அனுப்பபாளையம்

°தல °பனங்களின் நிர்வாகங்களில் பலவித ஊழல்களிருக்கின் றது.  அவைகளை நிவர்த்தி செய்யவேண்டுமானால் தேர்தல்கள் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டுமென்றும், தேர்தல் மன°தாபத்தின் காரண மாகவே °தல °தாபனங்களின் நடவடிக்கைகளில் கட்சி வேற்றுமைகளும், காரியக் கெடுதிகளும் ஏற்படுகின்றதென்றுங் கூறியதுடன், இக்குறைகள் அகற்றப்பட வேண்டுமானாலும், பொதுஜனங்களின் வரிப் பணமானது முறை யுடன் செலவழிக்கப்பட வேண்டுமானாலும், நிர்வாகத்தை யோக்கியமாய் நடத்தக்கூடிய திறமைசாலிகளையே தெரிந்தெடுக்க வேண்டுமெனக் கூறினார்.  மற்றும் °தல °தாபனங்களின் நிர்வாகத்தில் அரசியல் கட்சி களைப் புகவிடுவது, வேலைக்கே கெடுதியைத் தருமென்றும், இதை மகாத்மா வும் பலதடவைகளில் வற்புருத்தியிருக்கிறாரென்றும் சொன்னார்.

பின்னர் கதர், மதுபானம் தீண்டாமை முதலியவைகளைப்பற்றி சுருக்க மாகவும் தெளிவாகவும் கேட்போர் மனதில் உணர்ச்சி உண்டாகக்கூடிய வாறு பேசியபின் காங்கிரஸைப்பற்றி ஸ்ரீமான் நாயக்கர் கூறியதின் சாரமாவது:-

காங்கிரஸைப்பற்றி நீங்கள் அதிகமாகக் கவலை கொள்ளவேண்டிய தில்லை, ஒத்துழையாமைக் கொள்கைக் காங்கிரஸினின்று எடுபட்டபிறகு காங்கிரஸினால் படித்தவர்களுக்கும் அவர்கள் பிள்ளை குட்டிகள் இரண் டொருவருக்கும் உத்தியோகம் கிடைக்கலாமே தவிர தேசத்திற்கு அதனால் ஒரு காரியமும் உண்டாகாதென்பது என்னுடைய அபிப்பிராயம்.  பழயபடி காங்கிரஸை  ஒத்துழையாமை தர்மத்திற்குக் கொண்டு வரவேண்டு மானால் நாம் யாவரும் காங்கிரஸில் சேர்ந்து உழைப்பதற்கு அர்த்தமுண்டு.  அப்படிக் கின்றி யாரோ சில பிராமணர்களும் படித்தவர்களும் உத்தியோகத் திற்குப் போவதற்காக நாம் எல்லாரும் ஜெயிலுக்குப் போவது முட்டாள் தனமென்றே நினைக்கிறேன்.  இனி பொதுத்தொண்டு செய்பவர்களுக்கு நிர்மாணத் திட்டம் தான் முக்கியமானது.  பாட்னா, அகில இந்தியா காங்கிர° கமிட்டி மீட்டிங்கில், நிர்மாணத் திட்டம் அடியோடு கைவிடப்பட்டுப் போய் விட்டது.  காங்கிரசின் பேரால் பொதுமக்களிடத்தில் பணம் வசூல் செய்யவும், அதை எலெக்ஷன் களுக்குச் செலவு செய்யவும் சுயராஜ்யக் கக்ஷியாருக்கு முழு அதிகாரமும் கொடுத்தாகிவிட்டது.  மகாத்மா அவர்களும் காங்கிரசை வைத்துக் கொண்டி ருப்பதால், நமக்கு ஒரு பிரயோஜனமில்லையென்று கருதி, கலகக்காரர் களிடமே ஒப்புவித்து விட்டார்.  நூல்நூற்கும் சங்கத்தில் தனது முழு கவனத் தையும் செலுத்தி வருகிறார்.  அதற்கு ஒவ்வொருவரும் தங்களா லான உதவி யைச் செய்யவேண்டும்.

குறிப்பு: 30.09.1925 இல் திருப்பூரை அடுத்த அனுப்பபாளையம் கிராமத்தில் யூனியன் பஞ்சாயத்துத் தலைவர் அளித்த ஓர் உபசாரப் பத்திரத்திற்கு பதிலளித்து பேசிய சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 11.10.1925

 

 

 

You may also like...