தலையங்கம் இது ஆரிய தேசமா?
‘அய்.அய்.டி.’ உயர்கல்வி நிறுவனங்கள் ‘ஆரியப் பெருமை’களைப் பறைசாற்றும் அமைப்புகளாக வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றன. மக்கள் வரிப் பணத்தில் பெரும் பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களின் நோக்கமே இது தானா? ‘ஆரியர் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள்’ என்றும், சமஸ்கிருதத்தில் பொதிந்து கிடக்கும் இரகசியங்களை வெளிக் கொணர வேண்டும் என்றும், இந்திய சிந்தனையின் அடிப்படை யிலான அறிவுக் கட்டமைப்பை மீண்டும் புதுப்பித்துப் பரப்ப வேண்டும் என்றும், கோரக்பூர்அய்.அய்.டி. நிறுவனம் ‘காலண்டர்’ வழியாக ஆரியக் கொள்கைப் பரப்புரையில் இறங்கியிருக்கிறது. கோரக்பூர் அய்.அய்.டி. இயக்குனர் – ஒன்றிய நிதியமைச்சரின் முதன்மை ஆலோசகர், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைவர் இணைந்து அந்தக் காலண்டரை உருவாக்கியிருக்கிறார்களாம். ஆதாரங்களாக இதில் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துகள் ‘தரம் தாழ்ந்த சிந்தனைகள்’ என்று பல ஆய்வாளர்கள் மானுடவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “ஆரியர்கள் தான். பாரத தேசத்தின் பூர்வீகக் குடிகள், அவர்களுக்கு தொடக்கம் என்ற ஒன்றே கிடையாது. ஆரியர்களைத் தவிர மற்றவர்கள்...