கடன்பட்டவர்களுக்குச் சிறைவாசம்

கடன்பட்டவர்கள் கொடுக்க சக்தி அற்றுப்போவது ஒரு சாதாரண சம்பவமேயன்றி அது ஒரு குற்ற (கிரிமினல்) நடவடிக்கையாகாது. கடன் கொடுத்து வாங்குவது என்பது ஒரு சூதாடுவது போன்ற காரியம். அதாவது பிரை°சீட்டு போட்டவன் தனக்கு பிரை° (லாபம்) எதிர்பார்ப்பது போன்ற காரியமாகும். எப்படியெனில் கடன் கொடுத்து வாங்குவது என்பதில் எவ்வித கருணையும், அன்பும், தரும சிந்தனையும், உபகாரமும் கிடை யவே கிடையாது. வெரும் லாபத்தை வெளிப்படையாய் எதிர்பார்த்துக் கடன் கொடுப்பது தவிர வேறில்லை. பிரை° சீட்டு போடுபவனும், லாபத்தை எதிர்பார்த்தே போடுகிறானே ஒழிய வேறில்லை.

ஆகவே ஒருவனுக்குப் பிரை° வரவில்லையானால் பிரை° சேர்த்தவனை ஜெயிலில் வைக்க முடியுமா? அதுபோல் கடன் கொடுக்கப் பட்டவன் திருப்பிக் கொடுக்க சக்தியற்றுப் போனால் அதை ஒரு குற்றமாகக் கருதுவதும், அதை ஒரு குறைவாகக் கருதுவதும் முதலாளி ஆதிக்கத் தன் மையாகுமே ஒழிய அது சமதர்ம நீதியாகாது. அன்றியும் அது கொடுமை யானதும், முட்டாள் தனமானதுமான குணமுமாகும்.

கடன் வாங்கினவனிடம் சொத்து இருந்தால் அதை எந்த வகையிலும் வசூலித்துக் கொள்வதுதான் தகுதியாகுமே ஒழிய சிறைப்படுத்துவதும், குற்ற வாளியாகவும், யோக்கியதைக் குறைவாயும் கருதுவது என்பது கூடவே கூடாது.

இதைப்பற்றி சுமார் 4, 5 வருஷங்களுக்குமுன் “குடி அரசு”ப் பத்திரிகையில் ஒரு வியாசம் எழுதப்பட்டுமிருக்கிறது.

இது நிற்க சமீபத்தில் லண்டனில் வெளியாகும் °பெக்டேட் என்னும் பத்திரிகை இது விஷயமாய் எழுதியிருப்பதாக “தமிழ்நாடு” பத்திரிகையில் கூறியதாவது:-

“கடன்பட்டோரைச் சிறைக்கு அனுப்புவதென்பது காட்டு மிராண்டித் தனமான கர்நாடகப் பழக்கமாகும். ஒருவர் கடன் கொடுக்க இயற்கையிலேயே சக்தியற்றிருக்கலாம் அல்லது வேலை உண்டாகப் பெறாதவர்களாய் இருக்கலாம். அத்தகை கையாள வேண்டுமேயன்றி, அவர்களைச் சிறைப்படுத்துவதால் யாருக்கும் நன்மையில்லை”

என்று குறிப்பிட்டிருக்கிறது. கொலைசெய்தவர்களுக்குக் கொலை தண்டணை விதிப்பதே அனாகரீகமென்றும், அது ஒழிக்கப்படவேண்டு மென்றும் பகுத்தறிவுள்ள தேசங்களில் கிளர்ச்சி செய்யப்பட்டுவருகின்றது. அப்படியிருக்க கடன்வாங்கித் திருப்பிக் கொடுக்கச் சக்தியற்றவனை ஜெயிலுக்கு அனுப்புவது என்பது முதலாளித்தன்மையின் கொடுமையே யாகும். முதலாளித்தன்மை ஆட்சி ஒழிக்கப்பட்ட நாடுகளில் இப்படிப்பட்ட கொடுமைகள் தலைகாட்ட முடியாது.

ஆதலால் இந்திய அரசாங்கத்தார் சீக்கிரத்தில் அறிவுபெற்று கடனுக் காக மக்களைச் சிறைப்படுத்தும் காட்டுமிராண்டித்தனமான வழக்கத்தை உடனேயொழித்துவிடுவார்களாக.

அன்றியும் கடன் பாக்கிக்காக ஒரு குறிப்பிட்ட வரும்படியைத் தவிர வேறு சொத்தோ வரும்படியோ இல்லாமலிருக்குமானால் அந்த வரும்படி அவனுடைய குடும்பச் செலவுக்கு மாத்திரம் போதுமானதாய் இருக்குமா னால் அம்மாதிரி கடனை வஜா வைத்து விடுவதோடு, டிக்கிரியை நிறை வேற்ற அனுமதியளிக்கவே கூடாது என்பதையும் சட்டமாக்கி விட வேண் டும். இந்தப்படி செய்தால்தான் கடன் கொடுப்பவர்களால் எந்தக் குடும்பமும் கெடாமல் இருக்கமுடியும் என்பதும் நமது அபிப்பிராயமாகும்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 10.09.1933

You may also like...