பிராயச்சித்தம்

 

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சா°திரி வந்தார்.

பெரியமனிதர்:-  வாருங்கள் சா°திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டு மென்றிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள்.

சா°திரிகள்:-     அப்படியா, என்ன விசேஷம்?

பெரியமனிதர்:-  ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதர்க்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சா°திரிகள்:-     ஆஹா உண்டு! அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்.  இல்லாவிட்டால் அந்தப் பையனை பார்க்கவே கூடாது.

பெரியமனிதர்:-  தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன்தான், அதற்கு வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.

சா°திரிகள்:-     ஓஹோ! பிராமண பையனா அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும்.

குடி அரசு – உரையாடல் – 16.08.1925

You may also like...