மதுரை அகதி முகாமில் ரவிச்சந்திரன் குடும்பத்தினரிடம் கழகத் தலைவர் ஆறுதல்

மதுரை திருமங்கலம் அருகில் உச்சம்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 06032016 ஞாயிற்றுக் கிழமையன்று அங்கு சோதனையிடவந்த வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார்

இறந்த ரவீந்திரனின் குடும்பத்திற்கு போதுமான நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும் அந்த வருவாய் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த முகாமில் உள்ள அகதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அங்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்.

 

IMG_2349 IMG_2352 IMG_2355 IMG_2358 IMG_2359 IMG_2366 IMG_2369

You may also like...