Category: குடிஅரசு 1925

மீண்டும் சத்தியமூர்த்தியின் அட்டகாசம் “சௌந்திரிய மஹாலின் இரகசியம்”

மீண்டும் சத்தியமூர்த்தியின் அட்டகாசம் “சௌந்திரிய மஹாலின் இரகசியம்”

“மீண்டும் சத்தியமூர்த்தியின் அட்டகாசம்” என்னும் தலைப்பின் கீழ் சௌந்திரிய மஹாலில் சில தினங்களுக்கு முன் நடந்த மீட்டிங்கைப் பற்றி ஒரு நிருபர் அக்டோபர் µ 15-ந்தேதி ஜ°டி° பத்திரிகையில் எழுதி யிருப்பதின் சாராம்சமாவது:- சென்னை சுயராஜ்யக் கட்சியின் பிரதம புருஷராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தியும், வைதீகப் பிராமண கோஷ்டியின் தலைவரும், சமுதாய முன்னேற்றத்துக்கு எதிரிடையாயுள்ளவருமான, ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரும், புதிதாக இக்கோஷ்டியில் சேர்க்கப்பட்ட ஸ்ரீமான்.டி.குழந்தையும் சில நாட்களுக்குமுன் சௌந்திரிய மஹாலில் நடைபெற்ற மீட்டிங்குக்கு வந்திருந்தனர்.  ஸ்ரீமான். எம்.கே. ஆச்சாரியார் அக்கூட்டத்தில் தலைமை வகித்தார்.  இவர் முன்னுரை பேசுகையில் ஜ°டி° கட்சித் தலைவர்கள் சிலரைத் தாக்கிச் சில வார்த்தைகளுரைத்தார்.  இங்ஙனம் கூறியதற்குக் காரணமென்னவென்றால், காலஞ்சென்ற டாக்டர்.டி.எம்.நாயர், ஸர்.பி.டி.செட்டியார் முதலிய தலைவர்களின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ஜ°டி° கட்சியானது பிராமணர்களின் செல்வாக்கை ராஜீய விஷயத்திலும், சமூக விஷயத்திலும் மற்றும் இரண்டொரு துறைகளிலும் குறைத்துக் கொண்டு வருகிறதினாலேயாம்.  பிராமணரல்லாதாரும், ஆதிதிராவிடர்களும் தங்கள் நிலைமையை நன்கறிந்து உஷாராய் நடந்து கொள்ளச்...

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபாலிட்டி

  ஈரோடு முனிசிபாலிட்டியைப் பற்றி அதன் கொடுமைகளை வெளி யிடாமல் கொஞ்சநாளாக “குடி அரசு” மௌனம் சாதிப்பதாகவும் இதற்கு ஏதோ காரணங்கள் இருப்பதாகவும் சிலர் குறை கூறுகிறார்கள். மற்றும் சிலர் தற்கால முனிசிபல் நிர்வாகத்தை குறை கூற வேண்டுமென்றே பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதாகவும் பழி சுமத்துகிறார்கள். இவ்விரண்டையும் நாம் பொருட்படுத்தவில்லை.  நமக்கு தோன்றியதை யாருடைய விருப்பு வெறுப்பையும் லக்ஷியம் செய்யாமல் அவசியம் நேரும்போது வெளியிட்டு வருவோம்.  உள்ளூர் விஷயத்தில் இன்னும் பல பொது °தாபனங்களும் புகாருக்கு இடம் வைத்துக் கொண்டு ஒழுங்கீனமாகவும் நடந்து வருகிறது.  அவற்றில் பல விஷயங்களை பத்திரிக்கைகளில் வெளியிடாமலே திருத்திக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை கொண்டே விட்டு வைத்திருக்கிறதே அல்லாமல், வேறு எவ்வித தயவுக்கோ தாக்ஷண்ணியத்துக்கோ அல்ல.  இவ்விஷயமாக நிரூபர்கள் அனுப்பிய பல நிரூபங்கள்கூட பிரசுரிக்காமல் இருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம்.  ஆதலால் உள்ளூர் நிரூப நேயர்கள் மன்னிக்க வேண்டுகிறோம். நமது ஈரோடு முனிசிபாலிட்டியானது மிக சிறிய முனிசிபாலிட்டி, ஆனால் வரும்படியில்...

சுதேசமித்திரனின் ஜாதிப் புத்தி

சுதேசமித்திரனின் ஜாதிப் புத்தி

  சென்ற வாரம் இத்தலையங்கத்தின் கீழ் “சுதேசமித்திரன்” என்னும் பிராமணப் பத்திரிக்கை, பிராமணரல்லாதாருக்கும், மிக முக்கியமாய்ப் பிராமணரல்லாத தேசத் தொண்டர்களுக்கும், விரோதமாய் வேண்டுமென்றே செய்து வரும் சூழ்ச்சிகளைப் பற்றி எழுதி, மற்றும் மறுமுறையென்று எழுதியிருந்தோம்.  அவற்றில் முக்கியமாக ஸ்ரீமான்.ஈ.வெ.இராமசாமி நாயக்கரைப்பற்றி தன்னாலும் தான் ஆட்கொண்டவர்களாலும் பொது ஜனங்களுக்கு எவ்வளவு கெட்ட அபிப்பிராயத்தைக் கற்பிக்க வேண்டுமோ, அவ்வளவையும் செய்து பார்ப்பதென்றே முடிவு கட்டிக்கொண்டிருக்கிறது.  ஸ்ரீமான். நாயக்கர் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், என்ன பேசினாலும் அவற்றைத் திரித்துப் பொதுஜனங்களுக்குத் தப்பபிப்பிராயப்படும்படி கற்பனை செய்து பத்திரிக்கைகளிலெழுதுவதும் அவற்றிற் கேற்றார்போலவே சில ஈனஜாதி நிருபர்களை அங்கங்கே வைத்துக்கொள்ளுவதும், அவர்கள் பேரால் ஸ்ரீமான் நாயக்கர் சுயராஜ்யம் வேண்டாமென்கிறார்.  ஜ°டி° கட்சி யில் சேர்ந்துவிட்டார்,  அதிகார வர்க்கத்தோடு கலந்துவிட்டார், காங்கிர° கொள்கைக்கு விரோதமாயிருக்கிறார் என்று இவ்வாறாக அப்பத்திரிக்கை எழுதி வருகிறது.  உதாரணமாக, பொள்ளாச்சி, மதரா°, அநுப்பபாளையம், தஞ்சை, மாயவரம் இந்த இடங்களில் ஸ்ரீமான் நாயக்கர் பேசிய பேச்சைப் பற்றி சுதேசமித்திரன்...

நமது பத்திரிக்கை

நமது பத்திரிக்கை

நமது “குடி அரசுப்” பத்திரிக்கை ஆரம்பித்து ஆறு மாதங் களாகின்றது.  அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய மகாத்மா வின் நிர்மாண திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது.  இத்தொண்டில் “குடி அரசு” சிறிதுங் கள்ளங் கபடமின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது தனது ஆத்மாவையே படம் பிடித்தாற்போல் தைரியமாய் வெளிப்படுத்தி தொண்டு செய்து வந்திருக் கின்றது – வரவும் உத்தேசித்திருக்கிறது.  “குடி அரசு” குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரசாரப் பத்திரிகையேயல்லாமல்; வெறும் வர்த்தமானப் பத்தி ரிக்கை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப் பதையோ தனது சுயவாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ சுயநலத்திற்காக கீர்த்திபெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும் வாசகர் களுக்கு போலி ஊக்கமும் பொய்யான உற்சாகமும் உண்டாகும்படியாக வீணாய் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றாற்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர்...

சென்னை லோகல் போர்டு சட்டம்  ஸ்ரீமான். வீரையனின் திருத்த மசோதா

சென்னை லோகல் போர்டு சட்டம் ஸ்ரீமான். வீரையனின் திருத்த மசோதா

  1920-ம் வருடத்திய °தல °தாபன போர்டு சட்டத்தைத் திருத்தும்படி, ஸ்ரீமான். வீரையன் எம்.எல்.ஸி. கீழ்கண்ட மசோதாவை அடுத்த சட்டசபையில் கொண்டு வரப்போவதாகவும், அதை எல்லா அங்கத்தினர்களும் ஆதரிக்க வேண்டுமென்றும் அறிவிக்கிறார். சென்னை °தல °தாபன போர்டு சட்ட திருத்த மசோதா 1920-ம் வருடத்திய சென்னை °தல °தாபன போர்டு சட்டத்தை அடியிற் கண்டவாறு மாற்றவேண்டும். (1) இந்தச் சட்டமானது 1925-ம் வருடத்திய சென்னை லோகல் போர்டு திருத்தப்பட்ட சட்டம் என்று அழைக்கப்படலாம். (2) 157-வது பிரிவுக்குப் பின் 17(ஏ) எந்த பொது ர°தா, தெரு அல்லது பாதை வழியாக நடந்து போகிற அல்லது அதைச் சட்டப் பிரகாரம் உபயோகிக்கிற எந்த நபரையும்  எவரும் தடை செய்யக்கூடாது  என்னும் புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்படவேண்டும். (3)124 -1-பிரிவில் “குடியிருப்பவர்களின் சௌகரியம்” என்னும் வாசகத்திற்கு அடுத்தாற்போல் “மேற்கண்ட காரணங்களுக்காக அவை ஜாதி மத வித்தியாசமின்றி, சகல ஜனங்களாலும் தாராளமாய் உபயோகிக் கப்பட்டதாய் இருக்க...

சுதேசமித்திரனின் ஜாதி புத்தி

சுதேசமித்திரனின் ஜாதி புத்தி

சுதேசமித்திரன் பத்திரிக்கை   “அதிகார வர்க்கத்திற்கு ஒரு யோசனை” என்கிற தலைப்பின்கீழ்  “ ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பாட்னா முடிவுக்கு விறோதமாய் தஞ்சையில் சுயராச்யக் கக்ஷியார் தேசத்திற்கு நன்மை செய்ய ஏற்பட்டவர்கள் அல்லவென்றும் சுயராச்யக் கக்ஷியாரும் இதரர்களும் கோருகிற சுயராச்யம் இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்று சொன்னாராம் என்றும், காங்கிர°காரர் இப்படிச் சொல்லுவது அழகல்லவென்றும் சென்னை கீழ்ப்பாக்கம் தேர்தல் ஸ்ரீமான் நாயக்கர் மனதை வாட்டி வருகிறதென்றும் இப்படிப்பட்டவர் ஜ°டி° கட்சி யிலோ வேறு கட்சியிலோ சேர்ந்து கொள்ளலாம் என்றும் எழுதி, நாயக்கர் சுயராச்யமே வேண்டாமென்று பேசியதாக பொது ஜனங்கள் நினைக்கும்படி எழுதியிருக்கிறது. இவ்வெழுத்துக்களில் எவ்வளவு அயோக்கியத்தனமும் அற்பத்தனமும் நிறைந்திருக்கிறது என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்வார்கள். இதற்குமுன் பல தடவைகளில் நாம் குறிப்பிட்டிருப்பதை, இந்த பிராமண பத்திரிகை கவனிக்காமல் மானம் ஈனமின்றி மறுபடி அதே காரியத்தைச் செய்கிறது. தஞ்சையில் நமக்கு வேண்டிய சுயராச்யம் என்ன என்பதைப் பற்றியும், நமக்கு வேண்டாத...

“சுயராஜ்யக் கட்சியின் பரிசுத்தம்”

“சுயராஜ்யக் கட்சியின் பரிசுத்தம்”

விளம்பரம் பாட்னா முடிவிற்குப் பிறகு, சுயராஜ்யக் கக்ஷியார் வெற்றிக்கொடி பிடித்து திக்விஜயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காரியத்தில் எப்படி யிருந்த போதிலும், இவர்கள் போகிற பக்கங்களில் எவ்வளவு இழிவு பட்டுக் கொண்டு வந்தாலும் பத்திரிகைகளில் மாத்திரம், “சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி மேல் வெற்றி, சுயராஜ்யக் கட்சி °தாபனம் செய்தது, சுயராஜ்யக் கட்சியில் அவர் சேர்ந்தார், இவர் சேர்ந்தார்” என்கிற விளம்பரங்களுக்குக் குறை வில்லை. ஆனால் கட்சிக்குள்ளிருக்கிற பழைய தலைவர்களோ ஒருவ ருக்கொருவர்  அபிப்பிராய  பேதங்களால் சண்டைபோட்டுக் கொண்டிருக் கின்றார்கள். தினந்தோறும் விடிந்தெழுந்தால் சுயராஜ்யக் கக்ஷியாரின் நடபடிக் கைக்குச் சமாதானம் சொல்லுவதும், சரியான சமாதானம் ஒன்றும் கிடைக்காத சந்தர்ப்பங்களில் மகாத்மாவின் பெயரைச் சொல்லி மழுப்பி விடுவதுமான தந்திரங்களோடே,  பாமர  ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு வரப்படுகிறது. அச்சில்லாமல் தேரோட்டம் சுயராஜ்யக் கக்ஷி, சுயராஜ்யக் கக்ஷியென்ற பேர் மாத்திரம் இருக்கிற தேயல்லாமல், சுயராஜ்யக் கட்சிக்கென ஏற்பட்டிருக்கும் திட்டமென்ன? ராஜீயத் திட்டம் ஏதாவது இருக்கிறதா? பொருளாதாரத் திட்டம்...

அம்பலத்து அதிசயம்  ( தேசீய பிராமணர்களின் கண்டனம் )

அம்பலத்து அதிசயம் ( தேசீய பிராமணர்களின் கண்டனம் )

  தேச விடுதலை விஷயத்தில், பிராமணரல்லாதார் பொது நன்மையை உத்தேசித்து, அநேக பிராமணர்களுடைய, கொடுமைகளையும், சூழ்ச்சி களையும் கூட்டாக்காமல் கபடமற்று பிராமணர்களுடன் ஒத்துழைத்து வந்தி ருந்தாலும், அவர்களுடைய உழைப்பையெல்லாம் தாங்கள், தங்கள் வகுப்புச் சுயநலத்திற்கென்று அநுபவித்து கொள்வதல்லாமல் உழைக்கின்ற பிராமண ரல்லாதாருக்கு எவ்வளவு கெடுதிகளையும், துரோகங்களையும் செய்து வந்திருக்கின்றார்களென்பதை – செய்து வருகின்றார்களென்பதைப் பொறு மையோடு படித்து அறிய வேண்டுமாய்க் கோருகிறோம். முதலாவது, பழைய காலத்திய தேசீயவாதிகளில் சிறந்தவர்களில்  ஸர்.சி. சங்கரன் நாயர் என்கிற பிராமணரல்லாதார் முக்கியமானவர் ஆவார்.  அவர் காங்கிரஸிலும் தலைமை வகித்தவர். அப்பேர்ப்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற் காகப் பிராமணர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வந்தார்கள். அவருக்கு கிடைக்கவிருந்த ஹைக்கோர்ட் ஜட்ஜ் பதவியை கிடைக்கவொட்டாதபடிக்குச் செய்ய எவ்வித பொது நலத்திலும் தலையிட்டிராத, ஸர்.வி.பாஷ்யம் ஐயங்கார் போன்றவர்களும் மற்றும் அநேக பிராமண வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்த தோடல்லாமல், அவர் பேரில் எவ்வளவோ பழிகளை யெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன்...

தென்  ஆப்பிரிக்கா தினம்

தென்  ஆப்பிரிக்கா தினம்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப் பற்றியும், இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும், சென்ற 11- ந் தேதி இந்தியாவெங்கும் பொது தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண் டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம். ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக் கூடாதா ரென்றும், தங்களுடைய வேதங்களையே படிக்கக் கூடாதாரென்றும், தங்களு டைய தெய்வங்களையே கண்டு வணங்கக் கூடாதென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார் இக்கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது பலன் உண்டாகுமா? இதையறிந்த தென்னாப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா? அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார் களா? என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால் வீணாக ஓர் நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமே யென்ற முடிவுக்குத்தான் வருவார்கள். குடி அரசு – தலையங்கம் – 18.10.1925            

அனுப்பபாளையம்

அனுப்பபாளையம்

°தல °பனங்களின் நிர்வாகங்களில் பலவித ஊழல்களிருக்கின் றது.  அவைகளை நிவர்த்தி செய்யவேண்டுமானால் தேர்தல்கள் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டுமென்றும், தேர்தல் மன°தாபத்தின் காரண மாகவே °தல °தாபனங்களின் நடவடிக்கைகளில் கட்சி வேற்றுமைகளும், காரியக் கெடுதிகளும் ஏற்படுகின்றதென்றுங் கூறியதுடன், இக்குறைகள் அகற்றப்பட வேண்டுமானாலும், பொதுஜனங்களின் வரிப் பணமானது முறை யுடன் செலவழிக்கப்பட வேண்டுமானாலும், நிர்வாகத்தை யோக்கியமாய் நடத்தக்கூடிய திறமைசாலிகளையே தெரிந்தெடுக்க வேண்டுமெனக் கூறினார்.  மற்றும் °தல °தாபனங்களின் நிர்வாகத்தில் அரசியல் கட்சி களைப் புகவிடுவது, வேலைக்கே கெடுதியைத் தருமென்றும், இதை மகாத்மா வும் பலதடவைகளில் வற்புருத்தியிருக்கிறாரென்றும் சொன்னார். பின்னர் கதர், மதுபானம் தீண்டாமை முதலியவைகளைப்பற்றி சுருக்க மாகவும் தெளிவாகவும் கேட்போர் மனதில் உணர்ச்சி உண்டாகக்கூடிய வாறு பேசியபின் காங்கிரஸைப்பற்றி ஸ்ரீமான் நாயக்கர் கூறியதின் சாரமாவது:- காங்கிரஸைப்பற்றி நீங்கள் அதிகமாகக் கவலை கொள்ளவேண்டிய தில்லை, ஒத்துழையாமைக் கொள்கைக் காங்கிரஸினின்று எடுபட்டபிறகு காங்கிரஸினால் படித்தவர்களுக்கும் அவர்கள் பிள்ளை குட்டிகள் இரண் டொருவருக்கும் உத்தியோகம் கிடைக்கலாமே தவிர...

ஆரியாவின் அபிப்பிராயம்

ஆரியாவின் அபிப்பிராயம்

ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியாவை நேயர்கள் நன்கறிவார்கள்.  இவர் உத்தம தேசாபிமானி.  அரிய தியாகம் பல நம் நாட்டிற்கென்று செய்தவர்.  இவர் சமீபத்தில், சென்னை “ஜ°டி°”  பத்திரிகையின் நிருபருக்குப் பேட்டி கொடுத்து தம் அபிப்பிராயத்தை வியக்தமாகக் கூறியிருக்கின்றார்.  இதன் சாராம்சத்தை வாசகர்கள் நமது பத்திரிகையின் வேறொரு பக்கத்தில் காண லாம்.  பிராமணரல்லாதாரின் இப்போதுள்ள தற்கால நிலைமை எதுவோ, இனி நாம் செய்யவேண்டிய வேலை என்னவுண்டோ, அவைகளை நன்றாய் ஆராய்ச்சி செய்து தீர்க்கதரிசனத்துடன் ஸ்ரீமான் ஆரியா அவர்கள் கூறி யிருப்பதை நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிராமணரல்லாதாரும் கவனிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறோம். வைதீகப் பிராமணர்கள் ஜாதிச் செருக்குக்கொண்டு மதவிஷயத்திலும், தேசீய பிராமணர்கள்  அரசியலிலும் பிராமணரல்லாதாரை தாழ்த்திவைத்து பொய்ப்பிரசாரம் செய்வதையும், இதில் தங்கள் காரியம் வெற்றி பெருவதற்கு அநுசரணையாக, இரண்டொரு பிராமணரல்லாதாரை சேர்த்துக்கொள்வ தையும்  நாம் வன்மையுடன் பலதடவைகளில் கண்டித்து வருகின்றோம். கடவுளால் படைக்கப் பெற்றுள்ள மாந்தரில் ஒருசாரார் மட்டும் ஏகபோகமாக சுதந்தரங்களை அனுபவித்துக்கொண்டு, பிறரை தாழ்த்தி...

பாட்னாத் தீர்மானம்

பாட்னாத் தீர்மானம்

சென்ற மாதம் 22 -ந் தேதி பாட்னாவில் கூடிய, அகில இந்திய காங்கிர° கமிட்டியின் தீர்மானத்தையும், அதைப்பற்றி மகாத்மாவின் தனி அபிப்பிராயத்தையும் நிதானமாய் யோசனை செய்து பார்த்தோம். அவற்றுள் காணப்படும் தத்துவத்தை  சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் மகாத்மா காந்தி அவர்கள் காங்கிரஸை சுயராஜ்யக் கட்சியார் வசம் ஒப்படைத்து விடவேண்டும் என்பதாக முடிவு செய்துக்கொண்டு, அந்தப்படியே ஒப்புவித்துவிட்டாரென்றுதான் சொல்ல வேண்டும். தீர்மானத்தின் சாரம் என்னவென்றால் நான்கணா கொடுத்தவர்க ளெல்லாம் காங்கிர° மெம்பராகலாம். காங்கிரஸில் பதவி வேண்டியவர்கள் காங்கிர° காரிய சமயங்களில் கதர்கட்டிக் கொண்டிருக்க வேண்டும். சட்ட சபை முதலிய தேர்தலுக்கு நிற்கிறவர்கள் சுயராஜ்யக் கட்சியாரின் தயவைப்  பெறவேண்டும். இந்தத் தீர்மானத்தின் மேல் மகாத்மாவின் அபிப்பிராயமோ, இதற்குச் சம்மதமில்லாதவர்கள் காங்கிரஸை விட்டு விலகிக் கொள்ள வேண்டுமேயல்லாமல், உள்ளே இருந்துகொண்டு சுயராஜ்யக் கட்சியின் வேலைகளுக்கு இடையூறாயிருக்கக் கூடாதென்பது தான். அத்துடன் பழைய நிலை ஒன்றும் மாறவில்லையென்றும், நிர்மாணத் திட்டம் பாதிக்கப்பட வில்லையென்றும் கூறுகிறார். மற்ற விஷயங்களைப்பற்றி...

பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை  -நாரதர்

பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை -நாரதர்

  பார்வதி:-        பிராணனாதா ! பரமசிவன்:- என்ன பிராணனாயகி.   பா-தி:-  சில முனிசிபாலிட்டிகளில் சேர்மெனும், வை°சேர்மெனும் சண்டைபிடித்துக் கொள்ளுகிறார்களே அது எதற்காக? ப-சி:-    என் கண்ணே! இது உனக்குத் தெரியாதா? திருடர்கள் இரண்டுபேர் தங்களுக்குள்ளாகவே சண்டைப்போட்டுக்கொண்டால் அது எதற்காக?   பா-தி:- நாதா! இது எனக்குத் தெரியாதா? திருட்டு சொத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.  முனிசிபாலிட்டிகளில் எப்படி சண்டை வரும்? ப-சி:- அதே மாதிரிதான் முனிசிபாலிட்டியிலும் பொதுஜனங்களி டம் இருந்து வாங்கும் லஞ்சத்திலும் உத்தியோகம் கொடுப்பதற்கு ஆக வாங்கும் தரகிலும் காண்டிராக்டர்களிடமிருந்து வாங்கும் வீதாச்சாரத்திலும் இருவரும் பிரித்துக் கொள்வதில் வித்தியாசம் ஏற்பட்டால் சண்டை வரவேண்டியது தானே?   பா-தி:-  இதெல்லாம் சேர்மெனுக்கும் முனிசிபல் சிப்பந்திகளுக்கும் தானே சேரவேண்டியது.  வை°சேர்மெனுக்கு இதிலென்ன பாத்திய மிருக்கிறது? ப-சி :- நீ என்ன திரேதாயுகத்து சங்கதி பேசுகிறாய்? அந்த மாதிரி இருவருக்குள்ளும் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால்? அல்லாமலும்...

தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை

தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை

  சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத் தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவுபெறாமல் இருக்கும்பொழுதே தமிழ்நாடு பத்திரிகை யும் இதுதான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது.  இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக்கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலிய வரும் சண்டை களுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ்நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக்கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிர° பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப்படுத்திக் கொண்டு °தல °தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்து வரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு...

°தல °தாபனங்களில் லஞ்சம்

°தல °தாபனங்களில் லஞ்சம்

வரவர நமது நாட்டு முனிசிபாலிட்டிகளும், டி°டிரிக்ட் போர்டு களும், தாலூகா போர்டுகளும், மனிதர்கள் பதவியை அனுபவிக்க ஒரு சாதன மாயிருப்பதோடல்லாமல் அதன் தலைவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும் ஒரு சாதனமாகிக்கொண்டு வருகிறது.  இவை கொஞ்ச காலங்களுக்கு முன்பாக நூற்றுக்கு பத்து பதினைந்து பேர்கள்தான் இம்மாதிரி தப்புவழியில் நடக்கக் கூடிய தலைவர்களை உடைத்தாயிருந்தன.  இப்பொழுது பணம் சம்பாதிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகப்பட்டுக்கொண்டு வருவதோடல்லாமல் பொதுஜனங்களுக்கும் சர்க்கார் காரியங்களில் நீதி பெறுவதுபோல் பணம் கொடுத்தால் எந்தக் காரியத்தையும் °தல °தாபனங்களில் சாதித்துக் கொள்ள லாம் என்கிற தைரியம் வந்துவிட்டது.  இம்மாதிரியான காரியங்கள் இரட்டை ஆட்சி ஏற்பட்டபிறகு  அதிகப்பட்டுப்போய்விட்டது.  இரட்டை ஆட்சிக்கு முன்பாகவும் இம்மாதிரி காரியங்கள் இருந்துவந்தது என்றாலும் சேர்மன் முதலானவர்கள் இவ்வளவு தைரியமாய் அந்தக் காலத்தில் லஞ்சம் வாங்கத் துணியவே இல்லை.  லஞ்சம் வாங்குவதென்பது சகஜமாய் போய்விட்டால் பிராதுகளும், புகார்களும் எப்படி உண்டாகும்? இம்மாதிரியான காரியங்களை அடக்குவதற்கு அரசாங்கத்தால் பிராது எதிர்பார்த்துக்கொண்டிருப்பது சுத்தப் பயித்தியக் காரத்தன...

ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்

ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்

சென்றவாரம் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரின் விஷமப் பிரசாரத்தைக் குறித்து எழுதிய தலையங்கம் முடிவுபெறவில்லை. அதாவது, நன்னிலத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் பேசியதாக முன் இதழ் தலையங்கத்தில் எழுதியிருந்த 10 குறிப்புகளில் 6-வது குறிப்புவரையிலும் தான் விளக்கியிருந்தோம்.  ஆறாவது குறிப்புக்கும் கொஞ்சம் சமாதானம் எழுதினோம். அதாவது சென்னை அரசாங்க பிரதமமந்திரி கனம் பனகால் ராஜா அவர்கள் ஸ்ரீமான் நாயக்கரை சென்னை முனிசிபல் தேர்தலில் ஜ°டி° கக்ஷியாருக்கு அனுகூலமாய் பிரசாரம் செய்யக்கூப்பிட்டு விட்டதாகவும், அதற்காக ஸ்ரீமான் நாயக்கர் சென்னைக்குச் சென்று பிரசங்கம் புரிந்ததாகவும், பிறர் நினைக்கும்படி ஸ்ரீமான் அய்யங்கார் பேசியிருக்கிறார். இந்த வாக்கு மூலத்தின்பேரில் ஸ்ரீமான் அய்யங்காரை கோர்ட்டுக்கு இழுத்து அதன்மூலமாய் ஸ்ரீமான் அய்யங்காருக்கு புத்தி கற்பிக்க பலர் ஸ்ரீமான் நாயக்கருக்கு அறிவுறுத் தினார்கள். இம்மாதிரியான விஷயங்களில் விசேஷ சந்தர்ப்பங்களல்லாது அரசாங்க நீதி°தலத்தை நாடுவது அவசியமில்லாதது என்பது நாயக்கரின் அபிப்பிராயம்.  அல்லாமலும் வெள்ளைக்காரருக்கும் இந்தியருக்கும் வழக்கேற்பட்டால் இந்தியர்களுக்கு நியாயம் கிடைப்பது எப்படியோ அதே மாதிரிதான் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும்...

கோயமுத்தூர் ஜில்லாவில் பஞ்சம்

கோயமுத்தூர் ஜில்லாவில் பஞ்சம்

இந்த ஜில்லாவின் தென்பாகம் அதாவது ஈரோடு கோயமுத்தூர் இருப்புப்பாதைக்கு தெற்கேயுள்ள எல்லா தாலூக்காக்களிலும் ஜனங்கள் பஞ்சத்தால் வருந்துகின்றனர். இவ்வருஷம் மழையில்லாததால் புஞ்சை வெள்ளாமைகள் செய்யமுடியாமல் போயிற்று.  தோட்டக்கால் புஞ்சைகளில் கிணர் வற்றிப்போய் விட்டமையால் விளைவு கிடையாது.  ஒவ்வொரு ஊரிலும் ஜனங்கள் தாகத்துக்குத் தண்ணீரில்லாது தவிக்கின்றனர்.  தென்னை மரங்களும் பனைமரங்களுங்கூட பட்டுப் போயின.  கால் நடைகளுக்கு ஓலைகளையும் வேம்பிலைகளையும் முறித்துப் போட்டு மரங்களும் மொட்டையாயிற்று.  மனிதர்களுக்கும் மாடுகளுக்குமாக சேர்ந்து கஷ்டம் வந்துவிட்டது.  ஒவ்வொரு குடித்தனக்காரரும் கையிலிருந்த காசும் கடன் வாங்கினதும் எல்லாம் செலவு செய்து கிணர்கள் வெட்டியும் பலனில்லாது கைக்காசுகளையும் இழந்தனர்.  ஏழை மக்களாயுள்ளவர்கள் ஊருக்கு 20, 30 குடிகள் பெண்டு பிள்ளைகளுடன் மலைப் பிரதேசங்களுக்கு போகிற கொடுமை பார்த்து சகிக்க முடியவில்லை.  தாராபுரம் தாலூகாவிலிருந்து மட்டிலும் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் ஓடிவிட்டன.  கோயமுத்தூர் ஜில்லாக் கலெக்டரும், அதிகாரிகளும் கஞ்சித் தொட்டி வைப்பதாக கிராமங் கள்தோறும் போகின்றனர்.  கொலைகளும் வழிப்பறிகளும் திருடர்களும் அதிகமாக...

உண்மையான தீபாவளி

உண்மையான தீபாவளி

தமிழ்நாடு கதர்போர்டு அக்கிராசனர் ஸ்ரீயுத ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் எழுதுகிறார். தீபாவளி என்பது வருஷத்திற்கொருமுறை வந்து பெருவாரியான இந்து குடும்பங்களுக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்து தங்கள் குழந்தை குட்டிகள் மக்கள் மருமக்கள் முதலானவர்களோடு களிக்கும் ஒரு பெரிய பண்டிகையாகும்.  அப்பண்டிகையன்று ஏழையானாலும் பணக்காரனானாலும், கூலிக்காரனானாலும், முதலாளியானாலும் பண்டி கையை அனுபவிப்பதில் வித்தியாசமில்லாமல் தங்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தபடி °நானம் செய்வதும், புது வ°திரங்களை அணிவதும், பல காரங்கள் உண்பதும் முக்கிய கொள்கையாகும்.  இக்கொள்கைகள் எந்த தத்துவங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதில் எவ்வளவு அபிப்பிராய பேதங்கள் இருந்தபோதிலும் பொதுவாய் மக்கள் சந்தோஷத் திற்கு புதிய வ°திரங்களையே அணிய வேண்டுமென்றிருப்பதனால் ஏழைத் தொழிலாளருக்கு ஒரு விடுதலையும் ஏற்பட்டு வந்ததென்பது அபிப்பிராய பேதமில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.  தற்கால அனுபவத்திலோ சந்தோஷமும் களிப்பும் பலவிதமாயிருந்தாலும் பெரும்பாலும் மேற்படி தீபாவளியானது ஏழை தொழிலாளர்களுக்கு பெருந் துரோகத்தை செய்வ தற்கே வருவதாகவும் போவதாகவும் ஏற்பட்டுவிட்டது. இவ்வித துரோகத் திற்கு பணக்காரர்களும், உத்தியோக°தர்களுமேதான்...

ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்

ஊன்றிப்படித்து உண்மையை அறியுங்கள்

சென்ற வாரம்  “சுயராஜ்யா” பத்திரிகையின் விஷமப்பிரசாரத்தைக் குறித்து எழுதியிருந்தோம். இவ்வாரம் “சுதேசமித்திரன்” பத்திரிகையினுடை யவும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரினுடையவும் விஷமப் பிரசாரங்களுக்குப் பதில் எழுதும்படி வந்து விட்டது. சுதேசமித்திரன் பத்திரிகையில் சென்னையில் சுயராஜ்யக்கட்சியாரின் வெற்றியைக் கொண்டாட “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” என்றும் “ வேலியே பயிரை மேய்கிறது” என்கிற தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருக்கும் பல பொய்களுக்கு பதில் எழுதாவிட்டாலும் ஈரோட்டில் தனது தம்பி முனிசிபல் சபையில் °தானம் பெறும்படி செய்வதற்காக காங்கிர° பெயரையும் மகாத்மாவின் பெயரையும் ஸ்ரீ நாயக்கர் உபயோகப்படுத்திக்கொண்டது ஞாபகமில்லையா என்று பெரிய பொய்யை எழுதியிருக்கிறது.  முதலாவது ஸ்ரீமான் ராமசாமி நாயக்கருக்கு தம்பியே கிடையாது.  சென்ற வருஷத்தில் நடந்த ஈரோடு முனிசிபல் தேர்தலில் அவர் தமையனார் முனிசிபல் அபேட்சகராய் நிற்கிற காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறார். அவர் திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையாகி ஈரோட்டிற்கு வந்த பொழுது முனிசிபல் தேர்தலுக்கு மூன்று நாட்கள்தானிருந்தன.  ஈரோட்டிற்கு வந்த உடனே வேறு...

கஞ்சீவரம் மகாநாட்டுத் தலைவர்

கஞ்சீவரம் மகாநாட்டுத் தலைவர்

கஞ்சீவரத்தில் நடைபெறப்போகும் தமிழ்மாகாண மகாநாட்டிற்கு தலைவர் தெரிந்தெடுப்பதில் பலவிதமான அபிப்பிராயங்களும் வதந்திகளும் உலவி வருகின்றன.  முதன் முதலாக ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவை யாம் சிபார்சு செய்தோம்.  அதை அவர் மறுத்துவிட்டதோடு நில்லாமல் பொது ஜனங்களுக்கு, தன்னை யாரும் சிபார்சு செய்யக்கூடாது என புத்திமதியும் கூறிவிட்டார்.  இப்படி அவர் புத்திமதி கூறியது தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக்கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது.  ஸ்ரீமான் தங்கப் பெருமாள்பிள்ளை அவர்களைத் தலைவராகத் தெரிந்தெடுக்கக்கூடுமென்று வதந்தி உலவுவதாக ஜ°டி° பத்திரிகையும், திராவிடன் பத்திரிகையும் எழுதியதோடு அதற்குச் சில காரணங்களையும் கூறுகின்றன.  இப்படி அப்பத்திரிகைகள் எழுதுவதற்குக் காரணம் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்களை இப்பத்திரிகைகள் நன்கு அறிந்து கொள்ளாததுதான் என்று சொல்லுவோம்.  ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளை அவர்கள் குருகுலப் போராட்டத்தில் ஸ்ரீமான் அய்யரை ஆதரித்தார் என்னும் கூற்றுக்குச் சிறிதும் ஆதாரமில்லை.  தமிழ்நாட்டிலுள்ள எவரையும் விட நாம் அவரிடத்தில் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம்.  சில பிராமணரல்லாத பெரியோர் என்று சொல்லப் படுகின்றவர்களைப்...

கண்ணியமற்ற ஒத்துழைப்பு

கண்ணியமற்ற ஒத்துழைப்பு

மிதவாதக் கட்சியினரும் ஜ°டி° கட்சியினரும் வெளிப்படையாக அரசாங்கத்தினோடு ஒத்துழைத்து வருகின்றனர்.  அவர்களது கொள்கை களில் யாம் அபிப்பிராயபேதம் கொள்ளினும் அவர்களது ஒத்துழைப்பு எண்ணம் கண்ணியமாக வெளிப்படையாகவுள்ளது என்றே சொல்லுவோம்.  அவர்கள் சுயராஜ்யக்கட்சியினரைப் போல் ஒத்துழையாப் போர்வையைத் தாங்கி ஒத்து ழைக்க முற்படவில்லை.  அவர்கள் எப்பொழுதும் பகிரங்கமாகவே ஒத்து ழைத்து வருகின்றனர்.  சுயராஜ்யக் கட்சியினர் அப்படி அல்லாது தேச மக்களி டம் பொய்யைக்கூறி ஓட்டுப் பெற்றுத் தங்களது பிரதிநிதித்துவத்தை மாறான வழிகளில், காங்கிரஸின் கொள்கைகளுக்கே விரோதமாக  உபயோகித்து வருகின்றனர்.  சட்டசபைகளுக்குச் செல்வதினால் ஒத்துழையாமையை இன்னும் தீவிரமாக அங்கு அனுஷ்டிக்க முடியும் எனக்கூறிய இவர்கள் காங்கிரஸிற்கே உலை வைத்து விட்டனர்.  ஒத்துழை யாமை என்னும் பதம்கூட இப்புண்ணிய சீலர்களின் சூழ்ச்சிகளால் மறைந்துவிட்டது.  சுயராஜ்யக் கட்சியினர் பலம் உடையவர்கள் என்று அரசாங்கத்தினர் கருதியிருப்பார் களாயின் இவர்கள் வேண்டுவதெல்லாம் தாங்களாகவே வலுவில் கொடுக்க முன் வந்திருப்பார்கள்.  இவர்களது செயல்களினால் இவர்கள் நம்முடன் ஒத்துழைப் பார்கள் என்பதில் சிறிதும்...

போர்  “சுயராஜ்யா” என்று சொல்லப்படும் பிராமணப் பத்திரிகை

போர் “சுயராஜ்யா” என்று சொல்லப்படும் பிராமணப் பத்திரிகை

  சுயராஜ்யா என்ற போலிப் பெயரை அணிந்து பிராமணர்களின் சுயநலத் திற்கும் பிராமணரல்லாதார் சமுகத்திற்கு துரோகம் செய்வதற்குமான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சில பிராமணர்களால் நடத்தப் பட்டுவரும் ஒரு சென்னை தினசரிப் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சமாக தனது விஷத்தை நாலுங் கக்கிக்கொண்டே வருகிறது. அதாவது இம் µ  10.9.25ல் வெளியான சுயராஜ்யா பத்திரிகையில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சில சென்னை ஓட்டர்கள் சுயராஜ்யக் கட்சியினரின் தூண்டுகோளின்படி சென்னைக்குச்சென்று ஓட்டர்கள் மகாநாட்டில் பேசிய பேச்சை அரைகுறை யாக மனதில் வைத்துக்கொண்டு   மின்னொளி என்ற தலைப்பின் கீழ் சில வார்த்தைகள் காணப்படுகின்றன.  ‘காவாலித்தனம்’ தலை மிஞ்சுகிறது. நகரசபைகளைக் கைப்பற்ற காங்கிர° முயலுமிடங்களிலெல்லாம் எதிர்க்கட்சியினர் குறும்பு பண்ணுகின்றனர். தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்கிக்கொள்வோம் என்கிறார்கள். வகுப்பு வேற்றுமைப் பேயைக் கிளப்பி விடுகின்றனர். நம்மவரிலே பலர் குட்டிக்கரணம் போடுகின்றனர். சின்னாட்களுக்கு முன் மகா தீவிர ஒத்துழையாதாரராகவிருந்தோர் இப்பொழுது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் மயங்கிக் கிடக் கின்றனர். சுதந்திரப்போரில்...

தேர்தல்  ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவின் அபிப்பிராயம்

தேர்தல் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவின் அபிப்பிராயம்

  °தல °தாபனங்களின் தேர்தல்கள் விஷயமாக ஸ்ரீமான் வரதராஜலு நாயுடு பொதுமக்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கும் விதமாக தன்னுடைய கருத்து இன்னதுதான் என்பதைப் பிறர் அறிந்து கொள்ள முடியாதபடி ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக எழுதிவருகிறார்.  இரண்டொரு விஷயத்தை மாத்திரம் இங்கு எடுத்துக்காட்டுகிறோம்.  கோயம் புத்தூர் தேர்தலின்பொழுது காங்கிர° பிரசாரகர் ஒருவர் எழுதிக் கேட்டதற்கு தேர்தல்களில் நின்ற அபேட்சகர்களை அறிந்தோ அறியாமலோ சுயராஜ்யக் கட்சிக்காரருக்காக வேலை செய்தவர்களைப் பாராட்டியும் சுயராஜ்யக் கட்சிக்காரருக்கே வெற்றி கிடைக்கவேண்டுமென்றும் ஒரு ஆசிர்வாத ஸ்ரீமுகம் அனுப்பினார்.  அதற்கடுத்தாற்போல் சுயராஜ்யக் கட்சிக்கு விரோத மாக இருந்த ஒருவர் ஸ்ரீமான் நாயுடுவுக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார்.  அந்த விண்ணப்பத்திற்கு மனதிரங்கி அடியிற் கண்டபடி மீண்டும் ஒரு ஸ்ரீமுகம் அனுப்பினார்.  “சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்கு உள்ளே சென்று அதை ஓடவிடாது தடுக்கவே முன்னால் கைப்பற்றுவதாகச் சொன்னார்கள்.  சட்ட சபைகளைத் தவிர °தல °தாபனங்களில் ஒற்றுழை யாமைக்கோ, முட்டுக் கட்டைக்கோ வழியில்லை.  முனிசிபாலிடிகளில்...

கும்பகோணம் பிராமணர்களின் தேர்தல் தந்திரம்

கும்பகோணம் பிராமணர்களின் தேர்தல் தந்திரம்

  கும்பகோணம் முனிசிபல் தேர்தலுக்கு காங்கிர° சுயராஜ்யக்கட்சி பெயரைச் சொல்லிக்கொண்டு இரண்டு அய்யர்களும் ஒரு அய்யங்காரும் ஒரு சா°திரியாரும் அபேட்சகர்களாய் நிற்கிறார்கள்.  காங்கிர° வேலைகள் நடந்த காலத்தில் இவர்கள் எங்கு இருந்தவர்கள்? காங்கிரசுக்கு இவர்கள் என்ன செய்தவர்கள்? காங்கிர° கொள்கையில் எதெதை இவர்கள் ஒப்புக் கொண்டவர்கள்? கும்பகோணம் பொது ஜனங்களும் காங்கிர° தொண்டர் களும் செய்த காங்கிர° கைங்கர்யங்கள் இந்த அய்யர்கள் அய்யங்கார்கள் சா°திரிகள் முனிசிபாலிட்டியில் °தானம் பெறத்தான் உதவவேண்டுமா? தீண்டாமை விலக்கைப்பற்றியும், குருகுலத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்க் காமை விலக்கைப் பற்றியும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு செய்த பிரசாரத்தின் பலனாய் காங்கிர° கமிட்டிக்கு நூல் சந்தாவே அனுப்பக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்ட கூட்டத்தாருக்கும், காங்கிர° பதவியிலிருந்து ராஜீனாமாக் கொடுத்து ஓடிப்போன கூட்டத்தாருக்கும் முனிசிபல் தேர்தல் வந்தவுடன் தங்கள் மானம் வெட்கத்தை யெல்லாம் விட்டு காங்கிர° காரர்களின் தியாகத்தின் மறைவில் °தானம் பெற ஆசைப்பட்டு, காங்கிர° பேரால் °தானம்...

கோவைத் தேர்தல்  – சித்திரபுத்திரன்

கோவைத் தேர்தல் – சித்திரபுத்திரன்

  கோயம்புத்தூர் நகர பரிபாலன சபையின் தேர்தல் முடிந்தது.  எட்டுக் கனவான்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். தேர்தல் பிரசாரங்களில் இரண்டு கட்சிகளின் பெயர் சொல்லிக் கொள்ளப்பட்டன. ஒன்று சுயராஜ்யக் கட்சி, மற்றொன்று ஜ°டி° கட்சி. சுயராஜ்யக் கட்சிக்கென கோயம்புத்தூர் காங்கிர° நிர்வாகிகள் என்போர் பிரசாரம் செய்தனர். ஜ°டி° கட்சிக்காக எவ்விதப் பிரசாரமும் நடைபெறாவிட்டாலும் காங்கிரஸுக்காரர்கள் நடந்துகொண்ட மாதிரியே, ஜ°டி° கட்சிக்குப் பிரசாரம் தேவையில்லாமல் போய்விட்டது. உண்மையிலேயே இப்பொழுது தேர்தலில் வெற்றி பெற்ற கனவான்கள் எவ்விதப் பிரசாரத்தினாலும் பாதகமோ, சாதகமோ அடைய முடியாதவர்கள். இவர்கள் எட்டுப் பேரும் உண்மையில் எவ்வித தனிக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. “அரண்மனை நெல்லுக்குப் பெருச் சாளிகள் சண்டையிட்டுக் கொள்வது போல் ” அநாவசியமாய் சொந்த விரோதங்களையும், சுயநலன்களையும் உத்தேசித்து ஒருவரை ஒருவர் திட்டியும், பழி  சுமத்தியும் ஆசை  தீர்த்துக் கொண்டதல்லாமல் வேறு எவ்வித பொது நன்மையும் பிரசாரங்களில் தோன்றவில்லை. சுயராஜ்யக் கட்சியின் பேரால் வெற்றி பெற்றதாகச் சொல்லப்படும் மூன்று கனவான்களும்...

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

சுயராஜ்யக் கட்சியாரின் நிலை நாளுக்கு நாள் கேவலமாகி வரு வதைப் பொது மக்கள் நன்கு அறிந்து வருகின்றனர்.  சுயராஜ்யக் கட்சியினர் அரசாங்கத்தோடு உறவாடும் எண்ணத்தோடுதான் தங் கட்சியைத் தோற்று வித்தார் என்பதின் உண்மை இப்பொழுது வெளியாகிவிட்டது.  முதலில் சட்டசபையில் புகுந்து மானத்தை வில்லாய் வளைத்துவிடப் போவதாகக் கூறிய இப்புலிகள் அரசாங்கத்தோடுக் கட்டிக் குலாவ முற்பட்டு விட்டனர்.  இவர்களால் தேசத்தில் கட்சிபேதங்களும், உலக சிரேஷ்டர் எம்பெருமான் காந்தி அடிகளின் தூய இயக்கத்திற்கு அழிவுந்தான் ஏற்பட்டதே அன்றி வேறல்ல.  இரண்டாண்டிற்கு முன் தேசமிருந்த நிலையை நன்கறிந்த உண்மையாளரின் மனம் இச் சுயராஜ்யக் கட்சியினரின் செயல்களைக் கண்டு நோகாமலிராது.  சிறிது சிறிதாக தம் மனத்தில் கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படையாகவே செய்ய முற்பட்டு விட்டனர்.  பண்டித நேரு ராணுவக் கமிட்டியில் அங்கம் பெற்றார்.  ஸ்ரீமான் படேல் இந்திய சட்டசபைக்குத் தலைவரானார்.  மீண்டும் நேரு, ஸ்ரீமான்கள் கெல்கார், அரங்கசாமி அய்யங்கார் மூவரும் “கோர்ட்டு அவமதிப்பு மசோதாவை”ப் பரிசீலனை செய்ய...

பதவியா? பொதுஜன சேவையா?

பதவியா? பொதுஜன சேவையா?

  பொதுவாக °தல °தாபனங்களின் நிர்வாகத்தையும் பொறுப் பையும் உத்தேசிக்கையில் °தல °தாபனங்களில் °தானம் பெறுவது தொண்டு செய்வதற்காகவா பதவியை அனுபவிப்பதற்காகவா என்பதை பெரும்பான்மையான ஓட்டர்கள் உணர்வதே இல்லை.  நம்மைப் பொறுத்தவரையிலும் நாம் அதை ஒரு பதவியெனக் கருதுகிறோமேயன்றி அதை ஒரு பொது ஜனசேவையென நாம் கருதுவதேயில்லை.  உதாரணமாக, எவ்வித பொது °தல °தாபனங்களில் அங்கம் பெற்றாலும் அங்கம் பெற்றவர் அதை ஒரு பதவியாகவே மதித்து அதைப் பிறருக்குக் காட்டிப் பெருமை அடைவதின் பொருட்டாக தம்முடைய பெயருக்குக் கீழ் அப்பதவியின் பெயரையும் அச்சடித்துக் கொள்ளுகிறார்.  தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளு கிறார்.  அந்நியர் இவருடைய கவுரவங்களைப் பற்றிப் பேசும் பொழுதும் அதை சுட்டிக் காட்டுகின்றனர்.  அல்லாமலும் இந்தத் தேர்தல் °தானம் பெறுவதின் பொருட்டு ஆயிரம், பதினாயிரம், இருபதினாயிரம் செலவும் செய்கின்றனர்.  யாரைப்பிடித்தால் தாங்கள் தேர்தலில் வெற்றி பெறலாமெனக் கருதி லஞ்சம் கொடுத்து ஏஜண்டுகளையும் நியமிக்கிறார்கள்.  தேர்தல் காலங்களில் தங்களுக்கு...

ஸ்ரீமான் ஆதிநாராயணன் செட்டியாரின் கூற்று

ஸ்ரீமான் ஆதிநாராயணன் செட்டியாரின் கூற்று

  மாயவரம் தாலூகா ராஜீய மகாநாட்டில் அக்கிராசனம் வகிக்க நேர்ந்து ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியார் தமிழ்நாடு காங்கிர° கமிட்டி யின் நிலைமையயைப்பற்றி சில வார்த்தைகள் சொல்லி இருக்கிறார்.  அதாவது:- “மாகாண காங்கிர° கமிட்டியுடன் நில்லாமல் ஜில்லா, தாலூகா கமிட்டிகளும் மிக்க துரதிர்ஷ்டமான நிலையில் இருக்கின்றன.  இப்பொழு துள்ள தமிழ்நாடு காங்கிர° கமிட்டியின் நிர்வாகத்தைக்  கவனித்தால் இதைவிடக் கேவலமாக இனி நடத்த முடியாது.  முக்கிய நிர்வாக உத்தி யோக°தர்கள் ஜாதிக் கொள்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  ஒருவர் (ஸ்ரீமான். பி. வரதராஜலு நாயுடுவை மனதில் வைத்துக்கொண்டு) பகிரங்க மாகவே மிகவும் பிற்போக்கான (ஜ°டி° கட்சியில்) கோஷ்டியில் தாம் சேரத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.  ஆனால், பிராமணர்களை எதிர்த்துப் போராடுவதற்காகவே சேர்வதாக பத்திரமாகக் கூறுகிறார்.  ஏனெனில் பிராமணர்களை எதிர்த்துப் போராடுவது காங்கிர° கொள்கைகளில் ஒரு பாகம் போலும்! மற்றொருவர் (ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கரை மனதில் வைத்துக்கொண்டு) °தல°தாபனங்களின் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியாரை தேர்ந்தெடுக்கக்கூடாதென்று விளம்பரப்படுத்துகிறார்.  வகுப்பு...

சுயராஜ்யக்கட்சியின் முக்கிய வேலை

சுயராஜ்யக்கட்சியின் முக்கிய வேலை

சுயராஜ்யக் கட்சியென்று சொல்லப்படும்  ராஜுயகட்சி அங்கத்தினர் களுக்கு வேலையென்னவென்றால் தாங்கள் யோக்கியர்களென்பதிலும் தங்கள் கட்சிக்கு பலம் குறையவில்லையென்பதிலும், தங்களுக்கு செல்வாக்கு இருக்கிற தென்பதிலும்  சந்தேகமேற்பட்ட காலங்களிலெல்லாம்  மகாத்மா விடம்போய்  நற்சாட்சிப் பத்திரம் வாங்குவதான வேலையையே அவர்களது தலையில் கடவுள் விதித்து விட்டார் போலும்! இப்படியே இருந்தால் இக்கட்சியின் “செல்வாக்கும் ,  பலமும், பெருந்தன்மையும்” மக்களுக்கு உபயோகப்படுவது தான் எப்பொழுது என்று தெரியவில்லை. குடி அரசு – குறிப்புரை – 30.08.1925  

எல்லா இந்திய காங்கிர° கமிட்டி 28.12.24 தேதியின் ஆறாவது தீர்மானத்தின் உண்மை

எல்லா இந்திய காங்கிர° கமிட்டி 28.12.24 தேதியின் ஆறாவது தீர்மானத்தின் உண்மை

இதற்கு முன் நான் பேசியும் எழுதியும் வந்ததில் முனிசிபாலிட்டி தாலூகா போர்டு டி°டிரிக்ட் போர்டு முதலிய °தாபனங்களை காங்கிரஸின் பெயரால் கைப்பற்ற எல்லா இந்திய காங்கிரசோ மாகாண கான்பரன்சோ ஜில்லா கான்பரன்சோ உத்திரவு கொடுக்கவில்லை என்று வெகு காலமாய் நான் சொல்லி வந்திருப்பதோடு அவ்விதமான ஒரு உத்தரவோ சிபார்சோ காங்கிர° °தாபனங்கள் செய்யக்கூடாதென்றும் நானும் எனது நண்பர்கள் சிலரும் வாதாடி வந்திருக்கிறோம்.  அவ்வித ஒரு தீர்மானம் காங்கிரஸில் இல்லாமல் செய்துமிருக்கிறோம்.  அப்படி இருக்க கோயமுத்தூர் நகர காங்கிர° கமிட்டியின் பேரால் 22. 8. 25 ல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு துண்டு பிரசுரத்தில் எல்லா இந்திய காங்கிர° கமிட்டியின் ஒரு தீர்மானத்தை தமிழில் தப்பாய் வெளியிட்டு ஜனங்களை ஏமாறும்படி செய்திருப்பதைக் கண்டு நான் வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.  அத்தோடு பொது ஜனங்களும் இந்தத் தப்பு பிரசாரத்தைக் கண்டு ஏமாறாமல் இருக்கும்படி ஒரு தெளிவு பிரசுரம் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை.  அதாவது ³ நோட்டீசில். “எங்கெங்கே...

தஞ்சையில் பிராமணரல்லாதார் மகாநாட்டுக்குப் போட்டியான தேசீய பிராமணரல்லாதார் மகாநாடு

தஞ்சையில் பிராமணரல்லாதார் மகாநாட்டுக்குப் போட்டியான தேசீய பிராமணரல்லாதார் மகாநாடு

ஜ°டி° கட்சியாரால் ஏமாறப்பட்ட தேசீய பிராமணரல்லாதார் களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார்கள்.  தேசீயவேலை தீவிரமாய் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவர்கள் எங்கு போயிருந்தார்கள்? தேசீய பிராமணரல்லாதாரென்பதற்கு என்ன யோக்கியதை வைத்திருக் கிறார்கள்? சுயராஜ்யக்கட்சியைப் போல் கைச்சாத்து மட்டும் போட்டால் போதுமா? அல்லது காரியத்தில் ஏதாவது பரீiக்ஷ உண்டா? அப்படியானால் இக்கூட்டத்தைத் தவிர வேறு யாரும் அக்காரியப் பரீiக்ஷயில் தேறினவர்கள் இல்லையா? தேசீயம் என்கிற வார்த்தைக்கு என்னதான் அர்த்தம்? உத்தியோகத்திற்கு ஆசைப்படுவதாக இருந்தாலே போதுமா? பிறரை ஏமாற்றுவதாக இருந்தால் போதுமா? மற்றொருவரைத் திட்டுவதாக இருந்தால் போதுமா? அல்லது ஏழைகளின் நன்மைக்கு ஏதாவது செய்யவேண்டுமா? இன்னும் எப்படி இருந்தாலும் சரி.  ஒரு விசேஷம் என்னவென்றால் மகாத்மா பெயரையும் காங்கிர° பெயரையும் சொல்லிக்கொண்டு சுயநலத்திற் காகத் திரியும் தமிழ்நாட்டு சுயராஜ்யக் கட்சியைவிட எத்தனையோ மடங்கு இது மேலானதுதான், மற்றொரு விசேஷம் என்னவெனின் சில தேசீய பிராமணரல்லாதாரைப்போல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றாலே உடம்பு சிலிர்க்கவும் மனச்சான்றுக்காக வருந்துவதும் போலல்லாமல்...

ஜ°டி°கட்சி மகாநாடு

ஜ°டி°கட்சி மகாநாடு

  தஞ்சையில் நடைபெற்ற ஜ°டி°கட்சி மகாநாட்டின் நடவடிக்கை    களையும் அக்கிராசனம் வகித்த ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரின் புலம்பலையும் பத்திரிகைகள் வாயிலாக நேயர்கள் வாசித்திருக்கலாம்.  இவரது பிரசங்கத்தினின்று ஜ°டி°கட்சியின் நிலை எல்லோருக்கும் நன்கு விளங்கிவிட்டது.  பிராமணரல்லாதார்களில் அநேகர் இக்கட்சியில் சேராம லிருந்ததற்குக் காரணம் கூலிக்கு ராஜபக்தியும் உத்தியோகவேட்டையும் மிகுந்திருப்பதேயன்றி வேறல்ல. இக்குணங்கள் இக்கட்சியினின்றும் ஒழிந்து இக்கட்சிக்கு இவ்வரசாங்கத்தினிடம் இருக்கும் கூலிபக்தியும் ஒழியுமானால் பிராமணரல்லாதார் எல்லோரும் இதில் சேருவார்கள்.  இல்லாவிடின் செட்டி யாரைப்போன்ற இக்கட்சியார் எல்லோரும் மந்திரிகளுள்பட ஒவ்வொரு வராய் ஒப்பாரியிட வேண்டியதாகத்தான் முடியும்.  சுயராஜ்யக்கட்சியாரும் இவர்கள்போலவே உத்தியோக வேட்டையிலும் பதவிவேட்டையிலும்  நுழைந்துள்ளார்கள்.  இவர்களது ஆர்ப்பாட்டங்களைக்கண்டு தேசமக்கள் முதலில் ஏமார்ந்து போனாலும் இவர்களது யோக்கியதையையும் விரைவில் அறிந்துவிடுவாhர்கள். பாமரஜனங்களை ஏமாற்றுவதால் எந்தக் கட்சி முன்னுக்கு வருவதா யிருந்தாலும் அது வெகு நாளைக்கு நீடித்திருக்காது என்பதை ஜ°டி° கட்சியாரும் சுயராஜ்யக்கட்சியாரும் அறியவேண்டுமென விரும்புகிறோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 30.08.1925    ...

மதுரையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் கூற்று

மதுரையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் கூற்று

ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரவர்களை மதுரை பொதுமக்கள் பகிரங்க மாகத் திறந்தவெளியில் பேசுவதற்கில்லாமல் செய்துவிட்டதின் பலனாய், ஒரு கட்டடத்திற்குள் பேச நேரிட்டு அதை ஸ்ரீமான் அய்யங்கார் பொதுமக்கள் நிறைந்த கூட்டமல்லவென்றும், ஆதலின் அங்கு என்ன வேண்டுமானாலும் பேசலாமென்று நினைத்துப் பேசி இருப்பதாகத் தெரிகிறது.  அவ் விஷயத்தைப் பொது ஜனங்கள் சரியாய் அறிந்துகொள்ளக்கூடாதவாறும், தந்திரமாய் ஜனங்களை ஏமாற்றத்தக்க மாதிரியாயும், தேசீயப் பத்திரிகை யென்ற போர்வையைப் போர்த்துக்கொண்டிருக்கும் சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிகை கீழ்க்கண்டவாறு பிரசுரித்திருக்கிறது.  ஸ்ரீமான் அய்யங்கார் பிரசங்கத்தின் சாராம்சமாவது:- “பெஜவாடாவில் கூடிய சென்ற காங்கிரஸில் எல்லா °தாபனங்களையும் காங்கிர° சுயராஜ்யக்கட்சியினர்…… மகாத்மா காந்தியும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.  ஆகவே, எதிரிகளின் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு மோசம் போகாதீர்கள்.  அவர்கள் நமக்குள் கட்சிகளை உண்டாக்கப் பலவிதங்களிலும் வழி தேடுவார்கள்.  அதற்கு நீங்கள் கவலைப்படவாவது கவனஞ்செலுத்தவாவது கூடாது” என்று பேசியிருக்கிறார்.  இவற்றில், முதல் வாக்கியத்தில் நிருபர் ஏதாவது இரண்டொரு வார்த்தைகளை விட்டு விட்டாரோ, அல்லது அங்குள்ள மீதி வாக்கியங்களை...

வேம்பு இனிக்குமா?

வேம்பு இனிக்குமா?

தஞ்சை பிராமணரல்லாதார் மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தணிகாசலஞ் செட்டியாரவர்கள் தமது அக்கிராசனப் பிரசங்கத்தில் தாம் சென்னை நகரசபையில் தேர்ந்தெடுக்கப்படாமல் போனதற்கு காரணம் கூறு கையில், தம்முடைய வண்டியில் 649 ஓட்டர்கள் போனதாகவும், 358 ஓட்டுகள் தான் தமக்குக் கிடைத்ததாகவும், அவர்களில் 108 பேர்கள்தான் பிராமணர் களென்றும், பெரும்பாலோர்கள் தமக்கு ஓட்டுக் கொடுக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.  ஜ°டி° கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு தேர்தலில் நிற்கும் ஓர் பார்ப்பனரல்லாதார் எப்படி பிராமணர்களுடைய ஓட்டுகளை எதிர்பார்க்கலாம்? ஆகையால், பிராமணர்களுடைய ஓட்டுகளை எதிர்பார்த்தது முட்டாள் தனமா? இவருக்கு ஓட் செய்வதாய் சொல்லி இவர் வண்டியிலேயே வந்து மற்றொருவருக்கு ஓட்டு செய்திருந்தால் அது அயோக்கியத்தனமா? என்பதை வாசகர்களே கவனிக்கவேண்டும். குடி அரசு – குறிப்புரை – 30.08.1925          

சென்னையில் சர்வகலாசாலைப்            பட்டமளிப்பு விழா

சென்னையில் சர்வகலாசாலைப்            பட்டமளிப்பு விழா

  இவ்வருடம் சென்னை மாகாணத்தில் 84 °திரீகளுள்பட, 1744 பேருக்கு அடிமை முத்திரை வைக்கப்பட்டது. மணிகளாகவும், மாணிக்கங்களாகவும் உள்ள பல வாலிபர்களும், °திரீ ரத்னங்களும், அடிமை முத்திரையைப் பெற்றுக்கொண்டுவிட்டார்கள். அதாவது இவ்வருடம் சர்வகலா சாலைப் பட்டம் வழங்கிய விழாவில்;   எம்.எல்.                                பரீட்சையில்    4 பேர்கள் பி.எல்.                             ,,                                       234  ,, பி.எ°.எ°ஸி.                                             1      ,, எம்.பி.பி.எ°.                                                                  ,,                                       22    ,, எல்.எம்.எ°                                                                     ,,                                       14     ,, பி.இ.                              ,,                                       11      ,, பி.எ°.ஸி.                                  ,,                                       74    ,, எல்.டி.                             ,,                                       50    ,, எம்.ஏ.                             ,,                                       52    ,, பி.ஏ. (ஆனர்°)                                                            ,,                                       89    ,, பி.ஏ.                              ,,                                       ...

சுயராஜ்யக்  கட்சியும்  ஸ்ரீமான் படேலின் உத்தியோகமும்

சுயராஜ்யக்  கட்சியும்  ஸ்ரீமான் படேலின் உத்தியோகமும்

  சுயராஜ்யக் கட்சியார் தங்கள் கட்சியை ஆரம்பிக்கும்போதே கயா காங்கிர° தீர்மானத்தை மீறிக் கலகம் செய்து காங்கிரசுக்கு  விரோதமாய் ஆரம்பித்தார்கள். அதுசமயம் காங்கிரஸில் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்களின் கோழை மனத்தாலும் ஜாதியபிமானத்தாலும் சுயராஜ்யக்  கட்சியாருக்கு சட்டசபைப் பிரவேசம் பிறகு அனுமதிக்கப்பட்டுப் போய்விட்டது. காங்கிர° அனுமதித்தாலும் பொது ஜனங்களில் மிகுதி யானவர்கள் தங்கள் பேரால் சட்டசபைப் பிரவேசத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்யலானார்கள். ஆனாலும் அதுசமயம் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையைப் பற்றி ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நம்பிப் பலர் அனுமதித்தார்கள். சுயராஜ்யக் கட்சியாருக்கே ஓட்டும் செய்தார்கள். இவ்வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட்டனவா? அல்லது பிரிட்டிஷாரின் வாக்குறுதிகள் போலாயினவா? அன்றி அதைவிடமோசமாயினவா? என்று பார்ப்போம். வாக்குறுதிகளாவன : தாங்கள் சட்டசபைக்குப் போவது சர்க்காரின் ராஜ்யபாரம் நடை பெறவிடாமல் செய்வதற்கென்றும், அதற்காக எவ்வித தீர்மானங்கள் வந்தாலும் முட்டுக்கட்டை போட்டு எதிர்ப்பது என்றும், தங்களுக்கு ( மெஜாரிட்டி ) பெரும்பான்மையோர் கிடைக்கா விட் டால் தாங்கள் சட்டசபை...

வக்கீல்கள் வாய்தா வாங்குவது

வக்கீல்கள் வாய்தா வாங்குவது

வக்கீல்:- வா கவுண்டா என்ன சங்கதி. கட்சிக்காரன்:-   எசமான்று கிட்டதான் ஒரு காரியமாய் வந்தேன். வக்கீல்:- என்ன காரியம். கட்சிக்காரன்:-   நான் ஒருத்தருக்கு 1000 ரூபாயும் வட்டியும் கொடுக்க வேண்டும் வாங்கி 2 வருசமாச்சிங்கோ. வாய்தா சொல்லி கடந்தும் ஒரு வருச மாச்சிங்கோ. கடைசியா 2 மாச வாய்தா கேட்டேன் அதுக்குள்ளே பிராது போட்டுட்டானுங்கோ. எசமான்று எப்படியாவது ஒரு இரண்டு மாச வாய்தா வாங்கி கொடுத்தாக்க பணம் கட்டிப்போட்ரனுங்கோ. வக்கீல்:- இரண்டு மாதம் தானா இரண்டு வருஷ வாய்தா வாங்கிக் கொடுக்கிறேன் கடைசியாய் அவன் உன்னிடம் பணம் வாங்குகிறதையே நான் பார்த்து விடுகிறேன். கட்சிக்காரன்:-   சாமி சாமி அப்படிச் செய்யாதிங்கோ. அவன் மொதுலுக்கு நானா பிள்ளை. எம் மொதுலை எத்தனையோ பேர் திங்கி ராங்கோ. இரண்டு மாசம் இல்லாட்டா மூணு மாச வாய்தா கிடைத்தால் போரும். வக்கீல்:- சரி, பீசு என்ன கொடுக்கறே. கட்சிக்காரன்:-   எசமாங்க சொன்னாச் சரி. வக்கீல்:-...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்  “பகற்கொள்ளைக்காரருக்கு இராத்திரிக் கொள்ளைக்காரர்களே சாட்சி”

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் “பகற்கொள்ளைக்காரருக்கு இராத்திரிக் கொள்ளைக்காரர்களே சாட்சி”

  இம்மாதம் இருபதாந்தேதி தமிழ் சுயராஜ்யா பத்திரிகையில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபித்து எழுதுவதில் ஜனங்களை மகம்மதியர் என்றும், இந்தியக் கிறி°தவரென்றும், ஐரோப்பியரென்றும், ஆங்கிலோ இந்தியரென்றும், ஒவ்வொரு வகுப்புக்காரர்களால் அவ்வவ் வகுப்பிலுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதால் தங்கள் வகுப்புக் காரியங் களைப் பார்க்கிறார்களே யல்லாமல் பொதுக்காரியம் பார்ப்பதில்லை என்றும் இதனால் வகுப்புத் துவேஷமும் வகுப்புப் பிரிவினையும் ஏற்படுகின்றன என்றும் எழுதியிருக்கிறது.  இதற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒரு சா°திரி யாரின் உபதேசத்தைக் காட்டுகிறது.  சுயராஜ்யா பத்திரிகையோ தேசீய பிராமணர் என்று சொல்லப்படும் “பகற்கொள்ளை”க்காரருடைய பத்திரிகை. திரு சா°திரியார் அவர்களோ மிதவாதப் பிராமணர் என்று சொல்லப்படும் “இராத்திரிக் கொள்ளை”க் கட்சியைச் சேர்ந்த பிராமணர்.  இப்பகற் கொள்ளைக் கட்சிக்கு ராத்திரிக் கொள்ளைக் கட்சியார் சாட்சியைத்தான் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.  போராக் குறைக்கு ஒரு பெரிய பிரட்டு என்னவென்றால் ஒரு பிராமணரல்லாத மந்திரியான ஸ்ரீமான் பாத்ரோ வும் இதை அங்கீகரித்திருக்கிறாராம்.  இந்த ஒரு விஷயம் பிராமணப் பத்திரிகைகளின் சூழ்ச்சி என்று குடிஅரசும்...

சுயராஜ்யக் கட்சிக்கு கருவேப்பிலை

சுயராஜ்யக் கட்சிக்கு கருவேப்பிலை

வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த மு°லீம்களெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் விலகிக்கொண்டே வருகிறார்கள்.  கடைசியாக வங்காள மு°லீம்களின்  தலைவரும் வங்காள நகர சபையின் டிப்டி மேயருமான டாக்டர் அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக்கட்சியின் மெம்பர் °தானத்தை ராஜிநாமாக் கொடுத்து விட்டார்.  அவர் மேற்படி ராஜிநாமாவுக்குக் காரணம் கூறுகையில் சுயராஜ்யக்கட்சியின் தத்துவம் தமக்குப் பிடிக்கவில்லை யென்றும், அதனால்தான் தாம் ராஜிநாமாக் கொடுத்து விட்டதாகவும், தாம் இன்னமும் தேசத்திர்க்கு உழைக்கத் தயாராயிருப்பதாகவும், தாம் ராஜிநாமாக் கொடுத்ததின் காரணமாக தனக்கு ராஜிய உலகிலிருந்த செல்வாக்குகள் குறைந்தபோதிலும் ஒரு புதிய கொடுமைக்கு உட்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருப்பதைவிட அரசியல் தற்கொலை செய்துகொள்வது மேல் என எண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.  வங்காளத்தில் இப்படியென்றால், பம்பாயிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கும், சிந்து மு°லீம்களுக்கும் ஒற்றுமை இல்லாமல் இருவருக்குள்ளும், ஒத்துழைக்க முடியாதெனக் கூறி அவர்களுடன் ஒத்துழையாமை ஆரம்பித்திருப்பதாய் தெரியவருகிறது.  நமது மாகாணத்திலும் மதுரையில் சில சுயராஜ்யக் கட்சியார் சில மு°லீம்கள் விஷயமாய் நடந்துகொண்டது மதுரையில் சுயராஜ்யக்...

தேர்தல் பேய்

தேர்தல் பேய்

  இதைப்பற்றி பல தடவைகளில் நமது பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தேர்தல்கள் என்பது ஒரு பாத்தியமற்ற, கேள்வியற்ற சொத்தைப்போல் பிடித்தவனுக்குப் பொண்டாட்டி என மதித்து பலாத் காரமான செய்கைக்கொப்ப பல கொடுமைகள் நமது நாட்டில் இதுசமயம் நடந்து வருகின்றன. சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும் இன்னும் மற்ற இடங்களிலும் நடக்கும் தேர்தல் பிரசாரங்கள் இந்தியா நாகரீகமற்ற தேசம் என்பாருக்கும்  இந்திய மக்கள் சுயராஜ்யத்திற்கு யோக்கியதையற்ற வர்கள் என்பாருக்கும் தங்கள் கட்சிக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உபயோகப்படுத்திக்கொள்ளத்தக்கதான சாட்சியாய் விளங்குகிறது. ஆனபோ திலும் நமக்கு இவைகளை மறுக்கும் மார்க்கம் ஏதாவது உண்டா என்று பார்த் தால் பிரஞ்சு தேசத்தில் இப்படி இல்லையா? பிரிட்டிஷ் தேசத்தில் இப்படி இல்லையா? என்று சொல்லித்தான் தப்பித்துக் கொள்ளக் கூடுமாயிருக்கிறதே அல்லாமல் அவர்கள் சொல்லுவதைப் பொய்யென்றும் மறுக்க யோக்கியதை இல்லாதவர்களாயிருக்கிறோம். இதோடு மாத்திரம் அல்லாமல் இந்தியாவின் விடுதலைக்கேற்பட்டதும் 2 ´த்திற்கு முன்பு மிகமிக பரிசுத்தத் தன்மையுடையதென்று சொல்லிக்  கொள்ளப்பட்டிருந்ததுமான காங்கிரஸின் பெயரும்...

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

ஒத்துழையாமை திட்டத்தில் சர்க்காரும் பொது ஜனங்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய பாகம் ஒன்று உண்டு.  அதாவது, விவகாரங்களைக் கோர்ட் டுக்குப் போய் பைசல் செய்து கொள்ள நினையாமல் உள்ளூர் பஞ்சாயத்தார் மூலம் வழக்குகளைப் பைசல் செய்து கொள்வது, இருகட்சிக்காரருக்கும் அனுகூலம் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.  இந்த யோசனை கொஞ் சமும் புதிதானதல்ல ஆதியில் ஜனங்கள் பஞ்சாயத்து மூலமாய் தான் தங்கள் வழக்குகளை பைசல் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்.  ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தனக்குத் தானே பஞ்சாயத்தாராகத்தான் இருந்திருக்கிறார். இந்த தன்னுடைய பஞ்சாயத்தை ஒப்புக்கொள்ளாத காலத்தில் மனிதன் பலாத்காரத்தினால் அதை அமுலுக்குக் கொண்டுவரப் பார்க்கிறான்.  இது ஒருவருக்கொருவர் இரத்தம் சொரியக் கொண்டு வந்துவிட்டதினால், தனக்குத் தானே பஞ்சாயத்தாராக இருக்கக்கூடாது என்று அறிந்து மூன்றாவது மனிதரை பஞ்சாயத்தாராக ஏற்படுத்திக்கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது.  அது நாளா வட்டத்தில் வளர்ந்து கிரமமான உபயோகமான பஞ்சாயத்தாக ஏற் பட்டது.  பொதுஜனங்கள் தற்கால நிலையில் வக்கீல்களின் ஆசை வார்த்தை களையும்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்  -சித்திரபுத்திரன்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் -சித்திரபுத்திரன்

  தற்காலம் இந்தியாவின் அபிப்பிராய பேதத்திற்கும், ஒற்றுமை யின்மைக்கும், வகுப்புத் துவேஷங்களுக்கும் ஒரே மருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான் என்று சில நாட்களுக்கு முன்னர் “குடி அரசி”ன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அதைப்பற்றி வெளிப்படையான ஆட்சேபங்கள் ஒன்றும் வரவில்லை. ஆனாலும், அதனால் பாதிக்கப்படக் கூடிய வகுப்பைச் சேர்ந்ததான “சுதேசமித்திரன்” பத்திரிகை மந்திரி ஒப்புக்கொள்ளுகிறார் என்கிற தலைப்பின் கீழ் ஒரு சொற்பெருக்கில் தனக்கு அநுகூலமான பாகத்தை மட்டும் எடுத்து எழுதி ஜனங்களை ஏமாற்றி, யோசித்துப்பாருங்கள் என்று கேட்டிருக்கிறது.  “அதாவது பிரதிநிதிச் சபைகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே ஜ°டி° கட்சியாரின் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது.  ஆனால் அது தற்கால ஏற்பாடு.  அதை ஒரு °திரமான ஏற்பாடாகக் கொண்டால், அது நம் தேசிய இயக்கம் சிதருண்டு போகும்படி செய்யக்கூடியது”. “திராவிடன்” பத்திரிகை மேற்படி மந்திரியின் சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு வெளியிட்டிருக்கிறது.  “சம நியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றிமையாதது.  இக் கொள்கை புதிதானதல்ல.  சீர்திருத்தச் சட்டம் நடப்புக்கு வந்தபின்னர் ஏற் பட்டதுமல்ல,...

கள்ளுக்கும் விஷத்திர்க்கும் வாக்குவாதம்

கள்ளுக்கும் விஷத்திர்க்கும் வாக்குவாதம்

விஷம்- ஓ கள்ளே! நீ என்ன மகா கெட்டிக்காரன்போல் பேசுகிறாய், ஒரு கடுகளவு ஒரு மனிதனுக்குள் பிரவேசித்தேனேயானால் உடனே அவன் உயிரை வாங்கி பிணமாக்கிவிடுவேன்.  நீ பீப்பாயளவு உள்ளே போனாலும் ஒன்றும் செய்வதில்லை. கள்ளு:- அப்படியா, உன்னால் என்ன செய்யமுடியும்? ஒரு மனிதன் உயிரை மாத்திரம் தான் வாங்கமுடியும்.  இது யாரும் செய்து விடுவார்கள்.  என் சங்கதியைக் கேள்.  நான் ஒரு மனிதனுக்குள் சென்றேனேயானால் அவன் புத்தி, மானம், சொத்து இவ்வளவையும் பிடுங்கிக் கொள்வதோடு உயிர் இருக்கவே பிணமாக்கிவிடுவேன்.  இது உன்னாலாகுமா? குடி அரசு – உரையாடல் – 16.08.1925  

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம்

  ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சா°திரி வந்தார். பெரியமனிதர்:-  வாருங்கள் சா°திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டு மென்றிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள். சா°திரிகள்:-     அப்படியா, என்ன விசேஷம்? பெரியமனிதர்:-  ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதர்க்கேதாவது பிராயச்சித்தம் உண்டா? சா°திரிகள்:-     ஆஹா உண்டு! அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்.  இல்லாவிட்டால் அந்தப் பையனை பார்க்கவே கூடாது. பெரியமனிதர்:-  தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன்தான், அதற்கு வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள். சா°திரிகள்:-     ஓஹோ! பிராமண பையனா அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும். குடி அரசு – உரையாடல் – 16.08.1925

பெரிய வக்கீல்கள்

பெரிய வக்கீல்கள்

  ஒரு வக்கீல் வீட்டிற்கு ஒரு கக்ஷிக்காரர் வருகிறார். வக்கீல்:-        வாங்க கவுண்டரே, சவுக்கியமா என்ன விசேஷம்? கட்சிக்காரன்:-   ஒரு கேசு கீழ் கோர்ட்டில் நமக்கு விரோதமாய்ப் போய் விட்டது. அப்பீல் போடவேண்டும் தயவுசெய்து கட்டை பாருங்கள். வக்கீல்:-        கட்டில் ஒரு ரிகார்ட், அதாவது ஜட்ஜ்மெண்டை எடுத்து பார்த்துக்கொண்டு தன்னுடைய குமா°தாவிடம் பேசுவதுபோல் “ஏண்டா ரங்கநாதா, யாரடா ஜட்ஜிமெண்ட் எழுதிய சப்ஜட்ஜி சுத்த முட்டாளாயிருக் கிறானே.  அவன் தனக்குமேல் ஏதாவது கோர்ட்டு இருப்பதாக நினைத்தானா அவனேதான் முடிவான ஜட்ஜி என்று நினைத்துக்கொண்டானா? இந்த ஜட்ஜ்மெண்ட் நம்ம ஜட்ஜி துரையிடம் அரை நிமிஷம் நிற்குமா? அல்லாமலும் இந்த சப்ஜட்ஜை சும்மா விட்டுவிடுவார்களா?” கட்சிக்காரன்:-   (என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே கட்சிக்காரன் ஆனந்தத்துடன்) ஏனுங்கொ எஜமான்றே எதிர்கட்சிக்கு நோட்டீசு அனுப்பி மாற்றுவார்களா? அதில்லாமலே கீழ்கோர்ட் தீர்ப்பை மாற்றிவிடுவார்களா? வக்கீல்:- அதெல்லாம் உங்களுக்கெதற்கு? நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.  700 ரூ. பீசு கொடுத்தால் கேசு அப்பீல் போடுவேன்....

மதுபானம்

மதுபானம்

1920 – ம் ´ சென்னை ராஜதானியில் உள்ள கள்ளுக்கடைகள் 11,034  இவைகளில் விற்ற கள்ளு 11 கோடி காலன். 8 திராம் புட்டி 1 க்கு 2 அணா வீதம் 66 கோடி புட்டிக்கு கிரயம் ரூ. 8 1/2 கோடி கிரயம் ஆகிறது. இதற்கு அனுகூலமாய் செலவாகும் மாமிசம், புட்டு, தோசை, முட்டை  முதலிய உபகருவிகளுக்கு 2 கோடி ரூபாய் ஆக ரூ.101/2  கோடி. சென்னை ராஜதானியில் உள்ள சாராயக்கடைகள் 6,352. இவைகளில் விற்ற சாராயம் 16,75,000 காலன்கள். காலன் ஒன்றுக்கு  12 ரூ. வீதம் 2 கோடியே 1 லட்சம்  ரூபாய்.  இதற்கு மாமிசம், தோசை, புட்டு முதலிய உபகருவிகள் 25 லட்சம். ஆக இரண்டும் சேர்ந்து 12 1/2 கோடி ரூபாய் செலவாகிறது. இந்தப் பனிரண்டரைக்கோடி ரூபாய் நமது ராஜதானியில் கள், சாராயத் திற்காக 3 1/2 கோடி ஜனங்களால் சிலவு செய்யப்படுகிறது. இது  அல்லாமல் ...

அந்தணர்ப்பேட்டை

அந்தணர்ப்பேட்டை

அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும்  மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்தி சாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நான் ஸ்ரீமான் சாரநாதனுடன் சென்றி ருந்தேன். ஆண்டு விழாவின் ஊர்வலத்தையும் அதில் வாசித்த உபசாரப் பத்திரங்களையும் இங்கு எடுத்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் இச்சிறு கிராமத்தில் உள்ள ஜனங்களுக்கு கதரின் மீதுள்ள ஆர்வத் தைக் காட்டுவதற்கு இது குறிக்க வேண்டியதாயிற்று. ஆண்டு விழாவில் அதன் நிர்வாகிகளால் வாசிக்கப்பட்ட கதர் உற்பத்தி சாலையின் யாதா°தி லிருந்து நான் தெரிந்துகொண்ட சிலவற்றைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். அவ்வூர் பிரமுகர்கள் பங்கு முறையில் மூவாயிரம் ரூபாய் சேர்த்து வியாபார முறையில் நடத்தி வருகிறார்கள். இதற்காக கதர்ச்சாலையாரின் இராட்டினம் நாற்பத்தேழும், கூலிக்கு நூற்பவர்கள் இராட்டினம் நாற்பத்தைந்தும்  ஆக இராட்டினங்கள் தொண்ணூற்றிரண்டு சுழலுகின்றன. ஆறு தறிகளுக்கும் பூரா...

சுரேந்திர நாதரின் மறைவு

சுரேந்திர நாதரின் மறைவு

  வங்கத்தின் முடி சூடா மன்னன் என அழைக்கப்படும் ஸ்ரீ சுரேந்திர நாத பானர்ஜி வியாழனன்று இம்மண்ணுலகினின்று மறைந்தார் என்ற செய்தியைக் கேட்க மிகுந்த விசனத்திலாழ்கிறோம்.  அப்பெரியார் ஐம்பது ஆண்டுகள் தேசத்திற்குத் தனக்குத் தோன்றிய வழி நின்று சலியாது தொண்டு புரிந்தார்.  முதன்முதலாக கலெக்டர் உத்தியோகத்தில் சில மாதங்களிருந்து பின்னர் விலக்கப்பட்டார்.  உடனே கல்வி வளர்ச்சிக்காக உழைக்க முற்பட்டு ரிப்பன் கல்லூரியைக் கண்டு அதில் போதகாசிரியராகவுமிருந்தார்.  தேசீய உணர்ச்சி பரவாத அக்காலத்தில் இளம் வங்க வாலிப வீரர்களுக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தார்.  பழைய காங்கிரஸில் ஓர் முக்கியத் தலைவராக நின்று ஊழியம் புரிந்தார்.  இரண்டுமுறை காங்கிரஸில் தலைமையும் வகித் துள்ளார்.  ஒத்துழையாமை தோன்றிய காலத்தில், நம் தேசமானது அவ்வியக் கத்திற்குத் தயாராக இல்லை எனப் பலர் கருதியதுபோல் சுரேந்திர நாதரும் கருதி மிதவாதக் கொள்கையையே பின்பற்றி வந்தார். ஸ்ரீ சுரேந்திர நாதர் மீது இந்திய மக்கள் ஏதாவது ஒரு வழியில் அதிருப்தி...

ஒரு கோடி ரூபாயும்,  இருபத்தோரு நாள் உண்ணாவிரதமும்  முப்பதினாயிரம் பேர் சிறைவாசமும்

ஒரு கோடி ரூபாயும்,  இருபத்தோரு நாள் உண்ணாவிரதமும்  முப்பதினாயிரம் பேர் சிறைவாசமும்

  இந்தியாவானது அந்நிய ஆட்சிக்குட்பட்டு அடிமைத்தன்மை அடைந்து அவதிப்பட ஆரம்பித்தக் காலமுதல் இதுவரையிலும் விடுதலை பெறுவதற்காக மகாத்மாவின் காலத்தில் கொடுத்த விலைபோல் ஒரு பொழுதும் கொடுத்திராதென்றே நினைக்கிறோம். ஆனால், நமது தேசத்திற்கு மாத்திரம் இன்னமும் விடுதலை பெறும் காலம் வரவில்லையென்றே சொல்ல வேண்டும். மூன்று மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தும், மாதம் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், ஐம்பதினாயிரம் ரூபாய் வரும்படி உள்ள வக்கீல்கள் உள்பட சுமார் ஐநூறு பேர் தங்கள் தொழிலை நிறுத்தி தேசத் தொண்டில் இறங்கியும்,  அரசபோகத்தில் இருந்தவர்கள் முதற்கொண்டு ஜமீன்தார்கள், பிரபுக்கள், வியாபாரிகள் உள்பட ஏழைகள் வரை முப்பதி னாயிரம் பேர் சிறைக்குச் சென்றும் மகாத்மாவே இரண்டு வருடங்கள் சிறை யில் வதிந்தும் சிறையினின்று வெளிப்போந்து இருபத்தொருநாள் உண்ணா விரதமிருந்தும் இந்தியா சுயராஜ்யம் அடையவில்லை என்று சொன்னால் இனி எப்படி, எப்பொழுது, எவரால் விடுதலை அடையமுடியும்? இனி மறுபடியும் இந்தியா சுயராஜ்யமடைய நாம் பாடுபட வேண்டுமானால்...

மாஜி°டிரேட்டின் மயக்கம்   – குட்டிச்சாத்தான்

மாஜி°டிரேட்டின் மயக்கம்  – குட்டிச்சாத்தான்

  ஒரு மாஜி°ட்ரேட் வீட்டுக்கு ஒரு கிழ வக்கீல் வருகிறார். மாஜி°ட்ரேட்:-   வாருங்கோ சார், சௌக்கியமா? வக்கீல்:- என்ன சௌக்கியம் போங்கள், குளிக்கவும் விபூதி பூசவும் சரி அதற்குமேல் சாப்பாடு முதலியதைப்பற்றிக் கேட்காதீர்கள்; வக்கீல்களுக்கு ஏதாவது வேலையிருந்தால்தானே. மாஜி°ட்ரேட்:-   ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? கொஞ்சகால மாகத்தான் நம்ம கோர்ட்டுக்கு நீங்கள் வருகிறதில்லை.  முனிசீப்கோர்ட் டெபுடி மாஜி°ட்ரேட் கோர்ட்டு இதெல்லாம் இல்லையோ? வக்கீல்:- முனிசீப்கோர்ட் டெபுடி கெலக்டர் கோர்ட்டு விசேஷம் சாவ காசமாய்ச் சொல்லுகிறேன்.  எஜமானர் கோர்ட்டுக்கோ முன்போல் கேசே வருகிறதில்லை.  வந்தாலும் பிராது வாங்கும்போதே தள்ளிவிடப் பார்க் கிறீர்கள்.  இல்லாவிட்டால் வாதி பிரதிவாதி இரண்டுபேரையும் தண்டித்து விடு கிறீர்கள்.  எஜமானர் கோர்டுக்கே கட்சிக்காரர்கள் வர பயப்படுகிறார்கள். ஏதா வது தைரியமாய் வக்கீல் வைத்துக் கொண்டு வந்தால் அந்த வக்கீலை எஜ மானர் மதிப்பதேயில்லை. அவனை வாயெடுக்க விடுவதில்லை. எல்லாக் கேள்விகளையும் கிராசுகளையும் எஜமானரே கேட்டு முடிவு செய்து விடு கிறீர்கள். பிறகு...