Category: மதுரை

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை 27.2.2016 அன்று ஒபுளா படித் துறையில் சிறப்புடன் நடத்தியது. மாவட்ட செயலாளர் மா.ப.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்ற, மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பகத்சிங், கழகப் பிரச்சார செயலாளர் பால்.பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா. செல்வம், கம்யூனிஸ்ட் மா.லெ.மாவட்டச் செயலாளர் மேரி ஆகியோரைத் தொடர்ந்து எ.ஸ்.டி.பி.ஐ.மாநில செயலாளர் நெல்லை முபாரக், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சகாயராஜ் நன்றி கூறினார். மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் துரைசாமி, விருதுநகர் கணேசமூர்த்தி, விஜயகுமார், சூலூர் பன்னீர்செல்வம், காளையார் கோயில் முத்துகுமார், தனபால், சங்கீதா, வழக்கறிஞர் பொற்கொடி ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர். காவல்துறை விதித்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துஅனுமதி...

இழிவொழிப்பு மகளிர் மாநாடு – ஆதித்தமிழர் பேரவை மதுரை 08032016

“தாய் நாடு தாய்த் திருநாடு” எனப் பெண்களை உயர்த்திப்பிடித்து தம்பட்டமடிக்கும் இம்மண்ணில் தான் பெண்கள் தங்களின் தலையில் “மனிதன் கழிக்கும் மலத்தை” சுமந்து “தேசிய அவமானமாகவும்” வலம்வருகிறார்கள்.இந்திய நாட்டின் ஒட்டுமொத்த மலமள்ளும் தொழிலாளர்களில் 80 சதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்தான். இக்கொடுமையை சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான்  மனித இனத்திற்கு “பேரவமானம்”. சக பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா? ‘பீப்’ பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய பெண்ணியவாதிகளின் குரல்கள் “பீயை” சுமக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா? இழிவென்று தெரிந்தும் இதை ஏன் செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான் முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா? இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா? என அலச்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும் கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் “விரும்பி செய்தால்” விட்டுவைக்குமா? தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும், மீத்தேனும் பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா? இவர்கள் செய்யவில்லை என்றால் இதை நாம்தானே செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய...

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு மதுரை 27022016

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மதுரையில் வரும் 27.2.2016 சனிக்கிழமை அன்று ”மக்களை பிளவு படுத்தும் பார்பன மதவாத எதிர்ப்பு மாநாடு ” நடக்கவிருக்கிறது. பறை இசை மற்றும் பள்ளத்தூர் நாவலரசு அவர்களின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கி கழக தலைவர் தோழர் ”கொளத்தூர் மணி ”அவர்கள், கழக பொதுசெயலாளர் தோழர் ”விடுதலை ராஜேந்திரன்” அவர்கள் , எஸ்டிபிஐ கட்சி தலைவர் தோழர் ”தெகலான் பாகவி” அவர்கள், தமிழ் புலிகள் கட்சி தலைவர் தோழர் ”நாகை திருவள்ளுவன்” அவர்கள், ஆதி தமிழர் பேரவை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் ”இரா .செல்வ குமார்” அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள் அனைவரும் வருக

நீண்டகால முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 07.02.2016 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே அரசியலமைச்சட்டம் 161 அய் பயன்படுத்து ! 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அபுதாஹீர் உள்ளிட்ட முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய் ! பேரறிவாளன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய் ! என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மக்கள் கண்காணிப்பகம் தோழர் ஹென்றி டிபேன், தோழர் எவிடன்ஸ் கதிர், தமிழ் தேச மக்கள் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தோழர் புகழேந்தி, சி.பி.அய்( எம்.எல்) மக்கள் விடுதலை தலைவர் தோழர் அருண்சோரி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர் மம

கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ கருத்தரங்கம் மதுரையில் 03022016

3-2-2016 அன்று மாலை 5-00 மணிக்கு, மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் துரைராஜ் பீட்டர் அரங்கத்தில், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில், ‘கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தோழர் முத்து அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி எவிடன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் கதிர் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கவின் மலர், சமூக ஆர்வலர் ஜோசுவா ஐசக், பேராசிரியர் செம்மலர் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்கில் ரோகித் வெமுலாவின் மரணம் குறித்தும், மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலித், சிறுபான்மையோர் விரோத போக்கு குறித்தும், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த மரணங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளைச்...

கல்வி நிறுவனங்களும் ஜாதியப் பாகுபாடும் – மதுரையில் கருத்தரங்கம்

”கல்வி நிறுவனங்களும்,ஜாதியப் பாகுபாடும்” கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில், நாள் : 03.02.2016. மாலை 4.30 மணி. இடம் : துரைராஜ் பீட்டர் ஹால், தமிழ்நாடு இறையியல் கல்லூரி,அரசரடி,மதுரை. தோழர்கள் எவிடன்ஸ் கதிர், ஹென்றி டிபேன், கவின் மலர், செம்மலர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள் ! சமத்துவம் மலர இணைந்து செயல்படுவோம். அன்புடன் அழைக்கிறோம்.

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை,சிவகங்கை,விருதுநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 24.12.205 அன்று மதுரையில் வழக்கறிஞர் தோழர் பொற்கொடி அவர்கள் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. மதுரையில் பிப்ரவரி மாதம்  ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” நடத்துவது குறித்து கழக தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.மதுரை மாவட்ட செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். விருதுநகர் ஜெயக்குமார்,செந்தில்குமார்,சிவகங்கை நா.முத்துக்குமார், கா.தர்மலிங்கம்,ராஜா,ராமகிருஷ்ணன்,அருண்குமார்,திருநாவுக்கரசு,  நித்தீஷ்,செந்தில்குமார்,மஜீத் உள்ளிட்ட தோழர்கள் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

மதுரையில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு இடம் : டி நோபிலி அருள் பணி மையம், மெயின் அரங்கம்,கே.புதூர்,மதுரை – 7. மாநாடு – காலை 10.00 முதல் 1.00 மணி வரை. தலைமை : தோழர் இரா.நல்லக்கண்ணு இந்திய கம்னியூஸ்ட் கட்சி துவக்க உரை : தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மாநில செயலாளர், மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி, சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு : எவிடன்ஸ்.

பெரியார் பிறந்தநாள் விழா – மதுரை

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளன்று மாலை 3 மணி அளவில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது . மதுரை மாவட்டத் தலைவர் திலீபன் செந்தில்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா,மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி,மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்

உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 0

உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி விமலா தேவியை கொலை செய்தவர்கள் – உடந்தையாக இருந்த காவல்துறை யினரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் 26 அக்டோபர் 2014ல் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உசிலம்பட்டி விமலாதேவியின் கவுரவக்கொலையை கண்டித்தும், திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரியும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 11.11.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளுவர் சிலை எதிரில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்தில், சென்னை அருள்தா°, சென்னை நாத்திகன் ஆகியோர் ஜாதி மறுப்பு பாடல்களை பாடினர். பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் கோபி.இராம இளங்கோவன், மே...