மாஜி°டிரேட்டின் மயக்கம்  – குட்டிச்சாத்தான்

 

ஒரு மாஜி°ட்ரேட் வீட்டுக்கு ஒரு கிழ வக்கீல் வருகிறார்.

மாஜி°ட்ரேட்:-   வாருங்கோ சார், சௌக்கியமா?

வக்கீல்:- என்ன சௌக்கியம் போங்கள், குளிக்கவும் விபூதி பூசவும் சரி அதற்குமேல் சாப்பாடு முதலியதைப்பற்றிக் கேட்காதீர்கள்; வக்கீல்களுக்கு ஏதாவது வேலையிருந்தால்தானே.

மாஜி°ட்ரேட்:-   ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? கொஞ்சகால மாகத்தான் நம்ம கோர்ட்டுக்கு நீங்கள் வருகிறதில்லை.  முனிசீப்கோர்ட் டெபுடி மாஜி°ட்ரேட் கோர்ட்டு இதெல்லாம் இல்லையோ?

வக்கீல்:- முனிசீப்கோர்ட் டெபுடி கெலக்டர் கோர்ட்டு விசேஷம் சாவ காசமாய்ச் சொல்லுகிறேன்.  எஜமானர் கோர்ட்டுக்கோ முன்போல் கேசே வருகிறதில்லை.  வந்தாலும் பிராது வாங்கும்போதே தள்ளிவிடப் பார்க் கிறீர்கள்.  இல்லாவிட்டால் வாதி பிரதிவாதி இரண்டுபேரையும் தண்டித்து விடு கிறீர்கள்.  எஜமானர் கோர்டுக்கே கட்சிக்காரர்கள் வர பயப்படுகிறார்கள். ஏதா வது தைரியமாய் வக்கீல் வைத்துக் கொண்டு வந்தால் அந்த வக்கீலை எஜ மானர் மதிப்பதேயில்லை. அவனை வாயெடுக்க விடுவதில்லை. எல்லாக் கேள்விகளையும் கிராசுகளையும் எஜமானரே கேட்டு முடிவு செய்து விடு கிறீர்கள். பிறகு எங்களுக்கு வேலையேது?

மாஜி°ட்ரேட்:- ஓ, ஹோ என்னாலா கெட்டுப்போய்விடுகிறது? நான் உண்மை அறிய வேண்டாமா? அநேக பிராதுகள் எழுதிக்கொண்டு வருவ தொன்று, பிரமாண வாக்குமூலம் கொடுப்பதொன்று, பிராதுக்காரர்கள் பிராதில் எழுதியிருப்பதொன்று, வாக்குமூலம் கொடுப்பதொன்று. ஏன் இப்படி என்று கேட்டால் நான் இப்படித்தான் சொன்னேன் நீ சொல்லுகிறபடி எழுதினால் கே° ஜெயமாகாதென்று சொல்லி வக்கீல் தன்னிஷ்டப்படி எழுதிக்கொடுத்து அந்தப் படியே சொல்லச்சொன்னார்.  எஜமானரை நிஜம் சொல்லும்படி சொன்னதால் நிஜம் சொல்லிவிட்டேன் என்று சொல்லுகிறான்.  இப்படிப்பட்ட பிராதுகளை நான் என்ன செய்வது நீங்களே சொல்லுங்களே.

வக்கீல்:- எஜமானர் இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் பிழைப்ப தெப்படி? பிராதுக்காரர்கள் சொல்லுகிறபடி எழுதினால் ஒரு கேசுகூட நிற்காது,  எஜமானரை கேசை வாங்கிப் பதியசெய்து சம்மன் அனுப்பி 4, 5 வாய்தாப் போட்டு பிறகு என்னமோ செய்துவிடுங்களே, எதோ எங்களுக்கும் அரைக் கஞ்சிகிடைக்கும் எஜமானருக்கும்…….

மாஜி°ட்ரேட்:-   என்னையா, எஜமானருக்கு என்று வாய்க்குள் ளாகவே முணுமுணு என்று பேசிக் கொள்ளுகிறீர்களே.

வக்கீல்:- எஜமானருக்குத் தெரியாதது நான் என்ன சொல்லப் போகிறேன்?

மாஜி°ட்ரேட்:-   என்ன சொல்லுங்களே.

வக்கீல்:-        எஜமானர் தகப்பனார் பெரிய எஜமானர். மாஜி°ட்ரேட்டா யிருக்கும் போது முதலே நான் வக்கீலாயிருக்கிறேன்.  அவர் யாரையும் நம்ப மாட்டார்.  என்னைத்தான் நம்புவார்.  வீட்டுக்குக் காய்கரி சாமான் முதல் கொண்டு நான்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும்.  எஜமானர் இப்போது இருக்கிறது போல் பெரிய எஜமானரும் இருந்திருந்தால் வீடேது, வாசலேது, எஜமானர் சகோதரிகளுக்கு இப்படிப்பட்ட தக்க இடத்து மாப்பிள்ளைகளேது. எஜமானர்தான் படித்துப் பா° செய்து இந்த உத்தியோகத்திர்க்கு வருகிறதேது.  இந்த சமயத்தில் எதோ உத்தியோகத்தில் நாலு காசு சம்பாதித்தால்தானே பின்னாடிக்கு உதவும்.

மாஜி°ட்ரேட்:-   இப்பொழுது எனக்கு என்ன குறவு?  µ 150 ரூபாய் சம்பளம் வருகிறது.  100 அல்லது 110 ரூபாய் செலவாய்விடுகிறது.  மீதி µ 40 ரூபாய் பாங்கியில் போட்டு வருகிறேன்.

வக்கீல்:-        µ 40ரூ. மீதி செய்தால் அது எதர்க்கு உதவும்? எஜமானர் சம்சாரம் என்கிற பேருக்காவது  அம்மாவுக்கு நகை வேண்டாமா? குழந்தைகள் படிக்க வேண்டாமா? 4, 5 பெண்கள் இருக்கிறாப்போல் இருக்கிறது. ( மாஜி°ட்ரேட்:-இல்லை இல்லை 3 தான், மற்றது என் மச்சனி குழந்தைகள்) அதுகளுக்கு ஏதாவது நகை செய்து போட வேண்டாமா? 2000,  3000 கொடுக்காமல் இதுகளுக்கு நல்ல படித்த மாப்பிள்ளைகள் கிடைப் பார்களா? இப்பொழுது இதெல்லாம் கவனிக்காமல் இருந்து விட்டு நாளைக்கு பெண்களை மிட்டாய் கடைக்காரர்களுக்கோ, அல்லது பரிசாரகர்களுக் கோவா கட்டிக் கொடுப்பது?

மாஜி°ட்ரேட்:-   அதற்கு நாம் என்ன செய்யலாம்.  இதற்கு மேல் எப்படிப் பணம் மீதி செய்ய முடியும்? வீட்டு வாடகை 17ரூ, வண்டிமாட்டுக்கு 10ரூ, ஆளுக்கு 8ரூ. (வ:- சேவகர்கள் இருந்துகூடவா?  மா:- ஆம்) ரீடிங் ரூம் முதலிய சப்°கிருப்ஷன் 7, 8 ரூ. ஆய் விடுகிறது.  குழந்தைகளுக்கு துணிமணி செலவு எனக்கும் வீட்டிற்கும் துணிமணி செலவு இதெல்லாம் குறைக்க முடிகிறதா? அப்புறம் சாப்பாட்டு செலவு, அதுவும் கூடியவரை சுருக்கம் தான்.  குழந்தைகளுக்குக் காப்பிகூட இல்லை.  பழையசோறுதான், எனக்குமாத்திரம் ஒரேஒரு டம்ளர் வெறுங் காப்பி, வீட்டிலோ அதுவும் சாப்பிடுகிற வழக்கமில்லை.  நீங்கள் சொன்ன அப்பா  சம்பாதித்த வீடு ஊரிலிருக்கிறது.  அதற்கு µ 15 ரூ. வாடகை வருகிறது.  அதன்பேரில் 1700 ரூ. கடன் இருக்கிறது.  வாடகையை வட்டி கட்டி வர ஏற்பாடு செய்திருக்கிறேன்.  முனிசிபாலிட்டி வரி இங்கிருந்தனுப்புகிறேன்.  வீணாய் அதிக ஆசைப்பட்டு என்ன செய்வது?

வக்கீல்:- எஜமானரு இந்த சம்பளத்தையே நம்பிக்கொண்டிருந்தால் நாளைக்குக் குடும்பம் என்ன கதியாவது?

மாஜி°ட்ரேட்:-   சம்பளத்தைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

(பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்த                    மாஜி°ட்ரேட் சம்சாரம்)

எஜமானருக்கு எல்லாம் விவரமாய் சொல்லவேணுமாக்கும். வக்கீல் தாதா அவர் பிழைக்கவோ இவ்வளவு சொல்லுகிறார்.  நம்முடையை நிலைமை தெரிந்து பரிதாபப்பட்டுத்தான் இவ்வளவும் சொல்லுகிறார்.  மாசத் திற்கு எத்தினை பெரிய கேசுகள் வருகிறது? எத்தினை பேர் கேசுக்காரர்கள் நம்ம வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்க்கணும் அம்மாவைப் பார்க்கணும் என்று சேவகர்களை கேழ்க்கிறார்கள்.  சேவகர்களுக்கும் ஒவ்வொரு கேசுக் காரர்கள் வரும்போது பார்த்தால் நாக்கில் ஜலம் ஊருகிறது.  எஜமானருக்கு பயந்து கொண்டு அம்மா இல்லை ஆட்டுக்குட்டி இல்லை என்று விரட்டி முடிக்கி அனுப்பிவிடுகிறது. நீங்கள் ஒன்றுக்கும் போகவேண்டாம். நானும், வக்கீல் தாதாவும் பார்த்துக் கொள்ளுகிறோம்.  நான் பார்த்து கேசை விடு என்றால் விட்டு விடுங்கள், தண்டி என்றால் தண்டித்து விடுங்கள், இவ்வளவு தானே மற்றப்படி என்ன வேப்பெண்ணையா குடிக்கப் போகிறீர்கள்?

சேலத்தில் ஒரு மாஜி°ட்ரேட் உங்களைப்போல்தான் கவனிக்காமல் இருந்தார்.  திடீரென்று கச்சேரியிலேயே செத்துப்போய்விட்டார்.  ஊரார் அதுவும் கடைவீதிக்காரர்தான் ஆளுக்கு 1, 2, வரி போட்டு வசூல் செய்து பிரேதத்தை வெளிப்படுத்தி பெண்ஜாதி பிள்ளைகளுக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்து பிறந்த வீட்டுக்கு அனுப்பிக் கொடுத்தார்களாம்.

இங்கே வந்தால் நின்று கொண்டே இருக்கிறாரே அந்த அடுத்தவீட்டு சப் இனி°பெக்ட்டரைப் பாருங்கள்.  உங்கள் சம்பளத்தில் பகுதிதானாம்.  அவர் குழந்தை நகையும் உடுப்பும் வெள்ளைக்காரக் குழந்தைகளும் போலவும் பெண்களைப்போலவும் நடக்கிறார்கள்.  ஒவ்வொரு குழந்தைக்கு ஒரு தள்ளு வண்டியை போலீசுகாரர் உடுப்போடவே தள்ளுகிறார்கள்.  நம்ப எஜமானருக்கு மாத்திரம் சேவகன் பில் போட்டுக்கொண்டு காய்கரிகூட வாங்கக் கூடாதாம்.  நல்லா சொல்லுங்க தாத்தா.

வக்கீல்:-எஜமானருக்கு அனுபோகம் போதாது, சிறுவயதில் கல்யாண மாய் விட்டது.  பெரிய எஜமானர் தயவிலே போர்டாபீசில் வேலை கிடைத்து விட்டது.  அங்கேயே நாலைந்து வருஷம் இருந்துவிட்டார்.  அங்கு இருப்பவர்கள் ஆன°ட்டு ஆன°ட்டு என்று அர்த்தமில்லாத வார்த்தை யைக் கற்றுக் கொடுத்து விட்டார்கள்.  அதை கட்டிக்கொண்டு அழுகிறார்.  நம்ம டிப்டி கலெக்ட்டர் எஜமானரு பி.ஏ. கூட படிக்கவில்லை.  அட்டண்டர் காப்பீ°டர் வேலையிலிருந்து வந்தவர், மாதம் 2000ரூ. மச்சினனுக்கு அனுப்புகிறார்.  இதற்கு ஒரு காசு குறைந்தால் ஆபீசு குமா°தாக்கள் மேலும் சேவகர்கள் மேலும் நெருப்பு மாதிரி விழுவார்.  பெரிய கலெக்டருக்கும் அந்த எஜமானர் இடத்தில் ரொம்பப் பிரியம்

(மா:- சம்சாரம்) ஆமா தாத்தா அவர்கள் வீட்டுக்கு அன்னைக்குகூட பெரிய கலெக்டர் வந்து காப்பி சாப்பிட்டுவிட்டு அவர்கள்  வீட்டு அம்புஜத்தை வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டுப் போனாராம். நம்ம எஜமானர் போனதற்கு திரும்பிக்கூட பார்க்கவில்லையாம்.  ஒருமணி நேரம் மரமாட்ட நின்று விட்டு தெய்வமே என்று வந்துவிட்டார்.  என்னண்டை வந்து துக்கப்பட்டார்.

வக்கீல்:- அது மாத்திரமா? இப்படி இருந்தால் எஜமானருக்கு மேல் உத்தியோகம் (பிரமோஷன்) ஆகவா போகிறது? இப்பொழுதே எஜமானருக்கு கீழே இருந்த இரண்டு மூன்று பேருக்கு தாசில் ஆய்விட்டது.  அதில் இரண்டு பேருக்கு காயமும் ஆய்விட்டது. அவர்கள் பெயர் டிப்டி கலெக்டர் உத்தியோகம் கொடுக்கக் கூடியவர்கள் பெயர் ஜாப்தாவிலும் பதியப்பட்டிருக்கிறது.  அவர்கள் எல்லாம் கர்மராஜாக்கள், அவர்கள் இங்கு மாஜி°ட்ரேட்டாயிருக்கும் போது கையெழுத்து மாத்திரம் தான் அவர் களுடையது.  மற்றதெல்லாம் சேவகர்களும் மாஜி°ட்ரேட் கிளார்க்கும் வைத்ததுதான் சட்டம்.  நானும் என்பிள்ளைகள் கல்யாணமெல்லாம் அப்பொழுதுதான் செய்தேன்.  எஜமானர் பெயர் தாசில்தார் ஜாப்தாவில் கூட சேர்க்கப்படவேயில்லை.

மாஜி°ட்ரேட்:-   என் பெயர் சேர்க்கப்படவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

வக்கீல்:- நம்ம மாப்பிள்ளை கலெக்டர் ஆபீசு சிர°தாரிடம் குமா°தா.  இந்த வருஷ முதலில் போர்ட்டுக்கு ஜாப்தா போடும்போது கலெக்டர் சிர°தாரை வைத்துக்கொண்டு போட்டாராம்.  அப்பொழுது எஜமான் பெயர் அதிலில்லை என்பது தெரிந்து சிர°தார் எஜமானர் பெயரைச்சொல்லி எஜமானர் நடவடிக்கையைக் காட்டும் ரிக்கார்டுகளைக் கூட காட்டினாராம்.  கலெக்டர் கோபமாக  (ழந ளை யn hடிநேளவகடிடிட) அவன் ஒரு பயித்திக்கார முட்டாள் என்று சொல்லிக்கொண்டு ரிக்கார்டுகளை கீழே தள்ளிவிட்டாராம்.இது ரொம்பவும் ரகசியம்.  வெளியில் தெரிந்தால் நம்ம மாப்பிள்ளைக்கு வேலை போய்விடும்.

மாஜி°ட்ரேட்:-   (கொஞ்ச நேரம் யோசித்து) இன்னம் கொஞ்ச நாள் பார்ப்போம், என்னை மாஜி°ட்ரேட்டாய் அனுப்பின சிவிலியனை இந்த ஜில்லாவுக்குக் கலெக்டராய் போட்டிருப்பதாய் போர்டாபீசிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது.  இன்னும் இரண்டொரு மாதத்திர்க்குள் வந்துவிடுவார்.  அதற்குப் பிறகு என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிப்போம். கோர்ட்டுக்கு நேரமாகி விட்டது, தயவுசெய்து போய்வாருங்கள்.  டேய் ராமா,

வண்டிக்காரன்:-    எஜமா,

வண்டி கட்டு, பெட்டி எடுத்து வை. சாயந்தரம் வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.  இன்றைக்கு பட்டணமிருந்து வெள்ளைக்கார பாரி°டர் வருகி றார்.  சரியாய் 11- மணிக்கு வந்துவிடுவார்.

வக்கீல்:-        (அம்மாவைப் பார்த்துக்கொண்டே மாஜி°ட்ரேட்டை காட்டி தலையில் அடித்துக்கொண்டே) போய்விட்டார்.

அம்மாள்:-      சாப்பாடு ஆகிவிட்டது, குளிக்காவிட்டாலும் பரவாயில்லை.  சாப்பிட்டு விட்டுப்போங்களே.  அன்றைக்கு ஒருநாள் பெரிய கொலை கேசு சர்க்கார் வக்கீல் வருகிறார்கள் என்று சொன்னீர்கள். 12 மணிக்குத்தானே போனீர்கள்.

மாஜி°ட்ரேட்:-   அவர்கள் எல்லாம் நம்மவர்கள்தானே, இன்று வருபவர் வெள்ளைக்காரர்.  கலெக்டரிடம் என்னத்தையாவது சொல்லி வைப் பார்.  அப்புறம் அதுதான் அவர்களுக்கு வேதவாக்கு என்று சொல்லிக் கொண்டே கச்சேரிக்குப் போய்விட்டார்.

குடி அரசு – உரையாடல் – 02.08.1925

You may also like...