில் ‘வெடி குண்டு’ என்னும் பத்திரிகை தோன்றி தொண்டாற்றி வருவது யாவரும் அறிந்ததேயாகும். வியாபார முறையை விட்டும், சமயத்திற்கு தகுந்தபடி மாறிக்கொள்வதை விட்டும், தனக்கு என்று ஏதாவது ஒரு கொள்கையும் இல்லாமல் “பரிசுத்தமாய்” இருக்கும் நிலையை விட்டும் நடைபெறும் பத்திரிக்கைகள் நமது நாட்டில் அதாவது பகுத்தறிவற்று பாமரத்தன்மை பூண்டு இருக்கும் ஜனங்கள் மலிந்தநாட்டில், கவலையற்று நடைபெறுவது என்பது மிக மிக கஷ்டமான காரியமாகும். இந்தக் காரணத்தால் இதுசமயம் “வெடிகுண்டு” பத்திரிகை மிக்க நெருக்கடியில் நடைபெறுகிறது என்று நாம் கேள்விப்படுவதில் அதிசயமொன்றுமில்லை. இருந்தபோதிலும் மதுரை சுயமரியாதை சங்கத்துக்கு மிகுதியும் ஆதரவளித்து வருபவரும், முனிசிபல் கௌன்சிலரும் செல்வாக்கும், செல்வமும் பொருந்தியவருமான தோழர் ஆ. அ. ஆறுமுகம் அவர்களது உதவியாலும் ஆதரவாலும் ஒருவாரு நடத்தப் பட்டு வருகிறது என்றாலும் சதா சர்வகாலமும் ஒரு பத்திரிகை ஒருவரின் ஆதரவையும், உதவியையும் கோறி நிற்காமல் தன் காலிலே தைரியமாய் நிற்கவேண்டுமாதலால் சுயமரியாதை இயக்க...

*ஜமீன்கள் பெயர்                                          ஜமீன்கள்                                       ஜமீன்கள்                                                                                                                    ...

ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு

ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு

தோழர்களே! மொத்த வி°தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்கு மேல் ஜமீன் முறை ஆக்ஷியிலிருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட தானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். நாம் உலக பொதுஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள்  கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில் தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங் களில் இம்மாதிரி மகாநாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்பார்க்கி றேன். உதாரணமாக லேவாதேவிக்கார்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளி கள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகா நாடு, வீடுகளின் சொந்தக் காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லா தார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக் காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும்...

நாகர்கோவிலில் ஈ.வெ. இராமசாமி

நாகர்கோவிலில் ஈ.வெ. இராமசாமி

முகவுரை தோழர்களே! தோழர் பி. சிதம்பரம் அவர்கள் எம்.எல்.ஏ. °தானம் பெற்றதற்காக ஏற்பட்ட பாராட்டு விழவிற்குத் தலைமை வகிப்பது என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாவேயிருக்கின்றது. இதற்காகவே குற்றாலத்தி லிருந்து தேக அசௌக்கியத்தை கவனிக்காமல் வந்திருக்கின்றேன். தோழர் சிதம்பரம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு தூண் போன்றவர் அவரது எழுத்துக்களும், அபிப்பிராயங்களும் எனக்கு தீவிரமாய் செல்ல படிகள் போல் உதவின. நமது நாட்டில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் களில் தோழர் சிதம்பரம் முக்கியமான ஒருவராவர். அவர் இந்த 6, 7 வருஷ காலமாய் இயக்கத்துக்கு செய்துவந்திருக்கும் தொண்டு மிகவும் போற்றக் குரியதாகும். இயக்கத்தின் பேரால் அவர் யாதொரு பயனையும் அடைந்த தில்லை என்பதையும், இயக்கத்தால்  அவருக்கு பல கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டதும் எனக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட ஒருவரை சுயமரியாதைச் சங்கம் பாராட்ட வேண்டியது கடமையாகும். ஆதலால் தான் நான் இத் தலைமைப் பதவியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்கவந்தேன் ஆனால் இந்த சமயத்தில் எனது பழய...

மோசம்போனேன்! ஈ°வரா!  – ஒரு தொழிலாளி

மோசம்போனேன்! ஈ°வரா! – ஒரு தொழிலாளி

  உலகில் நடைபெற்றுவரும் சகல காரியங்களும் ஈ°வரனாகிய உன்னாலேயே நடத்தப்பட்டு வருவதாக நான் நம்பி மதிமோசம் போனேன்! ‘அவனன்றி ஓரணுவுமசையாது’ என்ற சோம்பேரி வேதாந்தத்தை உண்மை யாக நம்பி இந்தக்கதிக்கு ஆளானேன். நான் பிறந்ததிலிருந்து இதுவரை அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறப்பதற்கு, நான் “முன்ஜென்ம” த்தில் செய்த “பாவமே” காரணமென நம்பி என்னை நானே கெடுத்துக் கொண் டேன்! ஒரு சில ஆசாமிகள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் என் போன்ற ஏழைத் தொழிலாளிகளின் உதவிகொண்டு இன்ப வாழ்வு நடாத்தி வருவதற்கு அவர் கள் “முன்ஜன்மத்தில்” செய்த “பூஜா” பலனே காரணம் என நம்பி நான் முழுமூடனானேன்! “கடவுளை நம்பினவர் கைவிடப்படார்” என்றதை மெய்யென நம்பி எனது தற்போதைய இழிந்த நிலைக்கு ஆளானேன்! நான் சுகவாழ்வை அடையவேண்டுமானால்-என்போன்ற ஏழைத் தொழிலாளிகள் இன்ப வாழ்க்கையை எய்த வேண்டுமானால் முதலில் ஈ°வர நம்பிக்கையிலிருந்து விடுவித்துக் கொள்வதன் மூலமே அதை அடைய முடியும் என்ற உண்மையை...

தோழர் பி. சிதம்பரம்

தோழர் பி. சிதம்பரம்

நாகர்கோவில் பிரபல வழக்கறிஞரும், நமது சுயமரியாதை இயக்கத் திற்கோர் தூண் போன்றவரும், நமது மகாநாடுகள் பலவற்றில் தலைமை வகித்து அரிய சொற்பொழிவாற்றியவருமான தோழர் பி. சிதம்பரம் பி.ஏ., பி. எல். அவர்கள் திருவிதாங்கூர் சட்டசபைக்கு வர்த்தகத் தொகுதியில் அபேட்சகராக நின்று போட்டியின்றித் தெரிந்தெடுக்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். தோழர் சிதம்பரம் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமைமிக்குடையார், சரித்திர ஆராய்ச்சியில் நிபுணத்துவமுடையார், சட்ட ஆராய்ச்சியில் வல்லுநர், சமய ஆராய்ச்சியில் பேரறிஞர். சமதர்மப் பற்றுடையார். இவர் சட்டசபைக் குத் தேர்ந்தெடுக்கப் பெற்றது, நமது சுயமரியாதை இயக்கத்திற்கு ஓர் பெரும் வெற்றியென்றே கருதுகிறோம். இவர் தேர்தலால் திருவிதாங்கூரில் வருணாச் சிரம ஆதிக்கம் ஒழிந்து எங்கும் சமத்துவமும், சுயமரியாதையும் பொங்கிப் பொலிந்து மக்களெல்லோரும் சாந்தியும், சமாதானமுமுற்று சமதர்ம நெறியை அடைவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 13.08.1935      

தொழிலாளிகள் தொண்டு

தொழிலாளிகள் தொண்டு

இயந்திர ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமானால் இன்றைய நிலையில் தொழிலாளி களுக்கு வேலை நிறுத்தம் செய்யும்படி போதிப்பதிலேயே உண்மையான அனுகூலம் ஏற்பட்டுவிடாது. தொழிலாளிகளுக்கு, மில் ஏஜண்டுகளும், நிர்வாகிகளும் அடிக்கும் கொள்ளையைப்பற்றி விளக்கிக் காட்டவேண்டும். ஏனென்றால் தொழிற் சாலைகளில் முதல் போட்ட முதலாளிகள் அடையும் லாபத்தைவிட நிர்வாகி களும், உத்தியோக°தர்களும் அடிக்கும் கொள்ளையே அதிகம். நிர்வாக ஏஜெண்டுகளுக்கு பொருப்புக் கிடையாது. உதாரணமாக ஒருவர் துணி நெய்யும் ஆலையையோ, ஒரு நூல் நூற்கும் ஆலையையோ ஏற் படுத்தி விட்டாரேயானால் அதன் நிர்வாக ஏஜெண்டு என்கின்ற முறையில் தனக்கு ஒருசம்பளம், கமிஷன் முதலிய லாபங்களை ஏற்படுத்திக் கொள் ளுகிறார். இவருக்கு இந்தச் சம்பளமும், கமிஷனும் மில்லுக்கு லாபம் வந்தா லும் நஷ்டம் வந்தாலும் அதைப்பற்றி பொருப்பு இல்லாமல் கிடைத்து வரும்படி ஏற்பாடு செய்துகொள்ளுகிறார். இது தவிர சுயநலமாகவும், நம்பிக்கைத் துரோகமாகவும் மற்ற தனது நண்பர்களுக்கு அல்லது தனக்குப் பலபேர்களில் வேண்டியவர்கள் என்பவர்களுக்கு...

மீரத்கே° அப்பீல் முடிவு            பாராட்டத்தக்கதே

மீரத்கே° அப்பீல் முடிவு            பாராட்டத்தக்கதே

மீரத் சதி வழக்கு என்பது பொதுவுடமைக் கொள்கையை பிரசாரம் செய்ததற்காக ஏற்பட்டதென்பதும், அதில் பொதுவுடமைப் பிரசாரம் செய்த தாக ருஜுக்கள் விடப்பட்டிருப்பதோடு சில எதிரிகள் பொதுவுடமைக் கொள்கை தங்களுடைய கொள்கை என்பதாக ஒப்புக்கொண்டிருப்பதும், அவ் வழக்கை சிறிதாவது கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். எதிரிகளின் வக்கீல்கள் சிலரின் வாதங்களிலும் இந்த விஷயங்கள் ஒப்புக்கொள்ளப் பட்டிருப்பதாய் காணப்படுவதும் விளங்கும். இப்படி எல்லாம் இருந்தும் பலருக்கு (மெஜாரிட்டியாருக்கு) விடுதலையாகியிருப்பதும், மற்றும் பலருக்கு மாதக்கணக்கிலும், ஒன்று இரண்டு வருஷக்கணக்கிலும் தண்ட னையைக் குறைத்து இருப்பதையும் கவனித்துப்பார்த்தால் பொதுவுடமைக் கொள்கை விஷயமாக நமது மக்கள் பலருக்குள்ள பயமும், நடுக்கமும் நிவர்த்தியாகத் தக்க அம்சங்கள் பல அதில் மிகுந்து இருப்பதை உணரலாம். அதென்னவென்றால் ஒரு மனிதன் பொதுவுடமைக் கொள் கையை கொண்டவனாக இருப்பதும் அதை எடுத்து பிறருக்கு விளங்க உரைப்பதும் மற்றவர்களையும் பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி பிரசாரம் செய்வதும் எவ்விதத்தும் குற்றமாகாது என்பது விளங்கும். அன்றியும், பொதுவுடமைக் கொள்கைப்...

யந்திரத்தின் பெருமை

யந்திரத்தின் பெருமை

யந்திரங்களை எல்லாம் “பேயின்” அம்சம் என்று கூறி வந்த காலம் ஒன்று இருந்தது. அந்தக்காலம் மக்களுக்கு காட்டுமிராண்டி உணர்ச்சியைப் பரப்பப்பட்ட காலம் என்றே சொல்ல வேண்டும். அல்லது முதலாளித் தன்மையின் சூட்சிப் பிரசார காலம் என்றே சொல்ல வேண்டும். சுதந்திர அறிவை உபயோகித்து கூர்மையான ஆராய்ச்சி செய்தபின், எவருக்கும் பாமரத் தன்மையாலும் சூட்சிப்பிரசாரத்தாலும் ஏற்பட்ட தன்மைகள் மாறி விடும். உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரியான பாமரத்தன்மையும் சூட்சி ஆதிக்கமும் இருந்து வந்ததெனினும் அவை அறிவுக்கு மதிப்புத் தோன்றிய பிறகு மறைந்துகொண்டே வருகிறது. பெரும்பாகம் மறைந்தும் விட்டது. அதுபோல்தான் நம் இந்தியாவிலும் இன்னும் சில விஷயத்தில் காட்டுமிராண்டித் தன்மையும், பாமரத்தன்மையும்; புத்தியையும் அனுபவ பலன்களையும், உபயோகித்துப் பார்க்காத பல விஷயங்களும் இருந்துவரு கின்றன. அவற்றில் ஒன்றே யந்திரங்களைப் பேயின் தத்துவமென்பதும். இந்தத் தத்துவம் பெரும்பாலும் நீங்கிவிட்டதென்றாலும் சூட்சிப் பிரசாரத் தின் பயனாய் சிற்சில இடங்களில் இன்னும் சிறிது பேசப்பட்டே வருகின்றது. யந்திரங்கள் பேயின்...

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை  – சித்திரபுத்திரன்

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

  சு-ம:- ஒரு மனிதன் உயர்தரப்படிப்பு அதாவது பி.ஏ., எம்.ஏ., ஐ.சி.எ° முதலிய படிப்புப் படி த்து பட்டதாரியாயிருப்பதற்கும் மற்றும் தொழில் சம்மந்தமான படிப்பில் நிபுணத்துவம் பெற்று இருப்பதற்கும், மற்றொரு மனிதன் அவற்றை அடையாமல் தன் கையெழுத்துப் போடக்கூடத் தகுதியில்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் சொல்லுகிறாய்? பு-ம :- அவனுக்குப் போதிய அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆதலால் அவன் அவற்றை கற்க முடியாமல் போயிருக்கும். சு-ம :- அப்படிச் சொல்ல முடியாது. இதோ பார் இந்த மனிதனை, அவன் எவ்வளவு சுருசுருப்பாகவும், புத்திசாலித்தனமாய் பேசக்கூடிய வனாகவும், மண்வெட்டுவதிலும், பாரம் சுமப்பதிலும், கோடாரியால் விறகை வெட்டுவதிலும் எவ்வளவு புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறான். நாம் நான்கு பேர் சேர்ந்தால் கூட செய்ய முடியாத வேலையை அவன் ஒருவனே செய் வது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பார். இப்படிப்பட்டவனை புத்தி யில்லாதவன் என்று சொல்லிவிட முடியுமா? ஆதலால் இவனுக்கு அறிவு இருக்கிறதே இவன் ஏன் பட்டதாரியாகவில்லை? பு-ம :-...

தோழர் காந்தி மறுபடியும் சிறைப்பட்டார்

தோழர் காந்தி மறுபடியும் சிறைப்பட்டார்

தோழர் காந்தியவர்கள் தனது 35-சகாக்களுடன் ஆமதாபாத்தில் வைத்து சிறைப்படுத்தப்பட்டு விட்டார். இதைப்பற்றி சுதேசமித்திரனும், தமிழ் நாடும் ஹிந்துவும் எழுதி இருப்பதுபோல் இதில் ஒன்றும் அதிசய மில்லை. ஆனால் அப் பத்திரிகைகளுக்கு காங்கிரசின் குற்றத்தையும், காந்தியார் குற்றத்தையும், அவ்விருவர்களுடைய பயனற்ற வேலைக ளையும், எடுத்துக் காட்ட இப்பொழுதாவது ஓரளவு தைரியத்துடன் வெளி வந்தது ஒரு பெரிய ஆச்சரியமேயாகும். இதில் சுதேசமித்திரன் பத்திரிக்கையானது காந்தி அர°டைப் பற்றி தனது ஆக°டு 1-ந் தேதி தலையங்கத்தில் “மரண தண்டனைக்கு உள் பட்டிருக்கையில் ஜனங்களின் மதிப்புக்கு பாத்திரரான தலைவர்கள் காரிய சாத்தியமானவைகளாவும், பலன் தரத்தக்கவைகளாகவுமுள்ள வழிகளை விட்டுவிட்டு தங்களுடைய கொள்கையின் விசேஷத்தை மெய்பிப்பதி லேயே கருத்துடையவர்களாக இருக்கிறார்களென்றும், காங்கிரசை பின்பற்று வோரான சாமான்ய ஜனங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் உடனே – கைதியாகி சிறை செல்லுவதை விட்டுவிட்டு அனுபவ சாத்தியமான காரியங் களை கவனிக்கவேண்டும்” என்பதாகவும் எழுதியிருக்கிறது. இதன் கருத்து என்னவென்பதை நாம் அதிகம் விளக்க வேண்டிய...

ஏன் தோற்றார்?  – சித்திரபுத்திரன்   

ஏன் தோற்றார்? – சித்திரபுத்திரன்  

  கேள்வி :- தோழர் காந்தியார் ஏன் தோல்வி அடைந்தார்? பதில் :- காந்தியார் அரசியலில் தலையிட்டபோது சமூக சீர்திருத் தத்தைப்பற்றியே பிரதானமாய்ப் பேசி பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றார். அதாவது, தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் இந்து மு°லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும், மதுபானம் ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் சொன்னார். ஒவ்வொரு வீட்டிலும் ராட்டினம் சுற்றப்பட்டாலொழிய சுயராஜ்ஜியம் கிடைக்காதென்றார். நாளாக நாளாக தீண்டாமையை ஒழிப்பதை ஒரு பக்கம் பேசிக் கொண்டு மற்றொருபுரம் வருணாச்சிரம தர்மத்தை ஆதரித்தார். ஜாதிப்பிரிவு முறை ஜாதிப்படி தொழில் முறை அப்படியே இருக்கவேண்டும். ஆனால் ஜாதிகளில் மேல் கீழ் வித்தியாசம் கூடாது என்று சொல்லிப் பூசி மெழு குகிறார். பிராமணனாய் பிறந்தாலொழிய பிராமணனாக முடியாது என்று சொன்னார். அப்புரம் சுயராஜ்ஜியம் கிடைத்துவிட்டால் தீண்டாமை தானே ஒழிந்துவிடும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் கிளர்ச்சியால் தீண்டப்படாத வர்கள் என்பவர்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்...

தோழர்களே! கவலைப்படாதீர்கள்

தோழர்களே! கவலைப்படாதீர்கள்

காங்கிர° °தாபனங்கள் மூடப்பட்டது பற்றியும், காந்தீயம் தோற்றுப் போய் விட்டது பற்றியும் பலர் மகா விசனப்படுவதாகத் தெரிய வருகிறது. இன்றைய வரையில் காங்கிரசும், காந்தீயமும் நம் மக்களுக்கு என்ன வித மான பயனை உண்டாக்கிற்று என்பதைப்பற்றி நாம் அதிகம் எழுத வேண்டியதில்லை. காங்கிர° ஏற்பட்டு ஏறக்குறைய ஐம்பது வருஷ காலமாகின்றது. ஐம்பது வருஷ காலத்தில் அரசாங்கத்தாரால் காங்கிர° கேட்டபடி (சீர்திருத் தங்கள் என்னும் பேரால்) எவ்வளவோ அதிகாரங்களும், பதவிகளும் இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்டுமிருக்கின்றன. இதன் பயனாய் நாட்டில் கோடீ°வரர்கள் பெருகினார்கள். பதினாயிரக்கணக்கான ஏக்கரா பூமியுடைய ஜமீன்தாரர்கள், மிரா°தாரர்கள் அதிகமானார்கள். மாதம் 1 க்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் பெரும் பதவியாளர் களும், உத்தியோக°தர்களும் ஏராளமானார்கள். மாதம் 1000, 10000 ரூபாய் வரும்படி சம்பாதிக்கும் வக்கீல்களும், டாக்டர்களும் லக்ஷக்கணக்கில் பெருகினார்கள். தவிர மற்றொருபுரம் பாடுபடாமல் தேசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழும் மக்கள் பலர் பெருகினார்கள். அதாவது...

ருஷியாவின் வெற்றி  ஐந்து வருட திட்டத்தின் பலன்

ருஷியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன்

  ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது.  சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப் படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன் குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரசாஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச் செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர் களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப்பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந் திருக்கின்றனவென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வரு கின்றனர்.  ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடை முறை யில் சாத்தியமாகாது...

கத்தோலிக்க மத°தர்கள் யோக்கியதை

கத்தோலிக்க மத°தர்கள் யோக்கியதை

அமெரிக்க கத்தோலிக்க தினசரியிலிருந்து கீழ்கண்ட செய்தியை நியூயார்க் உண்மை நாடுவோர் (கூசரவா ளநநமநச) பத்திரிகை பிரசுரித்திருக்கிறது.  அதாவது சிங்சிங் ஜெயிலில் உள்ள பல திறப்பட்ட மதங்களைச் சார்ந்த கைதிகளின் விபரம் கீழ் வருமாறு:- கத்தோலிக்கர்கள்                                                                 855 பிராட்ட°டண்ட்                                                      518 யூதர்கள்                                                                         177 கிறி°தவ விஞ்ஞானிகள்                                               20 மகமதியர்கள்                                                             2 புத்தர்கள்                                                                         1 மதமற்றவர்கள்                                                        8 1,581 சிங்சிங் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களில் கால்வாசிப் பேர்களே கத்தோலிக்கர்களாக இருந்தும், நாட்டில் குற்றம் செய்து சிறைக்காவலில் அடைபட்டிருக்கும் (அ) யோக்கியர்களின் கணக்கு 100-க்கு 50-க்கு மேல் ஆகின்றது.  ஆனால் மதமற்றவர்களின் கணக்கு 1/2 பர்செண்டேயாகும். மதவெறிக்குத் தகுந்தார்போல் குற்றவாளிகளின் எண்ணிக்கை விபரம் காணப்படுவதை வாசகர்கள் கவனிப்பதோடு, மதம் மக்களை யோக்கியப் பொருப்பற்றவர்களாக்கவே பயன்படுத்துகிறதென்பதையும் இதுசமயம் ஞாபகப் படுத்திக் கொள்ளவும் விழைகின்றோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 23.07.1933    

காந்தீயத்தின் கதி

காந்தீயத்தின் கதி

தோழர் காந்தியவர்கள் அரசியலில் தலையிட்டு தலைமை °தா னத்தை அடைந்ததற்கு முக்கிய காரணம் ஒருபுறம் அவர் போட்டுக்கொண்ட மத சம்மந்தமான வேஷமும், கடவுள் சம்மந்தமான பேச்சும் மற்றும் சத்தி யம், அகிம்சை, சத்தியாக்கிரகம், ஆத்ம சுத்தம், ஆத்ம சக்தி, பரித்தியாகம், தவம் முதலிய வார்த்தைகளும், மற்றொரு புறம் அவரது சிஷ்யர்கள்  அரசிய லின் பேராலும், தேசீயத்தின் பேராலும், தங்கள் வாழ்நாளைக் கழிக்க ஏற்பாடு செய்துகொண்ட தொண்டர்கள், தேசீய வாதிகள், பத்திராதிபர்கள் ஆகிய கூட்டத்தார்கள் காந்தியாரைப்பற்றி அவர் ஒரு ரிஷி  என்றும், முனிவர் என்றும், கிறி°து என்றும், நபி என்றும் மகாத்மா என்றும் விஷ்ணுவின் அவதாரமென்றும், சொல்லி பிரசாரம் செய்ததும், இனி ஒருபுறம் காந்தியைக் கடவுளாகவும், விஷ்ணுவாகவும் மற்றும் பலவிதமாகவும் சித்திரங்கள் எழுதி படம் போட்டு விளம்பரம் செய்ததும், மற்றும் லௌகீகத்திலும், வைதீகத் திலும் விளம்பரம் பெறவும் சுயகாரிய சித்தி பெறவும் ஆசைப்பட்ட பணக் காரர்களும், படித்தவர்களும் முறையே லக்ஷக்கணக்காகத் திரவிய சகாயமும்...

“ஊஹஞஐகூஹடு”                                                 (“மூலதனம்”)

“ஊஹஞஐகூஹடு”                                                 (“மூலதனம்”)

பொது உடமைக் கொள்கைகளைப் பற்றிய நூல்களில் எல்லாம் தலை சிறந்து விளங்குவதும் அது சம்பந்தமான எவ்வித சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சமாதானம் காணக் கூடியதுமான ஒரு புத்தகம் எது என்றால் காரல் மார்க்° அவர்களால் சுமார் 60, 70 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட (ஊயயீவையட)  கேப்பிட்டல் என்கின்ற ஆங்கிலப் பெயருடைய புத்தகமே யாகும். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன் இதற்கு வேண்டிய விஷயங்களைத் தொகுக்கவும், மேல் ஆதாரங்களைக் கண்டு பிடிக்கவும் தோழர் காரல் மார்க்° அவர்கள் 1485 பு°தகங்களை வாசித்துப் பார்த்து விபரம் தெரிந்து கொண்ட பிறகு அந்நூலை எழுதி இருக்கிறார். ஜெர்மனியில் கென்சிங்டன் என்னுமிடத்திலுள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு அரையில் இருந்து கொண்டு இந்த புத்தகம் எழுதி இருக்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன் மா°கோவில் காரல் மார்க்° இறந்த 51 வது வருடப் பூர்த்திவிழாக் கொண்டாடும்போது மேல்கண்ட கட்டிட அரை போல் மா°கோவில் ஒரு அரை கட்டி அதில் மேற்குறிப்பிட்ட 1485...

“குடி அரசை” ஒழிக்க பண வசூலாம்

“குடி அரசை” ஒழிக்க பண வசூலாம்

“குடி அரசை” எதிர்த்துப் போராட கத்தோலிக்கர்கள் நிதி என்ற பெரிய தலைப்பின் கீழ் “கத்தோலிக் லீடர்” என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு முறை யீடு காணப்படுகிறது. கத்தோலிக்க கிறி°தவ பாதிரிகள் சு.ம. இயக்கத்தின் மீதும், ‘குடி அரசின்’ மீகும், ஆத்திரங்கொண்டு, அவைகளை அழிப்பது என்கிற முடிவு கொண்டு நிதி வசூல் செய்து வருகிறார்கள்.  அவர்களின் வேண்டுகோளின் பிரகாரமே இது வரையிலும் ரூ. 250க்கு மேல் பணம் சேர்த்திருப்பதாகவும் நமக்குத் தெரிய வருகிறது.  சபாஷ்! கத்தோலிக்கர்களே!! மெச்சினோம் புத்திசாலித்தனத்தை!!! குடி அரசு – செய்திக் குறிப்பு – 16.07.1933

கதர்

கதர்

கதரைப் பற்றியும், அதை அரசியல் பிழைப்புக்காரர்கள் எப்படி உபயோகித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதைப் பற்றியும், கதர் புரட்டு என்கின்ற தலைப்பின் கீழ் இதற்கு முன் பல வியாசங்கள் எழுதியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்திருக்கின்றோம். இதன் பயனாய் அரசியல் வாழ்வுக்காரர்களும், அரசியலில் கலந்து கொள்ளுவதன் மூலமாய் மக்களை ஏமாற்றி பயனடையக் கருதும் சில சுய நலக்காரர்களும், தவிர மற்ற மக்கள் யாவரும் கதரை அடியோடு பஹிஷ்கரித்து இருப்பதும் யாவரும் அறிந்ததேயாகும். ஆனால் இப்போதும் அதைப் பற்றி ஏன் எழுதுகிறோம் என்று சிலர் கருதலாம். இது எழுதவேண்டியதற்கு ஏற்பட்ட முக்கிய காரணம் என்னவென் றால், சுயமரியாதை இயக்கத்தை பழிக்கவும், தூற்றவும், அதன் மீது மூடப் பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாக்கவுமான, இழிதகைப் பிரசாரத்துக்கு அனுகூலமாக சில காங்கிர°காரர் என்று சொல்லிக்கொண்டு சோம்பேரி யாய் இருந்து வயிர்வளர்க்கும் வீணர்கள் “சுயமரியாதைக்காரர்கள் கதரை வெறுக்கிறார்கள்” என்றும் “ஏழை மக்களைக் காப்பாற்றும் கதருக்கு விரோதமாய் இருந்து ஏழைகளுக்கு துரோகம்...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

அசூயை                       –                      பொறாமை அத்தியந்த               –                      மிகவும் நெருக்கமான ஆக்கினை              –                      கட்டளை ஆஸ்பதம்                –                      இடம், பற்றுக்கோடு கெம்பு    –                      சிவப்பு இரத்தினக்கல் சகடயோகம்         –                      குருவுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டிற்                                                                               சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன் சந்தியா வந்தனம்                 –                      சந்தி வணக்கம் சாக்காடு                   –                      இறப்பு சிடுக்கை நேரம்                       –                      பெண்கள் தலைமுடியில்                                                                                                                  சிக்கு எடுக்கும் நேரம் சிலாகித்தல்        –                      புகழ்தல் தர்க்கீத்து                  –                      விவாதித்து தர்ப்பித்து                 –                      பயிற்சி, ஒழுக்கம் தியங்கி                       –                      சோர்வடைந்து, புத்திமயங்கி, கலங்கி நிர்த்தூளி                –                      முழு அறிவு நிர்தாரணம்          –                      நிலை நிறுத்தல் பஞ்சராப்போல்...

நாகம்மாள் மறைவு                                   எல்லாம் நன்மைக்கே 

நாகம்மாள் மறைவு                                   எல்லாம் நன்மைக்கே 

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11-5-33 தேதி மாலை 7-45 மணிக்கு ஆவி நீத்தார்.  இதற்காக நான் துக்கப்படுவதா?  மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.  எப்படியிருந்தாலும் நாகம்மாளை “மணந்து” வாழ்க்கைத் துணை யாகக்  கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்து விட்டேன்.  நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம் மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.  நான் சுயநலவாழ்வில் ‘மைனராய்’ ‘காலியாய்’ ‘சீமானாய்’ இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக் குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிரத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ–போதிக்கி றேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு...

‘மே’ தினம்

‘மே’ தினம்

சமதர்மப் பெருநாள் 1933-வருடம் மே மாதம் 21-தேதி ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதையோரால்                                                                                                        தமிழ்நாடு முழுமையும் கொண்டாடப்படும்.   உலகெங்கும் கடந்த 50 வருஷமாக மே தினத்தை ஓர் பெருநாளாகத் தொழிலாளர், கிருஷிகள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள்.  தாழத்தப் பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந்நாள் வொன்றே உவந்த  தினமாகும். இந்நாளில் கோடான கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும், குறைகளையும் தெரிவிப்பான் வேண்டி, ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும், உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருந்து வருகிறது. இவ்வருஷம் ‘மே‘ தினமாகிய சென்ற திங்களில் (1933, மே, 1-²) ஆங்கில நாட்டிலும் (நுபேடயனே) பிரான்சிலும் (குசயnஉந) ருஷ்யாவிலும் (சுரளளயை) ஜெர்மனி (ழுநசஅயலே) இட்டலி (ஐவயடல) அமரிக்காவிலும் (ஹஅநசiஉய)  இந்தியாவிலும் (ஐனேயை) ஜப்பானிலும் (துயயீயn) மற்றுமுள்ள தொழிலாளர், முதலாளி தேசங்களில் கோடான கோடி மக்கள் தம்தம் குறைகளைத் தெரிவித்தும், குறைகளுக்குப் பரிகாரம் தேடியும், யோசித்தும், பற்பல தீர்மானங்கள் செய்தும் வந்திருக்கின்றனர்.  இந்த வருஷம் பாரிஸ் பட்டணம், இந்நாளை...

வடஆற்காடு ஜில்லா                          சுயமரியாதை மகாநாடு           

வடஆற்காடு ஜில்லா                          சுயமரியாதை மகாநாடு           

தலைவர் அவர்களே! தோழர்களே! ! இன்று இந்த மகாநாட்டுக்கு வந்த எனக்கு இங்குள்ள பல சங்கங்களால் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுக்கப்பட்டதற்கு பதில் சொல்லுவேன் என்று தலைவர் சொன்னார். வரவேற்புப் பத்திரங்களை ஒரு சடங்காகவே கருதி வருகிறேன், அவை புராணக் கற்பனைகள் போல் இருக்கின்றனவே ஒழிய உண்மைகள் மிக அருமையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட சில விஷயங்களினுடைய பாராட்டுதலும் எனக்குச் சேர வேண்டியதில்லை. அவைகள் எல்லாம் எனக்குத் துணையாய் இருந்து என்னுடன் ஒத்துழைத்து எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டிவந்த வாலிபர்களுக்கே சேர வேண்டியதாகும். ஆதலால் அப்புகழ்ச்சிகளை அவர்களுக்கே சமர்ப்பித்து விடுகிறேன். தோழர்களே! இம்மாநாட்டுக்குத் தலைமை வகித்த தலைவர் தோழர் கே. எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ., பி.எல். அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னை தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேனென்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது ஒரு அளவுக்காவது மதிக்கத்தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று...

கெண்டைக் குஞ்சுகள் – குறும்பன்

கெண்டைக் குஞ்சுகள் – குறும்பன்

பரமசினைப் பார்த்தீர்களா? ஆகாய விமானத்தில் போய் இமயமலையின் அதிக உயரமான சிகரமாகிய ‘எவரஸ்ட்’ டைப் பார்த்துவிட்டு வந்தார்கள், என்று பத்திரிகை கள் கூறுகின்றன. “அங்கே எங்கள் பரமசிவம் இருந்திருப்பாரே, பார்த்தீர்களா” என்று கேட்க வேண்டுமென்று லோகோபகாரப்பிள்ளை ஆவலோடிருக்கிறார். மாமாங்கம் உபாத்தியாயர்:- சமீபத்தில் நடந்த மகாமகத்தை (மாமாங்கம்) பற்றி நீ தெரிந்து கொண்ட தென்ன? பிராமணப்யைன்:- நமது ஹிந்துக்கள் இந்தப் பண நெருக்கடியான காலத்தில்கூட எவ்வளவு கடவுள் பக்தியோடு இருக்கிறார்கள், என்பதைக் காட்டுகிறது சார். உபாத்தியாயர்:- சரி, நீதெரிந்து கொண்டதென்ன? சு.ம. பையன்:- யோக்கியமாய் உலகத்தில் வாழ்வதைவிட ஏமாற்றிக் கொண்டே வாழ்வது ரொம்ப லகுவு என்பது தெரிகிறது சார். ஆஸ்திகக் குழந்தைகள் “குறித்த அளவுக்குமேல் உஷ்ணமோ குளிர்ச்சியோ ஒருவன் உடம் பில் ஏற்பட்டதும் அவன் இறந்து விடுவதற்குக் காரணமென்ன? என்று வைத்தியப் பள்ளிக்கூட (ஆநனiஉயட ளஉhடிடிட) ஆசிரியர் வகுப்புப் பிள்ளைகளைக் கேட்டார், ‘ஹிந்து’ மாணவன்:- அது அவனுடைய தலைவிதி சார். கிறிஸ்து மாணவன்:-...

மற்றொரு பட்டினி விரதம்

மற்றொரு பட்டினி விரதம்

தோழர் காந்தியவர்கள் 8-ந் தேதி சோமவாரம் முதல் 21-நாள் பட்டினி விரத மிருக்கப்போவதாக ஒருவிளம்பரம் வெளியிட்டிருக்கிறார்.  இது பத்திரிகைகளுக்கு ஒரு பெரிய விருந்தாகும்.  காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு பெரிய திருவிழாவாகும். தோழர் காந்திக்கு இந்தப்பட்டினி விரதம் புதியதல்ல.  அவருக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் அதிகமான கவலை இருக்கிறது என்பதை உலகத் திற்கு அறிவிக்க இந்த பட்டினி விரதம் என்பதைத்தான் தக்க ஆயுதமாகக் கொண்டிருக்கிறார். தோழர் காந்தி அவர்கள் ஒத்துழையாமை கிளர்ச்சி நடத்தியகாலத்தில் சுயராஜ்ஜியம் பெற இந்து முஸ்லீம் ஒற்றுமையை மிகவும் முக்கியமானது என்று தான் கருதி இருப்பதாக தெரிவிக்கவேண்டிய சந்தர்ப் பம் வந்த காலத்தில் இந்தமாதிரியாக ஒரு 21 நாள் பட்டினி விரதத்தை வெளிப் படுத்தினார்.  கடைசியாக அது என்ன பயன் விளைவித்தது என்பதும்.  இந்து–முஸ்லிம்கள் அந்தப் பட்டினியை எவ்வளவு தூரம் லட்சியம் செய்தார்கள் என்பதும் யாவருக்கும் வெட்ட வெளிபோல் தெரிந்த காரிய மேயாகும். பிறகு ஒரு தடவை தனது ஆஸ்ரமத்தில் ஏதோ...

ஈரோடு சுதேசி வர்த்தக சங்க ஆண்டுவிழா

ஈரோடு சுதேசி வர்த்தக சங்க ஆண்டுவிழா

தலைவரவர்களே! தோழர்களே!! இன்று இந்த ஆண்டு விழாவில் நானும் ஏதோ சில வார்த்தைகள் பேசவேண்டுமென்பதாக தலைவர் அழைக்கிறார். நேரம் அதிகமாய்விட்டது நானும் பேசவேண்டியிருக்குமென்று கருதவே இல்லை. அதோடு என்ன பேசுவது என்பதும் இன்னமும் முடிவு செய்யவில்லை. ஆனபோதிலும் ஒரு 10 நிமிஷம் “சுதேசி வர்த்தகம்” என்கின்ற தலைப்பைப் பற்றிப் பேசு கிறேன். ஏனெனில் இந்த ஆண்டுவிழா சுதேச வர்த்தக சங்க ஆண்டுவிழா வாதலால் அதையே தலைமையாய் வைத்து பேசுகிறேன். தோழர்களே சுதேசி வர்த்தகம் என்பதில் இரண்டு வார்த்தை இருக் கிறது. அதாவது ஒன்று சுதேசி, மற்றொன்று வர்த்தகம். சுதேசியம் இதில் முதலில் சுதேசியம் என்பதைப் பற்றி பேசுகிறேன். சுதேசியம் என்பது ஒரு அருத்தமற்றதும், சுயநலம் நிரப்பிய சூட்சியால் கற்பிக்கப்பட்டது மான வார்த்தை என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் தேசீயம் என்ப தையே புரட்டு என்று வெகு நாளாக நான் சொல்லி வந்திருப்பது உங்களுக்குத் தெரியும். தேசீயம் தேசாபிமானம் என்பவைகளைப் பற்றி பல...

லால்குடி – தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு

லால்குடி – தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு

தலைவரவர்களே! தோழர்களே!! இன்று உங்களை இவ்வளவு பெரிய கூட்டமாகக் காண்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு எதற்காக இந்த வெய்யில் காலத்தில் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து கூடியிருக்கின்றீர்கள். உங்களுடைய இன்றைய நோக்கமெல்லாம் இந்து மதத்தில் எவ்வளவோ காலமிருந்து கீழான ஜாதியாய் கருதப்பட்டு நீங்கள் அடைந்து வந்த இழிவைப் போக்கிக் கொள்வதற்காக வேறு மதத்தில் வந்துசேர்ந்தும் அங்கும் அந்த இழிவு இருந்து உங்களைப் பழைய கருப்பனாகவே நடத்தி வந்தால் எப்படியாவது அந்த இழிவை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியின் மீது இந்த மகாநாட்டைக் கூட்டி நீங்கள் எல்லோரும் இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த மகா நாட்டில் பலர் ஆவேசமாய் பேசிவிடுவதினாலும், பலர் அதிதீவிரமான தீர்மானங்கள் செய்து விடுவதினாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பெரிய பலன் கிடைத்து விடுமா? என்று பார்த்தால் அது முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இம்மாதிரி தீர்மானங்களும், இம்மாதிரி ஆவேசப் பேச்சுகளும் வெகுகாலமாக நடந்துகொண்டேதான்...

ஒன்பதாவதாண்டு

ஒன்பதாவதாண்டு

நமது “குடி அரசு”க்கு எட்டாண்டு நிறைந்து ஒன்பதாமாண்டு துவக்கமாகின்றது என்னும் விஷயத்தை அறியும் வாசகர்கள் மகிழ்ச்சி அடையாமல் இருக்க மாட்டார்கள்.                         குடி அரசு தோன்றும் போது இன்னாட்டில் எல்லாத் துறையிலும் செல்வாக்குப் பெற்று, சகல விதத்தும் ஆதிக்கம் அடைந்து, மக்களை வஞ்சித்து அழுத்தி வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு விரோதமாகவே காணப்பட்டது. அதன் பயனாய் குடி அரசு எங்கு பார்த்தாலும் “பார்ப்பனத் துவேஷமயமாக”வே விளங்கி வகுப்புத் துவேஷியாயிற்று.  இதன் பயனாய் சர்வ வல்லமையுடைய பார்ப்பன சமூகத்தினுடையவும், பார்ப்பன பத்திரிகை களினுடையவும், பார்ப்பன அதிகாரிகளினுடையவும் சர்வ சக்தி கொண்ட எதிர்ப்புகளை சமாளித்து முதல் ஆண்டைக்கழித்து இரண்டாம் ஆண்டில் பிரவேசித்தது. இரண்டாமாண்டில் அப்பார்ப்பனர்களின் “வஜ்ஜிராயுத” மாய் இருந்த “காங்கிரசிற்கு விரோதமாய்” த் தோன்றி அதனோடு வாதாட வேண்டியதாகி குடி அரசு தேசத்துரோகியாக விளங்கி தேசிய வாதிகளின் எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் ஈடு கொடுத்து வந்தது. இந்த சமயத்தில் குடி அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய வேலை...

ரஷ்ய நீதி

ரஷ்ய நீதி

ரஷ்ய தேச ஆட்சியின் கொள்கையை உலகம் முழுவதுமே வெருக் கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு பிரசாரம் செய்து வருவதாய் காணப்பட்டு வருகின்றது. எது போலவென்றால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பெரிதும் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் இருந்ததால் பார்ப்பனர்களின் செல்வாக்கால் அது ஒரு காலத்தில் எப்படி எல்லா மக்களா லும் வெறுக்கப்பட வேண்டுமென்று பிரசாரம் செய்வதாய் காணப்பட்டதோ அதுபோல். ரஷியா ஆட்சிக் கொள்கையானது சுருக்கமாகச் சொல்லப்பட வேண்டுமானால் அது உலக பணக்காரர்களுக்கு விஷம் போன்றதும் ஏழை மக்களுக்கு “சஞ்சீவி” போன்றதுமாகும். இன்றைய உலகம் பணக்காரர்கள் கையில் சிக்குண்டு, பணக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, பணக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் பணக்காரர்கள் 100க்கு 10- பெயர்களே யாயினும், அவர்களே உலக மக்களாகக் காணப்படுவதும், ஏழை மக்கள் 100க்கு 90-பேர்களாயினும் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாக உலகுக்கு ஞாபகத்துக்கே வரமுடியாமலும் இருந்து வருகின்றது. ஆனால் ரஷ்யாவிலோ அப்படிக்கில்லாமல் பணக்கார ஆதிக்கம் ஒழிந்து ஏழைமக்கள் பணக்காரர்கள் கையினின்று விடுபட்டு சுதந்திரம் பெற்று...

“தொழிலாளர் நிலைமை”

“தொழிலாளர் நிலைமை”

நமது கவனத்தை அரசாங்கத்தாரும் வேறு ஏதாவது ஒரு வழியைக் காட்டித் திருப்பி விடுவார்கள். ஆனால் உண்மையில் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கும், அன்புக்கும் விரோதமில்லாமலே தான் அரசாங்கத்தார் நடந்து கொள்ளுவார்கள். அப்படிக்கில்லா விட்டால் அரசனுக்கும், அவனு டைய சிப்பந்திகளுக்கும் உலை வைக்க உடனே முதலாளி வர்க்கம் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உண்மையில் தொழிலாளிகளுக்கு தீங்கு இழைத்துக் கொண்டிருப்பது முதலாளி வர்க்கம் தான் என்பதை மக்கள் அறியமுடியாமல் பல தேச பக்தர்கள் என்பவர்கள் முதலாளிகளிடம் கூலி பெற்றுக்கொண்டு நம்மை சர்க்கார் பக்கம் திருப்பி விட்டு விடுகிறார்கள். இப்போதும் இந்நாட்டில் உள்ள கஷ்டத்திற்கு காரணம் சர்க்கார் என்றுதான் நீங்கள் கருதுகிறீர்களே தவிர முதலாளிகள் என்று நீங்கள் கருதுவதில்லை. சர்க்காரால் தொழிலாளிக்கு அதிக நஷ்டமில்லை. இத்தேசத்திற்கு வெளிநாட்டு சர்க்கார் வருமுன் தொழிலாளிகள் எல்லாரும் எந்தவிதமான தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களது சோற்றுக்கு மட்டும் கணக்குப் பார்த்து கூலி கொடுக்கப்பட்டு வந்தது. மாதம் மாதம் சாப்பாடு மட்டும்தான் போட்டு தினம்...

போலீஸ் யோக்கியதை

போலீஸ் யோக்கியதை

உப்பு சத்தியாக்கிரக சட்டமறுப்பு காலங்களில் இருந்து போலீசாருக்கு ஒரு புதிய யோக்கியதை ஏற்பட்டுவிட்டது. அதாவது போலீசு எவ்வளவு அக்கிரமமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்துகொண்டாலும் அதற்கு எவ்வித கேள்வியும், கேழ்ப்பாடும் கிடையாது என்பதாகும். போலீசு இலாக் காத் தலைமை அதிகாரிகளுக்கும் நிர்வாக தலைவர்களுக்கும் சட்டசபை அங்கத்தினர்கள் கேட்ட கேள்விகளாலும், தேசிய பத்திரிகைகள் வைத வசவுகளாலும், பொது ஜனங்கள் மண்ணை வாரித்தூற்றி “சாபம்” கொடுத்து சபித்ததாலும், புத்தியும் நாணையமும், யோக்கியப் பொருப்பும் காப்புக்காச்சி மறத்துப் போய்விட்டதுடன் அவர்களது தோல் காண்டாமிருகத் தோலுக்கு சமமாய் போய்விட்டது. இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் போலீசு இலாக்காவை திருத்தவோ, அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவோ யாராலும் முடியாது என்கின்ற பதவியை அது அடைந்து வருவதாகத் தெரியவருகின்றது. இது அந்த இலாக்காவுக்கு ஒரு கௌரவம்தான் என்றாலும் நம்மைப் பொருத்தவரை இனி நம்மால் போலீசு இலாக்காவைத் திருத்த முடியாவிட்டாலும் போலீசு இலாக்காவினால் நாமாவது திருத்துப்பாடடைந்து இனிமேல் இப்படிப்பட்ட விஷயங்கள் நம் கண்ணில்...

தஞ்சை ஜில்லா மகாநாடு

தஞ்சை ஜில்லா மகாநாடு

இம்மாதம் 8, 9 தேதிகளில் தஞ்சை ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு நாகபட்டணத்தில் சிறப்பாக நடைபெற்ற விபரம் மற்றொரு பக்கம் காணலாம். அதை ஊன்றிப் பார்ப்பவர்களுக்கும், நேரில் மகாநாட்டு நடவடிக் கைகளைக் கவனித்தவர்களுக்கும், தமிழ் நாட்டில் எந்த இயக்கத்தை எப்படிப் பட்ட கொள்கையை மக்கள் ஆண், பெண், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் முதலியவர்கள் விரும்புகின்றார்கள்? எதில் ஊக்கமாய் இருக்கின்றார்கள்? என்பது விளங்கும். மகாநாடு நாகையில் நடைபெற வொட்டாமல் செய்ய வெளியிலிருந்து செய்யப்பட்ட சில சூட்சிகள் மகாநாட்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மேல் கூட்டம் சேர்த்துக் கொடுத்து அதி விமரிசையாய் அதாவது ஒரு மாகாண மகாநாடு போல் நடத்திக் கொடுத்து விட்டது. ஆகையால் அத்திருக் கூட்டத் தாருக்கு மகாநாடு நடத்தியவர்களின் நன்றியறிதல் உரியதாக வேண்டும் என்பதில் குற்றம் இல்லை. மகாநாடு நடக்க 2, 3 நாட்கள் இருக்கும்போது சுமார் 150 கையெழுத்துக் கொண்ட விண்ணப்பம் ஒன்று அவ்வூர் கலெக்டருக்குச் சமர்ப்பித்து மகாநாட்டை...

ஈரோடு முனிசிபாலிடி கவனிக்குமா ?

ஈரோடு முனிசிபாலிடி கவனிக்குமா ?

வைத்திய உதவி இன்றைய நிலையில் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள்பட்ட ஜனங்க ளுக்கு பொது வைத்திய உதவி பொருப்புள்ளதாகவும், போதுமானதாகவும் இல்லை என்பதைக் குறிக்க வருந்தவேண்டியிருக்கின்றது. ஈரோட்டிலிருந்த முனிசிபல் ஆஸ்பத்திரியானது சுமார் 12-வருஷங்களுக்கு முன் சர்க்கார் ஆஸ்பத்திரியாக மாறின போது முனிசிபல் நிர்வாகத்தைவிட சர்க்கார் நிர்வாகம் சற்று மேலாகவே இருக்குமென்று ஜனங்கள் கருதினார்கள். அந்தப் படியே சில காலம் நடந்தும் வந்தது. ஆனால் நாளாக நாளாக அந்த ஆஸ்பத்திரிக்கு பொது ஜனங் களுடைய தயவைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்கின்ற மாதிரி யிலேயே அதன் மேலதிகாரிகளால் நடைபெற்று வருவதாய் காணப் படுகிறது. இதற்கு முக்கியகாரணம் சர்க்கார் நிர்வாகமேயாகும். ஈரோடு ஆஸ்பத் திரி டவுன் ஜனங்கள் 35000 பேருக்கும், சமீப சுற்றுப் பக்கத்து ஜனங் கள் சுமார் 20000 பேருக்குமாக 50000 பேருக்கு மேல் பயன்பட வேண்டிய தாய் இருந்து இவர்களில் பெரிதும் ஏழைமக்களுக்கு ஆகவே இந்த ஆஸ்பித் திரி இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில்...

சம்பளக்கொள்ளை

சம்பளக்கொள்ளை

இந்தியாவுக்கு இன்று உள்ள முதல் கொடுமையும், கடைசிக் கொடு மையும், சம்பளக்கொள்ளை கொடுமையே யாகும். இந்தியாவைப் போல் உள்ள ஏழை நாடு உலகில் எங்குமே இல்லை என்று சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனால் இந்தியாவைப் போல சம்பளக் கொள்ளை உள்ள நாடு உலகில் எங்குமே இல்லை. இதைப் பல தடவைகளில் நாம் எடுத்துக்காட்டி இருக்கிறோம். இந்திய அரசியல் கிளர்ச்சியிலும் இதைப் பற்றி அடிக்கடி பேசப்படுகின்றது. என்றாலும் இதற்கு அஸ்திவாரமான குற்றத்தை அரசாங்கத்தின் மீது திருப்பப்பட்டு விடுகின்றபடியால் பாமர ஜனங்கள் உண்மையை உணர்ந்து திருத்துப்பாடு செய்வதற்கு மார்க்கமில் லாமல் போய்விடுகின்றது. சம்பளக் கொள்ளை என்றால் ஒரு சாதாரணக் கொள்ளை என்று யாரும் கருதிவிடக்கூடாது. அது சம்மந்தமாக ஒரு சிறு புள்ளி விபரத்தை கீழே குறிப்பிடுகின்றோம். அது பழைய குறிப்புகளேயானாலும் இது சமயம் இன்றைய இந்தியாவின் நிலைக்கும் அரசியல் நிலைக்கும் சற்று கவனித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும். என்னவெனில் பிரிட்டிஷின் முழு ஆட்சிக்கும் பொறுப்பேற்று தலைமை...

“தொழிலாளர் நிலைமை”

“தொழிலாளர் நிலைமை”

இவைகளை ஒழிப்பதற்கு இம்மாதிரி கண்டிப்பாக பேசுவதன் மூலம் நாம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டியது தான். தோழர் பொன்னம் பலனார் கூறுவது நடு நிலைமையிலிருந்து யோசிக்கும் எவருக்கும் அக்கிரமம் என்றோ பொய் என்றோ  ஏற்படாது. சாமியைப் பற்றிக் குறை கூறுவதும் அக்கிரமமல்ல. கடவுள்களின் பேரால் இந்நாட்டில் சகிக்க முடியாத கொடுமைகள் நடப்பது எவ்வளவோ சொல்லிப் பார்த்தாகி விட்டது. எத்தனையோ கோடி ரூபாய்கள் வீணாக்கப் படுவதை தடுக்க எங்கள் இயக்கம் எவ்வளவோ சொல்லியும் வந்தது. இனி என்ன செய்வது இனியும் பச்சை பச்சையாகவே பேசினாலும் மக்கள் மனதில் பட்டு அவர்கள் திருந்த வேண்டும் என்ற எண்ணமே தவிர வேறு யாரிடத்திலும் துவேஷமோ சண்டையோ எங்களுக்கு கிடையாது.  அவ்வித நோக்கத்துடனும் இது பேசப்படவே இல்லை. கடவுளின் பேரால் மதத்தின் பேரால் மத ஆச்சாரிகள் புரோகிதர்கள் குருக்கள் பாதிரிகள் சங்கராச்சாரிகள் செய்யும் அநீதியும் அக்ரமமும் எவ்வளவு? சுயமரியாதைக்காரன் அவர்களின் குறைகளை கூறுவதிலுள்ள அக்கிரமம் எவ்வளவு...

கேசவ பிள்ளை

கேசவ பிள்ளை

தோழர் கேசவ பிள்ளையை சென்னை மாகாணஅரசியல் உலகம் நன்றாய் அறியும். அவர் பழயகாலத் தலைவர் கோஷ்டியில் சேர்ந்தவர். பழய சட்ட சபைகளில் அவர் அதிகம் காரியங்கள் செய்தவர். ஆனால் அவர் பார்ப்பன ராய் இல்லாததால் அவரைப்போல வேலை செய்த பார்ப்பனர்களுக்கு கிடைத்த பெருமையும் பயனும் இவருக்கு கிடைக்காமல் போனதில் அதிசய மில்லை. பொதுவாழ்வில் சுமார் 40  வருஷகாலம் கலந்திருந்தும் அவரது வாழ்க்கை ஒரு சாதாரண நிலையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.  மற்ற தலைவர்களைப் போல ஆடம்பரமும் பண வருவாயும் பிரதானமாக அவர் எதிர்பார்க்கவுமில்லை, அவர் எந்த விஷயத்தில்  கவலை எடுத்து உழைத் தாலும் அதை மனப்பூர்வமாக உணர்ந்து மனப்பூர்வமான அக்கரையுடனும், உண்மையான கவலையுடனுமே உழைத்து வந்திருக்கிறாரே ஒழிய பொய் யாகவோ, கூலிக்காகவோ அல்லது ஏதாவது ஒரு சுயநல பலனை உத்தே சித்தோ உழைத்தவர் என்று சொல்லுவதென்றால் அது சுலபத்தில் முடியாத காரியமேயாகும். விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்குப்பிரியம் கிடையாது. அவருக்கு ‘சர்’ பட்டம் கிடைத்திருக்கலாம். ஆனால்...