அய்.நா. அங்கீகரிக்கும் “திராவிடன் மாடல்”
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சி காணும். அதேவேளையில், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் குஜராத்தை விட 10 இல் இருந்து 15 ஆயிரம் குறைவுதான். நிதி மேலாண்மையில் குஜராத் சிறப்பாக செயல்படுகிறது. மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 100 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு போகாத 15 வயதிற்கு உட்பட்ட பெண்களே தமிழ்நாட்டில் இல்லை. அதே வேளையில், குஜராத்தில் 15 முதல் 20 சதவீதம் பெண்கள் பள்ளிக்கூடம் போவதில்லை. இது...