ஒரு பெரியார் தொண்டரின் வாய்மொழி வரலாறு மா.கோபாலன்
1940-50களில் சென்னையில் பெரியார் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 14 வயதில் பெரியாரிடம் அறிமுகமாகி பெரியார் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு 23ஆவது வயதில் பெரியார் ஆணையை ஏற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர் மா.கோபாலன். திருத்தணி வட்டம் சிறுமணவூரைச் சேர்ந்தவர். அரசு துணைச் செயலாளராகவும், கடைசியில் புதிய பல்கலைக் கழகங்களுக்குத் தனி அலுவலராகவும் பணியாற்றி, ஓய்வுக்குப் பிறகு சைவப் பற்றாளராக மாறியவர். குடந்தை அருகே திருப்பனந்தாள் சைவ மடத்தில் மடத்தின் சைவ மடாதிபதியிடம் நெருக்கமாகி, சைவச் சொற்பொழிவுகளை நடத்தத் தொடங்கினார். பெரியாரியலிலிருந்து சைவப் பற்றாளராக மாறிய நிலையிலும், பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்வின் இறுதி காலத்தில் தனது மரணத்துக்கு முன் ‘ஆடும் பருவத்தில் என்னை ஆட்கொண்ட பெரியார்’ என்று பெரியார் இயக்கத்திடம் தனக்கிருந்த ஈடுபாட்டை நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார். வாய்மொழி வரலாறாக வெளி வந்துள்ள இந்த நூலில், அக்காலத்தில் சென்னையில் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும் களப்பணியாற்றிய பெரியார் தொண்டர்கள், அவர்கள் நடத்திய...
