அருஞ்சொல் பொருள்
அசூயை – பொறாமை
அத்தியந்த – மிகவும் நெருக்கமான
ஆக்கினை – கட்டளை
ஆஸ்பதம் – இடம், பற்றுக்கோடு
கெம்பு – சிவப்பு இரத்தினக்கல்
சகடயோகம் – குருவுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டிற் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன்
சந்தியா வந்தனம் – சந்தி வணக்கம்
சாக்காடு – இறப்பு
சிடுக்கை நேரம் – பெண்கள் தலைமுடியில் சிக்கு எடுக்கும் நேரம்
சிலாகித்தல் – புகழ்தல்
தர்க்கீத்து – விவாதித்து
தர்ப்பித்து – பயிற்சி, ஒழுக்கம்
தியங்கி – சோர்வடைந்து, புத்திமயங்கி, கலங்கி
நிர்த்தூளி – முழு அறிவு
நிர்தாரணம் – நிலை நிறுத்தல்
பஞ்சராப்போல் – பறவைக்கூடு போல்
பர்த்தியாகிவிடும் – இணையாகிவிடும், பகரமாகிவிடும்
பரியந்தம் – எல்லை, முடிய
பரதவித்து – வருந்தி
பிரக்கியாதி – புகழ்
முடத்தெங்கு – கோணலாக வளர்ந்த தென்னை
வதியும் – தங்கும்
வநிதா – பெண், மனைவி
வைரி – பகைவன்