மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 01092016

1-9-2016 அன்று பிற்பகல் 2-00 மணிக்கு மதுரை ஓபுலா படித்துறையில், மக்கள் உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், மனித உரிமைக் காப்பாளர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கைப் பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும்,  வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மதுரை மாவட்டம், மொட்டமலையைச் சேர்ந்த அலைகுடிகளான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூலிவேலை செய்துவந்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து, 63 நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்துவருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர் தோழர் ஹென்றி திபேனும், உதவும் குரல் அமைப்பினரும். தொடர்ந்து சட்ட்விரோதமாகக் காவலில் வைத்ததோடு, சித்திரவதை செய்தும், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலும் செய்த காவல்துறையின்ர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தக்கலையிலும், மதுரையிலும் அர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவ்வார்ப்பட்டத்தின்போது காவல்துறையினரை மிரட்டியதாக, பிணையில் வர முடியாத பிரிவுகளில் எட்டு நாட்கள் கழித்து தோழர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கில் புனைந்ததைக் கண்டித்து இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கனியமுதன் தலைமை ஏற்றார்.

கோரிக்கை முழக்கங்களுக்கு இடையிடையே கூட்டமைப்பின் உறுப்பியக்கத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயராஜா, ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் பூமிநாதன், எவிடென்ஸ் கதிர், தமில்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், அருந்ததியர் விடுதலைக் கட்சியின் தலைவர் ஜக்கையன், த.மு.மு.க மாவட்ட செயலாளர் அப்துல் ரபி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டசெயலாளர் ஜாபர் சுல்தான், மதசார்பற்ற ஜனதா தளப் பொதுச்செயலாளர் ஜான்மோசஸ், உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சின்ராஜ், கூடங்குளம் அணுவுலைப் போராட்டக் குழு முகிலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாககழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார்.
மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் காவல்துறையின் அத்துமீறல்களையும், அவர்களது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளையும் எடுத்துரைத்ததோடு, மனித உரிமைக் காப்பாளர்கள்மீதே இவ்வாறான பொய்வழக்கை போடத் துணிந்த இவர்கள் அப்பாவி அலைகுடிகளை எப்படி நடத்துவார்கள் எந்த கேள்வியை எழுப்பியதோடு, மனித உரிமைக்குப் போராடும் அமைப்புகளை ஒருங்கிணைத்ததற்கு மதுரை மாநகரம் காவல்துறை ஆணையருக்கு நன்றி கூறினார்.

IMG_1192 IMG_1194 IMG_1196 IMG_1199 IMG_1206

 

You may also like...