Author: admin

2018 – கழக நாள்காட்டி தயார்!

2018ஆம் ஆண்டுக் கான கழக நாள்காட்டி தயாராகி வருகின்றன. அழகிய வடிவமைப்பு; சமூகப் போராளிகளின் படங்களோடு… நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ.70 தோழர்கள் முன்பணம் செலுத்தி நாள்காட்டியைப் பெற்றுக் கொள்ளலாம். ஈரோடு கழக மாநாட்டில் கிடைக்கும். – தபசி குமரன், தலைமைக் கழகச் செயலாளர் பெரியார் முழக்கம் 14122017 இதழ்

‘உரிமை மீட்பு கூட்டியக்கம்’ நடத்திய ‘மனித உரிமை நாளில்’ விடுதலை இராசேந்திரன் பேச்சு ‘சித்திரவதைகளைத்’ தடை செய்ய மறுக்கும் இந்திய அரசு

டிசம்பர் 10, அய்.நா. மனித உரிமை நாளையொட்டி சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட 40 அமைப்புகளைக் கொண்ட உரிமை மீட்பு கூட்டியக்கம் சென்னை மயிலாப்பூர், மாங்கொல்லையில் உரிமை மீட்பு பொதுக் கூட்டம் ஒன்றை சிறப்பாக நடத்தியது. மாற்றுக் கலை ஊடகம், காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளோடு நடந்த இந்த நிகழ்வுக்கு சென்னை தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த எஸ்.நடராசன் தலைமை தாங்கினார். பி.யு.சி.எல். அமைப்பைச் சார்ந்த டி.எஸ்.எஸ்.மணி, பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்முயற்சி எடுத்து ஒருங்கிணைத்தார். வெள்ளையன் (வணிகர் சங்கப் பேரவை), ஹாஜா கனி (த.முமு.க) அமீர் (திரைப்பட இயக்குநர்), ஓவியா (புதிய குரல்), வழக்கறிஞர் அருள்மொழி (திராவிடர் கழகம்), எஸ்.எம்.பாக்கர் (இந்திய தவ்ஹீத்), பேராசிரியர் சரசுவதி (பி.யு.சி.எல்.), வினோத் (ஆதித் தமிழர் விடுலை இயக்கம்), கிரேஸ் பானு (திருநங்கை அமைப்பு) உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர்...

தேர்வாணையத்தை எதிர்த்து கழக ஆர்ப்பாட்டங்கள்

தமிழ் தெரியாதவர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் வேலை வாய்ப்புத் தேர்வுக்கு மனு செய்யலாம் என்ற தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறக் கோரி கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம்  சார்பாக மாவட்டத்  தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமையில்  05.12.207 அன்று மாலை  4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வடநாட்டாருக்குத் தாரை வார்க்கும் அரசுத் தேர்வாணையத்தையும் தமிழக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், மாவட்டப் பொருளாளர் மஞ்சுகுமார்,  பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர்  நீதியரசர், செயலாளர் ஜான்மதி, சூசையப்பா, ஸ்டெல்லா, ராஜேந்திரன்,  அருந்ததியர் காலனி ஆறுமுகம் , குமரேசன் (ஆதித் தமிழர் கட்சி) , சிவராஜ பூபதி (மக்கள் அதிகாரம்), வழக்கறிஞர்கள் மைக்கிள் ஜெரால்டு, சுதர்மன், சமூக ஆர்வலர்  போஸ்,  புத்தோமணி, மணிகண்டன், விஷ்ணு,...

“தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?”

“தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?”

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள  புதிய நீதிபதிகள் பட்டியலில் கேரளாவைச் சார்ந்த டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சுப்ரமணிய பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஒருபோதும்  பணியாற்றியவர் அல்லர். எங்கோ டெல்லியில் வழக்கறிஞராக உள்ள ஒருவரை தமிழ் நாட்டிற்கும் , சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லாத ஒருவரை நியமிப்பது சரியா? சமூக நீதிக்கு முன்னோடியாக உள்ள தமிழ் நாட்டில் இன்றும் கூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படாமல்  வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகப் பிரிவினர்களான பிரன்மலைக் கள்ளர்கள், வண்ணார், அருந்ததியர், ஆசாரி, கோனார், முத்தரையர், நாவிதர், போயர், மற்றும் ஏராளமான சமூக பிரிவினரும் மற்றும் பெயரளவில் ஒருவர் மட்டுமே இருக்கும் மீனவர்,  வன்னியர் போன்ற சமூகப் பிரிவுகளில் ஏராளமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் எங்கோ டெல்லியில் இருக்கும் அதிலும் கேரளாவைச் சார்ந்த ஒருவருக்கு...

தலையங்கம் 24 ஆண்டுகளுக்குப் பிறகும்…

தலையங்கம் 24 ஆண்டுகளுக்குப் பிறகும்…

மண்டல் பரிந்துரை செயல்பாட்டுக்கு வந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகும், 27 சதவீத இடஒதுக்கீட்டில் மத்திய அரசுப் பணிகளில் பாதியளவைக்கூட எட்டிப் பிடிக்க முடியாத நிலையில் தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நிலை உள்ளது. சமூக நீதி செயல்பாட்டாளர் முனைவர் ஈ. முரளிதரன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ள தகவல்களை இதே இதழில் வெளியிட்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க ஆட்சியானாலும் சமூக நீதிக்கான கதவுகள் அடைக்கப்பட்டே இருக்கின்றன. முடிவெடுக்கும் அதிகார மய்யத்தில் கோலோச்சும் பார்ப்பன அதிகார வர்க்கம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினரோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறது. இதைத் தட்டிக் கேட்கும் துணிவு கொண்ட ஆட்சியாளர்களோ, சக்தி வாய்ந்த சமூக நீதித் தலைவர்களோ இல்லை என்பதுதான் அவலம். இருக்கும் நிலையைப் பார்த்தால் இந்த நூற்றாண்டில்கூட 27 சதவீத இடஒதுக்கீட்டில் முழுமையாகப் பிற்படுத்தப்பட்டோர் அமரப்போவது கனவாகத்தான் இருக்கும். இந்துத்துவா சக்திகள் பெரும்பான்மைவாதம் பேசுகிறார்கள். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில்...

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பாதியளவுகூட நிரப்பப்படவில்லை நடுவண்அரசுகளின் துரோகம்

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பாதியளவுகூட நிரப்பப்படவில்லை நடுவண்அரசுகளின் துரோகம்

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24 ஆண்டுகள் கழிந்த பிறகும் 27 சதவீதத்தில் இன்னும் பாதியளவுகூட பிற்படுத்தப்பட்டோருக்குப் பணிகள் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 1993 செப்டம்பர் 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இப்போது என்ன நிலை? மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி 1, 2017 வரை இதுதான் நிலை. 24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் பேரும் ‘பி’ பிரிவில் 14 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ‘சி’ பிரிவு ஊழியர்களில் 11 சதவீதம் பேரும், ‘டி’ பிரிவில் 10 சதவீதம் பேரும்...

கழகத் தோழர் ப.சுகுமார் நினைவுக் கல்வெட்டு திறப்பு

கழகத் தோழர் ப.சுகுமார் நினைவுக் கல்வெட்டு திறப்பு

முடிவெய்திய மேட்டூர் கழகத் தோழர் ப. சுகுமார் நினைவு கல்வெட்டு படத் திறப்பு நிகழ்வு, நவம்பர் 27 பகல் 11 மணியளவில் மேட் டூர் என்.எஸ்.கே. நகரில் நடந்தது. கல்வெட்டினை கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் படத்தை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் திறந்து வைத்தனர். அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் துரைசாமி, ஆசிரியர் சிவகாமி, மேட்டூர் முத்துக் குமார், மேட்டூர் சக்தி, கோவிந்தராஜ், ஸ்டாலின் (அ.இ.அ.தி.மு.க.), சோம சுநதரம் (தி.க.), மேட்டூர் இராமச் சந்திரன் உள்ளிட்ட தோழர்கள் இரங்கல் உரையாற்றினர். கோயில் பூசாரியாக இருந்து கழக நூல்களைப் படித்து தோழர்களிடம் விவாதித்து, தன்னை உறுதியான பெரியாரியல்வாதியாக மாற்றிக் கொண்ட சுகுமார்,  கடந்த சில வருடங் களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கழக நிகழ்வுகளில் தவறாது பங்கேற்று வந்தார். தனது இறுதி நிகழ்வுகள் கழகச் சீருடையான நீல ஜீன்ஸ், கருப்பு சட்டை அணிந்து மூடநம்பிக்கை யின்றி, கழகத் தோழர்களால் நடத்தப்பட...

நீடாமங்கலம் சாதியக் கொடுமை-நூல் ஆய்வரங்கம்

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘ரிவோல்ட்’ நடத்தும் ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது பெரியாரிய எழுத்தாளர் பசு கவுதமன் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் ஆய்வுரை நிகழ்த்தினர் வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் தன்னுரையில் கழகத் தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும், தான் எவ்வாறெல்லாம் நூல் வெளிவர களவுழைப்பை...

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

சென்னையில் ஜாதி ஒழிப்புக்காக பெண்கள் அறைகூவல் விடுத்த அந்த எழுச்சி நிகழ்வுகள், தோழர்களின் உள்ளங்களில் இப்போதும் பசுமையாய் பதிந்து நிற்கிறது. அடுத்து, ஈரோட்டில் கூடுகிறோம்! மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள், பெண்களின் சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் சவால் விடும் ஒடுக்கு முறைகள், மதம் கட்டமைத்த கற்பிதங்கள் – – இவை அனைத்துக்கும் எதிராக விழிப்புணர்வு களம் நோக்கி பெண்களை அணி திரட்டும் மாநாடு இது. மாநாட்டுப் பணிகளில் நிதி வசூலில் பெண் தோழர்கள் முழு வீச்சில் களமிறங்கி செயல்படுகின்றனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடக்க விழாவை எழுச்சியுடன் நடத்திய அதே ஈரோட்டில்… மீண்டும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் ஒன்று கூட இருக்கிறார்கள். கொள்கை உறவுகளின் ஒன்று கூடுதலிலும் சந்திப்பிலும் நமக்கு நாமே நம் உணர்வுகளை கூர் தீட்டிக் கொள்கிறோம். மத விழாக்களும் மூடநம்பிக்கை சடங்குகளையும் முற்றாகப் புறந்தள்ளி, புதிய சமூகத்துக்கான பாதை அமைக்க களத்தில் நிற்கும் பெரியாரியலாளர்களுக்கு இந்த மாநாடுகளும்...

பள்ளிகொண்டா   கிருஷ்ணசாமி இல்லத்தில்  கழகத் தலைவர்

பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்தில் கழகத் தலைவர்

9-11-2017 அன்று காலை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வேலூர் மாவட்ட கழகச் செயலர் குடியாத்தம் சிவா, கழகத் தோழர்களுடன், வீரியமிக்க தலித் விடுதலைப் போராளியாய் விளங்கியவரும் , மக்களால் தளபதி என அன்போடு அழைக்கப் பட்டவருமான பள்ளிகொண்டா  கிருஷ்ணசாமி இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அடுத்து அவரால் நிறுவப் பட்டதும், அவர் நடத்திய 150 இரவுப் பாடசாலைகளில் ஒன்றானதும், தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுத் தேர்வாணையத் தேர்வு களுக்கான இலவச பயிற்சிப் பள்ளியாய் அவரது பெயரன் மகேஷ்  தொடர்ந்து இயங்கிவரும்  பவுத்த ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்த்ததோடு, சமூக அக்கறையோடு இயங்கிவரும் பாங்கினை வியந்து பாராட்டி னார். பெரியார் முழக்கம் 07122017 இதழ்

ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்தான  திட்டம்

ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்தான திட்டம்

2000 இஸ்லாமிய பெண்களை ‘இந்து’க்களுக்கு திருமணம் செய்யும் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்புகளில் ஒன்றான ‘இந்து ஜக்ரான் மஞ்ச்’ என்ற அமைப்பு அறிவித்துள்ளது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் இந்த செய்தி வெளி வந்துள்ளது. திருமணத்துக்கான செலவு, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான பாதுகாப்பு அனைத்தும் வழங்கப்படும் என்றும், இந்து வைதிக சடங்கு களுடன் இத்திருமணங்கள் நடக்கும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது. திருமணம் செய்து கொள்ளும் இஸ்லாமியப் பெண்கள் இந்துவாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது. (இந்துவாக மாறினால் எந்த ஜாதியில் வைப்பார்கள்?) உ.பி. ‘இந்து ஜக்ரான் மஞ்ச்’ அமைப்பின் தலைவர் அஜூசவுகான் என்பவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தோடு, இஸ்லாமிய ஆண்கள், இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கான பதிலடி என்றும் கூறியுள்ளார். இஸ்லாமியர் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்து வதும் இந்த இயக்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியிருக்கிறார். “ஒரு முஸ்லிம் பெண், ஒரு முஸ்லிமை...

சுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்

சுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்

வியட்நாமைச் சேர்ந்த 22 வயது நிகுயென் வான் ஹோவா, பத்திரிகையாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஃபார்மோசா நிறுவனத்தின் கழிவுகள் கடற்கரையில் கலக்கப்பட்டதை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். தொடர்ச்சியாக ஒளிப்படங்கள், வீடியோக்கள் என்று ஆதாரங்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட வான் ஹோவாவுக்குத் தற்போது 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தைவானைச் சேர்ந்த ஃபார்மோசா பிளாஸ்டிக் தொழிற்சாலை ஹா டின் நகரில் செயல்பட்டு வருகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் சயனைட் உட்பட நச்சு ரசாயனக் கழிவுகளை, சாதாரண கழிவு வெளியேற்றும் குழாய் வழியாக கடற்கரையில் வெளியேற்றி வந்தனர். கடற்கரையில் 120 மைல் தூரத்துக்கு இந்தக் கழிவுகள் பரவிவிட்டன. 115 டன் மீன்கள் இறந்து மிதந்துள்ளன. இதனால் மீன்பிடித் தொழிலும் நலிவடைந்து விட்டது. சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்துவிட்டது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நிலமும் நீர் ஆதாரங்களும் மாசு அடைந்திருக்கின்றன. இதைத் தட்டிக் கேட்ட வான்...

மூடநம்பிக்கைகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை வருமா?

மூடநம்பிக்கைகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை வருமா?

கர்நாடகாவில் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சைத்ரா, மகள் பிரார்த்தனா (7). பிரார்த்தனா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். வீட்டில் டிவி.யில் ஒரு குறிப்பிட்ட கன்னட சீரியலை பார்ப்பது வழக்கம். இந்த  தொடரில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன. அதைப் பார்த்த பிரார்த்தனா, கடந்த 11-ம் தேதி, தானும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அலறினாள். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு...

கருத்தரங்கம் – நாடகம் – கவியரங்குடன் நடந்த கவிஞர் இன்குலாப் நினைவேந்தல்

கருத்தரங்கம் – நாடகம் – கவியரங்குடன் நடந்த கவிஞர் இன்குலாப் நினைவேந்தல்

இன்குலாப் முதலாம் ஆண்டு நினைவு நாளை இன்குலாப் அறக்கட்டளை சார்பில் இன்குலாப் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை ஆய்வு செய்து பரப்பும் நாளாக சென்னையில் சிறப்புடன் நடத்தியது. சங்க இலக்கியங்களை கட்டுடைத்து அதில் அடங்கியுள்ள பெண் விடுதலைக் கருத்துகளை நாடகங்களாக கவிஞர் இன்குலாப் எழுதினார். அதில் ஒன்று அவ்வை நாடகம். சங்க இலக்கியங் களில் அவ்வை என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்தாலும், வயது முதிர்ந்த தோற்றத்தில் அவ்வையார் என்ற ஒருவரை மட்டுமே முன் நிறுத்தியது இலக்கிய உலகம். ஆணாதிக்கத்தை நியாயப் படுத்தும் அந்த அவ்வையாரின் குரலை ஏனைய அவ்வைகளின் கருத்தாக திணிக்கப்பட்டது. அதியமானுடன் நட்பும் தோழமையும் கொண்டிருந்த அவ்வை ஒரு சுதந்திரப் பெண் என்பதை முன் வைத்து கவிஞர் இன்குலாப் தீட்டியது அவ்வை நாடகம். 2006ஆம் ஆண்டில் மரப்பாச்சி குழுவினர் அ.மங்கை நெறியாள்கையில் அரங்கேறியது அவ்வை. மீண்டும் இன்குலாப் நினைவாக  கடந்த டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் ‘ஸ்பேசஸ்’ அரங்கில்...

மதவெறிக்குப் பலியான ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி கேட்டு வேலூரில் ஆர்ப்பாட்டம்

கடந்த அக்டோபரில் இந்து மதவெறி போராசிரியரின் ஜாதி, மத வெறுப்பு துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் பிரகாஷ்  மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு 21.11.2017 காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஜோயல் பிரகாஷ் தாய் மற்றும் தந்தை தன் மகனின் மரணத்திற்கு நீதிக் கேட்டு கண்ணீர் மல்க செய்தியாளர் சந்திப்பில் பேசினார்கள். பிரகாஷ் தற்கொலைக்குக் காரணமான கவின் கலைக் கல்லூரி துறைத் தலைவர் இரவிக்குமார் மீது கொலை முயற்சி வழக்கு தொடர வேண்டும் என்றும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன், இயக்குநர் ரஞ்சித், நடிகர் சத்தியராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் வலியுறுத்தினர். நிகழ்வில் ஜோயல் பிரகாஷ் பெற்றோர் தங்கள் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு பேசியது பார்வையாளர்...

“மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்!  மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்!”

“மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்! மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்!”

மக்கள் கவிஞர் இன்குலாப் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முடிவெய்தினார். 2009ஆம் ஆண்டிலேயே தனது மரணம் குறித்து அவர் கைப்பட எழுதிய கடிதம் இது. என் தன் நினைவோடு எழுதும் கடிதம் எப்பொழுதும் இறப்பு நேரலாம் என்ற சூழலில் என் இறுதி விருப்பங்களைப் பதிவு செய்கிறேன். என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, தோழமைக்குரிய நண்பர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இது. என்னை முழுமையாக என் மக்களுக்கு உரித்தாக்க விரும்பினேன். ஆனால் நேர்ந்த வாழ்க்கை அதற்கான முழு வாய்ப்பையும் தரவில்லை. இறப்பு என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. இறப்புக்குப் பிறகு மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்ந்த மட்டும் சமயச் சார்பற்றவனாகவே வாழ்ந்தேன். அதனால் எல்லார்க்குமானவனாக என்னை உணர முடிந்தது. உடலால் வாழ்ந்த இவ் வாழ்க்கை இறப்போடு முடி கிறது. மக்களுக்கு முழுமையாக உரித் தாக்கும் வண்ணமே என் சிந்தனை யும் செயலும் அமைய வேண்டு மென விரும்பிய போதிலும்,...

தமிழக தேர்வாணைய அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை தரவேண்டும்; தமிழ் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை தரவேண்டும்; தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. தமிழக அரசு தேர்வாணையத்தை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் 02.12.2017 மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. தமிழக அரசு கடந்த ஆண்டு 2016 நவம்பர் மாதம் அறிவித்த தேர்வாணைய அறிக்கையை திரும்ப பெறக் கோரி கண்டன முழக்கமிட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் கொளத்தூர் மணி, இளந்தமிழகம் செந்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் கரு.அண்ணாமலை, மே 17 இயக்கம் பிரவீன்குமார், மனிதி இயக்கத்தை சார்ந்த செல்வி, எஸ்.டி.பி.அய். தெஹலான் (பாகவி, அம்பேத்கர் மனித நீதி இயக்கம்), பாண்டியராஜன், தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தோழர்கள் தமிழக அரசு தமிழக இளைஞர்களின் வேலை...

சட்ட எரிப்பு நாளில் பெயர் சூட்டல்

தோழர் லோகு – மீனா இணையர், பெண் குழந்தைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘கனல்விழி’ என்று பெயர் சூட்டினார். கூட்டத்தில் கழகத்துக்கு நன்கொடையாக ரூ.1000/- தோழர்கள் கழகத் தலைவரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30112017 இதழ்

“நிமிர்வோம்” வாசிப்பு வட்டம்

“நிமிர்வோம்” வாசிப்பு வட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டத்தின் சார்பாக கழக மாத இதழான “நிமிர்வோம்” வாசிப்பு வட்டம் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் 19.11.2017 மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். வாசிப்பு வட்டத்தில் ‘நிமிர்வோம்’ ஜனவரி இதழ் குறித்து தோழர்கள் கார்த்திக் இராசேந்திரன், மதன்குமார், ராஜு, பிரகாஷ் குமார்ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். கட்டுரை மீது விவாதங்களையும் முன் வைத்துப் பேசினர். கவிஞர் இராமசாமி மற்றும் ‘நிமிர்வோம்’ நிர்வாக பொறுப்பாளர் இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) இதழின் வளர்ச்சிக்கு கருத்துகளை கூறினர். இறுதியாக, திருவல்லிக்கேணி பகுதி தலைவர் இலட்சுமணன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 30112017 இதழ்

டிசம்பர் 16இல் ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு

இடம் :                 வீரப்பன் சத்திரம், ஈரோடு மாலை 5 மணி வரவேற்புரை               :                 கவிப்பிரியா தலைமை       :                 மணிமேகலை முன்னிலை                   :                 சங்கீதா, முத்துலட்சுமி உரை : சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணை அமைச்சர்-தி.மு.க.) பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஓவியா (பெண்ணிய செயல்பாட்டாளர்) திவ்ய பாரதி (ஆவணப்பட இயக்குனர்) ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) நிறைவுரை : கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் நன்றியுரை : சுமதி காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், பறையிசையோடு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், ஈரோடு மாவட்டம் (தெற்கு) தோழர்களே! மாநாட்டுக்கு திரண்டு வாரீர்!   பெரியார் முழக்கம் 30112017 இதழ்

விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் நடந்த பகுதியில் ‘மாவீரர் நினைவகம்’ அமைகிறது

புலியூரில் உணர்ச்சிப் பெருக்குடன் ‘மாவீரர் நாள்’ சேலம் மாவட்டம், கொளத்தூர் ‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு’ சார்பில் நவம்பர் 27ஆம் தேதி, மாவீரர் நாள் புலியூர் பிரிவில் உணர்ச்சியுடன் நடந்தது. கொளத்தூர் – புலியூர் பிரிவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இந்தப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இராணுவப் பயிற்சி முகாம் 1983 முதல் 1986ஆம் ஆண்டு வரை நடந்தது. விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், வழிகாட்டுதலில் நடந்த இந்த முகாமில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் பயிற்சி பெற்றனர். மேதகு பிரபாகரன் பலமுறை முகாமுக்கு வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அப்போது திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வந்தார். அவருக்கு உரிமையான தோட்டத்தில்தான் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் நடந்தன. பெரியார்  இயக்கத் தோழர்களின் முழு ஒத்துழைப் போடு இந்த முகாம் நடந்தது. உள்ளூர் பகுதி வாழ் மக்களின்...

குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

குடிசைப் பகுதி மக்களின் கட்டாய வெளியேற்றத்தைக் கண்டித்து முதல்வர் வீடு முற்றுகை: தோழர்கள் கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் அமைந்துள்ள திடீர் நகர், மக்கீஸ் தோட்டம் பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசை கண்டித்து….. 25.11.2017 அன்று காலை 11 மணிக்கு பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த பொறுப்பாளர்கள், தென் சென்னை மாவட்டச் செய லாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்ட செயலாளர் செந்தில் (எப்.டி.எல்.), தலைவர் ஏசுகுமார், மயிலை தோழர்கள் மாரி, சுகுமார், இராவணன், சிவா, குமரேசன், ஜா. உமாபதி, மாணிக்கம், யுவராஜ், இலட்சுமணன், தேன்ராஜ் உள்ளிட்ட கழகத்தினர், தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம் ராஜா, அம்பேத்கர் மக்கள் படை மதிபறையனார், இளந்தமிழகம் செந்தில், பச்சைத் தமிழகம்  மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட...

டிசம்பர் 1, தமிழ்நாடு தேர்வாணையத்தைக் கண்டித்து மாவட்டத் தலைநகர்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 1, தமிழ்நாடு தேர்வாணையத்தைக் கண்டித்து மாவட்டத் தலைநகர்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசே! அரசுப் பணியாளர் தேர்வாணை யமே! தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வட நாட்டாருக்கு வாரி வழங்காதே! தமிழ்நாட்டில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு களுக்காக காத்திருக்கும் போது தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம், 9351 மாநில அரசுப் பணிகளுக்கு – தமிழ்மொழி தெரியாவிட்டாலும் பரவாயில்லை, மனுப் போடலாம் என இந்தியா முழுமையிலிருந்தும் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. நேபாளம், பூட்டான் போன்ற அன்னிய நாட்டினரும் மனுப் போடலாம் என்றும், பணி நியமனம் பெற்று இரண்டு ஆண்டுகளில் தமிழைக் கற்றுக் கொண்டால் போதும் எனவும் கூறுகிறது அந்த அறிவிப்பு. தமிழ்மொழி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த நிபந்தனையை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?.  திறந்த போட்டிக்கு மட்டும்தான் இந்த அறிவிப்பு என்று தேர்வாணையம் கூறும் சமாதானத்தை எப்படி ஏற்க முடியும்?   திறந்த போட்டியிலும் தமிழ் நாட்டைச் சார்ந்த முன்னேறிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை...

ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி  கேட்டு விழுப்புரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜோயல் பிரகாஷ் மரணத்திற்கு நீதி  கேட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 25.11.17 காலை 11 மணியளவில் வளவனூரில்  நடைபெற்றது. தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார்,  விழுப்புரம் மேற்கு மாவட்டத் தலைவர் மதியழகன்,  கடலூர் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்,  பெரியார் சாக்ரட்டீஸ், அமைப்பாளர் சாமிதுரை, இரவி கார்த்திகேயன், கோகுல்காந்திநாத், ஜெயக்குமார் பெரியார் தி.வி.க, பெரியார் சிந்தனையாளர் இயக்கம்  தீனா, பரத்  மற்றும் தோழர்கள்,  தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி கொள்கை பரப்பு செயலாளர் விஜி மற்றும் விழுப்புரம் அஜி மற்றும் கலைகல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர் லூசியா,  மருத்துவர் தீரன் வினோத், வனத்தாம் பாளையம் பெரியார் ஜெயரட்சகன் சிறீதர்,  பாபு,  லாஸ் பேட்டை மாணிக்கம்,  திருமுருகன், திருவண்டார் கோயில் விஜயன்,  கிருஷ்ணராஜ்,  மற்றும் மேற்கு மாவட்டதி.வி.க தோழர்கள் மற்றும் விழுப்புரம் புதுச்சேரி பகுதி தோழர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30112017...

விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப்  போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரத்தில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் தலைமையில் ஜாதி ஒழிப்பிற்காக சட்ட எரிப்பு போரட்டத்தில் உயிர்நீத்த, சிறைசென்ற போராளிகள் 60 ஆம் ஆண்டு நினைவும் தமிழீழத் தலைவன் பிரபாகரன் 63 ஆவது பிறந்தநாள் நிகழ்வும் 26.11.17 காலை 10 மணியளவில்  வனத்தாம்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ஜெயரட்சகன், மாவட்ட செயலாளர் இராவண இராமன், மாவட்ட அமைப்பாளர் சிறீதர் நிவேதிதா, பெரியார் சிந்தனையாளர் இயக்கத் தலைவர் தீனா,  பெலிக்ஸ், கிளை பொறுப்பாளர்கள் பாபு,  தமிழ், சிறீநாத், விசிக பொறுப்பாளர் தெய்வ நாயகம் மற்றும் அப்பகுதித் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30112017 இதழ்

மதுக்கூர் மைதீன் நினைவேந்தல்

மதுக்கூர் மைதீன் நினைவேந்தல்

10-11-2017 அன்று மாலை 6-00 மணியளவில், உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம், உயர்நீதி மன்றத்தில் தமிழ் – போராட்டக் குழு ஆகியவற்றின் சார்பாக, மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள இராமசுப்பு அரங்கத்தில், இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மதுக்கூர் மைதீன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, உயர்நீதி மன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மீ.தா.பாண்டியனின் தலைமை யில் நடைபெற்றது. மதுக்கூர் மைதீன் படத்தை உயர்நீதி மன்றத்தில் தமிழ் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கு.ஞா.பகத்சிங் திறந்து வைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ரபீக் ராஜா, இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் துணைத் தலைவர் நத்தம் சேக் பரீத், மருது மக்கள் இயக்கத்தின் முத்துபாண்டி, தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இமயம் சரவணன், வழக்குரைஞர் எழிலரசு உள்ளிட்ட பலரும் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வளர்ந்துவரும் கூலிப்படை கலாச்சாரம், செய்தியை சேகரிக்காமல் காவல்துறையின் கருத்தையே...

குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார்  கருத்தரங்கம்

குடியாத்தத்தில் அம்பேத்கர்-பெரியார் கருத்தரங்கம்

12-11-2017 ஞாயிறு அன்று மாலை 6.00 மணி யளவில், குடியாத்தம் அம்பேத்கர் மண்டபத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அம்பேத்கர்-பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியர் அருணிடம் பயிற்சி பெற்ற மாணவர்களின் பறை முழக்கம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெரியாரிய விழுது யாழினி உள்ளிட்ட பலரும், வேலூர் கற்பி பாசறை பாலா, வழக்குரைஞர் அருண், பரப்புரை செயலர் பால் பிரபாகரன் ஆகியோரும் உரையாற்றினர். கழகத் தோழர்களின் “இப்பெல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க” என்ற வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்து மதவெறி துறைத் தலைவரின் ஜாதியப் பாகுபாட்டு வன்முறை காரணமாக, தன் வாழ்வை முடித்துக் கொண்ட, வேலூரைச் சேர்ந்த சென்னை, கவின்கலைக் கல்லூரி மாணவர் ஜோயல் (எ) பிரகாசின் படத்தை, பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமியுடன் பணியாற்றிய பெரியவர் மோகன்  திறந்துவைத்தார். “பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேராசிரியர் டி.எம்.புரட்சிமணி, பெரியார்...

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்!

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்!

டிசம்பர் 1ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் தோழர்கள் மக்களிடம் விளக்கிப் பேசுவதற்கான சில குறிப்புகள். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 85 இலட்சத்துக்கும் அதிகம். ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரமின்றி எந்த நேரத்திலும் வேலை இழக்கும் ஆபத்துகளை தலை மேல் சுமந்து நிற்கும் இளைஞர்கள் பல இலட்சம். வளர்ச்சி நோக்கிய திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் தொழில் திட்டங்கள் குறித்து தமிழக ஆட்சி யாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் ‘கொத்தடிமை ஆட்சியை’, மத்திய பா.ஜ.க. ஆட்சி மிரட்டி, தமிழகத்தில் தேர்தலை சந்திக்காமலேயே பினாமி ஆட்சியை நடத்தி வருகிறது. மத்திய அரசில் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் ஏனைய துறைகளிலிருந்தும் பா.ஜ.க.வின் நம்பிக்கைப் பெற்ற உயர் அதிகாரிகள் தமிழகத்தின் மிக முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அண்மையில் மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சக அதிகாரியாக பணியாற்றிய ஓடெம்டே என்பவர், தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு,...

பெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார் சூலூர் கூட்டத்தில் உடுமலை கவுசல்யா பேச்சு

எனக்கு உரிமை படைத்த மேடையில் நிற்கும் உணர்வு எனக்கு இங்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்த மேடை என்று சொல்வது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. சாதி ஒழிப்புக்காக தூய உள்ளத்தோடு உழைக்கிறவர் களான அதுவும் கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது. ஆம் இது எனக்கான இடம், நீங்கள் என் சொந்தங்கள் என்ற உணர்வு இயல்பாகவே வந்து விடுகிறது. சாதியைப் பாதுகாக்கும் ஐந்து சட்ட விதிகளை பெரியார் கொளுத்திய நாள் இன்று! அதன் வரலாறு , அடக்குமுறை, வீரச்சாவுகள் குறித்தெல்லாம் எனக்குப் பின்னால் தோழர்  கொளத்தூர் மணி அவர்கள் பேச இருக்கிறார். நான் புதிதாகக் கற்கத்  தொடங்கியுள்ள மாணவிதான். நானும் கற்கத்தான் இங்கே வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த சில செய்திகளை கீற்று போன்ற இணையத்தில் படித்து கிடைத்த புரிதல்களை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன். பெரியார் ஆணைக்கிணங்க சட்டத்தைக் கொளுத்திய 16 வயதே  நிரம்பிய சிறுவன்...

நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரித்து சிறையேகிய போராளிகள் நினைவு நாள் சூலூரில் சூளுரைத்தது கழகம்

1957 நவம்பர் 26இல் தமிழ்நாடு முழுதும் அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்து 6மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையேகிய பெரியார் இயக்கத்தின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து சூலூரில் கழகம் பொதுக் கூட்டம் நடத்தியது. போராட்ட வரலாறுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக விளக்கினார். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தொடர கழகம் சூளுரைத்தது. கோவை மாவட்டம் சூலூரில் 26.11.2017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவைப் போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் தொடங்கியது. சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ.கே. ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு பறையிசையைத்  தொடர்ந்து, சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில் ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி,...

நன்கொடை

நன்கொடை

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, ‘நிமிர்வோம்’ இதழுக்கு ரூ.2000மும், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு ரூ.1000மும் நன்கொடை வழங்கினர். பெண்ணாகரம் பரமசிவம் ரூ.500/- ‘நிமிர்வோம்’ இதழுக்கு வழங்கினார். பாரூக் வழக்கு நிதி : சேலம் கிழக்கு மாவட்டத்தில் நடந்த தோழர்கள் சந்திப்பின் போது ஏற்காடு  பெருமாள் பிரபாகரன்,  பாரூக் குடும்ப நிதியாக 10,000/-வழங்கினார்கள். (நன்றியுடன் பெற்றுக் கொண் டோம்-ஆர்) பெரியார் முழக்கம் 23112017 இதழ்

கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம், சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழாவை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ. இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கில் கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண் டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மணமகன் கோகுலக்கண்ணன் ரூ.10,000/- நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23112017 இதழ்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை இலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை இலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி

‘அறிவாயுதம்’ அமைப்பின் சார்பில் நவ.18 ஆம் தேதி தியாகராயர் நகர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் “இனஅழிப்பை சட்டப்பூர்வ மாக்கும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. புகழூர் விசுவநாதன் தலைமை தாங்கினார். வைகோ, மணியரசன், வேல்முருகன், கவிஞர் காசி ஆனந்தன், ஆய்வாளர் திருநாவுக்கரசு, கா.அய்யநாதன், பேராசிரியர் ஜெயராமன், இராமு மணிவண்ணன், இயக்குனர் கவுதமன், தனியரசு எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரும் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ஒவ்வொரு முறையும் இலங்கைப் பேரினவாத அரசு, தன் மீதான சர்வதேச அழுத்தங்கள் வரும் போதெல்லாம் உலக நாடுகளில் கவனத்தை திசை திருப்பு ஒப்பந்தங்கள், சட்டத் திருத்தங்கள் கொண்டு வருவதும், பிறகுஅவற்றைக் குப்பைக் கூடையில் வீசுவதும் வழக்கமாகிவிட்டது. இப்போது இலங்கை அரசு அதன் புதிய அரசியலமைப்பில் கொண்டு வரப்பட இருக்கும் மாற்றங்களை முன்மொழிந் திருக்கிறது. இனி எதிர்காலங்களில் ஈழத் தமிழர் தேசிய இனம் தங்களின் அடையாளம் மற்றும்...

மேட்டூர் தோழர் சுகுமார் முடிவெய்தினார்

மேட்டூர் தோழர் சுகுமார் முடிவெய்தினார்

மேட்டூர் ஆர்.எஸ். பகுதியைச் சார்ந்த கழகத் தோழர் சுகுமார், 13.11.2017 மாலை முடிவெய்தினார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல்நலமின்றி இருந்தார். தனது இறுதி நிகழ்வை சடங்குகள் இல்லாமல் நடத்த வேண்டும் என்றும் இயக்கத்தின் சீருடையான நீல நிற ஜீன்ஸ், கருப்புச் சட்டை அணிவிக்க வேண்டும் என்றும், தோழர்களே தனது இறுதி நிகழ்வை நடத்த வேண்டும் என்றும் குடும்பத் தினரிடம் தனது இறுதி விருப்பத்தைத் தெரிவித்து இருக்கிறார். அதன்படியே அக்குடும்பத்தினரும் அவரது இறுதி நிகழ்வை நடத்தினர்.ஒரு பெரியார் தொண்டன் கம்பீரமாய் விடைபெற்றார். இயக்கமே குடும்பமாய் நின்று வீர வணக்கம் செலுத்தியது. கழக மகளிர் அவரது உடலை இடுகாடு வரை சுமந்து வந்தனர். கழகத் தலைவர் உள்ளிட்ட ஏராள மான தோழர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23112017 இதழ்

இந்து – ஜாதிவெறி பேராசிரியரின் துன்புறுத்தலுக்கு பலியானார்  தலித் மாணவர் பிரகாஷ்

இந்து – ஜாதிவெறி பேராசிரியரின் துன்புறுத்தலுக்கு பலியானார் தலித் மாணவர் பிரகாஷ்

சில நாட்களுக்கு முன்னர், தனது துறைத் தலைவரின் ஜாதி, மத வெறுப்புப் பாகுபாட்டு நடவடிக்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சென்னை கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்துக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்ஸ் கதிர், வேலூர் ஆவணப்பட இயக்குநர் பாலா, குடியாத்தம் சிவா, கழகத்  தோழர்கள் ஆகியோருடன் சென்று, மாணவரின் குடும்பத்தினரை சந்தித்தார். கல்லூரியில் துறைத் தலைவராய் இருந்த இரவிக்குமார் என்பவர், சிறந்த கலைஞனாயும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாய் சிறந்த மாணவருக்கான விருதினைப் பெற்றுவந்த மாணவர் பிரகாஷை, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதையும், பிறப்பால் இந்துவான மாணவர் கிருத்துவ மாதா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார் என்பதையும் அறிந்தவுடன் தொடர்ச்சியாக கேவலமாக வகுப்பறையில் மிகவும் இழிவுபடுத்தி வந்துள்ளார். இதனைப் பலமுறை கல்லூரி முதலவரிடம் தனியேயும், மாணவர்களுடனும், பெற்றோரை உடன் அழைத்துச் சென்றும் புகார் கூறியும் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடுமைப்படுத்துதல் தான் அதிகரித்துள்ளது. அதனால் மனமுடைந்த மாணவர் பிரகாஷ், வீடியோவிலும்,...

தமிழர் தேசிய அடையாளத்தை முற்றாக ஒழிக்கும் இலங்கையில் புதிய அரசியல் சட்டம்

தமிழர் தேசிய அடையாளத்தை முற்றாக ஒழிக்கும் இலங்கையில் புதிய அரசியல் சட்டம்

எந்த ஒரு சட்டமும் நியாய மதிப்பீட்டிற்கு (கூநளவ வடி குயசைநேளள) உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது உலக வரைமுறை. அதாவது நியாய மதிப்பீடுகள் காலப் போக்கில் மாற்றம் பெறலாம். அதற்கேற்ப சட்டத்தில் மாற்றம் செய்யும் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டதாக சட்டம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் ஆப்ரிக்க இன மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்வதை சட்டம் அனுமதித்தது. அங்கீகரித்தது. அடிமைத்தனம் சட்டப் பூர்வமானதாக இருந்தது. ஆனால் காலப் போக்கில் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. அடிமைத் தனம் அநாகரிகமானது என்பதை மக்கள் உணர்ந் தனர். அது மனித உரிமைகளுக்கு எதிரானது என்பதை புரிந்துக் கொண்டனர். அதற்கேற்ப அமெரிக்க சட்டத்தி லும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அடிமைத் தனத்தை சட்ட விரோதமாகவும் சமத்துவத்தை வலியுறுத்தியும் பல சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதுதான் நியாய மதிப்பீடு என்று வழங்கப்படுகிறது. ஆக இந்த நெகிழ்வுத்தன்மை எந்தவொரு சட்டத்திலேனும் மறுக்கப்படுமானால் அது உலக சட்ட வரையறைகளுக்கே...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள் : சோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள் : சோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான சோனியாவுக்கு அக்டோபர் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் சிறைப் படுத்தப்பட்டுள்ளோரின் தண்டனை குறைப்புக்கு பரந்த உள்ளத்தோடு, சோனியா தனது சம்மத்தை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுள்ளார். அவரது கடிதத்தின் விவரம்: “2014ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, ராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்க தமிழ்நாடு அரசு முன் வந்தபோது மத்திய அரசு எதிர்த்தது. அந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நீங்களும் ராகுல் காந்தியும், வாய்ப்பிருந்தால் பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்று உங்கள் சம்மதத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதுவீர்களே யானால், மத்திய அரசு,...

தமிழக வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்கு ‘தாரை வார்க்க’ சதி! தமிழ்நாடு தேர்வாணையத்தின் அதிர்ச்சி அறிவிப்பு

தமிழக வேலை வாய்ப்புகளை வடநாட்டுக்கு ‘தாரை வார்க்க’ சதி! தமிழ்நாடு தேர்வாணையத்தின் அதிர்ச்சி அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 2016இல் செய்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்; நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது. இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என சலுகை வழங்குகிறது, தமிழ்நாடு அரசு! நேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு! அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்...

தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?

நண்பர்களே! சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதிகள் பட்டியலில் கேரளாவைச் சார்ந்த டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் சுப்ரமணிய பிரசாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஒருபோதும் பணியாற்றியவர் அல்லர். எங்கோ டெல்லியில் வழக்கறிஞராக உள்ள ஒருவரை தமிழ் நாட்டிற்கும் , சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லாத ஒருவரை நியமிப்பது சரியா? சமூக நீதிக்கு முன்னோடியாக உள்ள தமிழ் நாட்டில் இன்றும் கூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்படாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகப் பிரிவினர்களான பிரன்மலைக் கள்ளர்கள், வண்ணார், அருந்ததியர், ஆசாரி, கோனார், முத்தரையர், நாவிதர், போயர், மற்றும் ஏராளமான சமூக பிரிவினரும் மற்றும் பெயரளவில் ஒருவர் மட்டுமே இருக்கும் மீனவர், வன்னியர் போன்ற சமூகப் பிரிவுகளில் ஏராளமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் எங்கோ டெல்லியில் இருக்கும் அதிலும் கேரளாவைச் சார்ந்த...

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் கழக தலைவர் உரை திருப்பூர் 06122017

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் கழக தலைவர் உரை திருப்பூர் 06122017

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் புரட்சியாளரின் சிலைக்கு 06.12.2017, புதன் கிழமை காலை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆற்றிய உரை. உரை பார்க்க    

TNPSC விதிகளில் செய்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! சேலம் 07122017

கண்டன ஆர்ப்பாட்டம் ! நாள் : 07.12.2017 நேரம் : மாலை 05.00 மணி இடம் : தலைமை தபால் நிலையம் முன்பு சேலம். தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதிகளில் செய்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசுப் பணியாளர்களாக தமிழ்நாட்டினருக்கே வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் கர்நாடகம்,குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருப்பதைப் போல புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

டிசம்பர் 16இல்  ”ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு”

டிசம்பர் 16இல் ”ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு” இடம் : வீரப்பன் சத்திரம், ஈரோடு நேரம் : மாலை 5 மணி. வரவேற்புரை : கவிப்பிரியா தலைமை : மணிமேகலை முன்னிலை : சங்கீதா, முத்துலட்சுமி. உரை : சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணை அமைச்சர்-தி.மு.க.) பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஓவியா (பெண்ணிய செயல்பாட்டாளர்) திவ்ய பாரதி (ஆவணப்பட இயக்குனர்) ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) நிறைவுரை : கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன். நன்றியுரை : சுமதி. காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், பறையிசையோடு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், ஈரோடு மாவட்டம் (தெற்கு) தோழர்களே! மாநாட்டுக்கு திரண்டு வாரீர்!

TNPSC முழக்கங்கள்

TNPSC முழக்கங்கள்

தமிழக அரசே.! தமிழக அரசே.! தாரை வார்க்காதே ! தாரைவார்க்காதே ! தமிழக வேலை வாய்ப்புகளை வெளி மாநில இளைஞர்களுக்கு தாரை வார்க்காதே ! தாரைவார்க்காதே !   உறுதி செய் .! உறுதி செய் .! அரசு வேலை வாய்ப்புகளை மண்ணின் மைந்தர்க்கு உறுதி செய்!   ரத்து செய் .! ரத்து செய் .! வெளிமாநிலத்தோர்க்கும் வாய்ப்பளிக்கும் தேர்வாணைய விதி திருத்தத்தை தமிழக அரசே ! ரத்து செய் .!   பறிக்காதே !பறிக்காதே ! தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தமிழக அரசே பறிக்காதே !   தேர்தல் அரசியல் கட்சிகளே ! வீதிக்கு வந்து போராடுங்கள் ! தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு வீதியில் இறங்கிப் போராடுங்கள் !   தமிழக அரசே .! தமிழக அரசே .! மண்ணின் மைந்தர்க்கு வேலைவழங்க மராட்டிய, கர்நாடக மாநிலம் போல் சட்டம் இயற்று ! சட்டம் இயற்று !   தமிழக அரசே ! தமிழக அரசே ! வேலை தராதே ! வேலை தராதே ! வெளிமாநில இளைஞர்களுக்கு தமிழக அரசே வேலை வழங்காதே !   தமிழக அரசே .! தமிழக அரசே ! தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கு...

நீடாமங்கலம் – நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் 25112017

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் *ரிவோல்ட்* நடத்தும் *நீடாமங்கலம்*நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது பெரியாரிய எழுத்தாளர் தோழர் பசு கவுதமன் அவர்கள் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர் வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி அவர்கள் இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார் நீடாமங்கலம் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் அவர்கள் தன்னுரையில் திவிக தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும் தான்...

சட்ட எரிப்பு மாவீரர்கள் நினைவை போற்றும் பொதுக்கூட்டம் சூலூர் 26112017

கோவை மாவட்டம் சூலூரில் 26112017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவை போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. நிகழ்வு தோழர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ கே ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முதலில் மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியாக பறையிசை தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் அனைவரையும் சிந்தையும் கருத்தையும் ஈர்க்கும் வண்ணம் பாடினார்கள் சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்ட தலைவர் தோழர் முகில் ராசு, பொள்ளாச்சி தோழர் வெள்ளியங்கிரி, கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன், மந்திரமா தந்திரமா தோழர் மோகன், கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர் பின்னர் தோழர் கௌசல்யா சங்கர் அவர்கள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு...

கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது – தோழர் கௌசல்யா நெகிழ்ச்சி உரை சூலூர் 26112017

அனைவருக்கும் வணக்கம்! எனக்கு உரிமை படைத்த மேடையில் நிற்கும் உணர்வு எனக்கு இங்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்த மேடை என்று சொல்வது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. சாதி ஒழிப்புக்காக தூய உள்ளத்தோடு உழைக்கிறவர்களான அதுவும் கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது. ஆம் இது எனக்கான இடம், நீங்கள் என் சொந்தங்கள் என்ற உணர்வு இயல்பாகவே வந்துவிடுகிறது. சாதியைப் பாதுகாக்கும் ஐந்து சட்ட விதிகளை பெரியார் கொளுத்திய நாள் இன்று! அதன் வரலாறு , அடக்குமுறை, வீரச்சாவுகள் குறித்தெல்லாம் எனக்குப் பின்னால் தோழர்  கொளத்தூர் மணி அவர்கள் பேச இருக்கிறார். நான் புதிதாகக் கற்கத்  தொடங்கியுள்ள மாணவிதான். நானும் கற்கத்தான் இங்கே வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த சில செய்திகளை கீற்று போன்ற இணையத்தில் படித்து கிடைத்த புரிதல்களை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன். பெரியார் ஆணைக்கிணங்க சட்டத்தைக் கொளுத்திய 16 வயதே  நிரம்பிய சிறுவன்...

தோழர் சுகுமார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ! படத்திறப்பு – கல்வெட்டுத் திறப்பு மேட்டூர் ஆர் எஸ் 27112017

தோழர் சுகுமார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ! படத்திறப்பு – கல்வெட்டுத் திறப்பு நாள் : 27.11.2017 நேரம் : காலை 10 மணி. இடம் : என்.எஸ்.கே நகர், மேட்டூர் அணை R.S., மேட்டூர். படத்திறப்பு : கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் அவர்கள். கல்வெட்டுத் திறப்பு : கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள். கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொள்கிறார்கள்.