கத்தோலிக்க மத°தர்கள் யோக்கியதை

அமெரிக்க கத்தோலிக்க தினசரியிலிருந்து கீழ்கண்ட செய்தியை நியூயார்க் உண்மை நாடுவோர் (கூசரவா ளநநமநச) பத்திரிகை பிரசுரித்திருக்கிறது.  அதாவது சிங்சிங் ஜெயிலில் உள்ள பல திறப்பட்ட மதங்களைச் சார்ந்த கைதிகளின் விபரம் கீழ் வருமாறு:-

கத்தோலிக்கர்கள்                                                                 855

பிராட்ட°டண்ட்                                                      518

யூதர்கள்                                                                         177

கிறி°தவ விஞ்ஞானிகள்                                               20

மகமதியர்கள்                                                             2

புத்தர்கள்                                                                         1

மதமற்றவர்கள்                                                        8

1,581

சிங்சிங் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களில் கால்வாசிப் பேர்களே கத்தோலிக்கர்களாக இருந்தும், நாட்டில் குற்றம் செய்து சிறைக்காவலில் அடைபட்டிருக்கும் (அ) யோக்கியர்களின் கணக்கு 100-க்கு 50-க்கு மேல் ஆகின்றது.  ஆனால் மதமற்றவர்களின் கணக்கு 1/2 பர்செண்டேயாகும். மதவெறிக்குத் தகுந்தார்போல் குற்றவாளிகளின் எண்ணிக்கை விபரம் காணப்படுவதை வாசகர்கள் கவனிப்பதோடு, மதம் மக்களை யோக்கியப் பொருப்பற்றவர்களாக்கவே பயன்படுத்துகிறதென்பதையும் இதுசமயம் ஞாபகப் படுத்திக் கொள்ளவும் விழைகின்றோம்.

குடி அரசு – செய்தி விளக்கம் – 23.07.1933

 

 

You may also like...