Author: admin
தலைமை நிலையத்தில் இராவணன் படத்திறப்பு
30.11.19 அன்று மாலை 6 மணிக்கு திவிக தலைமை அலுவல கத்தில், முடிவெய்திய முழு நேரப் பெரியாரிய தொண்டர் இராவணன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி திறந்து வைத்தார். தோழர் இராவண னுடனான நட்பு குறித்தும் அவர் பெரியார் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். இந்த மரணம் நமக்கு என்ன உணர்த்துகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? என்றும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவரைப் போல் கொள்கையை முன்னெடுத்து செல்வதிலேயே உள்ளது என்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்கள். மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி, இராவணன் குடியிருந்த இல்லத்தின் உரிமையாளர் கவிதா, ஊடகவியலாளர், பாலிமர் ரமேஷ், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் உரையாற்றினர். அய்யனார் தலைமை தாங்கினார். பெரியார் முழக்கம் 12122019 இதழ்
மணமகன் தேவை
முற்போக்கு எண்ணம் கொண்ட, பெரியாரிய கொள்கையுடைய முதுகலைப் பட்டதாரிப் பெண்ணுக்கு, அதே கொள்கைகள் கொண்ட 26-29 வயதும், 160-175 செ.மீ உயரமும் கொண்ட மணமகன் தேவை. மத்திய மாநில அரசுப் பணியில் பதவியில் உள்ள / பயிற்சியில் உள்ளோர் விரும்பத் தக்கவர். சுயவிவரக் குறிப்பு புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: stargalaxy9013@gmail.com கைப்பேசி : 9442301312 (வி.ம்) பெரியார் முழக்கம் 12122019 இதழ்
நீலச்சட்டைப் பேரணி ஒத்தி வைப்பு
டிசம்பர் 22 இல் கோவையில் நடக்கவிருந்த நீலச்சட்டைப் பேரணி, உள்ளாட்சித் தேர்தல்களைக் கருதி ஒத்தி வைக்கப்படு கிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும். பெரியார் முழக்கம் 12122019 இதழ்
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை
சென்னை : புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் 63 ஆவது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ மாலை அணிவித்தார். இராயப்பேட்டை, பத்ரி நாராயணன் நினைவு நூலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு சைதை அன்பரசன் மாலை அணிவித்தார், கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : கோவை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வடகோவை, உணவு கிடங்கில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி மாலை அணிவிக்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் சாலையில் வாழக்காய் மண்டியில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல் குமார், வெங்கட், லோகு, மாதவன் சங்கர், இயல், விஷ்ணு, பார்த்திபன் ...
‘ஜெய் பீம்; ஜெய் பெரியார்’ முழக்கங்களுடன் பெங்களூரில் சுயமரியாதைத் திருமணம்
7.12.2019 சனிக்கிழமை அன்று பெங்களூர் ‘கற்பி, ஒன்று சேர்’ அமைப்பின் ஏற்பாட்டில், பெங்களூர் சேஷாத்திரிபுரம் ஏ.வி. வரதாச்சாரி நினைவு அரங்கில் வேலூர், அங்கராங்குப்பம், கலா-கோவிந்தன் இணையரின் மகன் சிவக்குமார் – திருவள்ளூர் மாவட்டம் மாலம்மாள்-ஆனந்தன் இணையரின் மகள் அன்னபூரணேசுவரி ஆகியோரின் ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தார். அன்று காலை 11 மணியளவில் பகுத்தறிவு, ஜாதியொழிப்பு இன்னிசை நிகழ்வோடு நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவை ஹெப்பால் பழங்குடி மக்களின் கலை நிகழ்வு, ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறையிசை நடந்தது. நண்பகல் உணவுக்குப் பின்னர் நாத்திகனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ நிகழ்ச்சி நடந்தது. பிற்பகல் 4.30 மணியளவில் கழகத் தலைவர் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த விழா தொடங்கியது. விழாவின் தொடக்க உரையை மைசூர் உரிலிங்கப்பட்டி மடத்தின் அருட்திரு ஞானப் பிரகாச சாமிகள் ஆற்றினார். தனது உரையில்...
ஜனநாயகமா? பார்ப்பன நாயகமா? குற்றவாளிகளுக்குச் சுதந்திரம்; இயக்கவாதிகளுக்குச் சிறை கீற்று நந்தன்
சாதி செல்வாக்கு, பண பலம் உள்ளவர்களை காவல் துறை அவ்வளவு எளிதாகக் கைது செய்துவிடாது. அப்படியானவர்கள் மீது வழக்குப் பதிவு செயவதற்கே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். போராட்டச் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து, மக்கள் கவனம் பெற்ற பிறகு ஏற்படும் அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி தொடர்புடையவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்யும் – அதுவும் எளிதில் ஜாமீன், விடுதலை கிடைக்கக்கூடிய சட்டப் பிரிவுகளில். இதுதான் சுதந்திர இந்தியாவில் தொடர்ச்சியான நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது, இப்போது மாணவி பாத்திமா தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்கிலும் இதுதான் நடந்து வருகிறது. கேரள மாணவி பாத்திமா தனது தற்கொலைக்குக் காரணம் அய்.அய்.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் என்று குறிப்பு எழுதி வைத்திருந்தும், இதுவரை சுதர்சன் பத்மனாபன் கைது செய்யப்படவிலை. இந்தியாவில் பார்ப்பனர்களை அவ்வளவு எளிதாகக் கைது செய்யவோ, தண்டித்து விடவோ முடியாது. அதிகார மட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கும் பார்ப்பனர்கள் அதை அவ்வளவு...
மகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பார்ப்பனத் தலைமையை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் போர்க் கொடி
மகாராஷ்டிரா பா.ஜ.க.வுக்குள் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் போராட்டம் தொடங்கி விட்டது. முதல்வராக இருந்த பார்ப்பனர் பட்னாவிசை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி உயர்த்தி யுள்ளனர். இது குறித்து ‘தி பிரின்ட்’ ஆங்கில இணைய தள இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை: “பா.ஜ.க. ஏனைய கட்சிகளைப் போன்றது அல்ல; நாங்கள் வேறுபட்டவர்கள் என்று சொல்லிக் கொள்கிறது. அந்தக் கட்சிககுள் தான் இப்போது ‘வேறுபாடுகள்’ தலைதூக்கியிருக்கின்றன. 105 மகாராஷ்டிரா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் களில் குறைந்தது 15 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வராக இருந்த பட்னாவிசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளதோடு, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைத்துள்ள எம்.வி.டி. கூட்டணியுடன் (மகா விகாஸ் கூட்டணி) பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. மகாராஷ்டிராவின் முன்னாள் பெண் அமைச்சர் பங்கஜ்முண்டே, பா.ஜ.க.விலிருந்து விலகப் போவதாக ஒரு வாரத்துக்கு முன் அறிவித்தார். இவர் மோடி அமைச்சரவையில் அமைச்சராக...
கழகச் செயலவை டிச.28இல் சென்னையில் கூடுகிறது
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 8.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈசுவரன், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர்செல்வன், அய்யனார், இரா. உமாபதி, பாரி சிவக்குமார், மேட்டூர் சக்தி ஆகியோர் பங்கேற்றனர். கழகத்தின் பரப்புரைத் திட்டங்கள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. டிசம்பர் 28 சனிக்கிழமை சென்னையில் கழகச் செயலவைக் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. செயலவையில் தோழர்களின் கருத்துகளைக் கேட்டு, செயல்...
நீதிக்காகப் போராடிய தோழர்கள் பிணையில் விடுதலை
மேட்டுப்பாளையம் நடுவூரில் 17 தலித் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து நீதி கேட்டுப் போராடிய தோழர்கள், பொது மக்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமாக தடியடி நடத்தி கைது செய்தது. தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகக் கோவை மாநகர கழகத் தலைவர் நேரு தாசு, திராவிடர் தமிழர் கட்சியைச் சார்ந்த வெண்மணி, வழக்கறிஞர் கார்க்கி உள்ளிட்ட 28 தோழர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 நாளுக்குப் பிறகு டிசம்பர் 7 அன்று நாகை திருவள்ளுவன் தவிர மற்ற தோழர்கள் பிணையில் விடுதலையானார்கள். பெரியார் முழக்கம் 12122019 இதழ்
அரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தியது ஏன்? (2) கொளத்தூர் மணி
அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி தஞ்சை மாநாட்டில் பெரியார் ஜாதி ஒழிப்பைப் பற்றி மிக ஆவேசமாகப் பேசுகிறார். தன்னுடைய தொண்டர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஜாதியை ஒழிப்பதற்கு ஆயிரம் பாப்பனரைக் கொன்றால்தான் முடியும் என்றால் கொல்லத் தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வியெழுப்புகிறார். மக்கள் ஆரவாரித்து உடன்பாடான பதிலைக் கொடுக்கிறார்கள். அந்த மாநாட்டில் தான் ஜாதியைப் பாதுகாக்கிற இந்தச் சட்டப் பிரிவுகளை நீக்கவில்லை யென்றால் வருகிற நவம்பர் 26 நாளன்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவுகளை எரிப்போம் என்று அறிவிக்கிறார். ஏன் நவம்பர்26ஐ அவர் தேர்ந்தெடுத்தார் என்றால், அரசியல் சட்ட வரைவு எழுதப்பட்டு அதை நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தில் நம்முடைய பெரும் மதிப்பிற்குரிய அம்பேத்கர் அவர்களால் முன் வைக்கப்பட்டு அதற்கான ஒப்புதலை கொடுக்குமாறு நாடாளுமன்றத்தைக் கோருகிறார்; 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் தான் அந்த...
17 தலித் மக்கள் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை சேலத்தில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
டிசம்பர் 2 அன்று மேட்டுப்பாளையம் அருகே தலித் மக்கள் கண்களில்படக் கூடாது என்ற நோக்கில் கட்டப்பட்ட ஜாதிச் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. சென்னை மாவட்டக் கழக சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை : திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் கரு. அண்ணாமலை, மயிலைப் பகுதி தோழர்கள் சுகுமார், இராவணன், மனோகர், கன்னியப்பன், எட்வின் பிரபாகரன், திருவான்மியூர் வெங்கடேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் செந்தில், மே 17 இயக்கத் தோழர்கள் மற்றும் எஸ்.டி.பி.அய். மக்கள்...
நீலம் பண்பாட்டு மய்யம் நடத்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்
நீலம் பண்பாட்டு மய்யம் சார்பில் ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்’ நவம்பர் 26ஆம் தேதி மாலை சென்னை சேத்துப்பட்டு உலக பல்கலைக் கழக சேவை மய்யத்தில் நடந்தது. ‘பிளாக் பாய்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயக்குனர் ரஞ்சித் அறிமுக உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரசியலமைப்பு நகலை அறிமுகம் செய்து, புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திய ஆழமான உரையை சுட்டிக் காட்டிப் பேசினார். அம்பேத்கர் மொழி வழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு எழுதிய நூலில் வடநாடு பிற்போக்கானது; தென்னாடு முற்போக்கானது. இந்தி பேசும் மாநிலங்கள் தென்னகத்தை அடக்கியாளுவதற்கேற்ப மாநிலப் பிரிவினை நடத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு தென்னாட்டில் ஹைதராபாத்திலும் ஒரு தலைநகரம் உருவாக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டினார். நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ் கட்சி), சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), திருமுருகன் காந்தி (மே 17), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஜக்கையன் (ஆதி...