Category: நிமிர்வோம் 2019

சயின்ஸ் காங்கிரசா? சர்க்கஸ் கூடாராமா?

அறிவியலுக்கு எதிராக பிரதமர் மோடியிலிருந்து அவரது அமைச்சர்கள் சகாக்கள் வரை உளறிக் கொட்டிய நகைச்சுவை வெடிகள் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தின. அறிவியலாளர்கள் அதிர்ந்து போனார்கள். அரசு அமைப்பான ‘சயின்ஸ் காங்கிரஸ்’ மாநாட் டிலேயே பேசப்பட்ட இந்த உளறல்களைக் கண்டு ஆத்திரமடைந்த நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன், இனி இத்தகைய மாநாட்டில் பங்கேற்கவே போவதில்லை. சயின்ஸ் காங்கிரசில் சர்க்கஸ் காட்டுகிறார்கள் என்று கூறினார். பம்பாயில் கூடிய ‘அறிவியல் காங்கிரஸ்’ மாநாட்டில் பேசிய மோடி வேத காலத்திலே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நம்மிடமிருந்தது. அதற்கு சான்று விநாயகன். மனித உடலோடு யானைத் தலையை ஒட்ட வைத்து நடந்த சிகிச்சை அது என்றார். உலகம் முழுதும் பல பத்திரிகைகள் மோடியை கேலி செய்து கட்டுரைகளையும் கார்ட்டூன்களையும் வெளியிட்டன. வேத காலத்திலே கண்டம் விட்டு கண்டம் பாயும் போர் விமானங்கள் நம்மிடம் இருந்தன. இராவணன் 38 விமானத் தளங்களை வைத்திருந்தான். கவுரவர்கள்...

கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றக் குறுக்கு வழியை கண்டுபிடித்த மோடி ஆட்சி

மாநிலங்களவையில் பா.ஜ.க. வுக்கு போதுமான எண்ணிக்கை பலம் இல்லை என்பதால் மாநிலங்களவையையே புறக்கணிக்கும் செயல்பாடுகளை மோடி ஆட்சி அரங்கேற்றியது. கடந்த 2017 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங்களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக் களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறை கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி. இந்த திருத்தங்களில் ஒன்று – வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித் துறை அதிகாரிகள், தேவையான ஆதாரங்கள், தடயங்கள் இல்லாமல், சந்தேகத்தின் அடிப்படையிலேயே...

ஆட்சியை நடுங்க வைத்த ‘ஆர்.டி.அய்.’ சட்டம்

ஊழல் அதிகார முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு மிகப் பெரும் ஆயுதமாகத் திகழ்வது 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம். இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சீர்குலைக்கும் அத்தனை முயற்சிகளிலும் கடந்த 5 ஆண்டு மோடி ஆட்சி செயல்பட் டிருக்கிறது. ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு 3 ஆண்டு படித்தால் எவரும் பட்டம் பெறலாம். எத்தனை பேர் இப்படிப் பட்டம் பெற்றார்கள் என்ற தகவல் – தகவல்கள் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பே எளிதாகக் கிடைத்துதான் வந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு ஓர் அதிசயம் நடந்தது; அது என்ன தெரியுமா? 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் 3 ஆண்டு பட்டப் படிப்பை முடித்து பட்டம் பெற்றதாக மோடி நாடாளுமன்றத்தில் போட்டி யிடுவதற்கான வேட்பு மனுவில் குறிப்பிட் டிருந்தார். அவர் 1978இல் பட்டம் வாங்கியது உண்மையா? என்பதை அறிய அந்த ஆண்டு டெல்லி...

தலித் மக்களுக்கு மோடி ஆட்சியின் அநீதிகள்

தலித் மக்களின் வளர்ச்சிக்கான நிதியை படிப்படியாகக் குறைத்த மோடி ஆட்சி, மாணவர் கல்விக்கான உதவித் தொகையிலும் கை வைத்தது. தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தது. பட்டியல் இனப் பிரிவு மேம்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் அவர்களுக்கான மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவு என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 22.5 சதவீத நிதி ஒதுக்கீட்டுக்கு பதிலாக 2014-15ஆம் ஆண்டுக்கு 8.79 சதவீதம்; 2015-16இல் 6.63 சதவீதமும், 2016-17இல் 7.06 சதவீதமும், 2016-17இல் 8.91 சதவீதமும், 2017-18இல் 6.55 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. மிகக் குறைவாக ஒதுக்கப்பட்ட நிதியும்கூட பட்டியலினப் பிரிவினருக்கு நேரடியாகப் பயன்தரக் கூடிய திட்டங்களுக்கு செலவிடப்பட வில்லை. ஏற்கனவே அமுல்படுத்தி வரும் பட்டியல் இனப் பிரிவினருக்கான நல்வாழ்வுத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான நிதியும் மோடி ஆட்சியில் கணிசமாக வெட்டப்பட்டது. தனித்தனியாக நேரடி பயன்தரக்கூடிய திட்டத்துக்கான...

இந்தியா இனி ‘இந்தி’யா?

2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரை களுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கியிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு… ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள், குறிப்பாக யாருக்கெல்லாம் இந்தி தெரியுமோ, அவர்கள் இனி நாடாளுமன்றத்திலும் பொது விழாக்களிலும் இந்தியில்தான் பேச வேண்டும் விமானங்களில் இந்தியில்தான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத் தில் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். இனி, விமானங்களில் வழங்கப்படுகிற செய்தித் தாள்கள் மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் இந்தி மொழியில் இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் டிக்கெட்டுகளிலும் இந்தி பெருமளவு பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் டேராடூன் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தில் அனைத்துப் பயிற்சி ஏடுகளும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தி கட்டாயப் பாடமாகச் சேர்க்கப்படவேண்டும்....

மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் யார்?

மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் மிகப் பெரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்  உயர்ஜாதி இந்துக்கள் தான். அது குறித்த சில விவரங்களைப் பார்ப்போம்: மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களை நடத்தும் பெரிய நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்கள் இஸ்லாமியர்களோ, கிறிஸ்துவர்களோ, தலித்துகளோ அல்ல. அத்தனை பேரும் ‘இந்து’க்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அதிகமாக தேர்தல் நிதி கொடுத்தவர்களும் இவர்கள்தான். இதோ மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் பட்டியல்: ஆண்டுதோறும் 19,30,000 டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து உலக மாட்டிறைச்சி ஏற்றுமதி சந்தையில் 16 சதவீத இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் நிற்கிறது. அல்கபீர்  எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்: இந்தியாவிலேயே அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் அந்த கம்பெனியின் பெயர் மட்டும்தான் முஸ்லிம் அடையாளம். இதை நடத்தும் முதலாளி சதீஷ்சபேர்வால் என்ற இந்து. தெலுங்கானா மாநிலத்தில் ருத்ராக் எனும் கிராமத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் இவரது இறைச்சி...

‘கோமாதா’ பெயரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்

பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சமூக விரோதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய வன்முறைகளின் தொகுப்பு. கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பரில், உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி என்ற ஊரில், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என்று கூறி முகமது அக்லக் என்பவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து தெருவில் அடித்தே கொன்றது இந்து மதவெறி குண்டர் படை. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக் வீட்டிலிருந்தது மாட்டுக் கறி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. 2015 அக்டோபர் 9-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை வழிமறித்த இந்துமத வெறிக் கூட்டம் ஒன்று, லாரி ஓட்டுநர் ஜாகித் அகமது மற்றும் அவருடன் வந்த இன்னொரு இஸ்லாமிய இளைஞரையும் கொடூரமாக தாக்கியது. இதில் ஜாகித் அகமது பத்து நாட்களுக்குப் பின்னர் இறந்து போனார். இத்தாக்குதல் சம்பவம் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, போராட்டங்கள் வெடித்தன. காஷ்மீர்...

அரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்!

மத்திய அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கான அய்.அய்.டி. கூட்டு நுழைவுத் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி தவிர, தொடர்ந்து அய்ந்தாவது ஆண்டாக, குஜராத்தி மாநில மொழிக்கு மட்டும் தனிச் சலுகை அளித்து தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக அரசின் வேலை வாய்ப்புகளிலும் தமிழர்களுக்கான உரிமைகளை பறிக்கும் கொல்லைப்புற முயற்சிகள் தொடங்கிவிட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் கழகம் தமிழ்நாட்டுக்கான வேலை வாய்ப்புகளில் தமிழ் எழுதப் படிக்கவே தெரியாதவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். தேர்வு பெற்று இரண்டாண்டுகளில் தமிழ் கற்றால் போதும் என்று அறிவித்திருக்கிறது. இதற்காக விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நேபாளம், பூட்டான் ஆகிய வெளி நாட்டினரும் தமிழக அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணைய அறிவிப்பு கூறுகிறது என்றால், தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் எதிர்காலம் எக்கேடு கெட்டால் என்ன என்றே ஆட்சியாளர்கள் கருதுகிறார்களா? ‘நீட்’ தேர்வின் வழியாக தமிழக உரிமைகள் பாதிக்கப்பட்டது போன்ற அதே செயல்பாடுகள் தேர்வாணைய அறிவிப்பிலும்...

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு புறந்தள்ளப்பட்டது

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24 ஆண்டுகள் கழிந்த பிறகும் 27 சதவீதத்தில் இன்னும் பாதியளவுகூட பிற்படுத்தப்பட்டோருக்குப் பணிகள் வழங்கப்பட வில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 1993 செப்டம்பர் 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இப்போது என்ன நிலை? மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி 1, 2017 வரை இதுதான் நிலை. 24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் பேரும் ‘பி’ பிரிவில் 14 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ‘சி’ பிரிவு ஊழியர்களில் 11 சதவீதம் பேரும், ‘டி’ பிரிவில் 10 சதவீதம் பேரும்...

மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் வேலை இழந்த 4.7 கோடி பேர்: அதிர வைக்கும் தரவுகள்!

தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின் இந்த ஆய்வானது 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது.  இந்தத் தரவுகள் 2018ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வேலைவாய்ப்பு தொடர்பான இந்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிரவைத்துள்ளது. 1993-94ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் முதன்முறையாக வேலை செய்யும் ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந் துள்ளதாக  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.  தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின் குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை (ஞநசiடினiஉ டுயbடிரச குடிசஉந ளுரசஎநல) குறித்த தரவுகளை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் ஆய்வு செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணலாம். 2017-18ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 28.6 கோடியாகக்...

மக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு!

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 80 விழுக்காடு பணத்தை மதிப்பழிப்பு செய்து உத்தரவிட்டார் பிரதமர் மோடி. இதன்படி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் அனைத்தும் செல்லாதவையாக்கப்பட்டன. புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டு, வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இது சாமானியர்களுக்கும், நடுத்தர  குடும்பத்தினருக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம். சாதாரண மளிகைச் செலவுகளுக்குக் கூட வேலைக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்து ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் நாள் கணக்காக நிற்க வேண்டியிருந்தது. சிறு தொழில்கள் இயக்கம் முற்றிலும் பாதிக்கப் பட்டது. சிறு தொழில்களால் நிரம்பி வழியும் கோவை யும், திருப்பூரும் கடும் பாதிப்புக்குள்ளானது. இப்பகுதி களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பலர் தொழிலை விட்டு வெளியேறி தினக்கூலிகளாக மாறினர். ஏடிஎம் வாசல்களிலும், வங்கிகளிலும் காத்துக் கிடந்தவர்கள் உயிரிழந்த பரிதாபத்தையும் கண்டோம்.  விவசாயத் துறை பணமில்லாமல் தடுமாறியது....

சிறு தொழில்களை முடக்கியஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வர முயற்சித்தபோது அதை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க.வும், மோடியும் பிறகு, அதிகாரத்துக்கு வந்த பிறகு தீவிரமாக அமுல்படுத்தினார்கள். அதனால் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. இப்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்த பாதிப்புகளை சரி செய்வதாகக் கூறுகிறது. ‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி – நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை – ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை ஜி.எஸ்.டி. வரியை அமுல்படுத்திவிட்டார். அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம்....

கஜா புயல்: ஆறுதல் கூற வராத பிரதமர்

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாகத் தாக்கியது. டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் சிதைந்தது. மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். விவசாயிகளின் உற்பத்தி பாழானது. இந்தத் துயரிலிருந்து முழுமையாக மீண்டு வர டெல்டா மாவட்டங்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் ஆனது. உலக நாடுகளின் தலைவர் கூட தமிழக டெல்டா மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்த நாட்டின் பிரதமர் மோடியோ தமிழகத்தின் பக்கம் அப்போது எட்டிப்பார்க்கவும் இல்லை, ஆறுதல் சொல்லி ஒரு அறிக்கையும் விடவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கியுள்ள இந்த சமயத்தில் பிரச்சாரத்துக்காக மதுரை, திருப்பூர், சென்னை மற்றும் திருநெல்வேலி என 4 முறை வந்துவிட்டார். இன்னும் 2ஆம் கட்ட பிரச்சாரத்துக்கும் தமிழகம் வர திட்டமிட் டிருக்கிறார். ஓட்டுக்கு கேட்க வரத் தெரிந்த மோடிக்கு, தமிழக மக்கள் துயரத்தில் இருந்த போது வரத்தான் மனம் இல்லை...

அனிதாவின் உயிர்பறித்த ‘நீட்’

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை உதறித்  தள்ளி ‘நீட்’டை திணித்தது மோடி ஆட்சி. நீட் தேர்வை இரத்து செய்வோம் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ் நாட்டைப்போல் மிகச் சிறந்த மருத்துவர்கள் வேறு மாநிலத்தில் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்த நமது மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஆற்றல் மிகுந்த நிபுணர்கள். இதய அறுவை சிகிச்சையிலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சை வரை இந்தியாவின் தலைசிறந்த  மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அது நமது தமிழ் நாட்டின் பெருமை. இப்போது அந்தத் தனித் தன்மையை ஒழிக்க வந்தது ‘நீட்’ தேர்வு. 2006ஆம் ஆண்டிலேயே நாம் நுழைவுத் தேர்வை ஒழித்து விட்டோம். அது நமது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடை என்பதை உணர்ந்தோம். ‘ப்ளஸ் டூ’ வரை கடுமையாக உழைத்து மதிப்பெண்களைப் பெறும் நமது பிள்ளைகள், நல்ல மதிப்பெண்...

மோடியின் வீண்விரயச் செலவுகள்

மோடியின் வீண்விரயச் செலவுகள்

அய்ந்தாண்டுகளில் (1825 நாட்களில்) மோடி மேற்கொண்ட பயண நாள் : வெளிநாட்டுப் பயணம் : 192 நாட்கள் உள்நாட்டுப் பயணம் : 389 நாட்கள் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை – வெளிநாட்டுப் பயணம் ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒருமுறை உள்நாடு / வெளிநாட்டுப் பயணம் பயணச் செலவு : ரூ.2021 கோடி வெளிநாட்டுப் பயணங்கள் பெரும்பான்மையாக – ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்றுள்ளார் (அப்போது இந்தியாவில் கடும் கோடை) வெளிநாட்டுப் பயணங்களில், உடன் வெளியுறவு அமைச்சர் செல்வதில்லை. மாறாக, அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் சென்றுள்ளார்கள். மோடி அரசின் ஊதாரித்தனமான விளம்பரம், பயணம், திட்டச் செலவுகள் 90000 கோடி புல்லட் விரைவு இரயில் 4800 கோடி விளம்பரச் செலவு 3600 கோடி சிவாஜி சிலை 2989 கோடி பட்டேல் சிலை 202 கோடி மோடி பயணச்செலவு 4200 கோடி கும்பமேளா செலவு 7304 கோடி கங்கையை சுத்தம் செய்த...

தன்னாட்சி அமைப்புகளை சீர்குலைத்த மோடி

தேர்தல் ஆணையம் சி.பி.அய். – திட்டக்  குழு – உச்சநீதிமன்றம் என்ற அரசியல் சட்டம் அங்கீகரித்த தன்னாட்சி அமைப்புகளை சீர்குலைத்தது மோடியின் ஆட்சி. கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சி – அவற்றின் அடையாளங்களை அழித்தது – தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது – இந்திய வரலாற்றில் இதற்கு முன் இதுபோன்ற சீர்குலைவு எப்போதும் நடந்தது இல்லை. திட்டக்குழு – நிதிஅயோக்காக மாற்றப்பட்டது இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு பன்முகத் தன்மை கொண்ட மாநிலங்களுக்கு அதற்கேற்ற திட்டங்களை உருவாக்கவும் அது குறித்து சுதந்திரமான விவாதங்கள் உரையாடல்களுக்கு வழி வகுக்கும் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர். அரசின் தலையீடுஇல்லாத சுயேட்சை அமைப்பாக செயல்பட்டு வந்தது. மோடி பிரதமர் பதவியேற்று 2014ஆம் ஆண்டு அவரது ‘முதல் சுதந்திர நாள்’ உரையில் திட்டக்குழு ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ‘இந்தியாவை மாற்றியமைக்கும் தேசிய நிறுவனம்’ (National Institution for Transforming...

அய்ந்தாண்டு அடக்குமுறைக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம்

மோடியின் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனிய சர்வாதிகாரத்தையே கட்டவிழ்த்துவிட்டது. மீண்டும் வேதகாலம் திரும்பி விட்டதாகவே பார்ப்பனியம் பூரித்தது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்கமும் – அதன் வழி வந்த ‘திராவிட அரசியலும்’ உருவாக்கிய உரிமைகள் அனைத்தும் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. தமிழ்நாடா? வடநாடா? என்று வியக்க வைக்கும் நிலைக்கு அனைத்து துறைகளிலும் வடநாட்டார் குவிக்கப்பட்டனர். ஆளுநர் அதிகாரம் பெற்றவர்களாக்கப்பட்டனர். பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசக் கூடிய துணிவைப் பார்ப்பனர்கள் பெற்றனர். நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, வாழ்வுரிமையைக் குலைக்கும் நச்சுத் திட்டங்கள் திணிப்பு என்று அடுக்கடுக்கான படையெடுப்புகள் நடந்தன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசின் அதிகாரத்தை பா.ஜ.க. தனது பொம்மலாட்ட ‘வலையத்துக்குள்’ கொண்டு வந்தது. ஆளும் கட்சியை உடைப்பது; இணைப்பது; மிரட்டுவது என அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தியது. கருத்துரிமைகள் நசுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் சமூக செயல்பாட்டாளர்கள் மக்கள் பிரச்சினைக்காக மதவெறி...

‘இராமனை’ எரித்தத் தீயம்மா…!

அன்பின் அடைக்கலமே தூய ஆற்றலின் பிறப்பிடமே மாதர் போற்றும் மங்கையரான மாசில்லாத மணியம்மையே மங்கையர் உலகமே நூற்றாண்டின் திலகமே மதித்திடும் பெண்மையே மணியான அம்மையே  – அன்பின் சிறுவயதிலே தொண்டுகள் செய்யும் தொண்டராகவே நீயானாய் சிறுபிள்ளையாக ஈவேராவை கண்போல் காத்துத் தாயானாய் ஏச்சையும் பேச்சையும் ஏற்றுக் கொண்டு எல்லோர் நலனும் நீ காத்தாய் எளிய உடையில் பவனி வந்துநீ பகுத்தறிவினிலே நீ பூத்தாய் – மங்கையர் உலகமே ஈவேராவின் ஆயுட்காலத்தை நீட்டித்தவளும் நீயம்மா நீடில்லாத தியாகச் சுடராய் ஈகை அளித்த தாயம்மா இராவணலீலா நிகழ்விலேயே இராமனை எரித்தத் தீயம்மா இராவும் பகலும் இயக்கப் பணியை இணைந்து செய்த மணியம்மா – மங்கையர் உலகமே சுயமரியாதைப் பிரச்சாரத்தை சுற்றிச் சுற்றி செய்தவளே அனைவரும் அர்ச்சக ராகஎண்ணியே மறியல் கிளர்ச்சி செய்தவளே இயக்க நூல்களை சுமந்து சென்று பல இதயத்தில் சேர்த்தவளே இந்த சமூகம் ஏற்றம்பெறவே எறும்பாய் உழைத்துக் காத்தவளே – மங்கையர் உலகமே...

வாசகர்களிடமிருந்து…

‘திராவிடத்துக்கு முகவரி தந்த கால்டுவெல்’ என்ற கவிஞர் வைரமுத்துவின் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட ‘நிமிர்வோம்’ இதழுக்கு நன்றி சொல்ல வேண்டும். கால்டுவெல் குறித்து சுருக்கமாக அவரது ஆழமான கருத்துகளை வெளிக்கொண்டு வந்துள்ள மிகச் சிறந்த கட்டுரை. திராவிடம் என்பதே ஆரியக் குறியீட்டுச் சொல் தான் என்று பேசி வரும் சில தமிழ்த் தேசியர்களுக்கு வைரமுத்து கட்டுரையின் கீழ்க்கண்ட பகுதி சரியான பதிலைத் தருகிறது. “இலக்கிய இலக்கண புராண முற்கட்டுகளெல்லாம் திராவிடம் என்பதைத் தங்கள் வசதிக்கேற்பப் பொருள் கட்ட, கால்டுவெல் மட்டுமதான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச் சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில்மெய்ப்பித்தார்” என்பது மிகச் சரியான விளக்கமாகும். – சந்தோஷ், சேலம் உயர்ஜாதியினருக்கு 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து இரா. மன்னர்மன்னன் கட்டுரை மிகச் சிறப்பு. “கடந்த 2017இல் நடைபெற்ற நீட் தேர்வுகளில் ஒரு பாடத்தில் 9 மதிப்பெண்ணுக்ககும் கீழான மதிப்பெண் பெற்ற சுமார்...

பெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்

பெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்

பெரியார் நீண்ட நெடுங்காலம் பண்பாட்டுத் தளத்திலேயே வேலை செய்தவர். அண்ணா ஒரு கட்டத்துக்கு மேல் அரசியல் நோக்கி நகர்ந்தவர் என்பதால் அண்ணாவை விடவும் பெரியாரின் பெண்ணியப் பார்வை மிக அதிகமாகக் கவனம் பெறுகிறது. பெரியார் அளவுக்கான வெளி அண்ணாவுக்குக் கிடைக்கவில்லை என்றபோதும், கிடைத்த தளத்தில் பெண் விடுதலைக்காக அவர் குரல் கொடுக்கத் தவறவில்லை. அக்டோபர் 10, 1950இல் இந்திய நல்லெண்ணத் தூதுக் குழு பேரறிஞர் அண்ணாவைச் சந்தித்தது. அந்தச் சந்திப்பின் போது தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராகவதாஸ், திராவிட நாட்டில் பார்ப்பனர்களின் நிலை  என்னவாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைக்கிறார். சற்றும் தாமதிக்காமல் அண்ணா சொல்கிறார், “மனித உரிமையோடு வாழ்வார்கள்” என்று. அண்ணாவின் ஒட்டுமொத்த வாழ்வை ஒரே வரியில் அடக்க வேண்டுமானால் மேற்சொன்ன பதிலில் அடக்கலாம். தன்னளவில் முரண்பட்டு, காலமெல்லாம் தான் எதிர்த்துப் போராடும் தத்துவத்தைப் பின்பற்றுபவர்களும் மனித உரிமையோடு வாழ வேண்டும் என்று நினைத்தவர் அவர். அவரது 50-வது ஆண்டு...

அண்ணா நேருக்குநேர் நடத்திய சொற்போர் ஆரிய இராமனை  ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்

அண்ணா நேருக்குநேர் நடத்திய சொற்போர் ஆரிய இராமனை ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்

1943, 1948ஆம் ஆண்டு “இராமாயணம், பெரியபுராணம் எரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?” எனும் தலைப்பில் நேருக்கு நேர் விவாதங்கள் நடந்தன என்ற வரலாறு – இன்றைய இளைய தலைமுறை பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டு வாதத்தில் வென்று காட்டினார் அண்ணா. முதல் வாதப் போர் 9.2.1943 அன்று சென்னை சட்டக்கல்லூரியில் இந்து மத பரிபாலன வாரியத் தலைவர் என். இராமச்சந்திர செட்டியார் தலைமையில் நிகழ்ந்தது. “எரிக்கப்பட வேண்டும்” என்ற தலைப்பில் அண்ணா மற்றும் ஈழத்தடிகளும், “எரிக்கக் கூடாது” என்ற தலைப்பில் ஆர்.பி. சேதுப் பிள்ளை மற்றும் சீனிவாசன் ஆகியோரும் வாதிட்டனர். அப்போது சட்டக் கல்லூரி, தமிழ்க் கழக அமைச்சராக இருந்து பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த வேணுகோபால்தான் அன்று தலைவரை முன்மொழிந்து பேசியவர். தொடர்ந்து 14.3.1943இல் இதே தலைப்பில சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கர் பாடசாலை மண்டபத்தில் இதே விவாதப்போர் நடந்தது. இதில் அண்ணாவும் நாவலர் சோம சுந்தர பாரதியாரும்...

விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட திராவிடர் மரபு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி 30.9.2018ஆம் நாளன்று திருச்செங்கோடு நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ எனும் தலைப்பில் ஆற்றியுள்ள உரை, நூல் வடிவம் பெற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. பெரியார் அவர்களின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்று, திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டை இளைஞனாக உருவாகி, அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு. கழகத்தின் தொண்டனாக அரசியல் களம் புகுந்த கலைஞர் அவர்கள், தனது அறுபதாண்டு தொண்டறத்தை நிறைவு செய்து முடிவெய்தி யுள்ளதை நினைவுகூர்கிறது இந்த நூல். தன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என அறிவித்துக் கொண்ட கலைஞர், அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப் பேற்று, நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளதையும், அதனூடாக, திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுப் போக்கைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் வகையிலும் இந்த உரையானது அமைந்துள்ளது. தந்தை பெரியார் அவர்களிடமிருந்து பிணக்கு கொண்டு, அறிஞர் அண்ணா தலைமையில் கலைஞர்,...

இந்துத்துவ முழக்கம் தோற்கும்போது, போரை ஆயுதமாக்குவார்கள்! – எழுத்தாளர் அருந்ததிராய்

நீங்கள் புனைவுகளின் எல்லைக்குள் நிற்காமல் அரசியல் கட்டுரைகள் எழுதுவதால் தான் இந்தச் சிக்கலா? “இல்லை. ழுடின டிக ளஅயடட வாiபேள என்ற என் புத்தகத்திற்காக, ஒழுக்கத்தைக் கெடுக்கிறேன் என்று என் மீது பத்தாண்டுக்காலம் கிரிமினல் வழக்கு நடந்தது. நான்  அப்படி எதையும் திட்டமிடுவதில்லை. என்னுடைய அடுத்த நாவலில் காஷ்மீர் சிக்கலையும், இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்னை களையும் இணைத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன். புனைவின் எல்லைக்குள் தான் இது எளிதில் சாத்தியம். தலித்துகளையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் எதிர்த்துக் கல்வி நிறுவனங்களுக்குள் “பிராமணிய” நடவடிக்கைகள் அதிகமாகும் இந்தச் சூழ்நிலையில், வெவ்வேறு புள்ளிகளாக இருக்கும் பிரச்னைகளை ஒப்பிட்டு இணைப்பதன் மூலம் புரிதல் மேம்படும் என நினைக்கிறேன். இரண்டு சாதிகளுக்கிடையிலோ, இரண்டு பழங்குடிகளுக்கு  இடையிலோ நடக்கிற சண்டையோ,  இந்துத்துவச் சக்திகள் தூண்டி விடும் சண்டையோ, வெறும் தண்ணீர் நெருக்கடியை மறைப்பதற்காகக்கூட இருக்கலாம். ஆகவே, புள்ளிகளை இணைத்துப் புரிந்து கொள்வது காலத்தின் தேவையாக இருக்கிறது எந்தப் பிரச்சினையையும்...

பெரியார் தொண்டை மட்டுமே முகர்ந்த பெண் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பெரியார் தொண்டை மட்டுமே முகர்ந்த பெண் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குந்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு கோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். “தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் – ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன்” என்று அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம். அதுமட்டுமல்ல குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம் – இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம். ஆயினும் நம் புகழ் நாம் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்....

பெரியார் காட்டிய பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார்!

பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை மணியம்மையார், – பெரியார் மறைவுக்குப் பிறகு, தலைவர் காட்டிய வழியில் பயணத்தைத் தொடங்கினார். பெரியார் விட்டுச் சென்ற பணிகளை எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் பெரியார் போட்டுத் தந்த பாதையில் சென்று முடிப்போம் என்று உறுதியேற்று கருஞ்சட்டைத் தோழர்கள் அணி வகுத்தனர். பெரியார் மரணத்தைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் ‘திரும்பி வருகிறேன்’ என்று ‘விடுதலை’ ஏட்டில் விடுத்த அறிக்கை இது: என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும், என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து-விடுகிறேன். உடனே அய்யாவின் அந்தப் புன்னகை முகம் என் கண்முன் தோன்றி, “பைத்தியக்காரி, இவ்வளவுதானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்து எடுத்துச் சொல்விவந்த கருத்துகளை உன்னிடத் திலேயே காணமுடியவில்லையே! நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைப்பிடிப்பவளாய் இருக்கப் போகிறாயோ! சாதாரணப் பெண்களைப் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே!...

அன்னையார் வாழ்க்கைப் பாதை

1919 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை – பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரி யும் ஆவார்கள். வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.,) வரை படித்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப் பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டுவிட்டது. 1936 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் (9ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளி யேற்றியது. 1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தவர். 1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ‘திராவிடர்...

ஊழலுக்கு அப்பாற்பட்டதா பா.ஜ.க.? அணிவகுக்கும் பட்டியல்கள்… ஆதாரங்களுடன்…

பா.ஜ.க., லஞ்சம் வாங்காத ஊழல் செய்யாத உலக உத்தம கட்சி என உலகம் முழுக்க பொய் பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர் கட்சியும், அவரும் ஊழலில் செய்தே திளைத்தவர்கள். பா.ஜ.க. செய்யும் ஊழலில் நாட்டின் பணம் மட்டுமல்ல, இந்த நாட்டின் சாமான்ய மக்களின் உயிரும் ஆயிரக்கணக்கில் பலியாயிருக்கிறது. அந்த ஊழல்களின் பட்டியல்களில் சில:   2003 – 40 ஏக்கர் நில மோசடி – மோடியின் குஜராத் ஊழல் : குஜராத் மாநிலத்தின் கட்ச் நகரத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை அலுமினியா  ரிஃபைனரி லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, மோடி முதலமைச்சராக இருந்த போது வழங்கினார். இதில் சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. 2003ஆம் ஆண்டில் எந்த காரணத்திற்காக நிலம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பபட்டதோ அந்த பணியினை பத்தாண்டுகள் ஆகியும் தொடங்கக் கூடவில்லை. இந்த நிலத்தின் மதிப்பு 2008ஆம் ஆண்டில் 4.35 கோடி. ஆனால் இதில்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய 9ஆவது ஆய்வரங்கம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட 9ஆவது கூட்டம் மார்ச் 3, 2019 மாலை சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இலட்சுமணன் தலைமை தாங்க, இராஜேஷ் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அருண் – ‘சங்க காலத்தில் வைதிக ஊடுறுவல்’ எனும் தலைப்பிலும், சென்னைப் பல்கலைக் கழக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைச் சார்ந்த பிரவீண்குமார், ‘பவுத்த தத்துவ சிந்தனையும்-கடவுள் மறுப்பும்’ என்ற தலைப்பிலும், கருந்தமிழன் கலைமதி, ‘உணர்வு-உரிமை-ஒழுக்கம்-பெரியாரியல் பார்வை’ என்னும் தலைப்பிலும், சங்கீதா, ‘பெண்களின் உரிமைகளை நோக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்’ என்ற தலைப்பிலும், நாத்திகன் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்கள்’ என்ற தலைப்பிலும், இளம் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ‘புல்வாமா தாக்குதல்களும் – காஷ்மீர் பிரச்சினைகளும்’ என்ற தலைப்பிலும், கழக தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ‘மத்திய அரசின் வேலை வாய்ப்புகளும்-மறுக்கப்படும் மாநில உரிமைகளும்’ என்ற தலைப்பிலும் ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினர்....

தமிழ்மீது நஞ்சு கக்கும் நாகசாமிக்கு செம்மொழி ஆய்வுக் குழுவில் பதவியா? ஒ. சுந்தரம்

மத்திய செம்மொழித் தமிழாய்வு மையம் (Central Institute of Classical Tamil) சார்பாக, தமிழறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் வழங்கும் விருதுக்கானத் தேர்வுக் குழுவில், உறுப்பினராக தொல்லியல் துறை இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட திரு. நாகசாமியை நியமித்து இருப்பதான அறிவிப்பிற்கு பல்வேறு தமிழ் அறிஞர்களும், கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.   திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என அய்யன் திருவள்ளுவரைச் சிறுமைப் படுத்தி, திரிபுவாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி விருதுத் தேர்வுக் கமிட்டியில் நியமித்திருப்பதைக் கண்டிப்பதாகவும், ஒரு ஆய்வல்ல, பல்வேறு ஆய்வுகளைக் கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும் வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படிப் பாரபட்சமின்றி செம்மொழி விருதுகளைத் தேர்வு செய்ய முடியும் என்றும், செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான...

‘ஓட்டுக்கு நோட்டு’ பெரியார் சொன்ன கதை செ.கார்கி

இந்திய சட்டசபை தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க அனுகூலமாயிருக்கிறது என்று சொல்லலாம். அது போலவே கொள்கையோ, விஷயமோ இல்லாத பத்திரிக்கைகாரர்களுக்கும் ஒரு அளவு கஷ்டம் நீங்கிற்று என்றும் சொல்லலாம்.                                          – பெரியார் மக்களால் வாக்களிக்கப்பட்டு ஜனநாயக முறையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை என்பது  ஜனநாயகத்தின் மிக உயர்ந்த வடிவமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் சாதி, மதம், பணம், மது போன்றவையே பிரதானமாகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்கி வருகின்றன. அதனால் சாதி, மதம், முதலாளித் துவம் போன்றவற்றை ஒழிக்க நினைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தல் அரசியலை வெறுக்கக் கூடியவர் களாகவும் அதன் மீது பெரும் அதிருப்தி கொண்டவர்களாகவுமே இருக் கின்றார்கள். பெரியாருக்கும் இந்தத் தேர்தல் அரசியலின் மீது பெரிதாக ஈடுபாடு  எல்லாம் இருந்தது கிடையாது. அதன் மீதான தன்னுடைய கடும் விமர்சனங்களை தன் வாழ்வின் இறுதிவரை...

அவமதிப்புகளைப் புறந்தள்ளிய ‘தொண்டறம்’

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு இது. அவமானம் – அவமதிப்புகளைச் சுமந்து கொண்டு – பெரியாரின் ஆயுள் நீட்டிப்புக்கு தன்னையே ஒப்படைத்துக் கொண்டவர். ‘உங்கள் உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எனக்கு பலரும் யோசனை கூறுகிறார்கள். ஆனால் எனக்கு உதவிட நம்பிக்கையாக செயல்பட ஒருவர்கூட வரவில்லையே’ என்று பெரியார் கேட்டபோது, ‘இதோ நான் வருகிறேன்’ என்று ஓடோடி வந்தவர். தமிழகத்தின் பொது வாழ்க்கையிலேயே மணியம்மையார்-பெரியார் திருமண ஏற்பாடுபோல் கடும் புயலை உருவாக்கிய வேறு ஒரு நிகழ்வு இருந்திருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி உருவாவதற்கே இத்திருமணமே காரணமாக முன் வைக்கப்பட்டது. அப்போது கவர்னர்  ஜெனரலாக இருந்த பெரியாரின் நெருக்க நண்பரான இராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர் அறிவுரைப்படியே பெரியார் இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கம்போல் பெரியார் இந்த அவதூறுகளை புறந்தள்ளினார். குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் அதை உடைத்து, தனது நெஞ்சைத் திறந்துக் காட்டி தன்னை நேர்மையாளராக நிரூபித்துக்...

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ் தேர்தல் சிறப்பிதழாக – பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கி ஏராளமான செய்திகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கூடுதல் இதழ் தேவைப்படுவோர் மார்ச் 30 தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு : 7299230363 / 9841489896 பெரியார் முழக்கம் 28032019 இதழ்

அறிவியலுக்கு வாருங்கள்!

மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்லக் காதல். இணைகிற இருவருக்கும், இவ்வுலகம் ஒன்றாய் தெரிந்தால்தான் அது காதல்.! – செயின் எக்ஸ்கியூபெரி மணமுறிவுக்காய் எலும்புதேய வழக்காடு மன்றப் பயணம்.. குழந்தையின் அங்ககீனத்திற்கு மனம்நொந்து … நீளும் மருத்துவமனை வாசம் ! சவரன் குறைந்ததால் … எரிந்த பெண்கள் உயிர் ஏராளம். பெட்டி..பெட்டியாய் பொன் கொண்டு போயினும் … பிணமொத்த வாழ்வில் மருகும் மகள்கள் ஏராளம்… ஏராளம்! தரங்கெட்டத் தாய்மாமன்களுக்கும்… முறைகெட்ட முறைமாமன்களுக்கும்… உறவு விட்டுப் போகுமோயென… விறகுபோல் அள்ளித்தந்து, சருகுபோல் கருகிய பெண்ணுயிர் ஏராளம்… ஏராளம் ! சுயஜாதி மணங்களின் லட்சணங்கள் இவை! மணம் எது? மனம் எது? என உணராத ஜாதிவெறி ஜம்பங்களே! நீங்கள் இருதயத்தையும், மூளையையும் விரும்பி நாடுவது, இறைச்சிக் கடையில்தானே ! கலப்பு என்பது மாட்டிலும், பயிரிலும், விதையிலும் மட்டும் எனத் திரியும் ஈனர்களே! அறிவியலுக்கு வாருங்கள் கொஞ்சம்.! கலப்பு விஞ்ஞான விதி. கலப்பு இயற்கை நியதி. கலப்பே...

வாசகர்களிடமிருந்து…

திருச்சி கருஞ்சட்டைப் பேரணியின் சிறப்பிதழாக ‘நிமிர்வோம்’ மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. 1946இல் மதுரையில் நடந்த கருஞ்சட்டைப் படை மாநாட்டு வரலாற்றையும் பார்ப்பனர்கள்  மாநாட்டுப் பந்தலை தீ வைத்து எரித்ததையும் விளக்கி திராவிட இயக்கத்தின் மூத்த பத்திரிகையாளர் மா. செங்குட்டுவன் எழுதிய கட்டுரை பல அரிய தகவல்களைத் தந்தது. அப்போது பெரியார்-அண்ணாவுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் – அது குறித்து நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைஞர் விமர்சனங்களையும் ‘நிமிர்வோம்’ நேர்மையுடன் பதிவு செய்திருந்ததையும் பாராட்டு கூறுகிறேன். – பெ. கார்த்திக், திண்டுக்கல் பாரதி குறித்து பெரியாரின் எழுத்துகளைப் படித்த போது பெரியார் எவ்வளவு துல்லியமாக பாரதியை ஆய்வு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  சர்.பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம். நாயர், பார்ப்பனரல்லாதாருக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கியபோது பாரதி அதற்கு எதிர்வினையாக முன் வைத்த கருத்துகளை நினைவூட்ட விரும்புகிறேன். “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பழைய...

பரமண்டலத்துப் பிதா தண்டிப்பாரா?

பரமண்டலத்துப் பிதா தண்டிப்பாரா?

ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை உண்மைதான் என போப் பிரான்சிஸ்  ஒப்புக் கொண்டுள்ளார். இதனைக் களைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். மதங்களின் மடாலயங்களும், கன்னி மாடங்களும் ‘கலவிக் கூடங்கள்’ ஆகிவிட்டன! மதவெறி தகர்த்து மனித நேயம் காப்போம்! நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது… சமீபத்திய ஆய்வு முடிவுகள்

கடவுளுக்குப் பயப்படும் தாயாக இருப்பதுதான் பிள்ளை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலங்கள் போய்விட்டன என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. ழடிற ளுநஉரடயச குயஅடைல ஏயடரநள ளுவயஉம ரயீ என்ற தலைப்பில், ஃபில் ஜுகர்மேன் (ஞாடை ஷ்ரஉமநசஅயn) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இவர் சமூக இயல் துறையில் பேராசிரியராக அமெரிக்கா வின் ஞவைணநச  கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதியுள்ளார். 2010இல் டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவதில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவதில்லை. போர் வெறியர்களாக இருக்கமாட்டார்கள். அதிகாரத்துவப் போக்கு அவர்களிடம் வராது. சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. கடவுள் நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும் நம்பிக்கையில்லாதவர்களாக வளர்க்கப் படும்...

பெரியார் கவலைப்பட்டது ஏன்?

எனக்கு 40ஆவது வயதில் நாக்கில் புற்று வந்தது. நண்பர் டாக்டர் திரு. முத்துசாமி அவர்கள் என்னிடம் உண்மையினைச் சொல்லாமல் ஏதோ மருந்தினை தடவி துடைத்தே வந்தார். அவரின் ஆலோசனைப்படி சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனத்திடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு, ‘அடச் சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும்?’ என்றார். ‘என்ன அய்யா நோய்?’ என்றேன். நான் பயந்து கொள்ளுவேன் என்று கருதி, ‘ஒன்றுமில்லை’ என்று கூறி வேறு ஒரு டாக்டருக்குக் கடிதம் கொடுத்தார். அவர் பார்த்துவிட்டு, ‘எத்தனை நாளாய் இப்படி இருக்கின்றது?’ என்று கேட்டார். ‘அது ஒரு மாதத்துக்கு மேலாகவே இருக்கிறது’ என்றேன். ‘என்ன அய்யா இப்படி விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் இப்படிப் பேசாமலே இருக்கலாமா?’ என்று கோபித்துக் கொண்டார். ‘மன்னிக்கணும். என்ன நோய் என்கிறீர்கள்?’ என்றேன். அவர் அதற்குள்ளாக தம்மை சரிப்படுத்திக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை, புற்றுநோய், என்றாலும் சரியாகிவிடும்’ என்று கூறி சிகிச்சை செய்தார். பிறகு சரியாகி விட்டது. நான்...

பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000 கோடி

பொதுத் துறை வங்கிகளில் அதிகாரம் செலுத்தும் பார்ப்பன அதிகார வர்க்கம்  ரூ.  70,000 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த  மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி. பெரிய தொகை சம்பந்தப்பட்ட மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலையச் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக் குறிதான் என எச்சரிக்கிறது ஊழல் கண்காணிப்பு ஆணையம்...

மோடி பூமியின் காவலரா?

நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘பூமியின் சாம்பியன்’ விருதை வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. சுற்றுச்சூழல் முன்னேற்றத் துக்காகப் பாடுபடும் தலைவர்களுக்கு வழங்கப்படுவது இந்த உயரிய விருது. சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட சூழல் நடவடிக்கைகளில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதற் காகவும், மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கை 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதாக அறிவித்துள்ளதாலும் இந்த விருது. இதைப் பெறும் அளவுக்கு மோடி தகுதியானவரா? கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததும், புதிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் அனுமதி வாங்குவதில் மாற்றம் கொண்டு வந்தார். ஒரு பெரிய தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு முன்பாக, அது அமைய இருக்கும் இடத்தில் அதனால் எந்தவிதமான சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பாதிப்புகளும் ஏற்படாது என்பதைச் சூழலியல் துறை உறுதிசெய்ய வேண்டும். முன்பு இதற்கான கால அவகாசம் 600 நாட்களாக இருந்தது. மோடி அரசு இதை 170 நாள்களாகக் குறைத்தது....

பெரியாருடன் சிறை வாசம்

தி.மு.க. பிறந்த பிறகு பெரியாருடன் ஒரே சிறையிலிருந்த உணர்வுகளை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி அண்ணா எழுதினார். திருச்சியில்  எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி! பெரியாரும் அதே நாளில் அதே விதமான தண்டனை பெற்ற அதே சிறைக்கு வந்தார். ‘ஆரிய மாயை’ என்னும் ஏடு தீட்டியதற்காக எனக்குச் சிறை. ‘பொன்மொழிகள்’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை. திருச்சி கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசை போலும்! இரண்டும் தனித் தனி வழக்குகள்; தனித் தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று  அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர்.அதைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று...

அந்த வசந்தம் அண்ணா

அண்ணா முதலமைச்சரான பிறகு ‘விடுதலை’ வெளியிட்ட பெரியார் 80ஆவது பிறந்த நாள் மலருக்காக அண்ணா எழுதிய கட்டுரை இது. கட்டுரைக்கு ‘அந்த வசந்தம்’ என்று அண்ணாவே தலைப்பிட்டார். பெரியாரின் வரலாற்றுச் சாதனைகளை கூர்மையாகப் படம் பிடிக்கும் கட்டுரை. எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு – ஆண்டு பலவற்றுக்குப் பிறகு – அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப் பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும். வசந்த காலம் என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன். அப்போது, கலவரம் எழாமல்...

பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்

1947, ஆகஸ்ட் 15 அன்று ‘சுதந்திரம்’ அறிவிக்கப்பட்டபோது அதைத் துக்க நாள் என்று அறிவித்தார் பெரியார். அதேபோல் அமெரிக்காவில் கறுப்பர் மக்களின் உரிமைக்குப் போராடிய ஃபிரடரிக் டக்ளஸ் 1776இல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றபோது அது கறுப்பர் இன மக்களுக்கு விடுதலை நாள் அல்ல என்று பேசினார். அவரது உரை பிற்காலத்தில் கறுப்பர் இன உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்டது. 1947ஆம் ஆண்டு பெரியார் விடுத்த அறிக்கையையும் பிரடரிக் டக்ளஸ் உரையையும் இளைய சமுதாயத்தின் வரலாற்றுப் புரிதலுக்காக ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. “பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பனர் ஒப்பந்த நாள் – பெரியார் அறிக்கை: ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டு மானால் தன்மானமுள்ள காங்கிரஸ் திராவிடர்கள் அன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏன்? 1929ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த அர்த்தத்தில் தீர்மானிக் கப்பட்டதோ...

“தேவை மானமும் மரியாதையும்; சோறு அல்ல!”

“தேவை மானமும் மரியாதையும்; சோறு அல்ல!”

அடிமை வகுப்பினர் சார்பில் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். முழு அரசுரிமை படைத்த சுதந்திர இந்தியாவில், ஒரு வாழ்க்கைத் தத்துவம் என்ற முறையிலும், ஒரு சமூக அமைப்பு என்ற முறையிலும் பார்ப்பனியம் அடியோடு ஒழித்து கட்டப்பட வேண்டும்; ஆழக் குழித் தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த அய்யமும் இல்லை. இதைத் தவிர, சமூக மேம்பாடு குறித்து அவர்களுக்கு எத்தகைய அக்கறையும் இல்லை என்று துணிந்து கூறுவேன். நேர்மையற்ற, கொடிய, நச்சுத்தனமான சமூக அமைப்பில் அவர்கள் அனுபவிக்கும் அவமதிப்பு, அவமரியாதை, ஏளனம், இகழ்ச்சி, நிந்தை, பரிகாசம் இவற்றுடன் ஒப்பிடும்போது அவர்களுடைய வறுமையும் இல்லாமையும் அத்தனை ஒன்றும் பெரிதல்ல. அவர்களுக்கு வேண்டியது மானமும் மரியாதையுமே தவிர, சோறு அல்ல. – டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 9- பக்கம் 211 நிமிர்வோம் பிப்ரவரி 2019 மாத இதழ்

‘தர’த்தின் பெயரால் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் இப்போது ‘சாரத்தை’ சிதைக்கிறார்கள் இரா. மன்னர் மன்னன்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் வெற்றி பெற்று தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுள்ளது. நாடாளு மன்றத்தில் ஒரு மசோதா வாக்கெடுப்புக்கு வரும்போது அதன் நோக்கம் என்ன என்றெல்லாம் பார்க்காமல், அதனால் பலன் அடையக் கூடியவர்கள் யார்? – என்று மட்டும் பார்த்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்களோ என்ற கேள்வியை இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவின் வெற்றிஎழுப்பி உள்ளது. பொருளாதார ரீதியிலான இட இதுக்கீடு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதும், முன்னர் இது போன்ற நடவடிக்கையை நரசிம்மராவ் அரசு மேற்கொண்ட போது அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து இருந்தார்களா அல்லது அறியாதது போல காட்டிக் கொண்டார்களா எனத் தெரியவில்லை. இந்த மசோதாவின் மிகப் பெரிய அதிர்ச்சி களில் ஒன்று அதில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்கு அளிக்கப்பட்ட வரையறை, ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும்...

திராவிடத்துக்கு முகவரி தந்த கால்டுவெல் கவிஞர் வைரமுத்து

பிறப்புமுறை – ஒலிப்புமுறை – அமைப்புமுறை ஆகியவற்றால் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றென்பதும் அது சம்ஸ்கிருதத்துக்கு மாறுபட்டுத் தனித்துத் தோன்றியதென்பதையும் தரணிக்கு மட்டுமன்று தமிழர்க்கும் கால்டுவெல்லே உணர்த்தினார்.   ஓர் அதிசயம் 1814இல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. ஆனால், அதன் கற்றைகள் மட்டும் உலகின் விளிம்புகள்தோறும் இன்னும் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளிச்சத்தின் பௌதிகப் பெயர் கால்டுவெல். அவர் 77 வயதில் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடையன்குடி கல்லறை மீது இங்கிலாந்திலிருந்து ஒரு பூ விழுந்தது. 1891 அக்டோபர் 19 நாளிட்ட ‘தி லண்டன் டைம்ஸ்’ இவ்வண்ணம் எழுதியது: “1856இல் முதன் முதலில் வெளியிடப்பட்ட அவரது திராவிடக் குழுமங்களின் ஒப்பிலக்கணம், மேற்கத்திய மொழி அறிஞர்களுக்கு ஒரு தேவ ரகசியக் கண் திறப்பாகவும், எதிர்ப்பாரற்ற – எவராலும் பின்...

வரலாற்று வெளிச்சத்தில் கீழ்வெண்மணி (1) பசு. கவுதமன்

வரலாற்று வெளிச்சத்தில் கீழ்வெண்மணி (1) பசு. கவுதமன்

1968 டிசம்பர் 25ஆம் நாள் ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில்  44 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொடூரமான குருதி படிந்த  வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக் கொண்டு வருகிறது, இத் தொடர். ஒரு முன்னுரையாக: 1989-90களுக்குப் பின்னால் ஏற்பட்ட ‘தலித் அறிவுஜீவி’களின் வளர்ச்சிப் பார்வை அல்லது ஆய்வு நோக்கு – எது எப்படியோ தந்தை பெரியாரையும், திராவிடர் இயக்கத்தையும் தாழ்த்தப்பட்ட, ஆதி திராவிட, பட்டியலின மக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைப்பதில் மிகக்கவனம் எடுத்துக் கொண்டு செயல்பட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. என்னுடைய எழுத்துக்கள் எதுவும் ஆய்வுக்கும், விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவை அல்ல. பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதற்கு உட்பட்டது தான். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் அவதூறு களையும், காழ்ப்புணர்ச்சிகளையும், அழிச்சாட்டியமான விதண்டாவாதங்களையும் கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் அறிவு நாணயம் என்று விளங்கவில்லை. காரல் மார்க்ஸ் தன்னை, தன்னுடைய சித்தாந்தத்தை ‘சர்வரோக நிவாரணி’ என்று...

அண்ணா தந்த அறிவாயுதங்கள்

அண்ணாவின் 50ஆவது நினைவு நாளில் அவரது எழுத்தும் பேச்சும் தமிழின விடுதலைக்கான அறிவாயுதங்களாகத் திகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறுகிய காலம் தான் அவர் முதல்வர். அவரது முப்பெரும் சாதனைகள் – இப்போது தமிழகத்தின் தனித்துவத்துக்கான வரலாற்று அடையாளங்களாக நிலை பெற்றுவிட்டன. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திய தேசிய வரைபடத்தில் தமிழ்நாடு மட்டுமே சமூகநீதி மண்ணாக அடையாளம் காட்டுகிறது. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டினார். அதுவே இந்திய தேசியத்துக்குள் தமிழகம் தன்னை முழுமையாக ‘கரைத்துக் கொள்ளாது’ என்பதை உணர்த்தி நிற்கிறது. புரோகித மந்திரங்கள் வழியாக நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே திருமணத்தை உறுதிப்படுத்தும் என்ற வேத மரபைத் தகர்த்து சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்தார். தமிழரின் பண்பாடு வேத மரபுக்கு முரணானது என்பதை இந்தச் சட்டம் உரத்து முழக்கமிடுகிறது. மாறி வரும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்தார். அந்த உரிமை...

‘நிமிர்வோம்’ –  பிப்ரவரி 2019 இதழ்

‘நிமிர்வோம்’ – பிப்ரவரி 2019 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  பிப்ரவரி 2019 இதழ் தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள் வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள் கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு 10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல் மோடி பூமியின் காவலரா? பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363

தமிழர், தலையில் சுமந்த  செருப்பை,  முதல் முதலாகக்  காலில்போட்டு மிதித்தது,  பெரியார் ஒருவரே!  – பிரபஞ்சன்

தமிழர், தலையில் சுமந்த செருப்பை, முதல் முதலாகக் காலில்போட்டு மிதித்தது, பெரியார் ஒருவரே! – பிரபஞ்சன்

தலையில் சுமந்த செருப்பை காலில் மிதித்த தலைவர் செருப்புக்குத் தமிழர் சரித்திரத்தில் இடமுண்டு ஈசன் படியளந்த இதிகாசக் காலத்தில் ராமன் செருப்புகளே ராஜ்ஜியத்தை ஆண்டன. அரியாசனத்திலிருந்து ஆட்சி செய்தன செருப்புகள். ராஜராஜனுக்குப் பின் ராஜேந்திரன் வந்ததுபோல் அப்பன் செருப்புக்குப் பின் மகன் செருப்பு… ராம செருப்புக்கு வாரிசுச் செருப்புகள் வந்தன. பேட்டா செருப்புகள் போல வேதச் செருப்புகள் – மத வாதச் செருப்புகள் – பல வருணச் செருப்புகள். மறுபாதிச் செருப்புகள் மனுநீதிச் செருப்புகள்… தமிழ்நாட்டில், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்தது ஓர் வார்ச் செருப்பு! ஆரஞ்சு பச்சை அதன் நடுவே வெள்ளையென்று வண்ணம் கொண்ட வார்ச்செருப்பு, பழஞ்செருப்பு! அது, வெள்ளைச் செருப்பின் வாரிசுச் செருப்பு! ராமச் செருப்பும், வெள்ளைச் செருப்பும் தில்லிச் செருப்பும் தமிழனின் காலைக் கடிக்கும் கள்ளச் செருப்பே! எந்தச் செருப்பு எங்களுக்குப் பொருந்தும் என்று தமிழர் நொந்து கிடந்த நோய்க் காலத்தில்,...